அரும்புகள் மலரட்டும்: உங்கள் நடவடிக்கை இங்கு கண்காணிக்கப்படுகிறது!

Wednesday, 25 March 2015

உங்கள் நடவடிக்கை இங்கு கண்காணிக்கப்படுகிறது!


நம்மை யாரும் கவனிக்கவில்லை என்றால் நமது நடவடிக்கை இயல்பாக இருக்கும். உதாரணமாக தெருவில் நடந்து வரும் போது இயல்பாக கையை வீசிக் கொண்டு நடந்து வருவோம். அதுவே யாராவது நம்மைக் கவனிக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்து விட்டால் அடக்கமாக அமைதியான முகத்தோடு அவர்களைக் கடந்து விடுவோம். இது இயல்பு தான். இதில் ஒன்றும் தவறில்லை.

தன்னைச் இச்சமூகத்தில் நல்லவர்கள் போல் காட்டிக் கொள்ளும் பலரரின் சுயபிம்பம் வேறு விதமாக இருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். அவர்களிடம் ஒருமுறை ஏமாறும் இச்சமூகம் மீண்டும் மீண்டும் ஏமாறுமா என்பதை அவர்கள் உணர வேண்டும். நமது அரசியல்வாதிகளே இதற்கு நல்ல உதாரணம். ஆனால் இச்சமூகம் என்னவோ அவர்களிடம் மீண்டும் மீண்டும் ஏமாறுவது கேளிக்கூத்து.

வாழ்க்கையில் பல நேரங்களில் தவறு செய்பவர்களுக்கு தவறு செய்யும் அத்தருணத்தில் அவர்களின் எண்ணங்களில் குடி கொள்வது ஒன்று தான் யாரும் பார்க்கவில்லை என்பது தான் அது. பின்னர் தான் செய்த தவறு வெளியில் தெரிந்து மாட்டிக்கொள்ளும் போது இது எப்படி வெளியில் தெரிந்தது என்று மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.

உண்மையில் நமது சமூகம் ஒருவரின் செயலைத் தொடர்ந்து கண்காணிக்கிறதா? என்றால் நிச்சயம் யாரோ ஒருவர் நம்மைக் கண்காணிக்கிறார்கள். நமது செயல்பாட்டை மதிப்பிடுகிறார்கள். இந்த உண்மையை நம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் மனதில் வைத்துக் கொண்டால் செயல்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். தவறுகள் நடந்தேறும் சூழலுக்கு வழி கிடைக்காது.

நமக்கு அறிமுகம் இல்லாத ஊருக்கு நாம் சென்றிருப்போம். அங்கே ஒருவர் ஓடி வந்து நீங்க அவங்க தானே, இந்த பள்ளிக்கூடத்தில தானே படித்தீங்க, இன்னாருடைய உறவினர் தானே நீங்கள் என்று கேட்பது எவ்வளவு ஆச்சரியம். இப்படிப்பட்ட ஆச்சரியம் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும்.

நமக்கு அறிமுகம் இல்லாத புது ஊருக்கு வந்திருக்கிறோம், நம்மைக் கண்காணிக்க யாரும் இல்லையென்று நினைத்தால் அது தவறு தான். இதோ ஒருவர் வந்தார் நம்மைப் பற்றிய அத்தனைத் தகவல்களையும் சொல்லி அறிமுகம் செய்து கொண்டார் என்றால் நம்மைச் இச்சமூகம் கண்காணிக்கிறது என்பது புரியும்.

திருப்பூர் போன்ற வணிக நிறுவனங்கள் உள்ள ஊர்களில் பெரும்பாலான திரையரங்குகளில் ஆபாச படங்கள் திரையிடப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்களுக்கு வெளியூரில் இருந்து  வந்து வேலை செய்யும் பல சபல ஆசாமிகளே செல்வதாக செய்தி. அவர்களுக்கு நாம் நம் உறவினர்கள் இல்லாத ஊரில் இருக்கிறோம்.

நமது செயல்பாட்டை யாரும் கண்காணிக்கவில்லை என்ற நினைப்பு தான் காரணமாக இருக்கும். நிஜத்தில் அக்கூட்டத்திலேயே அவர்களைத் தெரிந்த ஒரு நபர் இருப்பார் என்பதை பலரும் அறிய மறுக்கின்றனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்கொடுமை போன்ற தவறுகளில் ஈடுபடும் சம்மந்தப்பட்டவர்கள்  நம்மை இச்சமூகம் கண்காணிக்கிறது நாம் நிச்சயம் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்தால்  குற்றங்கள் களையப்படும். பின்பு கம்மிகளுக்கு மத்தியில் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு வருந்த வேண்டியதிருக்காது.

என்ன நண்பர்களே நம்மை, நமது செயல்பாட்டை இச்சமூகம் கண்காணிக்கிறது என்பது உண்மை தானே!!




கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

11 comments:

  1. அருமையான தகவல்

    ReplyDelete
  2. உண்மைதான், நண்பரே.

    ReplyDelete
  3. என்ன நண்பர்களே நம்மை, நமது செயல்பாட்டை இச்சமூகம் கண்காணிக்கிறது என்பது உண்மை தான்!
    நம்மை சூழவுள்ள பொட்டுக்களாலே புகுந்து பார்ப்பது மட்டுமல்ல ஒட்டுக் கேட்பதும் கூட சமூகத்தின் வேலையே!

    ReplyDelete
  4. உண்மை தான் சகோ.

    ReplyDelete
  5. யாரோ கவனிக்கிறார்கள் என்பது உண்மைதான்! சிறப்பான பதிவு! நன்றி!

    ReplyDelete
  6. சரியான எச்சரிக்கைப்பகிர்வு.

    ReplyDelete
  7. அன்புள்ள அய்யா,

    உண்மைதான்...நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமூகக் கேமரா நம் நடவடிக்கைகளைப் படமெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    சில படங்களை நாம் பார்க்கிறோம்... சில படங்கள் நம்மைப் பார்க்கின்றன!

    நன்றி.
    த.ம. 5.

    ReplyDelete
  8. நல்ல கட்டுரை பாண்டியன்...

    ReplyDelete
  9. கண்காணிக்கும் செயல் நன்மைதான் அது நன்மைசெய்வதாகயிருக்கவேண்டும் அப்படி இருந்தால் நன்மைதான்

    ReplyDelete