அரும்புகள் மலரட்டும்: ஈபிள் டவர் பற்றி நமக்கு தெரியாத வியக்க வைக்கும் சில தகவல்கள்!!!

Tuesday, 31 March 2015

ஈபிள் டவர் பற்றி நமக்கு தெரியாத வியக்க வைக்கும் சில தகவல்கள்!!!


ஈபிள் டவரை இடிக்க திட்டம்
கடந்த 1909 ஈபிள் டவரை இடிக்க திட்டமிடப்பட்டது, பின் இது சிறந்த ரேடியோ ஆண்டெனாவாக (Radio Antena) உபயோகப்படுகிறது என அந்த திட்டத்தை கைவிட்டுனர்.

நிறைய பேர் கண்டுகளித்த நினைவுச் சின்னம்
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகிலேயே கட்டணத்தின் பெயரில் அதிக சுற்றுலா பயணிகளால் (6.98 Million) கண்டுகளிக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்ற பெருமையை பெற்றது ஈபிள் டவர்.

ஹிட்லருக்கு அவமதிப்பு
இரண்டாவது உலக போரின் போது ஹிட்லர் ஈபிள் டவரை காண வந்த போது, அதன் லிப்ட் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஹிட்லர் ஈபிள் டவரின் உச்சியை காண இயலாது போனது.

ஈபிள் டவரின் படிகள்
ஈபிள் டவரில் மொத்தம் 1,665 படிகள் இருக்கின்றன. இதை மொத்தத்தையும் ஏறி போய் ஹிட்லர் பார்க்க முடியாது என்பதனால் தான் கேபிளை துண்டித்துவிட்டனர் போல.

மோசடி நபர்
விக்டர் லுஸ்டிக் எனும் மோசடி நபர் ஒரு இரும்பு கடைக்காரருக்கு ஈபிள் டவரை விற்றுள்ளார். (அடேங்கப்பா!!! அட்ராசக்க!!!)

பார்சிலோனாவுக்காக வடிவமைக்கப்பட்டது
ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனா நகருக்காக தான் முதன்முதலில் ஈபிள் டவரின் கட்டிட வடிவம் வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு இந்த வடிவம் பிடிக்காததால் நிராகரித்துவிட்டனர்.

பாராசூட் வடிவமைப்பாளர் மரணம்
பாராசூட்டை வடிவமைத்தவர் அதை பரிசோதனை செய்து பார்க்க ஈபிள் டவரில் இருந்து குதித்த போது மரணம் அடைந்துவிட்டார்.

ஈபிள் டவரின் திருமணம்
கடந்த 2007 ஆம் ஆண்டு எரிக்கா லா எனும் பெண்மணி ஈபிள் டவரை திருமணம் செய்துக் கொண்டார்.

20,000 விளக்குகள்
ஈபிள் டவர் இரவில் ஒளிமயமாக காட்சியளிக்க 20,000 விளக்குகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.

மாதிரிகள்
உலகெங்கிலும் ஈபிள் டவரை போலவே 30 மாதிரிகள் பல்வேறுப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன

பத்து யானைகளுக்கு சமம்
ஈபிள் டவரில் உபயோகிக்கப்பட்ட பெயிண்ட்டின் எடை பத்து யானைகளின் எடைக்கு சமமாம்.

லண்டன் மாடல்
கடந்த 1891 ஆம் ஆண்டு ஈபிள் டவரை விட மேம்பட்ட கட்டிடத்தை கட்டியது லண்டன். ஆனால், அது சரியான முறையில் கட்டப்படாததால் 1907 ஆண்டு இடிக்கப்பட்டது.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

17 comments:

 1. என்ன திடீர்னு ஈபில் டவர் பற்றி ....நூற்றாண்டா ?புதிய செய்திகள் அருமை.....

  ReplyDelete
  Replies
  1. வலையில் படித்தது. பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே சகோதரி. நலம் தானே?. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

   Delete
 2. வணக்கம்
  சகோ.

  அறியாத தகல் அறியத்தந்தமைக்கு நன்றி
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். அவசியம் கவிதையைப் படிக்க வருகிறேன்....

   Delete
 3. ஈபில் டவர் பற்றிய தகவல்கள் சுவாரசியம். தொகுத்தளித்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   நலமாக உள்ளீர்களா! வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்

   Delete
 4. இன்றைய தின பதிவு இல்லையே...?

  ReplyDelete
  Replies
  1. இது கண்டிப்பாக ஏப்ரல் 1 பதிவு அல்ல. தகவல்களை நம்பலாம் சகோதரரே...

   Delete
 5. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள் ஐயா

   Delete
 6. அன்புள்ள அய்யா,


  ஈபிள் டவர் பற்றி பல அரிய தகவல்களைத் தந்தததைப் பார்த்து வியந்தேன்.

  நன்றி.
  த.ம. 4,

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய தகவல்கள் ஈபிள் டவரைச் சார்ந்து வலையில் பகிரப்பட்டுள்ளது ஐயா. வாக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள்.

   Delete
 7. மேலதிகத் தகவல்கள்..... நன்று. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்..

   Delete
 8. சுவாரஸ்யமான தகவல் பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்..

   Delete
 9. இந்த ஈபில் கோபுரத்தை வடிவமைத்த குஸ்ரவ் ஈபில் (Gustave Eiffel)தான் நியூயோர்க் சுதந்திர தேவி சிலையையும் வடிவமைத்தவர்.
  இவர் உயர்கல்வி கற்க பாரிஸ் பல்கலைக்கழகத்தில் , இவர் தகமை போதாதென இடம் கிடைக்காமல் சாள்ஸ்பூர்க் பல்கலைக் கழகத்தில்
  படித்து பொறியியலாளரானாராம்

  ReplyDelete