அரும்புகள் மலரட்டும்: நாம் சிரிக்கும் நாளே திருநாள்

Sunday 27 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

வணக்கம் நண்பர்களே...
 எனது அன்பிற்குரிய சகோதரர் திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தீபாவளியை முன்னிட்டு நடத்தும் கவிதைபோட்டியில் நானும் பங்கெடுக்கிறேன் என்பதை விடவும், அவரின் முயற்சியையும், எனது மற்றொரு அன்பு சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் முயற்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் கவிதை என்ற பெயரில் சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

எச்சரிக்கை:
இதயம் பலவீனமாக உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் இவ்வரிகளைப் படிப்பதைத் தவிர்த்து விடுங்கள். மீறி படித்து தங்களுக்கு ஏதாவது ஆனால் நிர்வாகம் பொறுப்பேற்காது..
              ---------------------------------------------------------------------------------------
         
        நாம் சிரிக்கும் நாளே திருநாள்

ஒரு நரகாசுரனை வென்றதற்கு 
ஒவ்வொரு வருடமும் தீபாவளி
என்றால் அந்த எண்ணமே
என்னருகே வேண்டாம் என்பேன்..

வெடிப்பொருட்கள் தயாரிக்கும் நம்சொந்தங்களின்
வேதனைகள் மாறுகின்ற- எம்முயிர்க்கும்
பாதுகாப்பு இருக்கிறதெனும் மத்தாப்பு 
சிரிப்பு மலரும் நன்னாளே..

நம் உடன்பிறவா சகோதரிகள்
காமுகன்களின் பார்வையின்றி கடைவீதி 
கடந்து செல்லும் நற்காலம் 
பிறந்திடும் நன்னாளே..

பாசமில்லா பிள்ளைகளால் 
காப்பகங்கள் காணும் பெற்றோர்களே
இல்லையெனும் புள்ளிவிவரம்
வந்து விழும் அந்நாளே..

சகுனம் பார்த்து சடங்கு
செய்யும் சங்கடங்கள் காணாத 
சாத்திரங்கள் தோன்றுகின்ற சமுதாயம்
வந்து விடும் அந்நாளே..

நம் தொப்புள்கொடி இனத்திற்கு
புதுவிடியல் உதயமாகும் அந்நாளே
நாம் சிரித்திடும் நன்னாள்
நமக்கெல்லாம் திருநாள்..
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

56 comments:

  1. நல் வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் முதல் வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி சகோதரி..

      Delete
  2. ஆம் மாறவேண்டும்

    Typed with Panini Keypad

    ReplyDelete
    Replies
    1. மாற்றம் வரும் நாளே நமக்கெல்லாம் உண்மையானத் திருநாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க சகோததரே...

      Delete
    2. பாணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்து அசத்தி விட்டீர்களே. தொடர அன்பான வாழ்த்துக்கள் சகோதரரே..

      Delete

  3. தீமைகளுக்கெதிராக அறச்சீற்றம் கொள்ளும்
    கவிதை மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யாவிற்கு வணக்கம்.
      வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள்..

      Delete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்துக்கு இதயப்பூர்வமான நன்றிகள் அய்யா.

      Delete
  5. சிரிக்கவே மாட்டோமா ?
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக காலம் கனிந்து வரும். சிரிக்கும் நாள் வெகுதூரம் இல்லை சகோதரி.. வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றீங்க சகோதரி..

      Delete
  6. வணக்கம்
    சகோதரன்

    நம் தொப்புள்கொடி இனத்திற்கு
    புதுவிடியல் உதயமாகும் அந்நாளே
    நாம் சிரித்திடும் நன்னாள்
    நமக்கெல்லாம் திருநாள்..

    கவிதையின் வரிகள் மிகமிக நன்று போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.....சகோதரன்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே..
      தங்கள் வருகை கண்டதும் மகிழ்ச்சி. தங்களின் பணி மகத்தானது தங்கள் பணியை ஊக்கவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில வரிகளைப் படைத்து அனுப்பியுள்ளேன். தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்.

      Delete
  7. அடங்காமல் திமிறி
    ஆர்ப்பரிக்கும் அனியாயம்
    முடங்காமல் போனால்
    சிரிப்பேது எமக்கு
    விடமாகும் விலைவாசி
    வீதியிலே மாந்தர்
    உடன் மாற்றம் வேண்டும்
    உன் எண்ணம் பலிக்கட்டும்!

    அருமையான கவிதை சகோ! ஆழமான கருத்துக்கள்!

    மிகச் சிறப்பு! போட்டியில் வெற்றி உமதாக வாழ்த்துகிறேன்!

    த ம.3

    ReplyDelete
    Replies
    1. கவிதையிலே வாழ்த்து சொல்லிய விதம் ரசிக்க வைக்கிறது சகோதரி. நீங்கள் கூறியது போலவே போட்டியில் கலந்து கொள்ளும் ஆற்றல் எமக்கு குறைவு என்பேன். இருப்பினும் போட்டி நடத்தும் எனது இரு சகோதரர்களை உற்சாகப் படுத்தி எண்ணி எழுதி விட்டேன். தங்கள் வருகையும் வாழ்த்துக்கும் கருத்தும் என்னை ஊக்குவிக்கிறது சகோதரி,. ரொம்ப நன்றி.

      Delete
  8. //நம் உடன்பிறவா சகோதரிகள்
    காமுகன்களின் பார்வையின்றி கடைவீதி
    கடந்து செல்லும் நற்காலம்
    பிறந்திடும் நன்னாளே..

    பாசமில்லா பிள்ளைகளால்
    காப்பகங்கள் காணும் பெற்றோர்களே
    இல்லையெனும் புள்ளிவிவரம்
    வந்து விழும் அந்நாளே..//

    அருமை, மிக‌ அருமை!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. தங்களைப் போன்றோரின் கருத்து என்னை இன்னும் எழுத வேண்டும் என உந்துகிறது. வருகை தந்து கருத்திட்ட தங்களுக்கு நன்றிகள்...

      Delete
  9. அருமை பாண்டியன்! வாழ்த்துக்கள்!
    எனக்கு எல்லாம் பிடித்தது என்றாலும் மிகவும் பிடித்தவை இவை:
    // மத்தாப்பு சிரிப்பு மலரும் நன்னாளே
    நற்காலம் பிறந்திடும் நன்னாளே..
    சமுதாயம் வந்து விடும் அந்நாளே..//
    நீங்கள் சொல்லும் நன்னாள் விரைவில் இனிதாய் வரட்டும்!
    வெற்றிபெற வாழ்த்துகள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை கண்டும், கருத்து கண்டும் உள்ளம் உவகை கொள்கிறது. தங்களின் வாழ்த்துக்கு நன்றி. தங்களும் போட்டியில் வெற்றி பெற எனது அன்பான வாழ்த்துக்கள்...

      Delete
  10. நம் தொப்புள்கொடி இனத்திற்கு
    புதுவிடியல் உதயமாகும் அந்நாளே
    நாம் சிரித்திடும் நன்னாள்
    நமக்கெல்லாம் திருநாள்.. // அருமையான வரிகள்! சிறப்பான கவிதை! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தொடர்வருகை தரும் சகோதருக்கு முதலில் எனது நன்றிகள். கருத்தும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள் தங்களுக்கு.. தொடர்ந்த நட்பில் என்றும் இணைந்திருப்போம் சகோதரரே...

      Delete
  11. நல்ல சிந்தனை!.. நமக்கு மட்டும் நன்னாளா?.. நமது உறவுகளுக்கும் அது வேண்டும் என - உயர்வு கொண்டு தீட்டப்பட்ட கவிதை வைரம் போல ஜொலிக்கின்றது!..

    எல்லாரும் எல்லாமும் எய்திட இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வருக அய்யா வணக்கம்..
      தங்களது கருத்து சரியான கருத்தைத் தான் சொல்லியிருக்கிறேன் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தங்களது தொடர் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீங்க அய்யா..

      Delete
  12. Replies
    1. வணக்கம் சகோதரரே..
      புது புது வழிகளிலிருந்து எல்லாம் கருத்துரைகளைப் பதிவிடுகிறீர்கள். புது தொலைபேசியா! மகிழ்ச்சி சகோதரரே. வருகைக்கு நன்றி..

      Delete
  13. நல்ல சிந்தனை நண்பரே. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யாவின் வருகை கண்டு மகிழ்ச்சி. வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி..

      Delete
  14. கவிதையும் ,கவிதைக்கு முன்னுரையும் சூப்பர் .நமக்கும் வரும் தீபாவளி என்ற நம்பிகையோடு வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரரே !

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி வணக்கம்..
      போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்பதெல்லாம் பேராசை. கவிதை என்ற பெயரில் ஏதோ பகிர்ந்திருக்கிறேன் நண்பர்களின் பார்வைக்கு. வருகை தந்து கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி..

      Delete
  15. அருமையாகஊள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை மகிழ்ச்சியாய் உள்ளது. தங்களைப் போன்ற கவிஞர்களுக்கு முன் இதெல்லாம் கவிதையா! இன்னும் முயற்சித்து பா புனைய கற்றுக் கொள்கிறேன். தங்களின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க...

      Delete
  16. அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றீங்க சகோதரரே.. அரும்பிய நட்பில் இணைந்திருப்போம்.

      Delete
  17. அருமை சகோ...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்..முதல் வரிகளில் மேட்டர் க்ளோஸ்... ஜோரா இருக்கு ...

    ReplyDelete
    Replies
    1. நிஜமாகத் தான் சொல்றீங்களா சகோததரே! வாழ்த்துக்கும், வருகை தந்து தன்னம்பிக்கையூட்டும் கருத்து தெரிவித்த தங்களுக்கு எனது அன்பு நன்றிகள்..

      Delete
  18. ஒரு நரகாசுரனை அழித்துவிட்டதற்கு ஒவ்வொரு வருடமும் தீபாவளி என்றால் இங்கு எத்தனையெத்தனை நரகாசுரன்-கள்... அழித்துவிட்டால் தினம் தினம் அல்லவா தீபாவளி...!

    முதல் வரியிலேயே அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டீர்கள் சகோ!
    முத்தாய்ப்பாய் முடிவு வரிகள்..! நன்று! வெற்றி பெற வாழ்த்துக்கள்! சிறப்பாய் தொடரட்டும்... உங்கள் சிந்தனைகள்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      முதன்முதலில் என்னைக் கவிதை எழுத ஊக்குவித்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் வந்து கருத்திட்டதும் தான் எனக்கு ஒரு மனநிறைவு. என் உடன்பிறந்த சகோதரி போல் என்னை ஊக்குவிக்கும் தங்களுக்கு என் நன்றிகள் போதாது. தங்களின் தன்னம்பிக்கையை ஊட்டும் வார்த்தைக்கு நன்றிகள் சகோதரி..

      Delete
  19. நம் உடன்பிறவா சகோதரிகள்
    காமுகன்களின் பார்வையின்றி கடைவீதி
    கடந்து செல்லும் நற்காலம்
    பிறந்திடும் நன்னாளே..

    பாசமில்லா பிள்ளைகளால்
    காப்பகங்கள் காணும் பெற்றோர்களே
    இல்லையெனும் புள்ளிவிவரம்
    வந்து விழும் அந்நாளே..//
    அருமையான் கருத்துக்களை கொண்ட கவிதை.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சியாய் உள்ளது மனம். கடல் கடந்து இணைய வானில் வருகை தந்து கருத்திட்ட தங்களுக்கு நன்றிகளையே நவில்கிறேன். வாழ்த்துக்கும் நன்றி அம்மா...

      Delete
  20. சகோ.தாங்களின் கவிதை நன்றாக இருக்கு. போட்டியில் தாங்கள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை மனதிற்கு இனிமை. தங்கள் வாழ்த்து என்னை ஊக்குவிக்குகிறது. வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள்..

      Delete

  21. வணக்கம்!

    பெண்ணின் விடுதலையைப் பேணா இழிநிலை
    மண்ணில் இருந்தால் மகிழ்வுண்டோ? - எண்ணி
    விழித்தெழும் நாளே வியன்திருநாள்! தீதை
    அழித்தெழும் நாளே அழகு!

    இனிக்கும் அ. பாண்டியன் ஈந்த கவிதை
    கனிக்கு நிகரெனக் காட்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வருக வணக்கம் அய்யா.
      தங்களைப் போன்ற கவிஞர்கள் எனது வரிகளைப் படிப்பதைக் காணும் போது மட்டற்ற மகிழ்ச்சியாய் உள்ளது. கவியாலேயே வாழ்த்தியமைக்கும், வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கும் நன்றிகள் அய்யா.

      Delete

  22. சகுனம் பார்த்து சடங்கு
    செய்யும் சங்கடங்கள் காணாத
    சாத்திரங்கள் தோன்றுகின்ற சமுதாயம்
    வந்து விடும் அந்நாளே..//

    இதுதான் உண்மையான நன்னாள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் வருகை கண்டும் கருத்து கண்டும் மகிழ்ச்சியாய் உள்ளது. தொடர்ந்து இணைந்திருப்போம். வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  23. மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கிய கவிதை. சமுதாயத்தில் அன்றாடம் நாம் காணும் அவலங்களைத் துடைத்தெறிந்து, தன்னலம் துறந்து, தன்னம்பிக்கையோடு, உற்றோரும் பெற்றோரும் உறவாட, பெண்மை போற்றி பெருவாழ்வு வாழ்கிறோமோ அன்றே நமக்குத் திருநாள். அழகாகச் சொல்லிவிட்டீர்கள். போட்டியில் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள் பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா! கவிதையின் பொருளை நன்கு உணர்ந்து அழகாக சொல்லி விட்டீர்கள் சகோதரி. முதல் வருகை கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..

      Delete
  24. நல்லாயிருக்கு.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் எனது அன்பான நன்றிகள் சகோதரரே..

      Delete
  25. பாசமில்லா பிள்ளைகளால்
    காப்பகங்கள் காணும் பெற்றோர்களே
    இல்லையெனும் புள்ளிவிவரம்
    வந்து விழும் அந்நாளே.. அத் திருநாள்

    கன்னியரின் கற்புக்கு கண்ணியம் தர விளையும் காதகர்கள் இருக்கும் நாள் திருநாள் தான் தீபாவளி தான்
    அத்தனையும் அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.....!
    அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகை கண்டதும் மனத்திற்கு இனிய மகிழ்ச்சி. தங்களது கருத்துரை என்னை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறது. அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரி..

      Delete
  26. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    வெற்றி பெற வாழ்த்துக்கள்.....!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்..

      Delete