அரும்புகள் மலரட்டும்: கணிதத்தில் சில சுவாரசியங்கள்

Thursday, 25 September 2014

கணிதத்தில் சில சுவாரசியங்கள்


வணக்கம் நண்பர்களே
வணக்கம் என்பது ஐந்தெழுத்து
நண்பர்கள் என்பது ஆறெழுத்து
என்னென்னமோ பொழம்புறானே 
இதை எல்லாம் கேட்கிறது 
எங்க தலையெழுத்துனு நீங்க 
பொழம்புறது சத்தமா கேட்குது
இனி எல்லாமே கணக்கு தான்....

கணித விளையாட்டு!62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on
======
4 + 9 + 1 +3 = 17
4913 = 173

=======
13 + 53 + 33 = 153

கார்ப்ரேகர் எண்

தனியான நான்கு எண்களை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்ணை எழுதிக் கொள்ளுங்கள் .பின் அதே நான்கு எண்களை உபயோகித்து வரும் சிறிய எண்ணையும் குறித்துக் கொள்ளுங்கள்.பெரிய எண்ணிலிருந்து சிறிய எண்ணைக் கழியுங்கள்.வருகிற விடையில் உள்ள நான்கு எண்களை உபயோகித்து பெரிய எண்,சிறிய எண் கண்டுபிடித்துப் பின் கழியுங்கள்.இதே போலத் தொடர்ந்து செய்தால் ஒரு முறை 6174 என்ற எண் வரும் எந்த நான்கு எண்களை எடுத்துக் கொண்டாலும் இதே போல ஒரு நிலையில் 6174 என்ற எண் வரும் இந்த எண்ணை கார்ப்ரேகர் எண் என்று சொல்கிறார்கள்.
உதாரணம்;
எடுத்துக் கொண்ட எண்கள்;8,7,9,6
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;9876
சிறிய எண்;6789
வித்தியாசம்;3087
மீதியில் வரும் நான்கு எண்கள்;. 3,0,8,7
இந்த நான்கு எண்களை உபயோகித்து வரும் பெரிய எண்;8730
சிறிய எண்; 0378
வித்தியாசம்;8352
8,3,5,2,இவற்றின் பெரிய எண்;8532
சிறிய எண்;2358
வித்தியாசம்;6174
ஒரு சில எண்களுக்கு ஒரே முறையிலும் ,வேறு சில எண்களுக்கு நான்கைந்து தடவைகளுக்குப் பின்னும் இந்த 6174 என்ற எண் வரும் .

அழகான பெருக்கல்

கீழேதரப்பட்டுள்ள பெருக்கல்களில் ஒருசிறப்பம்சம்உள்ளது.விடையில்வரும் எண்கள் எல்லாம் ஒரே எண்கள் திரும்பவும் வருகின்றன.அதுவும் வரிசையாக வருகின்றன.(same figures in the same order starting in a different place as if written round the edge of a circle)
142857 X2= 285714
142857 X3 =428571
142857X4 =571428
142857 X5 =714285
142857 X6=857142

அதிசய பெருக்கல்

கீழே உள்ள பெருக்கல்களைப் பாருங்கள் இடது புறமும் வலது புறமும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை உள்ள எண்கள் இடம் பெற்றுள்ளன.
51249876 X3=153749628
32547891X6=195287346
16583742X9=149253678

கீழே உள்ள வித்தியாசமான பெருக்கலைப் பாருங்கள்.இடது புறத்தில் உள்ள எண்கள் வலது புறத்தில் அப்படியே திரும்பி இருக்கின்றன.
10989 X 9 =98901.

விந்தை எண்

2519 ஒரு விந்தையான எண்
இதை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும்.
இதை 8 ஆல் வகுத்தால் 7 மீதி வரும்
இதை7 ஆல் வகுத்தால்6 மீதி வரும்
இதை 6 ஆல் வகுத்தால் 5 மீதி வரும்
இதை5 ஆல் வகுத்தால்4 மீதி வரும்
இதை4 ஆல் வகுத்தால்3 மீதி வரும்
இதை3 ஆல் வகுத்தால் 2 மீதி வரும்
இதை2 ஆல் வகுத்தால்1 மீதி வரும்


அதிசய எண்

ஒரு அதிசய எண்;12345679
ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத்தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கி வரும் விடையை இந்த அதிசய எண்ணுடன் பெருக்குங்கள்.விடை நீங்கள் தேர்ந்தெடுத்த எண்ணின் வரிசையாக இருக்கும்.
1x9x12345679=111111111
2x9x12345679=222222222
3x9x12345679=333333333
4x9x12345679=444444444
5x9x12345679=555555555
6x9x12345679=666666666
7x9x12345679=777777777
8x9x12345679=888888888
9x9x12345679=999999999

நினைத்த எண் எது?

ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதிக் கொள்ளுங்கள்.
அதனை தொடர்ந்து அதே எண்ணை மீண்டும் எழுதி ஆறு இலக்க எண்ணாக ஆக்குங்கள்.
அதை ஏழு கொண்டு வகுங்கள்.
வந்த விடையை பதினொன்றால் வகுங்கள்.
கிடைத்த எண்ணை பதிமூன்றால் வகுங்கள்.
இப்போது கிடைத்த விடை நீங்கள் முதலில் நினைத்த எண்.சரிதானா?
உதாரணம்;
மூன்று இலக்க எண் = 369
மீண்டும் எழுதினால் = 369369
ஏழு கொண்டு வகுத்தால்= 52767
பதினொன்றால் வகுத்தால் = 4797
பதிமூன்றால் வகுத்தால் = 369

அதிசய சதுரம்

இது ஒரு அதிசய சதுரம்.இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ், குறுக்காக எப்படிக் கூட்டினாலும் 264 வரும்.

96 11 89 68
88 69 91 16
61 86 18 99
19 98 66 81

அது மாத்திரமல்ல.இந்த சதுரத்தை அப்படியே தலைகீழாக மாற்றிப் பாருங்கள்.

18 99 86 61
66 81 98 19
91 16 69 88
89 68 11 96இப்பொழுதும் இடமிருந்து வலம்,மேலிருந்து கீழ்,குறுக்காக கூட்டிப் பாருங்கள்.அதே விடை தான் வரும்.264..


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

35 comments:

 1. Replies
  1. பதிவிட்ட ஒரு நிமிடத்திற்குள் கருத்திட்ட உங்கள் வேகம் தான் அசத்தல் சகோதரரே.. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும். மதுரை சந்திப்புக்கு முன்னர் அய்யா கவிஞர் முத்துநிலவன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் சந்திப்போம் மறந்து விடாதீர்கள் அண்ணா.. அவசியம் வரவும்..

   Delete
 2. ஆம் ஐயா கணிதம் சுவாரசியம் நிறைந்தது தான்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

   Delete
 3. அப்பப்பா, எத்தனை விதமான ஆச்சிரியமான கணக்குகள்.
  ஆமாம், புதிதாக திருமணமானவர், இப்படியா மண்டையை பிச்சுக்கொண்டு சுவாரசியக்கணிதம்ன்னு எழுதுவாங்க. உங்கள் மனைவி இந்த பதிவை படித்தார்களா? படித்திருந்தால் என்ன சொன்னார்கள்? (இந்த மனுசனுக்கு வேற வேலை வெட்டி இல்லை என்று சொன்னார்களா? )உண்மையை சொல்லுங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் சொல்லுவதில்லை. மனதில் வேண்டுமானால் நினைத்து கொள்ளலாம் என நினைக்கிறேன் சகோதரரே. எப்படியோ எடுத்துக் கொடுத்திருக்கீங்க இதை பார்த்தது அப்புறம் சொன்னாலும் சொல்லலாம். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரரே. தொடர்வோம்..

   Delete
 4. Excellent boss can I have the PDF copy of this or could I convert this

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோதரர். இப்பதிவை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் மகிழ்ச்சி தான் எனக்கு. தொடர்வோம். நன்றி..

   Delete
 5. Replies
  1. வணக்கம் அய்யா
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்

   Delete
 6. எல்லாமே மிகுந்த சுவாரசியம் பாண்டியன்! விந்தை எண், நினைத்த எண், அதிசய எண்கள் அசத்தல் ரகம்!!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி
   நலமாக உள்ளீர்களா! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ரசித்து படித்தமைக்கு நன்றிகளும் மகிழ்ச்சிகளும்..

   Delete
 7. சுவாரஸ்யமான கணித பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்

   Delete
 8. என்ன ? எல்லோருமே கணக்கு பண்ண கிளம்பிட்டீங்க,,,,

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையில கணக்கு ரொம்ப முக்கியம் பாஸ். சும்மா விளையாட்டுக்கு.. ரொம்ப நன்றிங்க கருத்துக்கும் வருகைக்கும்..

   Delete
 9. சத்தியமாய் சொல்றேன் கண்ணு வலிக்குது:))) ஏன் தம்பி ஏன் இந்த கொலைவெறி:)) சும்மா சொன்னேன், அட்டகாசமான பகிர்வு சகோ!! ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க:)) வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க அக்கா வாங்க. மூணு நாளு கணக்கு பயிற்சி வகுப்பு. அதைப் பகிர்ந்ததால நானும் ஒரு பதிவு போட்டாச்சு. உங்க நிலைமை எனக்கு புரியுது அக்கா. ஏதோ ஆர்வ மிகுதியால் பதிவிட்டாச்சு. பொறுத்தருள வேண்டுகிறேன். சும்மா. நன்றீங்க அக்கா..

   Delete
 10. அருமை சகோ
  தொடர்க ..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ
   தங்கள் வலைப்பக்கம் வருவது குறைந்து விட்டது மன்னிக்கவும். ஆனாலும் பதிவைப் படித்து விடுவேன் கருத்துரை மட்டும் தான் இடுவதில்லை. எல்லா நண்பர்களின் தளங்களும் அப்படி தான்,. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

   Delete
 11. 62-52 = 10
  562 - 452 = 110
  5562 - 4452 = 1110
  55562 - 44452 =11110
  Am I Wrong?
  Christo. A
  Dubai, UAE

  ReplyDelete
 12. அசத்தல்...
  கலக்கிட்டீங்க...

  ReplyDelete
 13. அருமையான பதிவு
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  ReplyDelete
 14. அருமை இதுபோன்ற கணித சுவாரசியங்களை மாணவர்களுக்கு அளித்தால் கணிதப் பாடத்தின் மீது ஈடுபாடு கூடும்
  2519 .
  பத்தால் வகுத்தால் மீதி 9 வரும் . இது மிக சிறிய எண்.இதற்கு அடுத்த என் 5039.
  நம் விருப்பம்போல் மீதி வரும்படி எண்களை அமைக்க முடியும்

  ReplyDelete
 15. என்னய்யா இது தெரியாத் தனமா வந்திட்டேன்பா. தலை சுத்துது ஹா ஹா ... அம்மாடியோவ் எப்படி இப்படி எல்லாம். கல்யாணத்திற்கு பிறகு ரொம்பக் கெட்டிக்காரனா போயிட்டீங்க... இல்ல..ம்..ம்.. சரி சரி நடத்துங்க நடத்துங்க... நன்றிய்யா...வாழ்த்துக்கள் ...! தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete
 16. கணண்கிலே இவ்வளவு கணக்கா? நம்பமுடியவில்லை. மாணவர்களுக்கும், போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கும் பயன்படும் பதிவு. நன்றி.

  ReplyDelete
 17. என்ன ஆச்சு பாண்டியன்? பதிவுகளையும் காணவில்லை, விழாவிற்கும் வரவிலலை? செல்பேசிவேறு தொடர்பு எல்லைக்கு அப்பால்...!
  வந்த நம் வலைப்பதிவர் எல்ல்ாரும் உங்களை விசாரித்தார்கள்... உடம்புக்கு ஒன்றுமில்லையே? என் மகள் நலந்தானே?

  ReplyDelete
 18. இந்தப் பதிவு சிவராமன் என்பவரால் சுடப்பட்டிருக்கிறது ...

  ஆனால் இது என் தள லிங்க் ஹீ ஹீ
  உங்களுக்கு ரொம்ப பிடிக்குமே !

  ReplyDelete
  Replies
  1. அடப்பாவி! சுடுதலுக்கு முடிவே இல்லையா?!!!!

   Delete
  2. பிரபலப் பதிவர்களே! காப்பி ரைட் போடுங்கப்பா! ஹப்பா நாங்க தப்பிச்சோம். பிரபலம் இல்ல ஸோ எங்களோடத யாரும் காப்பி அடிக்க மாட்டார்கள்!

   Delete
 19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 20. வணக்கம் சகோதரா...

  தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
  அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

  வலைச்சர இணைப்பு
  http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html

  நன்றி

  ReplyDelete
 21. சுவாரசியமாக உள்ளதே! எப்படி எங்கள் கண்ணில் தப்பியது!

  ReplyDelete
 22. வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.

  ReplyDelete