அரும்புகள் மலரட்டும்: மறுஜென்மம் பற்றிய சந்தேகங்கள்

Wednesday, 24 September 2014

மறுஜென்மம் பற்றிய சந்தேகங்கள்

வணக்கம் நண்பர்களே!

மறுஜென்மம் எனும் வார்த்தையில் கூட எனக்கு நம்பிக்கையில்லை என்று தான் சொல்வேன். ஆனாலும் எனது நண்பர்கள் முன் வைத்த வாதத்தால் ஏற்பட்ட ஐயங்களுக்கு உங்களின் மேலான எண்ணங்களை அறிந்து கொள்ளும் வகையில் சில கேள்விகளை முன் வைக்கிறேன். தகுந்த விளக்கங்கள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில்...

1. மனிதன் இறந்தவுடன் அவனுக்கு மறுஜென்மம் உண்டா?

2. அப்படி இல்லை என்றால் நாம் இறந்தவுடன் நமது ஆத்மா என்ன ஆகிறது?

3. பூர்வ ஜென்ம அடிப்படையில் நாம் தொடர்ச்சியாக நன்மை தீமைகளை அனுபவத்து வருகிறோமோ?

4.நம் முன்னோர்களுக்கு செய்யும் சடங்குகள் குறித்த ஐதீகங்கள் என்னென்ன?

5. நாம் இறந்தவுடன் மறுஜென்மம் எடுத்து விடுவோம் என்றால் நமது முன்னோர்களும் மறுஜென்மம் எடுத்திருப்பார்கள் தானே?

6. நம் முன்னோர்களின் ஆத்மா மறுஜென்மம் எடுத்திருந்தால் அவர்களுக்கு செய்யும் சடங்குகள் தேவை தானா?

7. அதுவும் காக்கையை நம் முன்னோர்களாக வழிபடுவதன் நோக்கம் என்ன?

8. தீய சக்திகளுக்கு பழிவாங்கும் சக்தி உண்டா?
நண்பர்களே மேற்கண்ட கேள்விகள் உங்களுக்கு நகைப்பூட்டலாம். எல்லாமே மூடநம்பிக்கையால் ஏற்பட்டிருந்தாலும் நம் முன்னோர்கள் சரியான காரணத்தை வைத்துத் தான் செய்திருப்பார்கள் எனும் எண்ணங்களுக்கு தங்களது விளக்கம் தெளிவுப்படுத்தும் என்பதால் தங்கள் கருத்துகளைத் தாருங்கள். நன்றி..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

23 comments:

  1. நியாயமான சந்தேகங்கள்!..
    உள்ளந்தெளிந்து உணர்தலே அவசியம்!..
    காக்கையை முன்னோர்கள் என்று வழிபடுவதில்லை.. அப்படிச் சொல்வது பெருந்தவறு.. காக்கைக்கு உணவிடுவது - அதன் பகிர்ந்து உண்ணும் பண்பினை கண்டு அறிந்து கொள்வதற்காகவே!..

    காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள!.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அய்யா. நல்ல தகவல்களைத் தந்து திருத்தியும் உள்ளீர்கள். நன்றி..

      Delete
  2. வணக்கம்
    ஒவ்வொரு வினாவுக்கான விடையை குறுகிய வார்த்தையில் சொல்லிவிடமுடியாது சகோதரன் மற்றவர்களின் கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்... நல்ல ஆய்வு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கேள்விக்கான பதிலும், நண்பர்களின் மனநிலையை அறிந்து கொள்ள இப்பதிவு உதவும் என்றே நானும் நம்புகிறேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!! எப்படி சகோ. வருகைக்கு மிகுந்த நன்றிகள்..

      Delete
  3. அதீத நம்பிக்கை இல்லாததால் அதைப் பற்றி தெரிந்துகொள்ளும்
    ஆர்வமும் இல்லை .சகோதரரே..
    பறவைகளில் காகங்களுக்கு அதிக வாழ்நாள் உண்டு
    என்பார்கள் (மின்சார கம்பிகளுக்கும், கவட்டைகளுக்கும் ஆட்படாத காகங்கள்)
    ஒருவேளை நமது முன்னோர்களை அந்த காகம் பார்த்திருக்கக்கூடும்
    என்பதால் அதற்கு சோறு வைத்தால் முன்னோருக்கு வைத்தது போல
    என்று கூறக் கேட்டிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. வருகை தந்து என் வேண்டுகோளுக்காக ஒரு தகவலும் தந்துள்ளீர்கள். மிகக் நன்றிகள். தங்கள் தளத்திற்கு வர வேண்டும் எனும் ஆவல். விரைவில் வருகிறேன்..

      Delete
  4. "ஒரு யோகியின் சுயசரிதம்".....என்னும் நூலை பரமஹம்ஸ யோகானந்தர்
    எழுதி இருக்கிறார்கள்.

    அந்த புத்தகத்தைப் படியுங்கள் அனைத்துக் கோள்விகளுக்கும்.....இன்னும் எவ்வளவோ......நமக்கு ..... தெரியும்.

    9 மாதங்களுக்கு முன்புதான் எனக்கு அப்புத்தகம் பற்றி தெரியும் படித்தேன். இன்னும் பல தடவை படிக்க வேண்டும். இவ்வளவு நாட்களாக இது பற்றி தெரியாமல் போய் விட்டதே என வருந்தினேன். இப்போதாவது தெரிந்ததே...படிக்க பாக்கியம் கிடைத்ததே என நினைத்து மகிழ்ந்தேன்.

    ஓவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சகோதரி என்னிடம் கேட்ட நண்பர்களுக்கு இந்த புத்தகம் பற்றி தெரிவிக்கிறேன். நல்லதொரு தகவலைத் தந்தமைக்கு என் மன்மார்ந்த நன்றிகள் சகோதரி..

      Delete
  5. எந்த தெளிவான விளக்கம் இல்லாததினால் தான் இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. கடைபிடிப்பவர்கள் யாருக்கும் தெரியாத புதிரான விடயங்கள் இவையெல்லாம் சகோதரி. இருந்தாலும் செய்வார்கள் என்பது தான் வேடிக்கை. தொடர்ந்து நண்பர்களின் கருத்தை அறிவோம்..

      Delete
  6. அருமையான பதிவு சகோதரரே!

    நம்பியும் நம்பாமலுமாக இடை நடுவில் நான்....

    உங்களுக்கு வரும் பதில்களைக் காணும் ஆவலில் நானுமே..!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நானும் சரியான விளக்கத்திற்காக ஆவலுடன் இருக்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றீகள் சகோதரி..

      Delete
  7. திருவிளையாடல் புராணத்தில் மதுரை பாண்டிய மன்னனுக்கு வந்த பெருத்த சந்தேகம் போன்று, தம்பி மணவை அ பாண்டியனுக்கும் சந்தேகம் வந்துள்ளது. மறைமலை அடிகள் ”தொலைவில் உணர்தல்” மற்றும் “ மரணத்தின் பின் மனிதர் நிலை “ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் ஆவிகள், மறுஜென்மம் என்று நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீதரின் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தில் கதை துவங்கும் முன் ஒரு முன்னுரையைச் சொல்லுவார்கள். கமலஹாசனின் “எனக்குள் ஒருவன்”, ரஜினிகாந்தின் “ஆயிரம் ஜென்மங்கள்” திரைப் படங்கள் இந்த வரிசையில் வரும்.

    சகோதரி ஆர். உமையாள் காயத்ரி தெரிவித்த யோகி பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய "ஒரு யோகியின் சுயசரிதம்"..என்னும் நூலை நானும் வாங்கிப் படிக்கலாம் என்று இருக்கிறேன்.

    கடவுள் நம்பிக்கை, மறு ஜென்மம் போன்ற ஆன்மீகம் சம்பந்தப் பட்டவை எல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. சந்தேகங்கள் தெளிந்தது போலும் இருக்கும்; தெளியாமல் போனது போலும் இருக்கும். அது ஒரு மோன நிலை! இது போன்று விடை தெரியாத கேள்விகள் மனித வாழ்வில் நிறைய உண்டு.
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. நிறைய தகவல்கள் தந்தமைக்கு என் அன்பு நன்றிகள் அய்யா. பாண்டியனின் சந்தேகத்தைத் தீர்த்து வைத்து ஆயிரம் பொன் வாங்குவது யாரென்று பார்ப்போம் அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்..

      Delete
  8. கருட புராணத்தில் இறந்தபின் என்ன நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது! அறிவியல் ரீதியாக இதுவரை நான் ஏதும் படித்தது இல்லை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      அறிவியல் ரீதியான விளக்கம் தான் வேண்டுமென்பதில்லை. தங்களுக்கு தெரிந்த விடயங்களைக் கூறலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்..

      Delete
  9. என்ன திடீர்னு இப்படி கிளம்பிடீங்க சகோ:)

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான ஒரு அனுபவம் கிடைக்கட்டுமே என்று தான் அக்கா. இன்றைக்கு பேய், ஆவி என்று சொல்லியே ஏமாற்றி பொழப்பு நடத்துவர்கள் தான் பெருகியுள்ளார்கள் அக்கா.. என்னிடம் நண்பர்கள் கேட்ட கேள்விக்கு சரியான விளக்கம் கிடைக்குமா என்பதற்கு தான் இந்த பதிவு.

      Delete
  10. பதில்களைக் காண ஆவல்

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வருக சகோதரர். நண்பர்களின் கருத்துகளைக் காண நானும் ஆவலுடன் இருக்கிறேன். தொடர்ந்து இணைந்திருப்போம்..

      Delete
  11. அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் கிடைக்கவில்லை, கடைசிவரை கிடைக்காது கிடைத்தால் ? இறைவனின் இருப்பிடம் கிடைத்து விடும்.

    ReplyDelete
  12. நண்பரே என்ன ஆயிற்று உங்களுக்கு
    எதற்கு இந்த சிந்தனை
    இருக்கிற இந்த ஜென்மத்தை நன்றாக வாழ்வோம்

    ReplyDelete
  13. அன்புள்ள திரு.பாண்டியன் அய்யா அவர்களுக்கு,
    வணக்கம்.
    ‘மறுஜென்மம் பற்றிய சந்தேகங்கள்...
    மனிதன் இறந்தவுடன் மறுஜென்மம் ஒன்று இல்லை என்றே நினைக்கின்றேன். இல்லை...இல்லை...இல்லவே இல்லை.
    ஆத்மா என்றால் என்ன? அது எங்கு இருக்கிறது? அது நாம் உயிருடன் இருக்கையில் என்ன செய்து கொண்டு இருக்கிறது? நீங்கள் உயிரைத்தான் ஆத்மா என்று சொல்கிறீர்காள என்று தெரியவில்லை...
    உயிர்தான் என்றால் நாம் மூச்சு விடுவது நின்று விட்டால் ...அதுவும் நின்றுவிட வேண்டியதுதானே!

    யாரும் மறுஜென்மம் எடுத்து வந்து இதுவரை கதவைத்தட்டிக் கொண்டு வரவில்லை...இனிமேலா வரப்போகிறார்கள்?
    பயம் வேண்டாம்...நிச்சயம் வரமாட்டார்கள்.

    நினைவில் வாழுகின்றவருக்குத்தான் நீங்கள் சடங்குகள் செய்வதாக நினைத்துக்கொண்டு செய்கிறீர்கள்...பாட்டன், பூட்டன். முப்பாட்டன் போன்றவர்களுக்கு யாராவது என்ன செய்கிறோம். அவர்களின் பெயர்கூட யாருக்காவது தெரியுமா? நீங்கள் சடங்கு செய்வீர்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கவில்லை...எங்கே இருக்கிறார்கள் பார்ப்பதற்கு...? அவர்கள்தான் மறைந்து விட்டார்களே!

    ஒரே ஜென்மம்தான்...மறு ஜென்மம் ஜென்மத்துக்கம் கிடையாது. நன்மை தீமை எப்பொழுதும் வரக்கூடியதுதான் இரவு பகலைப் போல இயற்கையானது. ‘ தீதும் நன்றும் பிறர் தர வாரா’

    சடங்குகள் நாம் பார்த்துச் செய்வதுதான்...முன்னோர்கள்
    பழங்குடி இனத்தவர்களைச் சொல்கிறீர்ளா? ஆரியர்களைச் சொல்கிறீர்களா? சூத்திரர்களைச் சொல்கிறீர்களா?
    எடுத்துக்காட்டுக்காக இறந்ததவர்களைக்கூட சிலர் எரிக்கிறார்கள்...சிலர் புதைக்கிறார்கள்...ஒரு சிலர் அப்படியே கழுகு போன்ற பறவைகளுக்கு இறையாகப் பயன்படட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்...நீங்கள் எந்த முன்னோர்களைச் சொல்கிறீர்கள்?

    ஒர வேளை காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடியதால் நம்ம ஜாதி என்று சோறிட்டு வழிபடுகிறார்களோ?

    தீயசக்திதானே...அது பழிவாங்குகின்ற தொழிலைச் செய்வதுதானே முறை...ஒன்று ஆக்கும் சக்தி...மற்றொன்ற அழிக்கும் சக்தியா?

    நாம் நல்ல சக்தியா? தீயசக்தியா? முன்னதாக இருக்க முயற்சிப்போம்.
    நன்றி.

    ஏன்? எதற்கு? எப்படி? -என்றெல்லாம் கேட்பதுதானே நாம்.
    நன்றாக கேட்டிருந்தீர்கள்..தங்களிடம் பேசியது இல்லையா....ஏதாவது பேசலாம் என்று பேசினேன். தவறாக நினைத்தால் அதற்கு நான்தான் பொறுப்பு.
    நன்று.


    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete