முன்னிரவு பின்னிரவு எனக்கில்லை
முயன்று படுத்தேன் முடியவில்லை
முப்பொழுதும் உன்மடியில் தவழுகிறேன்..
புத்தம்புது குழந்தைகளை நொடிக்கொருமுறை
பிரசவிக்கும் வித்தைப் பெற்றாய்
பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்..
உலகமதை உள்ளங்கையில் தவழவிட்டாய்
உயிர்ப்புடனே இளைஞர்கள் சிந்திக்க
உன் மடியில் இடம் தந்தாய்..
கடிகாரம் உருண்டோட கனபொழுதில்
காலங்களை விழுங்கிக் கொண்டாய்
காரியங்கள் பல கூட காரணமாய் நீயிருந்தாய்..
பற்பல இடையூறுகள் இருந்தாலும்
பல நன்மை நீ தந்தாய்-பாங்குடனே
பழகிடவே நண்பர்களை எனக்கீந்தாய்..
அறிவியல் தந்த ஆக்கத்தால்
அழகழகாய் வடிவம் பெற்றாய்
அன்னைத்தமிழில் நானெழுத வாய்ப்பளித்தாய்..
இருக்கும் இடமெல்லாம் இளைஞர்களின்
இதயம் கவர்ந்து இழுத்ததினால்
இணையம் என்றே பெயர் பெற்றாய்..
"அன்னைத்தமிழில் நானெழுத வாய்ப்பளித்தாய்.."
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள் வாழ்த்துகள்....
முதல் கருத்துக்கும் முத்தான வருகைக்கும் என் அன்பு நன்றிகள். தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். நன்றி
Deleteரொம்ப சரியா சொன்னீங்க சகோ!! அருமை!
ReplyDeleteவணக்கம் அக்கா
Deleteஅக்காவை விட தம்பி பெரிதாக என்ன சொல்லி விடப் போகிறேன்? தங்களின் செறிவான எழுத்துக்களைக் கண்டு வியக்கிறேன் அக்கா. தொடர்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
thama1
ReplyDeleteமிகுந்த நன்றிகள் அக்கா
Deleteஓ! இணையமே!
ReplyDelete"பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்..." என
தம்பி பாண்டியன் சொல்வதில்
உண்மை இருந்தாலும் - நாம
நல்லதை மட்டும் உறிஞ்சும்
பொல்லாத வீரர்களே!
வணக்கம் அக்கா
Deleteதங்களின் ஊக்குவிக்கும் கருத்துக்கும் வருகைக்கும் என் அன்பு நன்றிகள்
கடைசியில் சஸ்பென்ஸை உடைத்தவிதம் அருமை.போட்டோவை மாற்றி வைத்திருந்தால் சஸ்பென்ஸ் இன்னும் கூடியிருக்கும்.
ReplyDeleteசஸ்பென்ஸ் எல்லாம் உங்க கிட்ட ரொம்ப நேரம் கொண்டு போக முடியுமா! அதான் நானே படம் போட்டு சொல்லிட்டேன். நலம் தானே சகோதரரே! வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்
Deleteமிகவும் அருமை! உண்மை!
ReplyDeleteஇணையத்துடனே பொழுதுகள் போய் முடிவதும் உண்டு பலருக்கு!
நல்ல தோழமையும் அது!
வாழ்த்துக்கள் சகோதரரே!
தோழமையால் வருகையும் வாழ்த்தியும் சென்றமைக்கும் மிகுந்த நன்றிகள் சகோதரி. தொடர்ந்து இணைந்திருப்போம்..
Deleteஅருமையான வரிகள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிடுமுறை தினங்களில் உங்கள் ஊரில் தான் இருக்கிறேன் சகோதரர். நீங்கள் நலம் தானே! வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்
Deleteஇருக்கும் இடமெல்லாம் இளைஞர்களின்
ReplyDeleteஇதயம் கவர்ந்து இழுத்ததினால்
இணையம் என்றே பெயர் பெற்றாய்..
உண்மைதான்! நன்று!
வணக்கம் அய்யா
Deleteதங்கள் வருகையும் கருத்தும் கண்டு உள்ளமெல்லாம் உவகை உண்டாகிறது. தங்களின் வழிகாட்டுதலும் கருத்தும் என்றும் தேவை. தொடர்வோம் அய்யா..
இருக்கும் இடமெல்லாம் இளைஞர்களின்
ReplyDeleteஇதயம் கவர்ந்து இழுத்ததினால்
இணையம் என்றே பெயர் பெற்றாய்!..
அருமை.. பாராட்டுகள்!..
கவிதை உள்ளடக்கம் அருமை! எனக்கென்னவோ இரண்டு பொருள் உற (இரட்டுற மொழிதல்?) எழுதிய மாாாாதிரி இருக்கே? பாண்டியன் அதுவும்-
ReplyDelete“பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்.“ என்பது என்ன? சரி நடக்கட்டும் நல்லதையே எடுத்துக் கொள்வோம். தொடரட்டும் கவிதைகள்..நன்றி.
இணையத்திற்கோர் இன்கவி படைத்திட்ட
ReplyDeleteஇளங்கவியே...
இன்முகம் கொண்டேன் படித்தபின்
சொல்லிய சொற்கள் அனைத்தும் உண்மை...
வாழ்த்துக்கள் சகோதரரே...
அருமை
ReplyDeleteஇன்றைய விஞ்ஞானம் தந்த மிகப்பெரிய கொடை இது/
ReplyDeleteஇணையத்திற்கு அழகிய விளக்கம். கவிதை மிக அழகு! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!
ReplyDeleteஇருக்கும் இடமெல்லாம் இளைஞர்களின்
ReplyDeleteஇதயம் கவர்ந்து இழுத்ததினால்
இணையம் என்றே பெயர் பெற்றாய்..என்று கூறியுள்ளீர்கள். என்னைப்பொருத்தவரை அனைவரையும் இணைப்பதால் இணையமோ என நினைக்கிறேன். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் தங்களைக் காணவருவதில் தாமதம். பொறுத்துக்கொள்க.
பாவிப்பயல் கவிதை அருமை...
ReplyDeleteதொடர்க ...
பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்!!! ஆமாங்க! ரொம்பவே சரிங்க...பல நேரம் இணையமே நேரத்தை எடுத்துக் கொண்டு விடுகின்றது! பலருக்கும்! ஆனாலும் இணையம் நம்மை எல்லாம் இணைத்ததால் அது வாழ்க என்போம்!
ReplyDeleteஅருமையான கவிதை!
ReplyDeleteஅன்புள்ள அய்யா திரு.அ.பாண்டியன் அவர்களுக்கு,
ReplyDeleteவணக்கம்.
புத்தம்புது குழந்தைகளை நொடிக்கொருமுறை
பிரசவிக்கும் வித்தைப் பெற்றாய்
பாவிப்பய மனதைக் கெடுத்து வைத்தாய்..
-அருமையான கவிதை.
எனது வலைப்பூ பக்கம் வந்து பார்வையிட்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவிக்க அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
வெகு அருமையான கவிதை.
ReplyDelete