அரும்புகள் மலரட்டும்: காதல் கடிதம்

Monday, 8 September 2014

காதல் கடிதம்

உள்ளுக்குள் பிறப்பெடுத்து தொண்டைக்குள் சிக்கி
ஊமையாய் போன உணர்வுகளை
உரியவளுக்கு உரைத்திடும் உயிர்மொழி...

காதல்மொழி பேசி காலமெல்லாம் கரம்பிடித்து
களிப்புடனே வாழ்ந்திட காதலிக்கு
விண்ணப்பிக்கும் காகித மனு...

ஒலி வடிவில் பேசி விட்டால்
ஒலிந்திருக்கும் காற்று கடன் வாங்குமென்பதால்
ஓசையின்றி வரிவடிவில் தந்திட்ட காதல்மொழி...

இதயத்தில் இடம்பிடித்து இணைந்திட்ட
இனியவளை இன்முகம் மாறாமல்
இல்லறம் வரவேற்கும் இலவச விசா...

உள்ளார்ந்த உணர்வுகள் பேனா மை வழி
உதிரமாய் வழிந்தோட உருகி நனைந்திட்ட காகிதம்
உரைத்திடும் உயரிய மொழி...

தேன் சொட்டும் கவியாலே தேகமொழி
துணைகொண்டு காதல்சொல்ல முயற்சித்து தேவதைமொழி
தெரியாமல் தோற்றுப்போன உயிரின் வலி...

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

31 comments:

  1. காதலிக்க தேவதை மொழிதான் தேவை
    என்றால் இங்கு எத்தனை பேர்தான் காதலிக்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா. காதலன் காதலியிடம் அளந்து விடும் பொய்யில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொள்ளுங்களேன்.
      கவிதைக்கு மட்டுமல்ல
      காதலுக்கும் பொய் அழகு தான்
      கல்யாணம் வரை...

      Delete
  2. கவிதை அருமை நண்பரே ரசித்தேன்.... ஆனால் ? புதுமாப்பிள்ளைக்கு இந்த நேரத்தில் இது..... அதுதான் எனக்கு.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர். கற்பனைக் கவிதையை ரசித்தமைக்கு நன்றிகள். கற்பனை என்று சொல்லி விட்டதால் உங்கள் சந்தேகம் கலைந்திருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கு நன்றிகள். தொடர்வோம்

      Delete
  3. வணக்கம்
    சகோதரன்

    ஆகா....ஆகா....என்ன வரிகள் ஒவ்வொரு வரிகளும் கருத்து நிறைந்தவை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ. கவிதை ரசித்து கருத்தும் தந்தமைக்கு என் அன்பான நன்றிகள். இணைய வழி ஆரம்பித்த நம் நட்பு இருதயம் வரை கலந்தது அதிசயம் தான்..

      Delete
  4. திருமணம் ஆன பின்னும் காதலர்களாகவே வாழ வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரி. மனம் திறந்து வாழ்த்தியமைக்கு எங்கள் நன்றிகளும் வணக்கங்களும்..

      Delete
  5. //ஒலி வடிவில் பேசி விட்டால்
    ஒலிந்திருக்கும் காற்று கடன் வாங்குமென்பதால்//
    //இலவச விசா//
    கற்பனை அருமை! நல்ல கவிதை சகோதரரே, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி. மிகவும் ரசித்தவற்றைக் குறிப்பிட்டமைக்கு என் நன்றிகள்.. தொடர்வோம்..

      Delete
  6. என்னையா புது மாப்பிள்ளை புதுப் புது மொழி எல்லாம் பேசுகிறீர்கள்.
    கவிதைக்குத் தானே பொய்யழகு என்றார்கள்.
    காதலுக்கும் பொய்யழகாமோ சரி சரி அது தான் தேவதை மொழியெல்லாம் தானாக சிந்துதே இங்கு.கற்பனை அருமை ! நலம் தானே பாண்டியரே? நன்றி! தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா. நலமாக இருக்கிறேன். தங்களின் நலம் அறிய ஆவல். படித்து கருத்திட்டமைக்கும் வாழ்த்தியமைக்கும் என் அன்பான நன்றிகள். தொடர்வோம். தொடர்ந்து இணைந்திருப்போம்..

      Delete
  7. புது மாப்பிள்ளையிடம் இருந்து இப்படி ஒரு கவிதையா
    தம 4

    ReplyDelete
    Replies
    1. கவிதை ஊற்று பொங்குகின்றது!.. புது மாப்பிள்ளை அல்லவா!..

      Delete
    2. கவிதை அழகு!.. வாழ்க நலம்!..

      Delete
    3. வணக்கம் ஐயா. எல்லாம் கற்பனை வரிகள் தான். பதிவு போட்டு ரொம்ப நாள் ஆகிடுச்சேனு எழுதியது அய்யா. கருத்துக்கும் வருகைக்கு நன்றிகள் ஐயா.

      Delete
    4. வருகை தந்து வாழ்த்தியும் கருத்தும் தந்து மகிழ்ந்த தஞ்சையம்பது துரை செல்வராஜ் அய்யாவிற்கு என் அன்பான நன்றிகளும் உரிதாகட்டும். நன்றி..

      Delete
  8. கவிதை கவிதை
    காதல் கவிதை
    தேவதை மொழியில்
    தேன் கவிதை

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா. வருகை தந்து நேர்மறையான கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். உண்மையில் நாம் எழுத வேண்டியது இது அல்ல. சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும் அதன் கொடுமையான பக்கங்களைப் புரட்டிப் போடுவதாகவும் இருக்க வேண்டும். முயற்சிப்போம். நன்றி நண்பா..

      Delete
  9. அழகுக் கவிதைக்குப் பொய்யழகையும் மிகவும் ரசித்தோம்....அதுவும் காதல் கவிதையாயிற்றே! ரசிக்காமல்?!!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. வருகை தந்து கருத்திட்டமைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றிகள் அய்யா. இருவரும் நலம் தானே!!!

      Delete
  10. அடுத்த கலந்தாய்வில் மணவை வர ஏற்பாடு செய்ய வேண்டியது தான்.
    இப்போதான் மணமானது அதற்குள் காதல் கடிதமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. அவசியம் வாங்கிடலாம். அப்பறம் என்ன தினம் தினம் கவிதை தான். நலம் தானே சகோ. கருத்துரைக்கு நன்றிகள்..

      Delete
  11. வணக்கம் சகோதரரே!

    காதற் பெருக்கொடு கண்கள் உரைத்தகவி!
    கூதல் மிகவாய்க் குழைந்து!

    நலமாக இருப்பதாக நயமான கவிதையே சொல்கிறது!..:)
    வாழ்த்துக்கள் சகோ!

    வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. வாஞ்சையோடு வருகை தந்து வாழ்த்தியமைக்கும்
      அன்பால் விளைந்த கருத்துரைக்கும் நன்றிகள் பல
      சகோதரி..

      Delete
  12. ஓ! ஆடிக் கவிதையா?:)))
    நடத்துங்க, நடத்துங்க:)) அருமை சகோ:)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா
      ஆடிக்கவிதை இல்லை அக்கா நான் வலைப்பக்கத்தை விட்டு ஓடி போயிட்டுனு யாரும் வதந்தி கிளப்பாம இருக்க எதையாவது எழுதுனுமே எழுதின கவிதை. கருத்துக்கு நன்றீங்க அக்கா..

      Delete
  13. "உள்ளார்ந்த உணர்வுகள் பேனா மை வழி
    உதிரமாய் வழிந்தோட உருகி நனைந்திட்ட காகிதம்
    உரைத்திடும் உயரிய மொழி" எனவழகாக
    காதல் கடிதம் பாவாக மின்னுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் ரசனைக்கும் ஊக்குவிக்கும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா. தங்கள் நட்பு என்றும் எனக்கு மகிழ்ச்சி..

      Delete