அரும்புகள் மலரட்டும்: ஆமை வேக அரசுப் பேருந்தும் அசுர வேக பள்ளி வாகனமும்

Thursday, 11 September 2014

ஆமை வேக அரசுப் பேருந்தும் அசுர வேக பள்ளி வாகனமும்ஆமை வேக இரு சக்கர வாகனம் உங்களைப்
பின்தொடர்ந்தே பயணித்ததுண்டா?

சன்னலோர மரங்கள் உங்களை விட்டுப்
பிரிய அடம் பிடித்ததுண்டா?

நொடிக்கொரு முறை நொந்து கொண்டே
கடிகார முற்களைக் கண்டதுண்டா?

அப்படியானால் நீங்கள்
அரசுப் பேருந்தில் பயணித்துள்ளீர்கள்!ணக்கம் நண்பர்களே! 
பிள்ளைக்கு என்ன ஆச்சு இப்படி கவிதையில பொழம்புதுனு தானே யோசிக்கிறீங்க? அதும் ஒன்னும் இல்லைங்க 
(அப்படினா ரெண்டு மூனு இருக்கும்னு உங்க கம்ப்யூட்டர் மூளை கணக்கு போட்ருக்குமே?)
ஆமாங்க ஒன்னா ரெண்டா வாரா வாரம் திருச்சியிலிருந்து உழுந்தூர்பேட்டை போக அரசுப் பேருந்துல நம்பி ஏறி உட்கிறேன் பயபுள்ளங்க எல்லாரும் ஒரே மாதிரி தான் நம்ப வச்சு கழுத்தறுக்குதங்க. 

என் நண்பர் சமீபத்துல ஒரு கலந்தாய்வுக்கு சென்னை சென்று வந்தார். சென்னையிலிருந்து திருச்சி வர 11 மணி நேரம் ஆச்சுனு சொன்னார் இருந்தாலும் நம்ம சந்தேகப்புத்தி ஒத்துக் கொள்ள மறுத்தது. எப்படி இப்படியெல்லாம் ஓட்டுவாங்களா என்று தோணுச்சு. என் திருமணம் முடிந்த பிறகு தான் ஒன்னொன்ன புரிய ஆரம்பிச்சிருக்குங்கோ. 

என் மனைவி அவர் வீட்டீற்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் பணி புரிவதால் வார விடுமுறை தினத்தில் நான் தான் சென்று வருகிறேன். முதல் வாரம் திருச்சியிலிருந்து உழுந்தூர்பேட்டைக்கு 73 ரூபாய் சாதரண  கட்டணப் பேருந்தில் பயணம் செய்தேன். பயண நேரம் 2.மணி 40 நிமிடங்கள் . அடுத்த வாரம் விரைவாக செல்வார்கள் என்று நம்பி அல்ட்ரா டீலக்ஸ் கட்டணம் 95 ரூ ஆனாலும் பயண நேரம் 3 மணிநேரம் (காசு கூட கொடுத்தா ஊரெல்லாம் நின்னு நிதானமா சுத்தி காமிப்பாங்க போல)

அதற்கடுத்த வாரம் 120 ரூ பயணச்சீட்டு கொண்ட பேருந்து ஆனாலும் அதே 2.40 பயண நேரம். விதவிதமா பேருந்து கட்டணத்தை வைத்துக் கொண்டு வேகமெல்லாம் ஒரே மாதிரி ரொம்ப ரொம்ப மெதுவா தான் இருக்கும்னா நம்மள சம்பந்தப்பட்டவர்கள் ஏமாத்துறாங்கனு தான் அர்த்தம். என் சொந்த கதை நிற்க. 

அரசாங்கம் பேருந்து கட்டணத்தை விதவிதமாக உயர்த்திக்கிட்டாங்க. ஆனா எல்லாம் ஒரே மாதிரி வேகத்துல தான் போறாங்கனு பொதுவான குற்றச்சாட்டு இருக்கு. ஒரே மாதிரி வேகம்னு சொல்லவும் நீங்க தப்பா நினைச்சுக்க வேண்டாம் வேகம் டெட் ஸ்லோ னு சொல்வாங்களே அப்படியொரு வேகம் இதில் பாதிக்கப்படுவது பயணிகள் தான். அவர்களின் பொன்னான நேரமும் என்னடா இப்படி ஓட்டுறானு உயர் ரத்தம் அழுத்தம் ஏற்பட்டு அவர்களின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படுகிறது. இது எல்லாம் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். 

குறிப்பிட்ட வேகத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்றால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும். (அப்பறம் சொல்ல மறந்துட்டேங்க எக்ஸ்பிரஸ்னு போட்டுருக்குமே ஒரு வண்டி அதுல மறந்தும் கூட ஏறிடாதீங்க மக்களே நம்ம ஊரு மாட்டி வண்டி தேவலாம்)

அசுர வேக பள்ளி வாகனங்கள் 

நான் மேலே சொன்னேன்லங்க அதுக்கு அப்படியே எதிர்மறை வண்டில உட்காந்தா உசுற கையில பிடிச்சுக்கிட்டு போக வேண்டி இருக்கும்.  பள்ளி வாகனங்களும் கல்லூரி வாகனங்களும் அத்துமீறிய அநியாயங்களைச் சத்தமின்றி செய்து வருகின்றன. வேகம் வேகம் அதிவேகம். 

காலையில் பள்ளி மணி அடிக்கிற நேரத்துக்குள்ள போகனுமேங்கிற வேகம், மாலையில் சீக்கிரம் மாணவர்களை இறக்கி விட்டுட்டு காத்திட்டு இருக்கிற நண்பனோடு சேர்ந்து உருண்டை பாட்டிலை கையில பிடிக்கனுமேங்கற ஓட்டுனரின் கவலையில அதிவேகம். (இது எல்லா ஓட்டுநருக்கு பொருந்தாது என்பதை மிக கவனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அதிவேகம் என்பது கண்டிப்பாக பொருந்தும்).

பிஞ்சுக் குழந்தைகளுக்கு வேகம் என்றால் என்னானு தெரியுமா? அவங்க உலகத்துல இருந்துகிட்டு விளையாடிட்டு இருக்காங்க. வேகம் வேண்டாம் என்பதைப் பேருந்தில் பயணிக்கும் பெரியவர்கள் தான் அவ்வப்போது சுட்டுக்காட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கல்லூரி பேருந்து என்றால் சொல்லவா வேண்டும் மாணவர்கள் உசுப்பேத்த ஓட்டுநருக்கு தலை கால் புரிய மாட்டீங்குது. 

அவர் என்னமோ வானத்துல போயிட்டு இருக்க மாதிரி நினைச்சுக்கிட்டு சும்மா புழுதியைக் கிளப்பி விட்டுட்டு பறக்குறாரு. இதை எல்லாம் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கு தான் பயமாக இருக்கிறதே தவிர அதில் பயணிப்பவர்களுக்கு இல்லை. இதுவும் அவசியம் மாற வேண்டும்.

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்

பள்ளிக்கு செல்லும் தன் குழந்தைகளைக் கொஞ்சம் சீக்கிரமே தயார் படுத்தி விட்டால் வாகனம் வந்து உங்களுக்காக சப்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இப்படியே பல இடங்களில் நடந்தால் கடைசியில் நேரமாகி வேகமாக பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. உரிய நேரத்தில் தன் குழந்தைகளைப் பள்ளிக்கு தயார்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல நம் நாட்டின் எதிர்காலத்தையும் காப்பாற்றுங்கள். இந்த விடயத்தில் ஓட்டுநருக்கு உதவுங்கள்

கல்லூரி வாகனங்கள் கூச்சலும் கும்மாலமாக அதி வேகமாக சென்றால் அந்த வாகனத்தைச் சிறை பிடியுங்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகிகள் வரட்டும். ஒரு முடிவு கிடைக்கட்டும். (இப்ப இளம்பெண்கள் எல்லாம் விசிலடிக்க கத்துக்கிட்டாங்க போல கல்லூரிப் பேருந்து உங்களைக் கடந்து போனா அது உங்களுக்கே புரியும்).

இளைஞர்களே!! இது உங்க கையில தான் இருக்கு!!

நம் குழந்தைகள் நன்றாக படித்து நாளை நம்மள காப்பாற்றுவார்கள் எனும் நம்பிக்கை அதிவேகம் எனும் அசுரனால் கெட்டு விட கூடாது. தன் தாலியைக் கூட அடகு வைத்து தன் பிள்ளையைப் படிக்க வைக்கும் தாய்மார்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். தன் கடமையைச் சரிவர செய்து தன்னைச் சார்ந்தவர்களைக் கரை சேர்க்கும் பொறுப்பு தனக்கானது என்பதை உணர வேண்டுமென்பதே அனைவரின் ஆசை. 

நான் சொல்ல வருவது என்னான்னா? 

அரசுப் பேருந்தின் ஆமை வேகம்,  பள்ளி வாகனங்களின் அசுர வேகம் ஆகிய இரண்டும் சமுதாயத்திற்கு ஏற்றதல்லங்க. அதுலயும் அரசுப் பேருந்தின் ஆமை வேகம் இருக்கே அது என்னைப் போல புது மாப்பிள்ளைங்களுக்கு சுத்தமா ஏற்றதில்லைங்கோ!!! அப்படினா தனியார் பேருந்தில் போய் பார்க்கலாமேங்கிற யாரோ ஒருத்தரோடு மைண்ட் வாய்ஸ் சொல்றது கேக்குதுங்க. அட கொஞ்சம் சப்தம் போடாம இருங்க அது நம்ம மதுரைத் தமிழன் வாய்ஸே தானுங்கோ. அதுலயும் போய் பார்த்தேனே அந்த கதையை ஏன் கேட்கிறீங்க? வேண்டாமா? சரி சொல்லல.. நன்றி. மீண்டும் சந்திப்போம்..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

19 comments:

 1. வணக்கம்
  சகோதரன்
  சமுக அவலங்களை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்... அதுவும் இறுதியில் நம்மட மதுரைத் தழிழன்னை அல்லவா.. கிண்டிவிட்டீர்கள் என்னநடக்கும் என்று தெரியாது... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. ஆமை வேகம் கூட பரவாயில்லை
  அசுர வேகம் ஆபத்தல்லவா
  அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் பாலகர்களை ஏற்றிக்கொண்டு
  சீறியோடும் பள்ளிப் பேரூந்துகளைப் பார்த்தாலே மனம் பகீர் என்கிறது

  ReplyDelete
 3. நல்லதொரு கருத்தை முன்வைத்தீர்கள் நண்பா,... அரசாங்கமும் செவி சாய்த்தால் நலமே...

  ReplyDelete
 4. ஆமை வேக அரசுப் பேருந்து--கடினம்தான். அதுவும் உங்களுக்கு ஆமையிலேயே மெதுவாகச் செல்லும் ஆமையைப் போலத் தோன்றும். :)
  பிள்ளைகளை நேரத்திற்குத் தயார்பண்ணச் சொன்னது நன்று..
  பள்ளிப் பேருந்துகளுக்கு பொறுப்பு அதிகம் வேண்டுமே..கத்துறவங்க கத்திக்கிட்டுதான் இருக்கோம்...கேட்கிறவங்க கேட்க மாற்றாங்களே.. :(

  ReplyDelete
 5. அசத்தல் ஆரம்பம் சகோ:)) நாத்தியை பார்க்க அவ்ளோ அவசரமா? அப்போ தனியார் பஸ் கூட மெதுவா போற மாதிரி தானே இருக்கும்:) நல்ல பதிவு சகோ> சும்மா கலாய்ச்சேன்:))

  ReplyDelete
 6. சிறந்த வழிகாட்டல்
  தொடருங்கள்

  ReplyDelete
 7. ரொம்ப கஷ்டப்பட்டு விட்டீர்கள் போலத் தம்பி...வேற வழி பயணத்தை ரசிக்க வேண்டியது தான்...புதுமாப்பிள்ளையின் வேகம் அரசுப்பேரூந்து அறியுமா.....சகோ

  ReplyDelete
 8. அன்பு நண்பரே இன்று தங்கள் வலைப்பதிவை நன்றியுடன் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_12.html

  நன்றி.

  ReplyDelete
 9. அதற்கடுத்த வாரம் 120 ரூ பயணச்சீட்டு கொண்ட பேருந்து ஆனாலும் அதே 2.40 பயண நேரம். விதவிதமா பேருந்து கட்டணத்தை வைத்துக் கொண்டு வேகமெல்லாம் ஒரே மாதிரி ரொம்ப ரொம்ப மெதுவா தான் இருக்கும்னா நம்மள சம்பந்தப்பட்டவர்கள் ஏமாத்துறாங்கனு தான் அர்த்தம்// உண்மை உண்மை....

  எக்ஸ்பிரஸ்னு போட்டுருக்குமே....ஹாஹாஹா.....அது அந்தக்காலத்து வண்டிங்க....மெக்கனைஸ்டு மாட்டு வண்டி என்று பேர் போடலாம்ங்க....
  தன் தாலியைக் கூட அடகு வைத்து தன் பிள்ளையைப் படிக்க வைக்கும் தாய்மார்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும். தன் கடமையைச் சரிவர செய்து தன்னைச் சார்ந்தவர்களைக் கரை சேர்க்கும் பொறுப்பு தனக்கானது என்பதை உணர வேண்டுமென்பதே அனைவரின் ஆசை. //

  ஆமாங்க தம்பி! நம்ம இளஞர்கள் பலர் நீங்கள் சொல்லுவது போல்....கல்லூரிப் பெண்களும்....நாங்கள் ஜாலியாக இருக்கிறோம் என்ற பெயரில், கும்மாளம் அடித்துக் கொண்டு, விசிலடித்துக் கொண்டு.....பெற்றோரின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாமல் பொறுபற்று இருக்கத்தான் செய்கின்றார்கள்.....

  அவர்கள் பொறுப்புணர்ந்தால் நல்லதே.....

  மிக நல்ல ஒரு பதிவு.....

  ReplyDelete
 10. அரசுப் பேருந்துகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட வேகத்தில்தான் செல்கின்றன. சென்னையில் இருக்கும் போது நானும் எனது சகோதரனும் பெரியம்மா இறந்ததற்காக ஊருக்குப் போனோம்.... சென்னையில் இருந்து திருச்சிக்குப் போக 11 மணி நேரம் ஆனது. வண்டியில் இருந்த எல்லோரும் சத்தம் போட்டு பிரச்சினை பண்ண, அவரு இதுக்கு மேல போகாதுங்க... ஆக்ஸிலேட்டருக்கு கீழ கம்பி வச்சி வெல்ட் வச்சிருவாங்க... நாங்க என்ன பண்ணுறதுன்னு சொன்னார்.

  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 11. //அரசுப் பேருந்தின் ஆமை வேகம், பள்ளி வாகனங்களின் அசுர வேகம் ஆகிய இரண்டுமே சமுதாயத்திற்கு ஏற்றதல்ல!..//

  நியாயமான ஆதங்கம். அருமையான பதிவு.

  ReplyDelete
 12. அன்புடையீர்..
  விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

  ReplyDelete
 13. அரசுப் பேருந்து மிக மெதுவாகச் செல்கிறது என்பது உண்மைதான். அதிலும் உங்களைப் போன்ற புது மாப்பிள்ளைகளுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் வேகம் இவ்வளவுதான் இவ்வளவு பெட்ரோல்தான் செலவழிக்க வேண்டும் என்றெல்லாம் குறிப்புள்ளது போலிருக்கிறது...அவர்களை அப்படி கண்ட்ரோல் செய்யவில்லையென்றால் நம் நிலையை யோசிக்க முடியாது. தனியார் பேருந்துகள் செல்லும் வேகத்தைப் பார்த்ததில் சொல்கிறேன்.

  ReplyDelete
 14. போக்குவரத்து அவலங்களை சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். விடிவுகாலம் பிறக்கட்டும்.!

  ReplyDelete
 15. அனுபவம் பேசுகிறது! நல்ல அருமையான கட்டுரை! எனக்கு கிடைத்த விருது ஒன்றினை தங்களுடன் பகிர்ந்துள்ளேன் இங்கு! http://thalirssb.blogspot.com/2014/09/blogger-award-14-9-14.html

  ReplyDelete
 16. சொந்த சோகத்தை துவங்கி சமூகப் பொறுப்புடன் பதிவிட உங்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும் சகோ...
  கலக்ஸ்
  இந்த நேரத்தில் எந்த பேருந்தும் நூற்றி இருபதில் பறந்தால் கூட அது மெதுவாகத்தான் தெரியும்,
  சரி இரவு நேரத்தில் எப்படி பல பேருந்துகள் சர் சர் என்று பறக்கின்றன ...
  ஒரு ஆல்ககால் சோதனை செய்தால் அதிர்ந்து போவீர்கள்...
  தொண்ணூறு சதம் ஓட்டுனர்கள் சரக்கைப் போட்டு ஓட்டுவது தெரியுமா இரவில் மட்டும் வண்டிகள் பறக்கும் ரகசியம் இதுதான்.
  பல உயிர்களும் பறக்கும் ரகசியமும் இதுதான்

  ReplyDelete
 17. ஐன்ஸ்டீன் சார்பியல் குறித்து சொன்ன நகைச்சுவை துணுக்கு தான் என் நினைவிற்கு வரு‌கிறது.
  என் சகோதரியுடன் சேர்ந்து பயணித்திருந்தால் ஒரு வேளை
  யுக நேர பயணம் கூட நொடியில் கடந்திருக்கக்கூடும்.

  ReplyDelete
 18. எங்க ஊர்ல பள்ளி பேருந்தும் ஆமை வேகதுலத்தான் போகுது , அரசு பேருந்தும் ஆமை வேகதுலத்தான் போகுது. எங்க ஊரு ரோடு அப்டி இருக்கும் . . மோசமா !!

  ReplyDelete