வலை உறவுகளுக்கு வணக்கம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையப்பக்கம் திரும்பியிருக்கிறேன். அனைவரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இரண்டு நாட்கள் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியில் கலந்து கொண்டேன். அங்கு வகுப்பு எடுத்த அன்பு சகோதரர் திரு.மகாசுந்தர் அவர்கள் பகிர்ந்து கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சுதந்திரம் பற்றி ஒவ்வொரு துறையினரும் எவ்வாறு சொல்வார்கள் என்பது பற்றிய திரு.நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதை:
சுதந்திரம் பற்றி அரசாங்க ஊழியர் ஒருவர் கூறினால்
30ல் வாங்கியிருந்தால் மொத்தமாக இருந்திருக்கும்
15ல் வாங்கியதால் பாதியாகவே இருக்கிறது
வழக்கறிஞர் கூறினால்
18ல் வாங்கியிருந்தால் மேஜராக இருந்திருக்கும்
15ல் வாங்கியதால் மைனராகவே இருக்கிறது
மருத்துவர் கூறினால்
10ஆவது மாதமாக இருந்திருந்தால் நிறை பிரசவமாக இருந்திருக்கும்
8ஆவது மாதம் என்பதால் குறை பிரசவமாக இருக்கிறது
பெயரியல் நிபுணர் கூறினால்
ஆகஸ்ட் என்பதால் கஸ்டமாக இருக்கிறது
ஆபெஸ்ட் என்றிருந்தால் பெஸ்டாக இருந்திருக்கும்
கவர்ச்சி நடிகை கூறினால்
கவர்ச்சி நடிகை கருத்து சொன்னால் தானே
அட்டை படமாக கூட போடுவார்கள்
27ல் வாங்கியிருந்தால் இளைமையாக இருந்திருக்கும்
47ல் வாங்கியதால் நன்றாக இல்லை
இருந்தாலும் பரவாயில்லை இரவிலாவது வாங்கினார்களே!
இவ்வாறு அக்கவிதை இப்படியே தொடரும். நான் செவி வழியில் கேட்டதால் வார்த்தைகளில் பிழை இருக்கலாம். இருந்தால் மன்னித்து கருத்துரையில் திருத்தவும். இது போன்ற சுதந்திரம் பற்றிய உங்கள் சிந்தனைகளைக் கவிதையாய் தாராளமாய் தாருங்கள்....
சேலம் அரங்கநாதர் எழுதிய சுதந்திரம் பற்றிய ஒற்றைக்கவிதை எல்லாரிடமும் பிரபலமான ஒரு கவிதை
இரவில் வாங்கினோம்
இன்னும் விடியவே இல்லை
இதன் தொடர்ச்சியாக மற்றொரு கவிஞர் எழுதியது
விடிந்தாகி விட்டது நீ தான்
இன்னும் விழிக்கவில்லை
இதன் தொடர்ச்சியாக இன்னொரு கவிஞர்
விடிந்தாகியும் விட்டது
விழித்தாகியும் விட்டது
இன்னும் போர்வைக்குள்
என்ன புலம்பல்?
இதற்கும் நண்பர்கள் தொடர் கவிதை எழுதுங்களேன்.
இத்தனை வரிகளை எங்களோடு பகிர்ந்து கொண்ட அன்பு சகோதரர் திரு மகாசுந்தர் அவர்களின் வலைத்தளம்: http://mahaasundar.blogspot.in/ நீங்களும் ஒரு வலம் வாருங்களேன்..
நல்ல ஒப்பீடு.கவிதைகள்.
ReplyDeleteரசித்துக் கருத்திட்டமைக்கு நன்றிகள் ஐயா. நலமாக உள்ளீர்களா?
Deleteசுதந்திரம் சு வை இழந்து
ReplyDeleteதந்திரமாகியதோ
மக்களை ஏமாற்றும்
அரசியல்வாதிகளால்?!
(சு)தந்திரக் கவிதை மிகச் சிறப்பு ஐயா. நன்றிகள். தொடர்ந்து ஒளிரட்டும் சிந்தனைச்சுடரும் நமது நட்பும்.
Deleteஆஹா! துளசி அண்ணா! சூப்பர்!!
Deleteநன்றி சகோதரி!
Deleteஅழகான பகிர்வு நண்பரே!
ReplyDeleteமிகுந்த நன்றிகள் ஐயா.
Deleteவணக்கம் நண்பரே நீண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு வீட்டு விடுதலை பெற்று சுதந்திரமாய் வந்து இருக்கிறீர்கள்.
ReplyDeleteசுதந்திரமாம் சுதந்திரம்
என்ன ? மந்திரம் போட்டு
தந்தார்களோ ? தந்திரமாய்,
எந்திரமாய் வாழ்கிறான்
மனிதன் என்னும்...இந்தியன்.
நண்பரே கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எனது கவிதை காண்க...
வணக்கம் சகோதரரே நலம் தான். கவிதையைப் பார்த்து அங்கே கருத்திடுகிறேன். வருகை தந்து கருத்திட்டு கவியும் தந்தமைக்கு நன்றிகள் பல..
Deleteசுதந்திரம் வந்தது..
ReplyDeleteசுதந்திரமாய்
கொள்ளைகள் செய்ய
சிலருக்கு மட்டும்..
மிக்க நன்றிகள் சகோ தங்கள் வருகைக்கும் கவிதைக்கும்..
Deleteஅருமையான கவிதை வரிகள்...
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு பகிர்வு...
வாழ்த்துக்கள் சகோதரா...
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்
Deleteமீண்டும் உங்களைக் காண்பது மட்டற்ற மகிழ்ச்சி சகோதரரே!
ReplyDeleteஅருமையான பதிவு! நல்ல தொகுப்பு!
வாழ்த்துக்கள்!
சரி.. நீங்கள் கேட்டதற்காக ஒரு குறளாய் என் குரல்..:)
சொல்ல இனிக்கும் சுதந்திரம் எங்குளது?
வெல்லவேண்டும் செல்லும் விரைந்து!
நன்றி!
வேண்டுகோளுக்கு இணங்க குரளாய் கவி தந்தமைக்கும் நீண்ட நாட்களுக்கு பின் வலைப்பக்கம் சந்தித்ததும் மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது சகோதரி. இனி தொடர்வோம் எனும் நம்பிக்கையில் உங்கள் சகோதரன்.
Deleteத ம.2
ReplyDeleteமிக்க நன்றிகள் சகோதரி
Deleteவருக சகோ
ReplyDeleteவிடிந்தும் விழித்தும்?
நமது அரசியல்வியாதிகள் இப்படியே தொடர்ந்தார்கள் என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா ஆப்பிரிக்கா நாடுகளைப் போல ஆகிவிடும். என்று சொல்லி கிலிஎற்படுதுகிரார்கள் சமூக நோக்கர்கள்...
விடிந்தும் விழித்தும் இன்னும் என்ன பகற்கனவா..?
இந்தியர்களை நோக்கி கேட்கிறேன்.
வணக்கம் சகோ.
Deleteசுதந்திரம் இரவில் வாங்கினாலும் இன்னும் பகல்கனவாக இருப்பது வேதனை தான். உங்கள் கேள்வி அருமை.
நீங்க கவிதையெல்லாம் கூட எழுதுவீங்களா!!!! சூப்பர்!
Deleteதங்கள் வரவு நல்வரவாகுக! பாண்டியரே நலம் தானே! நீண்ட நாட்களின் பின் காண்பதில் மிக்க மகிழ்ச்சியே. வந்தவுடனும் பதிவும் அசத்தலே அருமையான சுதந்திரக் கவிதைகளும் கூட.
ReplyDeleteசுதந்திரமும் சுதந்திரத்தை இழந்து
சுமக்கிறது சுமைகளை !
நன்றி வாழ்த்துக்கள் பாண்டியரே...!
வணக்கம் அம்மா தங்களின் இரண்டு வரி கவிதை அழகிய சிந்தனைகளை எழுப்புகிறது. சிறப்பான வரிகள். பகிர்ந்தமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்
Deleteஆஹா!இனியாச்செல்லம் சூப்பர்!!
Deleteவணக்கம் சகோ..
ReplyDeleteஅன்றைய சூழ்நிலை பற்றி யோசிக்காமல் தானென்று ஆடுவதே பெரும் அடிமைத்தனமாய் இருக்கிறது, இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய்!
"நாற்பத்தேழுக்குப் பின் ஆய்ந்தறியும் வயது வந்ததால்
நாம் என்ன கண்டோம் அடிமை இந்தியாவின் இன்னல்களை?
கசப்பறியாமல் இனிப்பைப் போற்றத் தெரியா சூழல்-
காலமே மீண்டும் கொண்டுவந்துவிடாதே இன்னல்களை!"
சுதந்திரம் பற்றிய நேர் சிந்தனையை இக்கால இளைஞர்களுக்கு கவியாய் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி
Deleteகிரேஸ் வழி தனி வழிதான்:)) சூப்பர் டா!
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்.
தேடலுக்கு முதலில் வாழ்த்துக்கள். கூறிய சிறு வரிக்கவிதைகள் மிக அருமையாக உள்ளது,
பகிர்வுக்கு நன்றி. த.ம 3வது வாக்கு
சுதந்திரக் கவியாக பாருங்கள். சுதந்திர தேசத்தில் சுதந்திரம் எங்கே???:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் வரிகளுக்கு இனிய நன்றிகள் சகோதரர்.
Deleteவிடியாமலே விழிக்காமலே
ReplyDeleteஇருந்திருக்கலாம்
வீடுதோறும் வீதிதோறும்
வேதனைகள்
பார்க்கவே சகிக்கவில்லை.!
போர்வைக்குள்ளாவது இருந்திருக்கலாம். ..!
வணக்கம் நண்பா! சமுதாயத்தின் மீதான உன் இளகிய பார்வை கண்டு மிகவும் பெருமைப்படுகிறேன் நண்பனாய் நீ கிடைத்தது எண்ணி.. தொடர்வோம் வாழ்க்கை பயணத்தில் இணைந்தே கரம் பிடித்து...
Deleteதங்களின் பதிவு கண்டு நீண்ட் நாட்களாகிவிட்டது
ReplyDeleteதங்களை பதிவின் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி
எனக்கும் அளவில்லா மகிழ்ச்சி ஐயா. வாய்ப்பு இருந்தால் நேரிலும் சந்திப்போம்..
Deleteசுதந்திரம்
ReplyDeleteகாந்தி வாங்கி கொடுத்தது அல்ல
இங்கிலாந்துகாரன்
நமக்கு விட்டு சென்றது
விட்டுச் சென்றதை அவர்களுக்கே துரத்திச் சென்று கொடுக்கும் அவலநிலை இன்றைய அன்னிய முதலீட்டு கம்பெனிகள் மூலம் தலைத்தூக்கியிருப்பது வேதனையின் உச்சம்.. இந்தியாவில் இயங்கும் மருந்து கம்பெனிகளில் டாப் 10ல் அதிகமான இடம் பிடிப்பது அன்னிய கம்பெனிகள் தான் அவர்கள் வைப்பது நமக்கு விலை. இன்னமும் அவர்களின் ஆளுமையில் தான் நாம் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு..
Deleteஇந்தியாவிற்கு சுதந்திரம்
ReplyDeleteஇங்கிலாந்துவிடம் இருந்து கிடைத்தது
ஆனால்
இந்திய தலைவர்களிடம் இருந்து இன்னும்
இந்திய மக்களுக்கு கிடைக்கவில்லை
அதனால்தான் இந்திய மக்கள்
இன்னும் அடிமை சிந்தனை கொண்டவர்களாகவே
இருக்கிறார்கள்
இரவில் கிடைத்ததால் விழித்தவர்கள்
Deleteஎடுத்துக் கொண்டார்கள்
எனும் கவி வரிகள் நினைவுக்கு வருகிறது. இரவில் விழிப்பவர்கள் திருடர்கள் என்பது அதன் பொருள். இதில் நம் அரசியல்வாதிகள் இணைந்து வெகு ஆண்டுகள் ஆகி விட்டது தானே!!!
தமிழனையும் கவிதை(!!?!) எழுத வைத்துவிட்டீர்களே!! சகோ நீங்க கிரேட் தான்! தமிழ் சகா! சூப்பர்!!
Deleteநல்ல கவிதைகள்....
ReplyDeleteஇப்படியெல்லாம் தைரியமாய்
புலம்பித் தீர்க்கவாவது
இந்தச் சுதந்திரம்
பயன்பட்டிருக்கிறது...
சுதந்திரம் கொடுத்ததை விட எடுத்துக் கொண்டது அதிகம் என்றே எனக்கு தோணுகிறது சகோதரி. தங்களின் அன்பான வருகைக்கு நன்றிகள் பல்.
Deleteபுலம்பல் இல்லையேல்....புரட்சி இல்லை! புரட்சி இல்லையேல்....புதுமை இல்லை! வெற்று சுதந்திரம் வளர்ச்சி இல்லை!
ReplyDeleteதங்களை அடையாளம் காட்டிய கிரேஸூக்கு என் மனமார்ந்த நன்றிகள்! இப்படிப்பட்ட பகிரலைதான் நான் எதிர் நோக்கியிருந்தேன்... பலரை சிந்திக்கத் தூண்டும் பதிவு அலைகள்!....முழுவதும் படித்தப்பின் தொடர்கிறேன்!
மிக்க நன்றிகள் ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்வோம். இணைந்தே பயணிப்போம்..
Deleteஅருமையான கவிதை அங்கே இனிப்போகின்றேன். மீண்டும் புது மாப்பிள்ளையை வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி.
ReplyDeleteநம்ம நண்பர்கள் எல்லாம் சொல்லி முடிச்சுட்டாங்க:( நானும் முயற்சிக்கிறேன்:)
ReplyDeleteஅலாரத்தை அணைத்துவிட்டு தூங்கும்
என்னை போலவே சோம்பலாய்
எனது தேசமும்!!
//விடிந்தாகியும் விட்டது
ReplyDeleteவிழித்தாகியும் விட்டது
இன்னும் போர்வைக்குள்
என்ன புலம்பல்?//
அருமையான வரிகள்!!