கோடை விடுமுறையைக் குதுகலாமாய்
கழித்து விட்டு மீண்டும்
பள்ளி வரும் பாலகனே!
கோடை விடுமுறை உனக்கு
வேண்டுமானால் குளிர்ந்திருக்கலாம்- ஆனால்
எனக்கு கோடை தகித்தது!
தகித்தது வெப்பத்தினால் அல்ல
உம் பிஞ்சு முகத்தின்
புன்னகையைக் காணாது இருந்ததினால்!
உன் குழந்தை மனம்
இந்த விடுமுறைக்கு விடைகொடுக்க
மறுக்கிறது என்பதை நானறிவேன்!
இருப்பினும் நாளைய உலகின்
இருக்கையை உறுதி செய்ய
கல்விச் செல்வம் அவசியம்!
புத்தக நண்பனின் விரல்பிடித்து
புதிய உலகம் நாம் கண்டு
புதுமைகள் படைத்திட வேண்டாமா!
நற்றமிழ் கதைகள் நாம் பேசி
நாளும் பொழுதுகள் கழித்திட்டு
நயமாய் மகிழ்ந்திட வேண்டாமா!
விளையாட்டு மைதானமாய் வகுப்பறையை
வசதியாய் வடிவமைத்து கொஞ்சுதமிழில்
வாஞ்சையோடு விளையாடி மகிழ்வோம்!
பட்டாம்பூச்சியாய் பறந்து வாருமடா
உமது சிறகுகள் கசங்காமல்
காப்பது என் பொறுப்பு!
//புத்தக நண்பனின் விரல்பிடித்து
ReplyDeleteபுதிய உலகம் நாம் கண்டு
புதுமைகள் படைத்திட வேண்டாமா!..//
அழகிய வரிகள்.. இனிய கவிதை..
மாணாக்கர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
வணக்கம் ஐயா
Deleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்..
விடுமுறைக்கு விடுமுறை விட்டாச்சு.
ReplyDeleteநாளை முதல் ஆரம்பம்..... வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்துகள் சகோதரரே!
Deleteஇந்த கல்வியாண்டு இனிய ஆண்டாக அமையட்டும். மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகள் உரிதாகட்டும்.
சிறகுகளை காக்கும் அக்கறை அருமை சகோ...
ReplyDeleteஎனது ஆதர்சதிற்குரிய அப்துல் ரஹ்மான் சொன்னது நினைவில் வந்தது
புத்தகங்களே கவனமாக இருங்கள்
குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்
வணக்கம் சகோ!
Deleteஉங்களைப் போன்றோரின் கரம் பிடித்து பயணிக்கிறேன். விழாமல் என்னைத் தாங்கிக் கொள்வீர்கள் எனும் நம்பிக்கையில். கருத்துக்கு மிக்க நன்றிகள் சகோ.
த.ம இரண்டு
ReplyDeleteமிக்க நன்றீங்க சகோ
Deleteவிடுமுறை முடிந்து வரும் பள்ளி பிள்ளைகளை இதுபோல பாசமுடன் அழைக்கும் ஆசிரியர்கள் கிடைத்துவிட்டால் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தை வெறுக்க மாட்டார்கள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரர்
Deleteதங்களின் சுறுசுறுப்பு கண்டு வியக்கிறேன். தொடர்ச்சியாக பதிவிட்டும் அடுத்தவர்களின் பதிவிற்கு கருத்திட்டும் அசத்துகிறீர்கள். எங்கு இருக்கிறது உங்களுக்கு நேரம் எனும் ரகசியம் மட்டும் அறிந்து கொள்ள ஆவல். வருகைக்கு நன்றீங்க சகோதரரே!
இப்படி தாய் போல ஒரு ஆசிரியர் கிடைத்தால் பள்ளி வர மாணவருக்கு கசக்குமா என்ன? படிச்சு படிச்சு ரசித்தேன் சகோ. என்ன வாஞ்சையாய் மாணவர்களை அழைக்கிறீர்கள்! கவிதை கருத்தை போலவே அருமை சகோ! ரொம்ப நாள் கழித்து இப்படி ஒரு கவிதை சந்திப்பு!! நலமா சகோ? வீட்டில் அனைவரையும் கேட்டதாக சொல்லவும்:) உங்கள் மருமகள்களும் நானும் நலமே:)
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteஉங்களின் நலம் விசாரிப்புக்கு மிக்க நன்றி. இங்கு அனைவரும் நலம். வீட்டில் கேட்டதாக சொல்லி விடுகிறேன். எல்லாம் உங்களைப் போன்றோரின் நட்பில் கிடைத்த வழிகாட்டுதலும் மனபக்குவமும் தான் சகோதரி. வரிகளை வாசித்து மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோதரி. விரைவில் சந்திப்போம். ஜீலை 9 ( என் திருமண நாள்) இப்பவே சி.எல் பார்ம் எழுதிக் கொடுத்து விடுங்கள் சகோதரி..
தாய்மை உள்ளம் கனிந்த் ஆஅசிரிய மனம்,இது லேசியாருக்கும் வாய்க்கப்பெறாது ,உங்களுக்கு வாய்க்கப்பெற்றுக்கிறது வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்கள் அன்பான வருகையும் கருத்தும் தொடர நான் வழிநடத்தப்படுவேன் உங்களால் தொடர்வோம் ஐயா.
அழைத்த விதம் சிறப்பு... வாழ்த்துக்கள் சகோதரா...
ReplyDeleteவாஞ்சையோடு வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரர்.
Deleteபுதிய ஆண்டு தொடங்குகிறது
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
புதிய ஆண்டில் பல புதுமைகள் படைத்திட புறப்படுவோம் ஐயா. கருத்துக்கு நன்றிகள்.
Deleteஉமது சிறகுகள் கசங்காமல்
ReplyDeleteகாப்பது என் பொறுப்பு!
கவிதை அருமை தோழரே ! வாழ்த்துகள் புதிய கல்வியாண்டு புதுமுகம் காணட்டும். மாற்றங்கள் நமதாகட்டும். நன்றி,
வணக்கம் ஐயா
Deleteஇருவரும் ஒரே பொருள் பட எழுதியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. புதுமுகம் வெற்றிமுகமாகட்டும். பகிர்வுக்கு நன்றிகள்
அய்யா,
ReplyDeleteவணக்கம். நல்ல கவிதைகள் உங்களிடம் பொருள்தேடி வருவார்கள்.
இலனென்னும் எவ்வம் உரையாமல் ஈக!
வாழ்த்துக்கள்!
வருகை தந்து வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்ந்து பயணிப்போம். நன்றி.
Deleteஅருமை பாண்டியன்.
ReplyDeleteகடந்த ஆண்டு இப்படி அழைத்தாக நினைவில்லை.
நம் வலைப்பக்க நண்பர்களின் பாதிப்பு இது என்றால்
இதுதான் உண்மையான பரிணாமம்.
வாழ்க வாழ்த்துக வளர்க வளர்க்க
“இருப்பினும் நாளைய உலகின்
இருக்கையை உறுதி செய்ய
கல்விச் செல்வம் அவசியம்!
புத்தக நண்பனின் விரல்பிடித்து
புதிய உலகம் நாம் கண்டு
புதுமைகள் படைத்திட வேண்டாமா!“ எனும் வரிகள் அருமை!
கற்பது கற்கண்டாய் மாணவர்க்கும் இனித்திட
மாணவர் உங்களை வண்டுகளாய் மொய்த்திட
என் இனிய வாழ்த்துகள் (எனக்கு ? என்று கையேந்தும் குழந்தை மனநிலைக்கு நான் வந்திருக்கிறேன். எனக்கு இனி இந்த இன்பம் கிடைக்காதில்ல... உங்களோடு நான் இருப்பேன்)
இதே பொருளில் நம் நண்பர் குருவும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார் http://gurunathans.blogspot.in/2014/06/blog-post.html - பார்த்தீர்களா? “சான்றோர் சிந்தனை ஒன்றாயிருக்கும்” அல்லவோ? நன்றி
வணக்கம் ஐயா
Deleteசான்றோர் என்பதெல்லாம் பெரிய வார்த்தைங்க ஐயா. குரு ஐயா அவர்களின் கவிதையும் பார்த்தேன். அவரின் எழுத்துக்கு இணையாகவிட்டாலும் நானும் அதே பொருளில் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்வளிக்கிறது. எனக்கு? என்று நீங்கள் சொல்லும் போது மனது ஒரு மாதிரி இருக்குது ஐயா. நீங்கள் கொடுத்தவற்றை நாங்கள் எடுத்துச் செல்கிறோம் ஐயா. வாழ்த்தி வழியனுப்பியமைக்கு நன்றிகள் ஐயா.
நல்ல ஆசிரியருக்கான குணம் உள்ளதய்யா...!!
ReplyDeleteஉங்களுக்கு ..
தங்கள் நம்பிக்கை போல் நடந்து கொள்ள முயலுகிறேன் ஐயா என்னை போல் என்ற அடையாளம் மாறாமல். கருத்துக்கு நன்றிகள் சகோ.
Deleteகவிஞர் பண்டியனாருக்கு வாழ்த்துக்கள்..! அருமையான,எளிமையான கவிதை ஐயா!.எனக்கு ரொம்பப் புடிச்சிருக்கு....!..கலக்குங்க!
ReplyDeleteபார்த்தீர்களா ஐயா? நீங்களே கிண்டல் செய்யலாமா! தங்களுக்கு வரிகள் பிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றீங்க ஐயா.
Deleteசேவை எண்ணம் கொண்ட ஒரு நல்லாசிரியரின் கவிதை வரிகளாகக் கண்டேன். இன்று கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் மீண்டும் திறக்கும் நாள்! மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் எளிமையும் குழந்தை மனமும் எப்பவும் மறக்க முடியாதது ஐயா. தங்கள் நட்பு எனக்கு செம்பகப்பூ. நன்றிகள் ஐயா.
"புத்தக நண்பனின் விரல்பிடித்து
ReplyDeleteபுதிய உலகம் நாம் கண்டு
புதுமைகள் படைத்திட வேண்டாமா!
நற்றமிழ் கதைகள் நாம் பேசி
நாளும் பொழுதுகள் கழித்திட்டு
நயமாய் மகிழ்ந்திட வேண்டாமா!" என்ற
அடிகளை அடியேனும் விரும்புகிறேன்!
சிறந்த கவிதை!
வணக்கம் ஐயா
Deleteதாங்கெல்லாம் என் வரிகளைப் படிப்பது எனக்கு மகிழ்ச்சி. அதில் சில வரிகள் பிடித்திருப்பதென்றால்! சொல்லவா வேண்டும்? மிக்க மகிழ்ச்சி ஐயா நன்றிகளும் கூட.
கோடை விடுமுறை உனக்கு
ReplyDeleteவேண்டுமானால் குளிர்ந்திருக்கலாம்- ஆனால்
எனக்கு கோடை தகித்தது!
பட்டாம்பூச்சியாய் பறந்து வாருமடா
உமது சிறகுகள் கசங்காமல்
காப்பது என் பொறுப்பு! ஆஹா.. ஆஹா...
பாண்டியா....! வார்த்தைகளே வரமாட்டேங்குதே வாழ்த்த. உண்மையில் கண்கள் கலங்கித் தான் விட்டன. எத்தனை நல்ல மனது தங்களுக்கு. எத்தனை பாக்கியம் செய்தேன். தங்கள் நட்பு கிடைக்க. உண்மையில். தங்கள் மாணவர்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்திருந்தால்.... ரொம்ப ஆதங்கமாகவே உள்ளது. கவி வரிகளும் எண்ணங்களும் சிறப்போ சிறப்பு. என் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது ஐயனே .
நன்றி வாழ்த்துக்கள் ....!
இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும் உங்களுடைய மாணவர்களுக்கு
ReplyDeleteவிளையாட்டு மைதானமாய் வகுப்பறையை
ReplyDeleteவசதியாய் வடிவமைத்து கொஞ்சுதமிழில்
வாஞ்சையோடு விளையாடி மகிழ்வோம்!
பட்டாம்பூச்சியாய் பறந்து வாருமடா
உமது சிறகுகள் கசங்காமல்
காப்பது என் பொறுப்பு!//
ஆஹா! இப்போதுதான் ஆசிரியர் மது அவர்களின் கட்டுரையைப் படித்து பின்னூட்டம் இட்டுவிட்டு வந்தால இங்கு இந்த ஆசிரியரின் அழகான கவிதை! வலை உலகம் மிகவும் பாக்கியம் செய்தது தான்! எத்தனை எத்தனை நல்ல ஆசிரியர்கள்! நல்ல சிந்தனைக்ளோடு, நல்ல மனதோடு! தம்பி தங்கள் மனது மிகவும் நல்ல மனதாக இருப்பதால் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்! நாங்களும் மாணவர்களாய் வந்திடலாமோ?!!!
வாழ்த்துக்கள் தம்பி!