ரேசன் கடைகளில் போடப்படும் விலையில்லா அரிசிக்கும், மண்ணெண்ணெய்க்கும் ஒரு நாள் வேலையை விட்டு விட்டு மணி கணக்கில் காத்திருந்து வாங்கும் மக்கள், மேல்தட்டு மக்கள் ஏளனமாக பார்க்கும் அந்த அரிசியை வைத்து நாட்களை நகர்த்தும் அன்றாடங்காய்ச்சிகள், மூன்று வேலை சாப்பாடு சாப்பிட முடியாத மனிதப்பிறவிகள், போதிய உணவின்றி மடியும் மக்கள், வறுமை காரணமாக எலும்பும் தோலுமாய் பிறக்கும் குழந்தைகள், 36 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என நடக்கும் அவலங்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் தான் ஒரு தரப்பினர் நமக்கு ஊழியம் செய்தவதாக கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்கள் தான் நமது அரசியல்வாதிகள். ஓட்டு வாங்க வரும் போது உங்கள் தொண்டன் என்று கூறி விட்டு மக்கள் பிரதிநிதி என்பதையே மறந்து விட்டு நிதிகளைச் சேர்ப்பதே கொள்கையாகக் கொண்ட, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நாம் தரும் சலுகைகள் என்னென்ன என்பது தெரியுமா!
தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு நமது வரிப்பணத்திலிருந்து தரும் சலுகைகள்:
(திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் ஒரு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக வந்த பத்திரிக்கை செய்தியை என் நண்பன் உலகரட்சகதாஸ் என்னிடம் பகிர்ந்த தகவல்களின் சாரம்சத்தை உங்களோடு பகிர்கிறேன்)
உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் எம்.பிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. இங்கிலாந்தில் ஒரு எம்.பி க்கு ஓர் அறையுள்ள அலுவலகம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால் இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டில்லியில் மையப்பகுதியில் ஒரு பங்களா உட்பட மாதந்தோறும் ரூ. 2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது. மக்களவை உறுப்பினர்களுக்கான மாத சம்பளம் ரூ 16000, மாதத் தொகுதிப்படி ரூ20000, மாத அலுவலகப் படி ரூ 4000, கடிதச் செலவுக்கு ரூ 2000, உதவியாளர் ஊதியம் ரூ 14000, ஒரு நாளைக்கு அவையில் பங்கேற்க ரூ 1000 வழங்கப்படுகிறது.
இது மட்டுமல்லாது டெல்லியில் உள்ள வீட்டுக்கு இலவசமாக 50000 யூனிட் மின்சாரமும், 4000 கிலோ லிட்டர் தண்ணீரும் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் வருடத்திற்கு ஒரு லட்சம் இலவச அழைப்புகள், இண்டர்நெட் பொருத்தப்பட்ட தொலைபேசிக்கு 50000 இலவச அழைப்புகள், மொபைல் இண்டர்நெட்டில் இந்தியா முழுவதும் ரோமிங், வாடகை மற்றும் இணைப்புக் கட்டணம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எங்கும் செல்லக்கூடிய அளவில் பயணச்சீட்டுகள், 34 முறை இலவச விமானப்பயணங்கள் வழங்கப்படுகிறது. தொகுதியில் இருந்து மக்களவையில் கலந்து கொண்டு விவாதங்களைப் பார்வையிட 8 பேருக்கு இலவச அனுமதியும் ,சோபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டுக்கு 75000 வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள இருக்கைகள், மேஜைகள், திரைச்சீலைகள் பழுதுபாத்தும் தரப்படுகிறது. இந்த சலுகைகளை அனுபவிக்கும் எம்.பி நமக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தருவதில்லை. நமக்கு வழங்கப்படும் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆறா? ஒன்பதா? வருடம் முழுவதும் விவாதம் நடத்திய மக்களவை உறுப்பினர்களுக்கு எண்ணிக்கை அளவு இல்லையாம். ஒரு வருடத்தில் ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் ஒரு மந்திரி பெற்றதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தனையும் அனுபவிக்க நமது கடமையை நாம் செய்வதற்கு கையூட்டு கொடுப்பது போல் ஓட்டுக்கு பணம் தருகிறரர்கள் என்பதை மறந்து விட வேண்டாம் வாக்காளர்களே! நமக்காக உழைக்கும் நல்லவர்களுக்கு கட்சிகள் இடம் கொடுக்காவிட்டாலும் நாமே அவர்களைத் தேர்தலில் நிற்க வைத்து மக்கள் பிரதிநிதிகளாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று வாதிடுபவர்கள் குறைந்த பட்சம் அவர்களது தொகுதியில் போட்டியிடும் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்.
வாக்கு உங்கள் உரிமை! வாக்களிப்பது உங்கள் கடமை!
you have shared vital information regarding our Mps . If our Mps think over about the benefits they are enjoying , they will really work for the society.
ReplyDeleteIf our people really need change they will show their strength in this election and teach a lesson for the lazy, selfish, corrupted politicians.
Good thoughts in the last portion. I couldn't post the comments in tamil since I am using mobile. It took me good amount of time to post the comments in tamil.
வணக்கம் நண்பா!
Deleteகண்டிப்பாக பலத்தைத் தேர்தலில் காண்பித்தால் அரசியல்வாதிகள் நமக்கு பயப்படுவார்கள். குறைந்த பட்சம் இளைஞர்கள் மனது வைத்தால் கூட இது சாத்தியம். பார்க்கலாம் நண்பா. உமது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
நம் வோட்டுக்களைப் பெற்று பதவிக்கு வந்து, நமக்கு (அல்லது சமூகத்திற்கு) எதுவுமே செய்யாமல் நம் பணத்தில் வாழ்க்கையை இன்பமாக இவர்கள் என்றைக்கு நம் நலனை கவனிப்பார்கள்?
ReplyDeleteமக்கள் நலன் என்று மேடையில் மட்டும் பேசுவார்கள். அத்தோடு சரி தொகுதி பக்கம் வருவதே கிடையாது. நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கான அங்கீகாரம் தான் இல்லையோ என்பது எனது வருத்தம். நல்லவர்களுக்கு நாம் தான் துணை நிற்க வேண்டும். வ்ருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அம்மா
Deleteநமக்காக உழைக்கும் நல்லவர்களுக்கு கட்சிகள் இடம் கொடுக்காவிட்டாலும் நாமே அவர்களைத் தேர்தலில் நிற்க வைத்து மக்கள் பிரதிநிதிகளாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்று வாதிடுபவர்கள் குறைந்த பட்சம் அவர்களது தொகுதியில் போட்டியிடும் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள்.//
ReplyDeleteமிக நன்றாகச் சொன்னீர்கள்! இவ்வளவு சலுகைகள் இருந்தும் மக்கள் பணத்தையும் கொள்ளை அடிக்கின்றார்களே! லஞ்சம் வாங்குகின்றார்களே! 2G ஸ்காம் என்று வேறு ஊழல் செய்கின்றர்ர்களளே! என்ன செய்ய இவர்களை எல்லாம்?!!
சலுகைகளையும் அனுபவித்து குறுக்கு வழியிலும் கொள்ளை அடிக்கும் மனநிலை தான் அவர்களிடம் மாற வேண்டும். அவர்களுக்கு நாம் தான் பாடம் புகட்ட வேண்டும். வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றீங்க ஐயா.
Deleteநல்ல தகவல் பகிர்ந்துள்ளீர்கள்! இதில் சில சலுகைகள் தெரியாமல் இருந்தது! முழுவதும் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! தெரிந்து கொள்ள வேண்டியத் தகவல்கள்! அப்ப்டியாவது மக்கள் சிந்தித்து ஓட்டு அளிக்கின்றார்களா பார்ப்போம்!
ReplyDeleteமக்கள் சிந்தித்தால் இச்சமூகத்தின் பக்கங்கள் மிகப் பெரிய அளவில் மாறி அமைந்து விடும். நமது சிந்தனைகளை எழுத்தாக்கி விட்டோம். மாறுவது மக்கள் கையில் தான். நன்றீங்க ஐயா..
Deleteஅருமையா பதிவு சகோ...
ReplyDeleteவாழ்த்துக்கள் ...
தொடரட்டும் உங்கள் நற்பணி..
அன்பு சகோவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். தங்கள் நட்பும் அன்பும் தொடர்ந்து என்னை வழி நடத்தட்டும். மிக்க நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்.
மக்கள் எப்போது.1வாக்கை 500ரூபாய்க்கு பேதம் பேசமல் இருக்கும் போது நல்ல தலைவர்களை உருவாக்கலாம்......பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
ஓட்டுக்கு வாக்கு அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் வேட்டு என்பதை மக்கள் உணர்ந்தால் மாற்றம் நிச்சயம். வருகைக்கு நன்றி. மீண்டும் உங்கள் கருத்துரை பக்கம் காண்பதிம் மட்டற்ற மகிழ்ச்சி. வாங்க சகோ. நன்றி..
Deleteஇது சம்பளம் மற்றும் அலுவலக ரீதியான சலுகைகள் மட்டும்தான். கிம்பளம் மற்றும் லைசென்ஸ், காண்ட்ராக்ட், சிபாரிசு இத்தியாதிகள் ஏராளம்... இவ்வளவு சுகம் கண்டவர்கள், பத்துவிழுக்காடு கூட நாடாளு மன்றம் நடக்கும்போது போவதில்லை... விவாதங்களில் பங்கேற்பதில்லை என்னும்போது அதைத்தான் பெரிதாக்க வேண்டும். அவர்களின் இந்தச் சலுகைகள் தொடர, மக்களை மடையர்களாக வைத்திருப்பது அவசியமில்லையா? அதைத்தான் செய்கிறார்கள். நாம்? மக்களை விழிப்படையச் செய்வதன்றி வேறுவழி? நல்ல பதிவு
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteமிகச் சரியாக சொன்னீர்கள். சலுகைகள் அனுபவிப்பது இருக்கட்டும் தனது கடமை மறந்து மக்கள் நலன் மறந்து செயல்படுவது தான் வேதனை. நிச்சயம் மக்கள் விழிப்புணர்வு பெற்று மாற்றம் நிகழும் என்று நம்புவோம். வருகை தந்து கருத்திட்டமைக்கு அன்பான நன்றிகள் ஐயா...
சிந்தனை உள்ளதா...? அல்லது வழக்கம் போல் தானா...?-என்பதை பார்ப்போம்... ம்...
ReplyDeleteநிதி தேர்தலின் விதியைத் தீர்மானிக்கிறது சகோதரரே. பொறுத்திருந்து பார்ப்போம். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteபதவியை அலங்கரிப்பவர்கள் சில பேர்தான் ,பதவியை அசிங்கப்படுத்துப வர்களே இப்போது அதிகம் !
ReplyDeleteத ம +1
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரரே. நல்லது செய்ய வேண்டுமென்று அரசியலுக்கு வந்து அதன் சாக்கடை வாடைக்குள் வாய் பொத்தி நடை போடும் நல்லவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். கருத்துக்கு நன்றி சகோதரர்
Deleteஇனிய வணக்கம் சகோதரர் பாண்டியன்..
ReplyDeleteநலம் தானே??
இதுபோக தொகுதி மேம்பாட்டுப் பணிக்காக
வருடத்திற்கு 2 கோடி ஒதுக்கப்படுகிறது ஒவ்வொரு
மக்களவை உறுப்பினருக்கும் என்பது நான் செவிவழி அறிந்தது..
வாக்கு அளிப்பது நமது கடமை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்...
நான் கூட வாக்குப்பதிவு அன்றுதான் தாயகம் வருகிறேன்..
வணக்கம் சகோதரர்
Deleteநான் நலம். நீங்க நலம் தானே? தங்களின் தாயகப் பயணம் கேட்டு மிக்க மகிழ்ச்சி. கவனமுடன் உங்கள் பயணம் அமைய வேண்டுகிறேன். கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.
[ குறைந்த பட்சம் அவர்களது தொகுதியில் போட்டியிடும் நல்லவர்களுக்கு ஓட்டளியுங்கள். ]
ReplyDeleteசாதி, மதம், இனம், கட்சி பேதம் பாராமல் மக்கள் குறைந்தது தம் தொகுதியில் உள்ள நல்லவர்களுக்கு, வாக்களித்தாலே பாதி பிரச்சனைகள் தீரும்..
நல்லவர்கள் என்றால் தான் நம்மவர்கள் கேலியாக பார்க்கிறார்களே! இந்நிலை மாற வேண்டும் முதலில். தாங்கள் கூறியபடி பேதம் பார்க்காமல் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரர்.
Deleteஅருமையான விழிப்புணர்வுப் பதிவு நண்பரே
ReplyDeleteநன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மக்கள் தனக்கான பிரதிநிதிகளாக நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
Deleteத.ம.6
ReplyDeleteநன்றீங்க ஐயா
Deleteஅவர்களின் ஒய்வு ஊதியத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?
ReplyDeleteவிடுதலுக்கு மன்னிக்க வேண்டும் ஐயா. நினைவூட்டலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
Deleteஎத்தனை சலுகைகளை அளித்தாலும் பரவாயில்லை. ஏனெனில் ஒரவர் எம்.பி பதவியை பிடிக்க வேண்டுமென்றால் எத்தனை ஆண்டுகள் கட்சிக்காக எவ்வித ஊதியமும் இல்லாமல் உழைக்க வேண்டும்? எத்தனை பேர் காலில் விழ வேண்டும்? ஆனால் இத்தனை சலுகைகளும் ஊதியமும் கிடைத்தும் எவ்வித மன உறுத்தலும் இல்லாமல் ஒவ்வொரு வேலைக்கும் கையூட்டு பெறுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி. இவர்களுள் இவர்தான் நல்லவர் என்று எவ்வாறு கண்டுக்கொள்வது? மாதம் ஒரு ரூபாய் வருமானம் பெற்றுக்கொண்டு கோடிக் கணக்கில் சொத்து குவித்துள்ள ஒரு தலைவரின் கட்சிக்குத்தான் வாக்களிப்போம். அவர் சுட்டிக்காட்டியவருக்குத்தான் எங்கள் வாக்கு என்று மக்கள் நினைக்கும் சூழலில் அத்தகைய தலைவரோ அல்லது நாட்டின் மிகப் பெரிய ஊழலுக்கு காரணமாயிருந்தவரை மீண்டும் சீட்டு வழங்கிய தலைவரோ சுட்டிக்காட்டுபவர்கள் எவ்வாறு நல்லவராயிருக்க முடியும்? தனிநபர் முக்கியமில்லை கட்சிதான் முக்கியம் என்று நினைத்துத்தான் பலரும் வாக்களிக்கின்றனர்.
ReplyDeleteசலுகைகள் அனுபவித்தாலும் பரவாயில்லை மக்களுக்கு நல்லது செய்தாலே போதும் எனும் சாமானிய மக்களின் மனநிலையை வெளிப்படுத்திய தங்கள் கருத்துரைக்கு நன்றீங்க சகோதரர்..
Deleteஇதற்காகத்தானே அரசியலுக்கு வர்றாங்க.மக்களுக்கு சேவை செய்யன்னு மறந்தும் நினைச்சுடாதீங்க....
ReplyDeleteகொண்ட கொள்கைகள் கொள்ளையடிப்பதில் மறந்து விடுகிறதே சகோதரி. தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துரைக்கு நன்றி.
Deleteஊர்ப் பணத்தை கொள்ளை அடிப்பவர்களுக்கு இத்தனை சலுகைகள்! கொடுமையாக இருக்கிறது! நல்லவர்களை அனுப்ப கட்டாயம் வாக்களிக்க வேண்டும்!
ReplyDeleteநல்லவர்கள் கடைசி வரை நல்லவர்களாக இருப்பதும் அரசியலில் சவாலான ஒன்று. நமது நாட்டின் எதிர்காலம் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது. கருத்துக்கு நனறி சகோதரர்
Deleteஆம் சகோ நான் இணையத்தில் வாசித்தேன் ....அனைவரும் அறியச்செய்தமைக்கு நன்றிகள்...வாழ்த்துக்களுடன்
ReplyDeleteஆம் சகோதரர். நாம் அறிந்ததை அனைவருக்கும் சொல்வதற்கே இந்த பதிவு,படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரர்
Deleteசரியான நேரத்தில் சரியான பதிவு,
ReplyDeleteநமக்கு சலுகை வழங்குறதா சொல்லிகிட்டிருக்க இவங்களுக்கு நாம தான் எவ்ளோ சலுகைகள் வழங்குறோம்!! ஹும் ...இன்னமோ போங்க சகோ!!
மக்களுக்கு சலுகையோ, ஒரு நல்லதோ நடக்க வேண்டுமானால் அமைச்சரவை கூடி ஒப்புதல் தர வேண்டும். ஆனால் அவர்களுக்கான சலுகைகள், சம்பள உயர்வுக்கு நம்மிடம் கருத்து கூட கேட்பதில்லை. சட்டம் அவர்களுக்கானது. சாமானிய மக்களுக்கல்ல. வருகை தந்து கருத்திட்ட சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
Deleteசரியான நேரத்தில் சரியான விபரங்கள் கொடுத்துள்ளீர்கள் . இவை எல்லாம் மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியவை. நல்லவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் இருந்தால் தானே. இருக்கிறார்களா இருந்தால் ok தான் இல்லை என்றால் விரும்பும் ஒருவரை நிறுத்தவேண்டும் நீங்கள் சொல்வது போல் அது தான் முடியாதே.ம்..ம்.ம். அப்படி இருந்தால் நீங்கள் தான் நிற்க வேண்டும் சகோதரா. ஆஹா அப்படி என்றால் wow எவ்வளவு மகிழ்ச்சி நினைத்தால். anyway வாழ்த்துக்கள் சகோதரா ...! யார் கண்டா பலித்தாலும் ஆச்சரியப் படுதற்கில்லை.நன்றி சகோ !
ReplyDeleteசகோதரிக்கு வணக்கம்
Deleteநல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதே நமது ஆசை. அதற்கு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். நல்லவர்கள் என்று சொன்ன பிறகு நான் எப்படி சகோதரி வர முடியும்? சும்மா. வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றீங்க.
சரியான நேரத்தில் வந்த பதிவு. நீங்கள் சொல்லுவது போல் மக்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் நல்லவர்களுக்கு மட்டும் (அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும்) ஓட்டளித்தால் நன்றாக தான் இருக்கும். அதுவும் தங்களின் உரிமையை விற்காமல் ஓட்டளித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
ReplyDeleteநல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் சகோ.
உரிமை விற்க படாமல் நல்லவர்களுக்கு ஓட்டளித்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் என்றல்லவா அர்த்தம்! அந்த நிலை எந்த நாள் வரும்? கருத்துக்கு நன்றீங்க சகோதரர்.
Deleteதேர்தல் நேரத்தில் சரியான பதிவு. இவ்வளவு சலுகைகளும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக தரப்படுகிறது. அவற்றை முறையாக பயன்படுத்தியவர் யாரேனும் இருக்கிரார்களா என்பது கேள்விக்குறியே
ReplyDelete