பருவம் வந்த கன்னிப்பெண் ஆண்மகனுக்கு
கழுத்து நீட்ட காத்திருக்கும் காட்சி போல்
கருக்கருவா கரம் தீண்ட கச்சிதமாய்
கழுத்தைச் சாய்த்து சம்மதிக்கும் நெல்மணிகள்!
வாய்க்கால் நீரில் உடல் நனைத்த காற்று
தென்றலென தவழ்ந்து வரும் தருணத்தில்
வரப்போரம் வளைந்த மரத்தினிலே வீடுகட்டி
காதல்மொழி பேசும் பறவைகள்!
அழகான பெண்ணின் மீதான பார்வைக்கிடையில்
குறிக்கிடும் வேண்டாத தோழி போல்
அழகிய அங்கம் காட்டி அசரவைக்கும் பயிரிடையே
வந்து நிற்கும் களைச்செடிகள்!
முற்றிய நெல்மணிகள் முற்றம் வந்த வேளையிலே
முறுக்கிய காளை மாடு வலம் வர
அடித்துத் தூற்றும் அற்புத நிகழ்வு
அழகாக நடந்தேறும் மணித்துளிகள்!
மிகையான விளைச்சல் என்பதால் கைகளில்
மிதந்த வருவாயில் மிடுக்கான உடையணிந்து
ஊர் திருவிழாவில் உயரே விட - பலூனை
ஊதிக் கொண்டே மகிழ்வாய் நகரும் உழவன்!
இவையெல்லாம் நிஜமென நான் எண்ண
இடித்துரைத்த அம்மா சொன்னாள்
விடிந்த பின்னும் உறக்கம் வேண்டாம்
விரைவாய் எழுந்திருடா என் மகனே!
வார்த்தைகள் கோர்த்தவிதம் அருமை சகோ!
ReplyDeleteஅதுவும் உவமைகள் !!! உழவனை பாடவரும் போது வரதட்சணை கொடுமையை பாடியது போல் முதல் பத்தி அட!
ஆனால் உழவர் வாழ்க்கை கனவாய் போனதுதான் :((
வாழ்த்துக்கள் சகோ! தொடருங்கள்!
காலில் வாய்க்கால் நீரின் ஓட்டத்தை உணர வைத்தப் பாட்டு
ReplyDeleteஅருமை பாண்டியன் தொடர்க
இப்போ பெருமூச்சுதான் வருகிறது வறண்ட நிலங்களைப் பார்த்து
ReplyDeleteஆக எல்லாம் கனவாகிப் போய் விட்டது... சிந்திக்க வேண்டிய உண்மைகள்...
ReplyDeleteநல்ல கற்பனை, நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர் கனவில் இப்படித்தான் வரும். அதுவும் விரைவில் நடக்கும் பாண்டியன். அதனால்தான் “கனவு காணுங்கள்“ என்றார் அப்துல் கலாம். பகல்கனவுதான் பலிக்காது என்று பொருள். நீங்கள் கண்டது இரவுக்கனவுதானே? இனிதாய் நடக்கும்.
ReplyDeleteஎழுத்துப் பிழை /களை/கலை.
ReplyDeleteகருத்துப் பிழை /பெண் அடிமை/
அன்பின் பாண்டியன்..
ReplyDeleteதங்களின் இனிய கனவு - எமக்கு மகிழ்வு..
இந்த மாதிரியான கனவு - ஈடேற வேண்டும்...
இல்லையேல் - நாம் மறுபடி கனவு காண இயலாதபடி ஆகிவிடும்..
நல்லதொரு கவியுரை, ஒரு சிறு திருத்தம் கன்னிப்பெண் என்பதல்லவா சரி. கண்ணி என்றால் பொறி வைத்துப் பிடிப்பதல்லவோ.
ReplyDeleteவிளைநிலங்கள் விலையாகி போவதை அருமையாக சொல்லிவிட்டீர்கள்! நீங்கள் கவிதையில்சொன்னதை வருங்கால சந்ததியினர் கனவில்தான் காணவேண்டும் போலிருக்கிறது!அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகனவு நனவாகட்டும்...
ReplyDeleteசகோதரா! ஆஹா கல்யாணம் என்றவுடனே கனவு கற்பனை எப்படி எல்லாம் சிறகடித்து பறக்கிறதே. ம்..ம்...ம்...
ReplyDeleteநெல் மணி கூட தலையை நீட்டுவது போல் தோன்றுகிறதா அப்புறம் ....களைச்செடி கூட வேண்டாத பொண்ணோ. ஓஹோ இது சரிவராது.
நாளை முன்னுக்கு தள்ளிபோட்டு கல்யாணத்தை முடிச்சிடனும் போல இருக்கே. அருமை பாண்டியா கற்பனையும் கவிதையும்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...! தொடரட்டும் ....தொடரட்டும்....
மிக அருமை சகோ..தென்றலையும் நீரோட்டத்தையும் பறவைகளின் இசையையும் உணர வைத்து, இறுதியில் தொப்பென்று போட்டுவிட்டீர்கள் தலையில்.
ReplyDeleteதோழி வேண்டாமா? காதலில் தோழி ரொம்ப முக்கியம் தெரியுமா :) நிச்சயம் ஆகிவிட்டதால் இப்படி சொல்லிவிட்டீர்களோ?
வணக்கம்
ReplyDeleteசகோதரன்..
எல்லோரையும் ஒருகனம் சிந்திக்க வைக்கும் பதிவு...அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
முற்றிய நெல்மணிகள் முற்றம் வந்த வேளையிலே
ReplyDeleteமுறுக்கிய காளை மாடு வலம் வர
அடித்துத் தூற்றும் அற்புத நிகழ்வு
அழகாக நடந்தேறும் மணித்துளிகள்!
>>
இப்போலாம் இதுக்கு மெஷின் வந்துட்டுதுங்க சகோ!
சிந்திக்க வேண்டிய வரிகள் நண்பரே
ReplyDeleteநனவாக வேண்டிய கனவுகள். கனவாகவே இருப்பதில் வருத்தம்தான். நனவாகும் நாள் வரும்.
ReplyDeleteகவிதை நன்று
அருமை அருமை ஐயா
ReplyDelete