அரும்புகள் மலரட்டும்

Tuesday, 20 January 2015

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.
நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட
நிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்
பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

Sunday, 18 January 2015

அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

Sunday, 11 January 2015

பத்திரிகையாளன் பாரதி - தினமணி கட்டுரை

வலை உறவுகளுக்கு வணக்கம்
இணையத்தில் உலாவிய பொழுது 2012 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் செங்கோட்டை ஸ்ரீராம் அவர்கள் எழுதிய தினமணி கட்டுரை ஒன்று படித்தேன். அது மிகவும் என்னை மிகவும் கவர்ந்தது. உங்களுக்கும் பிடிக்குமென்பதால் அப்படியே வரி மாறாது பதிவிடுகிறேன்.

Saturday, 10 January 2015

மறை நீர் பொருளாதாரம் - ஓர் அலசல்

மறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும். அந்த பொருளை உருவாக்குவதற்கு தேவைப்படும் நீர் தான் மறை நீர். மறை நீர் வணிகம் என்பது ஒரு பொருளாதார தத்துவம் ஆகும்.

Wednesday, 7 January 2015

மரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்!

வலை உறவுகளுக்கு வணக்கம்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மழைத்துளி உயிர்த்துளி
கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும்
து போன்ற வாசகங்களை ஆண்டாண்டு காலமாக கண்டிருக்கிறோம் ஆனாலும் மரம் வளர்ந்த பாடில்லை மழை வந்த பாடில்லை காரணம் யாருக்கோ சொல்வதாக மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மரம் வளர்ப்பின் பயன்களை முழுமையாக உணரத் தவறியதன் விளைவு உலக வெப்பமயமாதல். உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானதாக உலக வெப்பமாதல் இருக்கிறது

Monday, 5 January 2015

சேரனின் சினிமா டு கோம்- திருட்டு விசிடிகளை ஒழித்து விடுமா/


புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக 50 ரூபாயில் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது.

Sunday, 4 January 2015

சகத்தினை அழித்திடலாமா?


கோவில்கள், பேருந்து நிலையங்கள், சாலையோரங்கள் என இப்படியாக எங்கு காணினும் கையேந்தும் பிச்சைக்காரர்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) வறுமை ஒழிக்கப்பட இன்னும் எத்தனை காலங்கள் ஆகும்? அனுமானமாக கூட யோசித்துப் பார்க்க முடியாத நிலையில் தானே இன்றிருக்கிறோம். வறுமையை ஒழிக்க வேண்டும் என்று 1951 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.