உலகம் தான் வளர்ந்திருக்கு மனசனுங்க
மனசெல்லாம் சுருங்கிருக்கு – முதியோர்
இல்லமெல்லாம் நிரம்பி வழிந்திருச்சு!
இந்த தலைமுறை பசங்க இரவெல்லாம்
விழித்திருந்து காலையில தூங்கப் போகுதுங்க
கேட்டால் தகவல் தொழில்நுட்ப துறைங்கிறாங்க!
சட்டை கிழிஞ்சிருந்தா சங்கடமாய் நெகிழ்ந்த காலம்
மலையேறிப் போகிடுச்சு- கால்சட்டையைக் கூட
கிழிச்சு விட்டு போடுறது தான் நாகரிகம் ஆகிடுச்சு!
வாழையிலை போட்டு அறுசுவை உணவிட்ட
வழக்கமெல்லாம் பழசாகிப் போகிடுச்சு
கால்கடுக்க நின்னுகிட்டே சாப்பிட்றது வந்தாச்சு!
நம்ம ஊரு முனியம்மா அசல்டா பார்த்த பிரசவத்தைக்
கத்தி வச்சு காசு பார்த்து கல்லா
கட்டுதுங்க ஒரு கூட்டம்!
ஆங்கில மோகத்துல தனியார் பள்ளில படிச்சு
தாய்மொழியில் நாலுவரி படிக்கத்
தெரியாம விழிக்குது இந்த இளசுங்க!
மஞ்சப்பையைக் கேவலமா பார்க்குதுங்க
நட்சத்திர உணவகமெல்லாம் குறைந்த வெளிச்சத்துல
அரை வயிறுக்கு உணவிட்டு ஆயிரத்தைக் கறக்குதுங்க!
கூட்டுக்குடும்பத்துல பாட்டிக்கிட்ட வளரலங்க
பேர் தெரியாத வேலைக்கார அத்தைக்கிட்ட
அன்பில்லாம அடிமையாய் வளருதுங்க!
எப்பாடு பட்டாவது பண்பாட்டை மீட்கணுங்க
அடுத்த தலைமுறைக்கு நம் நாட்டு கலச்சாரத்தைச்
சிதையாம கொண்டு சேர்க்கணுங்க!
-----------------------------------------------------------------------
வலைப்பதிவர் திருவிழா-2015”
மற்றும்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
நடத்தும்
“மின் தமிழ் இலக்கியப் போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது. (வகை 4) முன்னேறிய புது உலகில் பண்பாட்டின் தேவை (புதுக்கவிதை) எனும் தலைப்பிற்காக எழுதப்பட்டது.
இதற்கு முன் வெளியான படைப்பல்ல, மேலும் இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன்.
எப்பாடு பட்டாவது பண்பாட்டை மீட்கணுங்க
ReplyDeleteஅடுத்த தலைமுறைக்கு நம் நாட்டு கலச்சாரத்தைச்
சிதையாம கொண்டு சேர்க்கணுங்க!
உண்மை நண்பரே
உண்மை
சிதையாமல் கொண்டு போய் சேர்ப்போம்
வெற்றிபெற வாழ்த்தக்கள் நண்பரே
வாழ்த்துக்கு நன்றிங்க அய்யா. விழாவை ஆவலோடு காத்திருக்கிறோம்.
Deleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ...
ReplyDeleteகவிதை கடலில் சிறிய படகு ஒன்று தீரத்துடன் பயணத்தை ஆரம்பித்திருக்கிறது ... தொடரட்டும்
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோ.
Deleteஅருமை நண்பரே...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோதரர்.
Deleteபண்பாடு காக்கச் சொன்ன அற்புதமான கவிதை!
ReplyDeleteஅதன் நடையும் அழகு!
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ!
த ம +1
நலம் தானா சகோதரி? கருத்திட்டு வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள்.
Deleteமீண்டும் தலை வணக்கங்கள். இணைத்துக் கொண்டமைக்கு நன்றிகள்.
ReplyDeleteசிறப்பான சிந்தனை.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
வணக்கம்! அழகான பண்பாட்டை காக்க சொல்லும் கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள்! நன்றி