அரும்புகள் மலரட்டும்: காதலின் மகத்துவத்தையும், வாழ்க்கையின் அர்த்ததையும் புரிய வைத்த ஒரு மரணம் - ஓர் உண்மை நிகழ்வு

Saturday, 4 July 2015

காதலின் மகத்துவத்தையும், வாழ்க்கையின் அர்த்ததையும் புரிய வைத்த ஒரு மரணம் - ஓர் உண்மை நிகழ்வு

காதல்... இந்த வார்த்தைக்குதான் எவ்வளவு சக்தி? இறப்பில் கூட சேர்ந்து வாழும் பாக்கியத்தை குழந்தைப் பருவம் முதல் காதல் செய்து வாழ்ந்து வந்த தம்பதிக்கு அளித்துள்ளது இந்த மகத்தான மனித உணர்வு.
அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரை சேர்ந்த ஜேனட் மற்றும் அலெக்சாண்டர் ஆகிய தம்பதிதான் அந்த அதிர்ஷ்டசாலிகள்.

கிட்டதட்ட 75 வருட மணவாழ்க்கையில் காதலை மட்டுமே அனுபவித்த இந்தத் தம்பதியினர் இறப்பிலும் ஒன்றாகவே சென்றுள்ளனர் மேலுலகிலும் தங்கள் காதலைப் பரப்ப கைகோர்த்து.

8 வயதில் மலர்ந்த காதல்:
 கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஸ்டாம்போர்டு நகரில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஜேனட்டும், அலெக்சும் பிறந்தனர். தங்களது 8 வயது முதல் இருவரும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர். நீண்ட நாள் காதல் வாழ்க்கைக்கு பின் கடந்த 1940 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வை இனிதே தொடங்கினர். இருவருக்கும் ரிச்சர்ட் மற்றும் ஏமி என இரு குழந்தைகள் உள்ளனர்.

நமக்கு என்றும் பிரிவே இல்லை: பின்னர் கடந்த 1970 ஆம் ஆண்டு, ஸ்டாம்போர்டு நகரில் இருந்து சாண்டியாகோ நகருக்கு இடம் பெயர்ந்தனர்.

அதன் பின் மரணத்தை தழுவும் வரை இருவரும் ஒருவரையொருவர் பிரிவதில்லை என்று முடிவெடுத்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தங்களது திருமணத்தின் வெள்ளி விழா நாளை தம்பதியர் இருவரும் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதன் பின்னர் அடுத்த சில நாட்களில் 95 வயது அலெக்சாண்டரின் உடல்நிலை மோசமடைந்தது.

உன் கைகளில்தான் என் மரணம்:
அப்போது தனது காதல் மனைவி ஜேனட்டிடம், "உனது கைகளில் நான் மரணத்தை தழுவ விரும்புகிறேன்" என்றார் அவர். தனது மகனை அழைத்த ஜேனட், நாங்கள் இருவரும் எங்களது படுக்கையில் கைகளை கோர்த்தவாறு மரணத்தை தழுவ விரும்புகிறோம் என்றார். அவர்கள் எண்ணப்படியே கடந்த ஜூன் 17 ஆம் தேதி தங்களது படுக்கையறையில் ஜேனட்டின் கைகளை பிடித்துக்கொண்டே அலெக்சாண்டர் மரணத்தை தழுவினார்.

ஐ லவ் யூ ஜேனட் நானும் வருகிறேன்:
அவர் மரணமடைந்துவிட்டார் என மகள் ஏமி கூறியதும், தனது கணவரை கட்டியணைத்த ஜேனட், இதைத் தானே நீங்கள் விரும்பினீர்கள் அலெக்ஸ். எனது கைகளில் தான் நீங்கள் மரணத்தை தழுவினீர்கள். ஐ லவ் யூ...எனக்காக காத்திருங்கள். சிறிது நேரத்தில் நானும் அங்கு வந்துவிடுகிறேன் என்று கூறினார்.

இருவருக்கும் இயற்கை மரணம்: அதன்படியே அடுத்த சில நிமிடங்களில் ஜேனட்டும் இயற்கையாகவே மரணத்தை தழுவினார். அப்போது இருவரின் கரங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருந்தன. வாழ்க்கையின் மகத்துவம் இதுதான்: இப்படி ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்த தம்பதியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும், அவர்களின் ஒற்றுமையான வாழ்க்கையை புகழ்ந்தவாறு ஆனந்த கண்ணீர் சிந்தினர். ஒரு இறப்பு கூட காதலின் மகத்துவத்தையும், வாழ்க்கையின் அர்த்ததையும் புரிய வைக்கும் என்பதை உணர்த்தியுள்ளனர் இந்த ஆதர்ச தம்பதியினர்!


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

12 comments:

  1. நெகிழ வைக்கிறது சகோதரரே...

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோ...

    உண்மையில் இதுதான் காதல்.... அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ.த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம் பாண்டியா நலம் தானே ! இல்லற வாழ்கையில் இணைந்தால் பின் இணையம் எதற்கு இல்லையா ....ம்..ம்..ம் புரிகிறது நான் சும்மா சொன்னேன். கொடுத்து வைத்த தம்பதிகள் அவர்கள் காதல் மேலும் தொடரட்டும். மிக்கநன்றி வாழ்க வளமுடன் ...!

    ReplyDelete
  4. நாளிதழில் படித்த நினைவு. பகிர்வுக்கு நன்றி.
    தினமணியில் வெளியான எனது பேட்டியைக் காணஅழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    ReplyDelete
  5. நீண்ட நாட்களுப் பிறகு வலைப் பக்கம் வந்திருக்கிறீர்கள் காதல் மணம் வீசும் பதிவுடன் . தொடரட்டும்

    ReplyDelete
  6. மனம் நெகிழ வைத்த பகிர்வு.

    அமர காதல்.... என்றும் அழியாத காதல்.

    ReplyDelete
  7. மனம் நெகிழ வைத்த பகிர்வு.. அருமை.

    ReplyDelete
  8. ஆஹா! அப்படியே மனதை நெகிழ வைத்துவிட்டது நண்பரே! உண்மையான காதல் வெல்லும்...மரணத்திலும் கூட...

    ReplyDelete