ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, சென்னை ஐகோர்ட்டு, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 1–ந்தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர். இது பற்றி வாட்சப்பில் வலம் வருகிற கீழ்காணும் வாசகம் என்னை சிரிக்க வைத்தது.
ஜுலை 1 காலை 6 மணிக்கு தமிழக போலீசாருக்கு குரு பெயர்ச்சி ஆரம்பம். இதுவரை தமிழக மக்களிடம் இருந்த குரு பகவான் ஜூலை 1 முதல் தமிழக போலீசாருக்கு இடம் பெறுகிறார். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பது போல அவர்களுக்கு மட்டும் லாபஸ்தனமான 11 ஆம் இடத்தைக் குரு பார்ப்பதால் இனி பண மழை கொட்டப் போகிறது. தமிழக மக்களுக்கு விரய சனி ஆரம்பம். விரய சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரமாக ஹெல்மெட் வாங்க வேண்டும்
நண்பர்களே மேற்காணும் வாசகங்களில் சிரிப்பு மட்டுமல்ல சிந்தனையும் கலந்திருக்கிறது. தலைக்கவசம் அணியும் விவகாரம் ஒரு சிலருக்கு வருவாய் பார்க்கும் விதமாக அமைந்து விடக்கூடாது என்பதில் அரசு எவ்வளவு கவனமாக இருக்கிறது என்பது தெரியவில்லை. இவ்வாறு நடக்காமல் இருக்க பொதுமக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும். யாருக்கோ சொன்னதாக நினைக்காமல் தன் வாழ்க்கையைக் காத்துக்கொள்ள தலைக்கவசம் அணிய வேண்டும்.
தலைக்கவசம் அணியும் விவாகாரத்தில் நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது அவ்வளவே. தமிழக அரசே நேரடியாக அமல்படுத்தவில்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் மீதான நலனால் அரசு அதிரடியாக கொண்டு வந்த திட்டமல்ல. ஏற்கனவே தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறையைக் காற்றில் பறக்க விட்டவர்கள் நமது அரசியல்வாதிகள் என்பதை நினைவில் கொள்வோம்.
தலைக்கவசம் அணியும் விவகாரத்தில் அக்கறைக் காட்டியதாக சொல்லிக் கொள்ளும் அரசு டாஸ்மாக் விவகாரத்தில் முரண்டு பிடிப்பது எப்படி நியாயமாகும்? தலையில் அடிப்பட்டு இறப்பவர்களில் பெரும்பாலனோர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறந்தவர்கள் பெரும்பாலானோர் எனும் உண்மையை எளிதில் மறைத்து விட முடியாது.
போனது போகட்டும் இனி வரும் காலங்களிலாவது இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் அதே நிறுவனம் தலைக்கவசத்தை இலவசமாக அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்தந்த நிறுவனங்களே தங்களின் வாகனங்களில் விற்பனையின் போது தலைக்கவசம் வழங்கி விட்டால் போலி தலைக்கவசம் பிரச்சனையைத் தவிர்க்க முடியும்.
தலைக்கவசம் கட்டாயம் அணியும் வேண்டும் எனும் உத்தரவிற்கு பிறகு நண்பர்கள், உறவினர்கள் என்று கூடும் போது நலம் விசாரிப்பதற்கு முன்பே தலைக்கவசம் வாங்கி விட்டீர்கள் என்று கேட்டுக் கொள்வது ஆரோக்கியமான விசயம் தான். ஆனாலும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யும் தலைக்கவசத்தைக் குறைந்த விலையில் வாங்க முன்வருவது தவறான அணுகுமுறை. இது குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.
தலைக்கவசங்கள் பொருத்திருக்கும் ஐ.எஸ்.ஐ முத்திரை போலியானதா உண்மையானதா என்பதை அறிவதில் படித்தவர்களே திணரும் நிலை தான் இன்றிருக்கிறது. இவற்றில் அரசு கவனித்து போலிகளை ஒழித்து அசல்களை அடையாளம் காட்ட முன்வர வேண்டும்.
தமிழக மக்களின் நலனில் அரசுக்கு அக்கறை உண்மையாக இருக்குமானால் டாஸ்மாக், ஓட்டுநர் உரிமம் பெறுவதில் இருக்கும் ஓட்டைகள் களையப்பட வேண்டும். போலீஸ்காரர்களின் நடவடிக்கைகள், தலைக்கவச விற்பனை ஆகியவற்றில் அரசு தனிக்கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...
அதுவாகினும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவும் அதனைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையும் நாம் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். தலைக்கவசம் அணிவதே பாதுகாப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும். அடுத்தவர்களுக்காக அணிய வேண்டும் தவறான மனப்போக்கு களையப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனிமனித ஒழுங்கு இந்த விவகாரத்தில் தலைதூக்க வேண்டும் என்பதே எனது ஆசை....
தலைக் கவசம் அணிவோம் நண்பரே
ReplyDeleteதம 2
அவசியம் அணிவோம் அய்யா. சட்டம் போட்டு தான் அணிய முன் வந்திருக்கிறோம் என்பது கொஞ்சம் நெருடலாக தான் இருக்கிறது. இருப்பினும் நன்மையே நடக்கட்டும். கருத்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அய்யா.
Deleteஇந்த கண்டிப்பு தொடர வேண்டும்...
ReplyDeleteஅவசியம் தொடர வேண்டும் என்பதே நமது விருப்பம். குறைந்த பட்சம் நாம் தவறாமல் கடைபிடிப்போம் சகோதரர். விரைவில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவோம். நன்றிங்க சகோ..
Deleteபாண்டியனா கொக்கா ... கொக்கா... முன்னாலே பார்த்தால் முதலியார் குதிரை; பின்னாலே பார்த்தால் செட்டியார் குதிரை.
ReplyDeleteத.ம.4
வணக்கம் அய்யா
Deleteநலம் தானே! எல்லாம் நம்ம மனசுல ஓடுற விசயங்கள் தான் அய்யா. இவ்வளவு காலம் வலைப்பக்கம் வர வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான் அய்யா. இனி முடிந்த வரை தொடர்கிறேன். கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள்
தேவையான பதிவு. மக்கள் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால் தானாகவே தலைக்கவசம் அணிய வேண்டும் என்று எப்போதோ நடைமுறைபடுத்தி இருக்கும்.மக்களோ ஜபோன்6 இருக்கிறது தானே எதற்கு தலைகவசம் என்று நினைபவங்க.
ReplyDeleteகவசங்கள் அவசியம்!
ReplyDeleteநான் வருவதற்கு தடையேதும் இல்லையே?
தம +
ஆமா தம்பி !! இனி காலைவேளை சாலை சூப்பரா தான் இருக்கும் ஹெல்மெட் தலைகளோடு:)
ReplyDeleteஅதுவாகினும் தலைக்கவசம் அணிய வேண்டும் எனும் உத்தரவும் அதனைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டதையும் நாம் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். தலைக்கவசம் அணிவதே பாதுகாப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும். அடுத்தவர்களுக்காக அணிய வேண்டும் தவறான மனப்போக்கு களையப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனிமனித ஒழுங்கு இந்த விவகாரத்தில் தலைதூக்க வேண்டும் என்பதே எனது ஆசை....
ReplyDelete------------
தலைக்கவசம் அவசியம்...
அருமையான பகிர்வு நண்பரே.
வணக்கம் பாண்டியன் !
ReplyDeleteநல்லதொரு திட்டம் எல்லோரும் உணர்ந்திருந்தால் எதுக்கு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லுது ...நம் உயிர் நம் கையில் இல்லையா ?
அருமை
தொடர வாழ்த்துக்கள்
ஜுலை 1 காலை 6 மணிக்கு தமிழக போலீசாருக்கு குரு பெயர்ச்சி ஆரம்பம். இதுவரை தமிழக மக்களிடம் இருந்த குரு பகவான் ஜூலை 1 முதல் தமிழக போலீசாருக்கு இடம் பெறுகிறார். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பது போல அவர்களுக்கு மட்டும் லாபஸ்தனமான 11 ஆம் இடத்தைக் குரு பார்ப்பதால் இனி பண மழை கொட்டப் போகிறது. தமிழக மக்களுக்கு விரய சனி ஆரம்பம். விரய சனியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பரிகாரமாக ஹெல்மெட் வாங்க வேண்டும்// ஹஹஹ நல்ல நகைச்சுவை...
ReplyDelete//தலைக்கவசம் அணியும் விவகாரத்தில் அக்கறைக் காட்டியதாக சொல்லிக் கொள்ளும் அரசு டாஸ்மாக் விவகாரத்தில் முரண்டு பிடிப்பது எப்படி நியாயமாகும்? தலையில் அடிப்பட்டு இறப்பவர்களில் பெரும்பாலனோர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனாலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாகி இறந்தவர்கள் பெரும்பாலானோர் எனும் உண்மையை எளிதில் மறைத்து விட முடியாது.//
நண்பரே முதல் வரி நச்.....ஆனால் தலைக்கவசம் அணிபவர்களும் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடுகிறது என்பதுதான் உண்மை. சென்னையில் தலைக்கவசம் அணிந்த அன்றே இரண்டு உயிர்கள் கவசத்தோடு உயிரிழந்தன.....இதற்கு முன்னும் நேரில் கண்டதுண்டு...எனவே கவசம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்ல ஆனால் அதே சமயம் சாலை விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டும். அதில் ஊழல் இருக்கக் கூடாது.....மட்டுமல்ல சிவிக் சென்ஸ் / சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை சிறு வகுப்பிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் பள்:ளிகளில்....அப்போது நாளைய தலைமுறையாவது தங்கள் தலையைக் காத்துக் கொள்வார்கள் இல்லையா....
நீங்கள் சொல்லி இருப்பது போல் தனிமனித ஒழுங்கு அவசியம் அதுவும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதில்....ஆனால் வேதனை பலரும் விதிகள் தெரியாமல் தான் உரிமம் பெற்று வண்டி ஓட்டுகின்றார்கள்...உரிமம் பெற்றவர்களிடம் ஒரு தேர்வு வையுங்கள்...அப்போது தெரியும் எத்தனை பேருக்கு விதிகள் தெரியும் என்று....
பதிவு அருமை நண்பரே!