ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்பார்
ஆறாண்டில் ஆறினைப் பெற்றெடுத்து
கடவுள் தந்த வரமென்பார்
மரத்தடியில் அமர்ந்திருக்கும் என்னிடம்
மாடமாளிகை மாடிக்கட்டடம் வேண்டுமென்று
வேண்டுதலை முன் வைப்பார்
வகைவகையாய் உணவு சமைத்து
படையல் எனக்கென்பார்- படைத்து
அவரே அதை உண்பார்
கோடி கோடியாய் கொள்ளையடித்து
அதிலே கொஞ்சம் உண்டியலிட்டு
என்னையும் பங்காளி ஆக்கிடுவார்
காவல் தெய்வமென்று அழைத்திடுவார்
எனக்குத்தான் தெரியும் உண்டியலைக்
காத்திட நான்படும் பாடு
நாட்டு நிலைமை என்னவெனில்
தேங்காய் உடைப்பவனை விட
உண்டியல் உடைப்பவனே அதிகம்
பஞ்சத்துக்கு சாமியார் ஆனவனெல்லாம்
பல கோடியில் புரளுகிறான்
பாவம் நானின்னும் தெருகோடியில்
வாராவாரம் என்னிடம் வருவார்
வந்தென்ன பயன்?- தவறாமல்
வகுப்புவாதம் பேசித் திரிவார்
பெண்சாதியைப் பார்த்துக் கொள்ள
வழியில்லாதவன் கூட சாதி
சாதியென்றே பேசி அலைவான்
என்னிடம் கோரிக்கை வைப்பார்
தங்கள் கவனத்தை எல்லாம்
வெளியிலிட்ட செருப்பில் வைப்பார்
செல்வந்தவனெல்லாம் சிறப்பு பூஜை
நடத்திடுவார் வாசல் அமர்ந்திருக்கும்
இயலாதவனுக்கு பாத்திரமிட மறுத்திடுவார்
பாலாபிசேகம் நடத்தியதாய் பீற்றிடுவார்
ஏழைக் குழந்தையின் அழுகைக்கு
சிறிதேனும் இரங்க மாட்டார்
படைத்தல் காத்தலோடு அழித்தலை
அதிகமாய் அவரே செய்துகொண்டு
கடவுளென்று என்னை அழைத்திடுவார்

அருமை...
ReplyDelete//காவல் தெய்வமென்று அழைத்திடுவார்
ReplyDeleteஎனக்குத்தான் தெரியும் உண்டியலைக்
காத்திட நான்படும் பாடு
//
ஹாஹா..... கடவுள் நம்மிடம் படும் பாடு.....
அருமையான சிந்தனையில் உதித்த சிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசெம வரிகள் நண்பரே!
ReplyDeleteஅட! கடவுளின் குரல் உங்களுக்கு கேட்கத் தொடங்கியதை விட
ReplyDeleteஇத்தனை துல்லியமாய் கேட்டிருக்கிறதே என்பதுதான் வியப்பு!!! சூப்பர் சகோ!
கடவுள் தந்த வரம் அருமைங்கோ...
ReplyDeleteவளமான தமிழ்சொரிவுகள், அருமை கவி..வாழ்த்துகள்
ReplyDeletewow
ReplyDeletevote +
அருமையான கவிதை
ReplyDelete
ReplyDeleteகடவுள் பார்வையில் மனிதன் செயல்பாடு பற்றிய உமது சிந்தனை அருமை. தொடரட்டும் உமது எழுத்துப்பணி ... வாழ்த்துக்கள்.
ReplyDeleteகடவுள் பார்வையில் மனிதன் செயல்பாடு பற்றிய உமது சிந்தனை அருமை. தொடரட்டும் உமது எழுத்துப்பணி ... வாழ்த்துக்கள்.