விழுபவன் வீரனல்ல!
வீழ்வோம் என்று தெரிந்தும் எதிர்த்து
நிற்பவனே வீரன்!
விழுந்ததற்காக வீண் கவலை கொண்டு
விம்மி அழுபவன் வீரனல்ல!
விதையாய் விழுந்து விருட்சமென எழுந்து
வீறுநடை போடுபவனே வீரன்!
காற்றடித்ததும் களைந்து போகும்
மேகமாய் இருப்பவன் வீரனல்ல!
மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு-மின்னலாய்
புறப்பட்டு பளிச்சிடுபவனே வீரன்!
தண்ணீர் ஊற்றியதும் அணைந்து விடுபவன்
தனியொரு வீரனல்ல!
நீரு பூத்த நெருப்பாய் இருந்து
தீப்பொறியாய் சீறி எழுபவனே வீரன்!
வீழ்வோம் என்று தெரிந்தும் எதிர்த்து
நிற்பவனே வீரன்!
விழுந்ததற்காக வீண் கவலை கொண்டு
விம்மி அழுபவன் வீரனல்ல!
விதையாய் விழுந்து விருட்சமென எழுந்து
வீறுநடை போடுபவனே வீரன்!
காற்றடித்ததும் களைந்து போகும்
மேகமாய் இருப்பவன் வீரனல்ல!
மேகக்கூட்டங்களைக் கிழித்துக்கொண்டு-மின்னலாய்
புறப்பட்டு பளிச்சிடுபவனே வீரன்!
தண்ணீர் ஊற்றியதும் அணைந்து விடுபவன்
தனியொரு வீரனல்ல!
நீரு பூத்த நெருப்பாய் இருந்து
தீப்பொறியாய் சீறி எழுபவனே வீரன்!
வணக்கம்
ReplyDeleteசகோதரன்...
இப்படியான கவிதை படைப்பவரும் ஒரு வீரந்தான்.....மிக அருமையாக உள்ளது.. சகோதரன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிவிட்ட சில நொடிகளில் விரைந்து கருத்திட்ட அன்பு சகோதரருக்கு நன்றிகள். என்னது வீரனா! போங்க பாஸ் போய் புள்ளக்குட்டிங்கள படிக்க வைங்க!
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரர்.
Delete
ReplyDeleteவீரக் கவிதை அருமை..பாராட்டுக்கள்
சகோதரருக்கு வணக்கம்
Deleteவருகைக்கும் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரர்
ஒவ்வொரு பாராவின் இறுதியில் வீரனுக்கு அப்புறம் விஜயகாந்த்து என்று போட்டு படித்தால் காமெடியாக இருக்கிறது எனக்கு? எனக்கொரு சந்தேகம் விஜயகாந்தை நினைத்து நீங்கள் இந்த கவிதையை எழுதவில்லைதானே tha.ma 3
ReplyDeleteரீமிக்ஸ் பண்ணி பேர்வாங்குவது ஒரு கலை!
Deleteஅட! எவ்ளோ எழுச்சியான கவிதை விஜயகாந்தை போட்டதும் காமெடி யா இருக்கு.
சகோதரி சொல்லியது போல் ரீமிக்ஸ் பண்ணி பேர் வாங்குவது ஒரு கலை தான். எப்படி நினைச்சு எழுதின கவிதை உங்க இந்த கற்பனையால இப்படி ஆகிடுச்சே! சும்மா. நன்றி சகோ.
Deleteவீரனுக்கு அழகு சேர்க்கும் அருமைக்கவிதை ஐயா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
Deleteசத்தியமா இது கவிதை தான்-னு ஏத்துகிறீங்களா சகோதரர்!
அப்படினா உங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் எப்பவும் உண்டு.
அன்புச் சகோதரரே !
ReplyDeleteவீரத்தை எப்படியெல்லாம் வர்ணித்துள்ளீர்கள். வீரம் செறிக்க.
சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்....!
வரிகள் சுறுங்கி இருக்கிறதே வழக்கமான சகோதரியின் கருத்துரை மாதிரி தெரியலையே. நலம் தானே அக்கா! இல்லை இந்த கவிதைக்கு இது போதும்னு விட்டுட்டீங்களா! உங்கள் நலம் அறிய ஆவல் சகோதரி. வருகைக்கு நன்றி..
Deleteஅன்புச் சகோதரரே !
Deleteநான் நலம் தான் மிக்க நன்றி ! நல்ல தம்பி தான் நலம் எல்லாம் விசாரிப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியே.! அதெல்லாம் ஒன்றுமில்லை வீரம் இன்னா என்ன அது கிலோ என்ன விலை.அது தான் சமாச்சாரம். ஆமா பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ் கொஞ்சம் வீக் என்று சொன்னது போல் கேட்டுச்சே அப்போ என்ன செய்யலாம். கொஞ்சம் கராத்தே கொஞ்சம் குங்க்பூ வேறும் ஏதாவது இருக்கும் எல்லாம் கத்துக் கொள்ளுங்க அப்புறம் பேஸ்சும் ஸ்ட்ரோங் ஆயிடும் . ஹா ஹா
///விதையாய் விழுந்து விருட்சமென எழுந்து
ReplyDeleteவீறுநடை போடுபவனே வீரன்!///
அருமை நண்பரே அருமை
ஊக்கமூட்டும் கருத்துக்கு நன்றி ஐயா. தொடர்வோம் நட்பை.
Deleteத.ம.5
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஒரு வெற்றி என்பது பல தோல்விகளில் கற்றுக்கொண்ட படம் தான் இல்லையா சகோ?
ReplyDeleteஎத்தகைய எதிரியையும் சந்திக்கும் வீரன் கூட தோழ்வியை சந்திக்க பயப்படுவதுண்டு.இதை நீங்கள் எதை நினைத்து எழுதினாலும் எனக்கு நம் தமிழ் சகோதரர்காக பாடப்பட்டதாகவே ! நீர் பூத்த நெருப்பை கனன்று கொண்டிருக்கும் அவர்கள் வென்றெடுக்கத்தான் வேண்டும் சகோ! எழுச்சிமிகு வரிகள் ! வாழ்த்துக்கள் சகோ!
தோல்வி,தோல்வி ,தோல்வி
Deleteதப்பா எழுதினதுக்கு மூணு முறை இம்போசிஷனாக்கும் !
என் அன்பு சகோதரிக்கு வணக்கம்
Deleteதங்கள் கருத்துரை பார்த்ததும் இரு தெம்பு வந்திருக்கு. பயபுள்ள ஏதோ கிறுக்கி எழுதி வைச்சு நம்மள கொல்றானே விடாம படிச்சு கருத்தும் போட்டு இருக்கிற நீங்க தான் உண்மையான வீரம் உள்ளவர். இதுல கரெக்சன் பண்ணி தப்பைக் காட்டிக்கொடுத்தீட்டீங்களே! நான் இரண்டு முறை படித்த போதும் என் கண்ணுக்கு தெரியலையே அக்கா! இருந்தாலும் உங்க நேர்மை ரொம்ப பிடுச்சுருக்கு சகோதரி. நன்றி..
வீரமிகு வரிகள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteகொல்வதல்ல வீரம்... வாழ வைப்பதே வீரம்...
வாழ்த்துக்கள்...
இதை கவிதைனு படிச்சு வலிச்சும் வலிக்காம காட்டிக்கிறதும் வீரம் தான் சகோதரர். உங்கள் வருகையும் கருத்தும் அன்பும் மகிழ்வளிக்கிறது நன்றி. இரவு தூங்கினத்துக்கு அப்பறம் பதிவு போட்டு நம்ம கருத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்தாட்டேனே படுபாவினு நீங்க நினைச்சது எனக்கு கேட்ருச்சு சகோ. என்ன பண்றது ராக்கோழியாய் திரிந்து பழகிப் போயிடுச்சு,
Deleteமிக மிக அருமை சகோ! ஒவ்வொரு வரியும் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரெண்டு மிக போட்ட என் அஞ்சா நெஞ்ச சகோதரியை இருகரம் கரம் கூப்பி வரவேற்கிறோம். கருத்திட்டு வாழ்த்திய உங்கள் நல்ல மனசுக்கு நன்றிகள் சகோதரி..
Deleteத.ம.7
ReplyDeleteஇவ்ளோ மதிப்பெண் போட்டு அசத்தி எங்கோயோ போயிட்டீங்க சகோதரி. வாழ்க உங்கள் கொடை திறன். நன்றிங்க சகோதரி.
Deleteவீரம் விளைகின்றது - தங்களின் கவிதை வரிகளில்!..
ReplyDeleteபில்டிங் ஸ்ட்ராங்க் தான் ஐயா. பேஸ்மட்டம்! இது தெரியாம இப்படி சொல்லிப்புட்டீங்களே! இருந்தாலும் உங்கள் ஒரே மன தைரியத்தைப் பாராட்டி கம்பெனி உங்களுக்கு தலை வணங்குகிறது. நன்றீங்க ஐயா.
Deleteவீரம் ... அருமை..
ReplyDeleteஅடுத்த கூட்டத்தில் ஒரு கவிதையை வாசியுங்கள்..
நன்றி சகோ
ஓகோ உங்க மனத்தைரியத்திற்கு தான் கம்பெனி தலை வணங்கனுமோ! உங்களுக்கு (பெரியங்களுக்கு) முன்னாடி கவிதையெல்லாம் வாசிக்கிறது தப்ப இல்லையா சகோ. நல்ல கவிதையென்று எனக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது கண்டிப்பாக வாசிக்கிறேன் சகோ. கருத்துக்கு நன்றி..
Deleteவீரனின் அழகைச் சொல்லி வீரத்தை வெளிக்காட்டும் வரிகள்.
ReplyDeleteகவிதையை வாசித்து கருத்திட்டு வாழ்த்திய ஐயா அவர்களுக்கு அன்பான நன்றிகள்..
Deleteவீரத்தின் வேகத்தை காட்டுகிறது ஒவ்வொரு வரிகளும்..............................அருமை சகோ!
ReplyDeleteசகோதரியின் வருகையும் கருத்தும் கண்டதும் மகிழ்ச்சியாய் உள்ளது. நீங்க கவிதை எழுதுங்கனு முதன் முதலில் ஊக்கப்படுத்தியவர் நீங்க தான். அதற்கு இப்ப அனுபவிக்க வேண்டி இருக்குது பார்த்தீங்களா சகோதரி!. கருத்துக்கு நன்றிகள் சகோதரி.
Deleteஎன்ன இவர்தான் கவிதை எழுத சொல்லி கொடுத்த வீராங்கனையா? சும்மா இருக்கிறவங்களை இப்படி உசுப்பேத்தி ரணகளம் ஆக்கிவிடுற ஆளா நோட் பண்ணிக்கிட்டேன் அப்புறமா வந்து அவங்ககிட்ட பேசுறேன்
Deleteஉணர்ச்சிபொங்கும் வரிகள். அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
Deleteஓவரா பொங்கி அடுப்பு அணைந்துட போகுது சகோ. கருத்திட்டு வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள் சகோதரர்..
இப்படிலாம் பொங்குனா சுமோ அனுப்பி அடக்கிடுவாங்க.
ReplyDeleteசகோதரிக்கு வணக்கம்
Deleteசுமோ எல்லாம் வேண்டாம் தூரமா நின்னு தண்ணீர் ஊத்தினாலே தானா அணைந்துடும் அக்கா, இவ்வளவு தூரம் கடினப்பட்டு சுமோக்கு காசு கொடுத்து எல்லாம் வர வேண்டாம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரி..
வீரனின் இலக்கணத்தைக் கவிதை அழகாய் விளக்குகிறது
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteவீரனின் இலக்கணம் சரிதான் கவிதையை எழுதனவன் வீரனா இருந்தா நல்லா தான் இருக்கும் என்ன பண்றது தெனாலி கமல் சார் மாதிரி ஆண்டவன் நம்மளை படைச்சுட்டான். எதிர்நீச்சல் போட்டு கடந்து போவோம். ருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றீங்க ஐயா..
தன்னம்பிக்கையூட்டும் வரிகள் அருமை சகோ.வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteஎங்கம்மா ஒரு நாள் ராத்திரி சோறு ஊட்ட வந்தததுக்கே என்னமோனு பயந்து பத்தடி ஓடிட்டேனாம். இதுல தன்னம்பிக்கைக்கு என்ன பண்ணுவேன். இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து வாழ்த்திட்டீங்க நன்றி சொல்லமா இருக்க முடியுமா! நன்றீங்க சகோதரி. சந்திப்போம்.
மிகவும் அருமையான கவிதை...
ReplyDeleteவீரமான வரிகள்...
வாழ்த்துக்கள்.
வழக்கம் போல் வருகை தந்து வளமையான வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரர்..
Delete+1
ReplyDeleteமிக்க நன்றி சகோதரர் தங்கள் வருகைக்கும் +1 க்குமாக.
Deleteஅனைத்தும் நன்று!
ReplyDeleteஐயா அவர்களின் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. நன்றீங்க ஐயா..
Delete