உள்ளங்கை ரேகையில் இல்லை வாழ்க்கை
உனது கையில் இருக்கிறது
உழைத்து பார் உன்னத வாழ்க்கை
உனதருகே வசப்படும் நண்பா!
தொல்லைகள் பல இருக்கலாம்- இருப்பினும்
துவண்டு விடாமல் முன்னேறி பார்
தூக்கி விடுபவர்கள் துணையிருக்கிறார்கள்
துணிந்து நடைபோடு நண்பா!
விடாமுயற்சி எனும் மந்திரத்தை உச்சரித்து
விருட்சமென வளர்ச்சி பெறு
வீணர்களின் மொழிகளுக்கு செவிமடிக்காது
வீண்கவலை மறந்திடு நண்பா!
தோல்விகளைத் தோலில் சுமக்காமல் சட்டென்று
தூக்கிப் போட துணிந்திடு
தூக்கத்திலும் உனது லட்சியம் வெல்ல
துடித்துக் கொண்டிரு நண்பா!
பெயர் வைத்த பெற்றோர்க்கு பாங்குடனே
பெயர் வாங்கித் தர பிறந்தவன் நீ
பல்குத்தும் குச்சியல்ல- உரசியதும்
பற்றிக்கொள்ளும் தீக்குச்சி நீ நண்பா!
சருக்கி விழுந்தாலும் சட்டென்று எழுந்து
சரித்திரம் படைக்க பிறந்தவன் நீ
சாதனைகள் பல படைத்து வாழ்வில்
வரலாறு படைப்போம் வா நண்பா!
வணக்கம்
ReplyDeleteசகோதரன்....
பெயர் வைத்த பெற்றோர்க்கு பாங்குடனே
பெயர் வாங்கித் தர பிறந்தவன் நீ
பல்குத்தும் குச்சியல்ல- உரசியதும்
பற்றிக்கொள்ளும் தீக்குச்சி நீ நண்பா!
உண்மையான வரிகள்....எல்லாப் பிள்ளைகளும் இப்படி உணர்ந்தால் அதிகமான பெற்றோர்கள் முதியோர் இல்லம் போகவேண்டிய நிர்பந்தம் இருக்காது...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடன் கருத்திட்டு ஊக்கப்படுத்திய உடன்பிறவா சகோதரருக்கு உன்னதமான அன்புகளால் நன்றிகள் நவில்கிறேன். பொறுப்பான பிள்ளைகளால் பெற்றோர்கள் கவலைகள் மறையும் என்பதே உண்மை. நன்றி சகோதரர்..
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 3 வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரர்..
Delete//விடாமுயற்சி எனும் மந்திரத்தை உச்சரித்து
ReplyDeleteவிருட்சமென வளர்ச்சி பெறு
வீணர்களின் மொழிகளுக்கு செவிமடிக்காது
வீண்கவலை மறந்திடு நண்பா!//
படைத்திட்டீர் அருமையான கவிதை - வாழ்வில்
அடையாளம் தரும் மந்திரமாம் விடாமுயற்சிதனை
அயராது துணிந்து கடைபிடித்தால் எவரும்
வரலாறு படைத்திடலாம் என்றுரைத்தீரே நண்பா!
த.ம.
ஐயாவிற்கு நன்றி. விரைந்து கருத்திட்டு வீரியமிக்க வரிகளைப் பகிர்ந்த உங்கள் அன்புக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள். தொடர்வோம் நட்பை.
Deleteமிகவும் அருமையான கவிதை
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா...
வணக்கம் சகோதரர். வருகைக்கும் நன்றி. ஊக்கமூட்டும் கருத்துக்கு அன்பான நன்றிகள்.
Delete\\தொல்லைகள் பல இருக்கலாம்_ இருப்பினும்
ReplyDeleteதுவண்டு விடாமல் முன்னேறி பார்
தூக்கிவிடுபவர்கள் துணையிருக்கிறார்கள்
துணிந்து நடைபோடு நண்பா\\
மிகச்சிறப்பான கவிதை எழுதியிருக்கிறீங்க சகோ.வாழ்த்துக்கள்.
ஆம் சகோதரி. நல்ல உள்ளங்கள் உலகில் பரவி இருக்கிறார்கள். உழைக்கும் கரங்களுக்கும் அவர்கள் கை கொடுப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. அழகான வரிகளால் வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள் சகோதரி..
Deleteஇனிய வணக்கம் சகோதரரே..
ReplyDeleteஉள்ளத்திற்கு உரமேற்றும் வரிகள்..
நம்பிக்கையை சிரமேற்கொண்டு
முயற்சியை வினையூக்கியாக்கி
கொண்ட கடமையை
கொள்கை தவறாது நிறைவேற்று - என
இயம்பி நிற்கும்
அருமையான நம்பிக்கை கவிதை.
கருத்துரையும் கவியாய் தந்து கலக்கியிருக்கும் தங்கள் புலமை கண்டு மகிழ்வாக உள்ளது. கடல் கடந்தும் தமிழை நேசிக்கும் தங்களைப் போன்றோரால தான் தமிழ் வளரும் என்னும் நம்பிக்கை வேறூன்றி உள்ளது. நன்றி சகோதரர்..
Deleteஅருமை சகோ...!
ReplyDeleteவணக்கம் சகோ. வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு நன்றிகள்..
Delete///விடாமுயற்சி எனும் மந்திரத்தை உச்சரித்து
ReplyDeleteவிருட்சமென வளர்ச்சி பெறு//
அற்புதம் நண்பரே
தன்னம்பிக்கையோடு விடாமுயற்சியும் கைகோர்க்கும் போது வாழ்க்கைப்பாதை சுகமானதாகிறது தானே சகோதரர்! தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி..
Deleteதன்னம்பிக்கையூட்டும் வரிகள்.
ReplyDeleteஅருமை சகோ.
வாழ்த்துக்கள்
எனக்கு தன்னம்பிக்கை பிறப்பது உங்களைப் போன்றோரின் கருத்துரையில் தான் சகோதரர். இருப்பினும் இதை கவிதை என்று மயங்கிடவில்லை. என் எண்ணங்கள் அவ்வளவே. தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறுவோம் எனும் நம்பிக்கையுண்டு. நன்றி சகோதரர்.
Deleteஆகா...! ஒவ்வொரு வரியும் அசத்தல்...!! அற்புதம்...!!!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தூக்கி விடுபவர்கள் புரிகிறதா சகோதரர்! தங்களைப் போன்றோரின் நல்ல உள்ளங்களை மனதில் வைத்து எழுதியது. நன்றி சகோதரர் வாழ்த்துக்கும் வருகைக்குமாக!
Deleteதோல்விகளைத் தோலில் சுமக்காமல் சட்டென்று
ReplyDeleteதூக்கிப் போட துணிந்திடு
தூக்கத்திலும் உனது லட்சியம் வெல்ல
துடித்துக் கொண்டிரு நண்பா!
தோழனுக்கு தோள் கொடுக்கும் வகையில் துணிச்சலையும் தன்நம்பிக்கையையும் வளர்க்கும் வரிகள். அருமை சகோதரா..!
நன்றி...! தொடர வாழ்த்துக்கள்...!
அன்பு சகோதரியின் கவிதைக்கு முன் இதெல்லாம் சாதாரணம். நாங்களெல்லாம் காவியக்கவியின் கவி வரிகளில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் இருப்பதை நீங்கள் அறிவீரா சகோதரி. வழக்கம் போல் தன்னம்பிக்கைக்கு உரமிட்டு வாழ்த்தி கருத்துரை தந்தமைக்கு அன்பான நன்றிகள்..
Delete#வரலாறு படைப்போம் வா நண்பா!#
ReplyDeleteஎனக்காகவே எழுதியது போலிருப்பதால் இதோ வந்து விட்டேன் நண்பா !
த ம 7
ஏற்கனவே வரலாறு படைத்தவர்கள் நீங்கள். உங்களைக் கூப்பிடுவது போலவ இருக்கிறது உண்மையில் நீங்கள் தான் என்னை அழைக்க வேண்டும். அழகான கருத்துக்கு நன்றிகள் சகோதரர்..
Deleteதன்னம்பிக்கையூட்டிடும் அழகான வரிகளின் கோர்வை நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteசிறுகதை போட்டியின் காரணமாக இடைவிடாத பணியில் இருப்பீர்கள். இருப்பினும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள் ஐயா..
Deleteதன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள் மிக மிக அற்பதம் சகோ.. கவிதை வடிவில் அனைவரையும் சென்றடையும் விதம் பகிர்ந்தது அருமை.. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉற்சாகமூட்டும் வரிகளால் கருத்துரை வழங்கி மகிழ்ந்த சகோதரிக்கு அன்பான நன்றிகள்..
Deleteஅருமையான உணர்ச்சி மிக்க கவிதை. உணர்வுகளை தட்டியெழுப்பும் வரிகள் நண்பரே. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரர். தங்கள் வருகை கண்டும் மிக்க மகிழ்ச்சி. தொடர்வோம்..
Deleteஅருமை .
ReplyDeleteநன்றி சகோ வருகைக்கும் கருத்துக்குமாக!
Deleteஅருமையான தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொடுக்கும் கவிதை...
ReplyDelete//உழைத்து பார் உன்னத வாழ்க்கை
உனதருகே வசப்படும் நண்பா!//
//விடாமுயற்சி எனும் மந்திரத்தை உச்சரித்து
விருட்சமென வளர்ச்சி பெறு// மிக அருமை சகோ!
வாழ்த்துகள்!
அழகான ரசிக்கும் குணம் கொண்டவர்கள் நீங்கள் என்பதை அறிவேன். ரசித்த வரிகளைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள் சகோதரி..
Deleteதன்னம்பிக்கை வரிகள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர். தொடர்ந்து இணைந்து நட்பு பாராட்டுவோம் நன்றி
Deleteஇதே பாணியில் தொடர்ந்து கவிதைகளைத் தருக நன்றி..
ReplyDeleteநண்பா என்று எழுதும் போதெல்லாம் உங்களை (நண்பா அறக்கட்டளை) நினைவு தான் எனக்கு. கருத்துரையால் தன்னம்பிக்கையைத் தந்தமைக்கு நன்றி சகோ..
Deleteகலக்குறிங்க சகோ!
ReplyDelete//பல்குத்தும் குச்சியல்ல- உரசியதும்
பற்றிக்கொள்ளும் தீக்குச்சி நீ நண்பா!//
இந்த வரிகள் என்னை கவர்ந்தன.
நல்ல படைப்பு சகோ!
பெரிதாக நேரம் ஒதுக்கி எழுதவில்லை சகோதரி. கணினி முன் உட்கார்ந்து நேரடியாக தட்டச்சு செய்தது தான். பிழைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். உங்கள் அளவிற்கு கவிதையில் கலக்க முடியுமா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..
Deleteவரலாறு படைக்கும் வாசகங்கள்..
ReplyDeleteவாழ்த்துகள்..!
வணக்கம் அம்மா
Deleteதங்கள் வருகையும் வாழ்த்தும் ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி அம்மா..
அப்படிப்போடு! பாண்டியன்! அசத்தல் கவிதை! அழ்ழ்ழ்ழகா எழுதிட்டீங்க. தீட்டத் தீட்ட வைரம் ஒளிவீசும், எழுத எழுதக் கவிதை தெளிவாகும்! “சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” வெண்பா உண்மைதானே? தொடர்ந்து எழுதுங்க...“வெறும்கை என்பது மூடத்தனம் - நம் விரல்கள் பத்தம் மூலதனம்” கவிதையை நினைவூட்டுகிறீர்கள்.. தொடருங்கள்!
ReplyDeleteதூக்கி விட உங்கள் கரம் இருக்கையில் துணிந்து நடக்கலாம் என்ற நம்பிக்கை தான் எனக்கு வலைப்பக்கம் தொடங்க உந்துதலாக இருந்தது. தங்கள் உற்சாகமூட்டும் வரிகள் என்னை இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது ஐயா. மிக்க நன்றி..
Deleteசருக்கி விழுந்தாலும் சட்டென்று எழுந்து
ReplyDeleteசரித்திரம் படைக்க பிறந்தவன் நீ
சாதனைகள் பல படைத்து வாழ்வில்
வரலாறு படைப்போம் வா நண்பா!
arumai sako
வணக்கம் சகோதரி
Deleteகவிஞராகிய நீங்கள் அருமை என்று சொல்லும் போது மகிழ்ச்சியாய் உள்ளது. இன்னும் மெருகேற தங்கள் கருத்துரை உதவும். மிக்க நன்றி சகோதரி..
"விடாமுயற்சி எனும் மந்திரத்தை உச்சரித்து
ReplyDeleteவிருட்சமென வளர்ச்சி பெறு
வீணர்களின் மொழிகளுக்கு செவிமடிக்காது
வீண்கவலை மறந்திடு நண்பா!" என்பது
நம்மாளுகளுக்கு
சிறந்த பின்னூட்டி நண்பா!
ஐயாவின் வருகையும் வாஞ்சையோடு வாழ்த்தும் கருத்துரையும் காண இனிக்கிறது. தொடர்வோம் ஐயா. மிக்க நன்றி..
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கிரேஸ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தேன் மதுரத் தமிழ்!
வலைச்சர தள இணைப்பு : கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?