நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு கதை சொல்லப் போகிறேன். கதைச் சொல்ல ஆரம்பித்தவுடன் கணினி முன் இருக்கும் இருக்கையோடு நகர்ந்து ஓடி விடாமல் கொஞ்சம் சகித்துக் கொண்டு கேளுங்களேன்.
ஓர் அழகிய ஆண்மகன் பேருந்து நிறுத்தத்தில் வழக்கமான மக்கள் நெருக்கடியிலும், வாகனங்களின் ஒலிகளுக்கிடையே ஒரு பெண்ணின் வருகைக்காக மகிழ்ச்சியோடு காத்திருக்கிறான். வழக்கமாக அவள் வரும் பேருந்து வருகிறது இவனின் கால்கள் பரபரக்கின்றன. அவள் பேருந்தை விட்டு இறங்கியவுடன் விரைந்து சென்று அவளை அரவணைத்து கண்ணத்தில் முத்தமிட்டு கைகோர்த்து தன்னோடு அழைத்துச் செல்கிறான். போகும் வழியில் ஐஸ்கீரீம் கடையைப் பார்க்கிறார்கள் இருவருக்கும் பிடித்தமான ஐஸ்கீரீமை வாங்கி இருவரும் பகிர்ந்து மாறி மாறி ஊட்டுவிட்டுக் கொண்டே நடக்கின்றனர்.
நடக்கையில் அந்த ஆண்மகன் அந்த பெண்ணிற்கு ஒரு நிகழ்வை நினைவுப்படுத்துகிறான் இலங்கையின் திருகோண மலையில் பிறந்து தற்போது பணியின் காரணமாக மலேசியாவில் வசித்து வரும் திரு.ரூபன் அவர்களும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வசித்து வரும் தமிழாசிரியர் பாண்டியன் அவர்களும் இணைந்து இணையத்தில் ஒரு கட்டுரைப்போட்டி நடத்துகிறார்களாம்.
கட்டுரைப்போட்டி தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்
இதுவரை கட்டுரைகள் பல வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தமிழைக் காதலிக்கும் வலைப்பதிவர்கள் சற்று மந்தமான வானிலை (காலநிலை) காரணமாக படைப்புகள் (கட்டுரை) தர சற்று யோசிக்கிறார்கள் போலும் அவ்வாறு இல்லாமல் தமிழில் கலக்கும் பதிவர்கள் கட்டுரை போட்டியிலும் கலக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்களாம். இனியும் காலநீட்டிப்பு கிடையாதாம். அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தால் நலமாக இருக்கும் தானே! என்று அந்த நிகழ்வைக் கூறிக்கொண்டே நடந்தான். (அழகிய ஆண்மகனும் பெண்ணும் ஐஸ்கீரீம் சாப்பிட்டுக்கொண்டே பேசுற பேச்சா இதுனு நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் ஐ கேட்ச் பண்ணிட்டேன் பாஸ்)
பேசிக்கொண்டே நடக்கையில் அவர்கள் போக வேண்டிய இல்லத்தைத் தாண்டி பயணிப்பதைக் கண்ட ஒரு அம்மா வீட்டின் வாயிலுக்கு வந்து தம்பி, பாப்பா நம்ம வீடு இங்க இருக்கு நீங்க எங்கே போயிட்டு இருக்கீங்க ? என்று மூன்றாம் வகுப்பு படிக்கும் அந்த ஆண்மகனையும், எல்.கே.ஜி படிக்கும் அவனது தங்கையையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
முற்றும்.

பாண்டியா ..... நான் ரொம்ப கோபமாய் இருக்கிறேன். ஆஹா அருமையான கதை சொல்லப் போகிறார் சகோதரன் என்று நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லா வேலையையும் அப்படியே போட்டு விட்டு வாசித்தால். இப்படியா ஏமாற்றுவது ம்..ம்...ம் இருக்கட்டும் இருக்கட்டும்.
ReplyDeleteபறவாய் இல்லை ரொம்ப ரசிக்கக் கூடியதாகவே உள்ளது எல்லோரும் பரந்து பறந்து வரப்போகிறார்கள் நிச்சயமாய் இதை பார்த்தவுடன். வாழ்த்துக்கள்....!
ஆமா என்ன இபோதெல்லாம் என் வலைக்கு வருவதே இல்லையே ரொம்ப போர் அடிக்கிறேனோ. அதை சொல்லியா தெரியவேண்டும் என்று பேசுவது போல் கேட்கிறது உண்மையா?
வாழ்க வளமுடன்.....!
அன்பின் சகோதரிக்கு வணக்கம்
Deleteதங்களின் வருகை எனது பதிவுக்கு நிச்சயம் இருக்கும் என்பது அறிந்ததே! முதல் வருகை இன்னும் இன்பமடைய செய்திருக்கிறது. பணிச்சுமையினால் தான் உங்கள் தளம் வரமுடிவதில்லை. கண்டிப்பாக மீண்டும் தொடருவேன். நன்றி சகோதரி.
ஆஹா... எப்படியெல்லாம் கதை சொல்றாங்க பாருங்க...
ReplyDeleteநல்ல கதை தொடரும் போட்டு இன்னும் ஒரு முறை போட்டி குறித்த அறிவிப்பைச் சொல்லியிருக்கலாம்.
கதைனு ஒத்துங்கிட்டீங்க தானே! அது போதும். தொடரும் என்று போட்டு மக்களை பயமுறுத்த வேண்டாம் என்று தான் முற்றும் போட்டுவிட்டேன். தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரர்
Deleteநல்ல கதை பரிசு கிடைக்கட்டும் பாண்டியன்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்
நாங்கள் நடத்தும் போட்டிக்கு நினைவூட்டும் பதிவு தான் சகோதரி. போட்டிக்காக எழுதிய கதை இல்லை இது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி
Deleteநல்ல வேளை தமிழ் நாட்டில் இருப்பதால் உங்கள் தலை தப்பியது......
ReplyDeleteபதிவைப் போடுவதற்கு முன் மதுரைத்தமிழன் வெளிநாட்டில் தானே இருக்கிறார்னு ஒரு தைரியம் வந்ததால தான் பதிவைப் போட்டேன். சொதுப்பி விடுமோ என தயங்கி தான் பதிவைப் போட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்...
நான் முதலில் தங்களின் வலைப்பூவை திறந்தவுடன் கதை நன்றாக இருக்கும் என்று நினைத்து படிக்கும் போது பார்த்தால் நம்மட கட்டுரைப்போட்டி.... நிச்சயம் இறுதி நாட்களில் கட்டுரை அதிகமாக வரும்..... பதிவாக நினைவூட்டியமைக்கு வாழ்த்துக்கள் சகோதரன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரர்
Deleteவழக்கம் போல் நினைவூட்டல் பதிவு போட்டால் நம்ம ஆளுங்க எஸ்கேப் ஆகிடுறாங்கனு அவங்களை ஏமாத்திப் படிக்க வைக்க முயற்சித்தேன். தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்
(அழகிய ஆண்மகனும் பெண்ணும் ஐஸ்கீரீம் சாப்பிட்டுக்கொண்டே பேசுற பேச்சா இதுனு நினைக்கிற உங்க மைண்ட் வாய்ஸ் ஐ கேட்ச் பண்ணிட்டேன் பாஸ்)
ReplyDeleteஒ! அங்க வரை என் மைன்ட் வாய்ஸ் கேட்குதா?
ஹா ....ஹா ....
என்ன ஒரு யோசனை ப்ப ,,,,,கலக்குங்க
நீங்க என்ன நினைப்பீங்கனு உங்க தம்பிக்கு தெரியும்ல. அதான் நானே சுட்டிக்காட்டிட்டேன். வருகை தந்து கருத்திட்டு சிறப்பித்தமைக்கு நன்றி சகோதரி.
Deleteஇப்படிப் போடுங்க பதிவை...!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா...!
அன்பு சகோதரருக்கு வணக்கம்
Deleteதங்கள் வருகையும் வாழ்த்துக்கும் நன்றி. தங்கள் ஊக்குவிப்பு மற்றும் உழைப்பில் தான் நாங்கள் தைரியமாக உலா வந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. அனைத்துக்கும் நன்றி சகோதரர்..
அருமை பாண்டியன். கட்டுரைப்போட்டிக்கு இன்னும் நாளிருப்பதையும், விரைவில் அனுப்ப வேண்டுமென்பதையும் இதைவிட அழகாகக் -கதைவிட- முடியாது சாமீ
Deleteநானும் முதலில் பாண்டியன் என்னமோ கதை எழுதியிருக்கார் சரி படிப்போம்னுதான் படிக்க ஆரம்பிச்சேன் அடடா... சொல்லவே இல்ல... தங்கச்சிக்கு ஐஸ்க்ரீம் எங்களுக்கு அல்வாவா? ஒழுங்கு மரியாதையா சீக்கிரமா நிஜமாவே ஒரு கதையை எழுதிருங்க... என்ன? (அதுதான் நீங்க நல்லா கதை எழுதுறீங்கனு தெரிஞ்சிருச்சே?)
வணக்கம் ஐயா
Deleteஅல்வா எல்லாம் இல்லை ஐயா. வழக்கம் போல் போட்டிக்கு நினைவூட்டும் பதிவு போட்டால் இவங்களுக்கு வேற வேலை இல்லையானு படிக்காம எஸ்கேப் ஆகிடக்கூடாதுனு கதை விட்டுட்டேன் ஐயா. விரைவில் உண்மையாகவே கதை எழுதிடுறேன் ஐயா. தங்கள் வருகையும் அழகான கருத்துரையும் ரசிக்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா..
இன்னாமா கத சொல்லிகினாம் பாருபா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
வணக்கம் நைனா
Deleteஎல்லாம் போட்டாச்சு போட்டாச்சு கண்டிப்பாக போட்டியில் முதல் பரிசு பெற வாழ்த்துகள். கருத்துக்கு நன்றி..
அந்த அளவுக்கு நம்பிள் பிஸ்த்து இல்லே வாத்யாரே...!
Deleteஅல்லாம் போட்டாச்சு... - ஒன்லி பார் ஓட்டுபா...
அப்படீங்களா! நான் தான் தவறாக புரிந்து கொண்டேனோ! கண்டிப்பாக நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். பிஸ்த்து இல்லைனு சொல்றது எல்லாம் தன்னடக்கம்.
Deleteஅழகான கதை! ஊடயே தாங்களும், நண்பர் ரூபனும் சேர்ந்து நடத்தும் கட்டுரைப்போட்டி பற்றிய தகவலும்!! அருமை! கதையை வாசிக்கும் போது ஏதேதோ எதிர்பார்ப்புகள் இறுதியில் எதிர்பாராத கவித்துவமான முடிவு!
ReplyDeleteவாழ்த்துக்கள்! கதைக்கு மட்டுமல்ல தாங்கள் நடத்தும் போட்டிக்கும்தான்! கலக்குங்கள்!
ஐயாவின் வருகையும் வாழ்த்தும் எங்களை இன்னும் சிறப்பாக செயல்படத்தூண்டும். நன்றிகள் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்குமாக!
Deleteஇருவரும் இணைந்து நடத்தும் போட்டி வெற்றிபெற வாழ்த்து!
ReplyDeleteஐயாவின் வருகையும் வாழ்த்தும் எங்களை இன்னும் சிறப்பாக செயல்படத்தூண்டும். நன்றிகள் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்குமாக!
Deleteஹாஹா....அருமை சகோதரரே!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteஇது கோபத்தை அடக்க வந்த சிரிப்பு போல இருக்கிறதே உண்மையா! வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி..
நீங்க விளம்பரங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதப் போகலாம் போலருக்கே. அருமை. பதிவு எழுதுவதும் போட்டிக் கட்டுரை எழுதுவதும் வேறு வேறு ஆயிற்றே. இதற்கு தோல்வி பயமும் ஒரு காரணம்.
ReplyDeleteஉண்மையாக நான் சற்று தயங்கிய போட்ட பதிவு இது. தங்களின் ஊக்கமூட்டும் வரிகள் புரியும் படி தான் எழுதியுள்ளேன் எனும் நம்பிக்கையைத் தருகிறது. நன்றி சகோதரர்..
Deleteஎப்படில்லாம் யோசிக்கிறீங்க...?????
ReplyDeleteஇன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவே இல்லை சகோதரர். பணிச்சுமைக் காரணமாக இணையத்தின் முன் அமருவதே கடினமாக உள்ளது. தங்கள் வருகைக்கு நன்றி..
Deleteஇனிய வணக்கம் சகோதரரே...
ReplyDeleteகட்டுரைப் போட்டிக்கான வித்தியாசமான அழைப்பு...
சிறுகதை ஊடாக...
கதைக்கு கதையும் ஆச்சு..
அழைப்புக்கு அழைப்பும் ஆச்சு...
வாழ்த்துக்கள் சகோதரரே...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. நான் அவ்வப்போது தங்களைப் பற்றி நினைப்பதுண்டு. வருகையைக் காணவில்லை. பணி நிமிர்த்தமாக வெளியூர் போய் விடுவாரோ என்று! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்..
இனிய வணக்கம் சகோதரரே...
ReplyDeleteநான் பணிபுரிவது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான்...
இரவுப்பணியில் இருக்கையில் மட்டும் சற்று நேரம் கிடைக்கும்
இணையப்பக்கம் வருவதற்கு....
வணக்கம் சகோதரர்
Deleteதங்களைப் பற்றிய தகவல்களுக்கு அன்பான நன்றிகள். தங்கள் தமிழ்க்கண்டு அசந்து போனது உண்டு. கடல் தாண்டியும் தாய்மொழியாம் தமிழில் கலக்குவது பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரர்.
கதை வடிவில் கட்டுரைப்போட்டி பற்றிய நினைவூட்டல்! நல்ல யோசனை! நன்றி!
ReplyDeleteசகோதரரின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம்,. நன்றி..
Deleteநீங்கள்
ReplyDeleteதமிழாசிரியரா?
கதாசிரியரா?
நன்றாகத் தான்
படிப்பித்தீர்!
எழுதும் ஆற்றலுள்ளோர்
போட்டியில் பங்கெடுப்பது
நல்ல பயனைத் தருமே!
வணக்கம் ஐயா
Deleteஉங்கள் கருத்துரை இன்னும் இயங்க வேண்டுமெனும் உத்வேகத்தைத் தருகிறது. ரொம்ப நன்றீங்க ஐயா..
கட்டுரைப்போட்டியை ஞாபகப்படுத்த நீங்க எழுதிய கதை சுவாரஸ்யம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரிக்கு வணக்கம்
Deleteமகிழ்ச்சியான விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அறிமுகம் இருந்தாலும் நண்பர்களின் அன்பு தான் இங்கு முக்கியம் அந்த வகையில் நான் பணக்காரன். மிக்க நன்றீங்க சகோதரி..
ஒரு கதை சொல்றேன்னு சொல்லி, ஏமாத்திட்டீங்களே!
ReplyDeleteகடைசியில வச்சிங்களே ஒரு பஞ்ச்!!!
இன்னும் இரண்டு வாரம் இருப்பதால், நான் முயற்சித்துப் பார்க்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை.
வணக்கம் சகோதரர்
Deleteதங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் தங்களால் முடியும். பஞ்ச் மாதிரியாக இருக்கட்டும். என்னை ஒன்னும் உசுப்பேத்தலையே! நன்றி சகோதரர்..