நண்பர்களுக்கு வணக்கம்
சென்ற வாரம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. நா. அருள்முருகன் ஐயா, கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளரும், வலைப்பதிவருமான திரு. நா.முத்துநிலவன் ஐயா, மற்றொரு பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழாசிரியருமான திரு. மகாசுந்தர் ஐயா அவர்களோடு நானும் நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த இலக்கியவாதியும் பதிப்பாசிரியருமான திரு. பெருமாள்முருகன் ஐயா அவர்கள் முன்னெடுத்து நடத்தும் அவர் வீட்டு மொட்டை மாடியில் நடந்த கூடு எனும் இலக்கிய அமைப்பின் 50 ஆவது சந்திப்பு கூட்டத்திற்கு சென்றோம்.
தேர்வு எழுதச் சென்ற என்னை பலமணி நேரம் காத்திருந்து அழைத்து சென்றார்கள். இந்த சிறியோனையும் அழைத்து சென்றதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றிகள் சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன். (அந்த பயணம் பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் விரிவாக தருகிறேன்)
அந்த சந்திப்பின் தாக்கத்தால் எங்கள் மாவட்டம் புதுக்கோட்டையிலும் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் முடிவு செய்தோம். அதற்கு உடனடியாக செயல் வடிவம் தந்தார் முதன்மைக் கல்வி அலுவலர் ஐயா. கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா தனது இலக்கிய நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார். இச்சந்திப்பில்
*சிந்தனையைத் தூண்டக்கூடிய நல்ல புத்தகங்களைத் தேர்வுசெய்வது
*நல்ல புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவது, ஆழ்ந்து படிப்பது
*அதற்குத் தக நிற்பது, செயல்படுவது, செயல்படத் தூண்டுவது இதை நோக்கிய நமது பயணத்திற்கு ஒரு பெயர் தேர்வு செய்வது
*அடுத்தடுத்த சந்திப்பிற்கான பொருளைத் தேர்வு செய்வது என்று முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா அவர்களோடு பேசி முடிவெடுத்தார்.
அதன்படி இன்று (05.01.2014)எங்களின் இலக்கிய அமைப்பின் முதல் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஏறத்தாழ 30 பேர் கலந்து கொண்டனர். ஏற்கனவே அழைப்பு விடுக்கையில் இது பார்வையாளர் கூட்டம் அல்ல பங்கேற்பாளர் கூட்டம் என்பதை தெளிவாக கூறி விட்டதால் ஒவ்வொருவரும் அண்மையில் படித்து மகிழ்ந்த புத்தகம் / புனைந்த கவிதை / நெகிழ்ந்த நிகழ்வு ஆகிய தலைப்பில் பேச தயாராக வந்தனர். திட்டமிட்ட படி அனைவரும் தங்கள் பங்களிப்பை இனிதே தந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
இதில் எங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கலந்து கொண்டார் என்று பெருமையாக சொல்வதைக் காட்டிலும் இலக்கிய நண்பர்கள் அளித்த பங்களிப்பின் ஒவ்வொரு தலைப்பிற்கும் அது சார்ந்த கூடுதல் தகவல்களை கொடுத்த விதமும், தனது கருத்துகளைத் தான் அலுவலர் என்பது பேச்சின் எந்த இடத்திலும் வெளிப்படாமல் நண்பர்களிடம் பேசுவது போன்றே அவர் கூறிய விதம் எங்களையெல்லாம் நெகிழ வைத்தது என்பது தான் பெருமை.
சந்திப்பில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிறு அன்று சந்திப்பை வைத்து கொள்வதும் என்றும்., அமைப்பிற்கு பெயர் சூட்டுவது பற்றி கலந்துரையாடி சில தலைப்புகளும் இலக்கிய நண்பர்களால் தரப்பட்டன. அடுத்த சந்திப்பின் போது பெயர் சூட்டப்படும்.
அதற்கு வலைத்தளம் மூலம் கிடைத்த இலக்கிய நண்பர்களாகிய நீங்களும் தங்கள் இலக்கிய ரசனைக்கு ஏற்றாற்போல் தலைப்புகள் தரலாம். நீங்கள் கொடுக்கும் தலைப்புகளை அடுத்த சந்திப்பில் கருத்தில் கொள்வோம் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த நன்றிகள்..
புகைப்படம்: நன்றி- கஸ்தூரிரங்கன் (சகோதரர்)
நிகழ்ச்சி குறித்த விரிவான விவரங்களுக்கு சகோதரர் கஸ்தூரிரங்கன் வலைத்தளத்தை சொடுக்கவும்
நல்ல முயற்சி
ReplyDeleteசந்திப்புகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா
Deleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு. இது போன்ற சந்திப்புகள் என்னை மேலும் உயர்த்தும் எனும் நம்பிக்கை உள்ளது. நன்றீங்க ஐயா.
மிகவும் அருமையான முயற்சி. ஆர்வத்துடன் தொடர்ந்து நடத்துங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஐயாவிற்கு நன்றி வருகை தந்து வாழ்த்தியமைக்கு. பெயர் சொல்லவே இல்லை ஐயா!
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்
தமிழ் எங்கள் உயிர் மூச்சு.. என்ற சிந்தனையுடன் பணியை சிறப்பாக தொடங்கியுள்ளீர்கள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்..சகாகோதரன்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரர். வருகை தந்து வாழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடருவோம்.
Deleteவணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள்
நன்றீங்க சகோதரர்.
Deleteசந்தோசமாக இருக்கிறது. இது நல்ல விடயமும் கூட, அதில் தாங்களும்
ReplyDeleteபங்கு பற்றியது சிறப்பே தொடர வாழ்த்துகிறேன்.....!
ஒவ்வொரு பதிவிற்கும் நேர்த்தியான கருத்து தரும் சகோதரியின் சுறுசுறுப்பை நான் கற்றுக் கொள்ள வேண்டியது. மிகுந்த நன்றிகள் சகோதரி..
Deleteநன்றீங்க ஐயா.
ReplyDeleteதகவலுக்கு நன்றி பாண்டியன். - என்ன சுறுசுறுப்பு!, பாராட்டுகள்
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteஇந்த சுறுசுறுப்பு உங்களிடம் இருந்து கற்று கொண்டது தான். சந்திப்பின் முதல் நாள் பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றத்துக்காக சென்னை சென்று வந்த கலைப்பைக் கூட காட்டாமல் சந்திப்பை சிறப்பாக நடத்தி விட்டு எல்லோரும் சென்ற பிறகு கடைசி ஆளாக கலைந்து சென்றீர்கள். இது தான் எங்களைக் கவர்ந்து இழுக்கிறது போலும். வருகை தந்து கருத்தூட்டத்தின் வாயிலாக பாராட்டியமைக்கு அன்பான நன்றிகள்.
அருமையான பதிவு சகோ ...
ReplyDeleteவாழ்த்துக்கள் ...
நான் முடிக்கும் போதே மணி பதினொன்று
உங்களுக்கு ?
இரவு 12 தான். பதிவிட்டு படம் இல்லையே எனும் ஏக்கத்தை நீங்கள் படம் எடுத்தீர்களே என்று எண்ணிக்கொண்டே தங்கள் தளம் பார்த்து பதிவைக்கண்டு மகிழ்ந்தேன் படத்தை எடுத்துக் கொண்டேன். மிகுந்த நன்றிகள் சகோதரர். தங்களின் தன்னம்பிக்கையான வரிகள் தான் என்னை வலைப்பதிவில் இயங்க வைக்கிறது என்பதை மகிழ்வோடு பகிர்கிறேன்.
Deleteசிந்தனை வட்டம் என்று பெயர் சூட்டலாமே ?
ReplyDelete+1
நன்றி சகோதரரே. தங்கள் சிந்தனைக்கு மிக்க நன்றி. அவசியம் அடுத்த கூட்டத்தில் தாங்கள் தெரிவித்த பெயரையும் பரிசீலிப்போம்.
Deleteஎன்ன ஒரு அருமையான விசயம்!! மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது..உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!
ReplyDelete:)
மிகுந்த இடைவேளைக்கு பிறகு தங்களது வருகையைக் கண்டு உளம் மகிழ்கிறேன் சகோதரி. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள். அதை விட தங்களது வருகையே மகிழ்ச்சி..
Deleteமிக்க மகிழ்ச்சி... இது போல் மேலும் தொடர வேண்டும்....
ReplyDeleteநிகழ்ச்சியின் தொகுப்பை அறிய பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி சகோதரர். தங்கள் அன்புக்கும் அவ்வப்போது செய்யும் உதவிக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன். வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது.
Deleteநல்ல முயற்சிதான். தொடருங்கள்.
ReplyDeleteதன்னம்பிக்கையூட்டும் கருத்துரைக்கு நன்றிகள் சகோதரரே. தொடர்வோம்.
Deleteநல்ல பதிவு .வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். சுட்டி பாப்பாக்கள் இருவரும் அசத்தி விட்டார்கள். ரொம்ப மகிழ்ச்சி.
Deleteஆக்கபூர்வமான முயற்சி. இனிதே மேலும் தொடர, அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி சகோதரி. தங்கள் வருகையும் வாழ்த்தும் உற்சாகப்படுத்துகிறது. தொடர்வோம்.
Deleteசிறந்த முயற்சி... வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள் சகோதரர். தொடர்வோம்.
Deleteநிகழ்சியைப் பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! நல்லதொரு முயற்சி!! மேலும் தொடருங்கள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள் சகோதரர். தொடர்வோம்.
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமிக்க நன்றி சகோதரர். தங்களுக்கும், தங்கள் தோழிக்கும், இல்லத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் வாழ்த்துகள்.
Deleteநல்ல முயற்சி
ReplyDeleteசந்திப்புகள் தொடர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்