அரும்புகள் மலரட்டும்: தாய்மார்களே தமிழ்ப் பால் ஊட்டுங்கள்

Saturday, 24 August 2013

தாய்மார்களே தமிழ்ப் பால் ஊட்டுங்கள்

             தமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று முழங்கிய இந்நாட்டில் தமிழ் எங்கே எங்கே என்று தேடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம் பிறக்கும் குழந்தைக்கு இன்றைய தாய்மார்கள் தமிழைச் சொல்லி தருவதில்லை. 

மாற்றாக ஆங்கில மோகத்தின் காரணமாக தங்களின் மழலைச் சொல் மாறாத குழந்தையை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கின்றனர். அக்குழந்தையும் தமிழையும் ஆங்கிலத்தையும் இருசேரக் கேட்டு குழம்பி அரை வேக்காடாகத் திரிவதையும், உளவியல் ரீதியாக அக்குழந்தை பாதிக்கப்படுவதை பெற்றோர்கள் உணராதது வேதனை அளிக்கும் நிகழ்வு அல்லவா? அச்சிறுவன் உயர்வகுப்பிற்கு வரும் போது கூட தமிழில் சரளமாக பேச, படிக்கத் தெரியாமல் திணறுவதை கண்கூடாக காண முடிகிறது. குறிப்பாக தாய்மார்கள் குழந்தைக்கு பாடும் தாலாட்டுப் பாடலைக்கூட ஆங்கிலத்தில் பாடுகின்றனர். நண்டு ஊறுது நரி ஊறுது போன்ற குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட கூடிய பாடல்கள் இன்று ஆங்கிலத்தில்...               அனைவரும் இருக்க எதற்கு தாய்மார்களிடம் வேண்டுகிறேன் என்றால்  உங்களால் மட்டுமே குழந்தையின் பிஞ்சு மனதில் தமிழ்ப் பற்றை விதைக்க முடியும். தமிழைத் தொப்புள் கொடி உறவிற்கு  புகட்ட முடியும் என்பதால்.                                                                                                                                       அரசனையும்,பெரியோரையும், தெய்வத்தையும் பிள்ளைகளாகப் பாவித்து பிள்ளைத்தமிழ் பாடிய நாடு இது. இன்று தான் பெற்ற பிள்ளைக்கே ஆங்கிலத்தில் பிள்ளைப்பாட்டு . அன்னை மொழி அன்னை மொழி என்று பெருமை பேசும் தமிழ் மொழியை அன்னையர்களே புறக்கணிப்பது முறையாகுமா!                                                                                                            தமிழ்த் தாத்தா உ.வே.சா, பரிதிமாற்கலைஞர், முனைவர். கால்டுவெல், ஜி.யு.போப், மறைமலையடிகள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான அறிஞர்களின் அபாரமான ஈடுபாட்டின் காரணமாகவே இன்று நம் மொழி தொடர்ந்து உயிர்பெற்று இயங்குவதையும் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.                                                             ஜி.யு.போப் அவர்களின் கல்லறை வாசகம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் (இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்) . அயல்நாட்டவர்களே தமிழின் அருமையை உணர்ந்திருக்கும் போது இன்றைய தாய்மார்கள் தமிழ் மொழியின் சிறப்பை உணர வேண்டாமா?.               செந்தமிழ்நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! என்று தெரியாமலா பாடி வைத்தான். தமிழ் மொழியின் பெருமையை உணர்ந்து தாய்மார்கள்கள் செயல்பட்டால் தமிழ் தழைத்தோங்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.                                                           தாய்மார்களே தமிழ்ப்பால் ஊட்டுங்கள் என்று கூறி நாம் மட்டும் விலகியிருக்க முடியுமா! தமிழராய் பிறந்த நாம் அனைவருமே நம்மால் முடிந்த வரைக்கும் அன்னை மொழியில் பேசுவோம், தமிழ் மொழியை வளர்ப்போம், அடுத்த தலைமுறைக்கு இதன் பெருமை குறையாமல் எடுத்து செல்வோம் என்று உறுதி கொள்வோம்.. தேனொக்கும் தமிழே! நீ கனி. நான் கிளி. வேறென்ன வேண்டும் இனி? .. நன்றி..

23 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அய்யா அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். தங்களை போன்ற தமிழறிஞர்கள் என் வலைப்பதிவை படித்ததே எனது பாக்கியம். நன்றி அய்யா.

    ReplyDelete
  3. கட்டுரையின் நோக்கம் உயர்வானது. தமிழ்நாட்டுத் தாய் மம்மி என்பதில மகிழ்வதும, தந்தை டாடி என்பதில் மகிழ்வதும் ஒன்றுதான். இருவருக்குமே அநதப் பொறுபபு உணடு. தமிழராய் பிறந்த நாம் அனைவருமே நம்மால் முடிந்த வரைக்கும் அன்னை மொழியில் பேசுவோம், தமிழ் மொழியை வளர்ப்போம் என்னும் உங்கள் கருத்துச் சரியானது.தொடரும் நண்பரகள் (Followers)பட்டியலை வலையில் இடடுவையுங்கள். அன்புடன்,நா.முத்துநிலவன, புதுக்கோட்டை வலை-http://valarumkavithai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. அய்யா கவிஞர் முத்துநிலவன் அவர்களுக்கு அன்பு கலந்த நன்றிகள். தங்களின் ஆலோசனை என்றும் தேவை. நன்றி அய்யா..

      Delete
    2. எனது அழைப்பினை ஏற்று வருகை புரிந்தமைக்கும், கருத்து மற்றும் ஆலோசனை வழங்கியமைக்கும் கவிஞர் ந.முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றிகள் ஆயிரம்.

      Delete
  4. சொன்ன விதம் அருமை... தங்களின் கருத்துரை மூலம் தான் உங்கள் தளம் தெரியும் - மிக்க நன்றி.. அரும்புகள் சிறப்பாக எப்போதும் மலர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. திண்டுக்கல் தனபாலன் அய்யாவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  6. பேசும் போதும், கேட்கும் போதும் சுவையோ சுவை..தமிழ்- தேன்!

    ReplyDelete
  7. சகோதரி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தமிழ்- தேன் - அது தெரியாத சில பெற்றோர்களை எண்ணும் போது தான் சுவாசம் சூடேறுகிறது.

    ReplyDelete
  8. இனிய காலை வணக்கத்துடன் தங்கள் பகுதிக்கு முதன் முறையாக வருகிறேன்.
    தங்கள் தளத்தை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களைப் போன்றோர்களின் அறிமுகம் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றீங்க சகோதரி.

      Delete
  9. http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html

    ReplyDelete
    Replies
    1. எனது வலையை அறிமுகம் செய்திருக்கீங்க. வருகை தராமால் விட்ருவோமா! அறிமுகத்துக்கு அன்பான நன்றிகள் சகோதரி.

      Delete
  10. ஒவ்வொரு வரியும் உணர்வுப்பூர்வமான உண்மை உரைக்கிறது. நீங்கள் சொல்லிய விதமும் அருமை, ரசித்தேன். நன்றி!
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மனம் திறந்த கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க அய்யா.

      Delete
  11. உங்கள் உள்ளத்தில் இருப்பதை அப்படியே வார்த்தைகளில் கொண்டுவந்து விட்டீர்கள். அருமை.
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்த்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா, தங்களது வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க.

      Delete
  12. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க.

      Delete
  13. தமிழராய் பிறந்த நாம் அனைவருமே நம்மால் முடிந்த வரைக்கும் அன்னை மொழியில் பேசுவோம், தமிழ் மொழியை வளர்ப்போம், அடுத்த தலைமுறைக்கு இதன் பெருமை குறையாமல் எடுத்து செல்வோம் என்று உறுதி கொள்வோம்..

    கனிவான மொழிகளுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா, வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      Delete
  14. வணக்கம் சகோதரா.... !

    உங்கள் ஆதங்கத்தை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள்.

    (ஆங்கில மோகம் தானே தமிழ் அழிந்திடக் காரணமாமே
    அறிஞர்கள் கலைஞர்கள் தானே கட்டிக் காக்கணும் முட்டி)

    அதேபோல ஆரம்பித்து விட்டீர்கள் கட்டிக்காக்க. ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்...!
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றீங்க சகோதரி உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும், வருகைக்கும். ஆங்கில மோகத்தில் காரணமாக தமிழ் புறக்கணிக்கப் படுவதைப் பார்ப்பதற்கு வேதனையாகவே இருக்கிறது. ஆதலால் பதிவாக இட்டேன் சகோதரி.

      Delete