அரும்புகள் மலரட்டும்: பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வடநாட்டு தொலைக்காட்சித் தொடர்

Tuesday 19 May 2015

பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வடநாட்டு தொலைக்காட்சித் தொடர்


விடுமுறையில் எனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு சரியாக இரவு 7.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி வைத்தார்கள். தொடர்ச்சியாக நான்கு வடநாட்டு தொலைக்காட்சித் தொடர் ஒளிப்பரப்பானது. முதல் இரண்டு நாள் விளம்பரங்களுக்கு இடையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நானும் அமர்ந்து விளம்பர இடைவெளியில் பார்த்து வந்தேன்.

முதல் இரண்டு தினங்கள் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையில் இப்படியாக நடந்து வந்தது. தொடர் நன்றாக இருந்த்து. மூன்றாவது நாள் நானும் அதில் மூழ்கிப் போனேன். அதில் புதுபுது அர்த்தங்கள் என்று ஒரு தொடர் ஒளிப்பரப்ப்படுகிறது. வழக்கமாக தமிழ் தொலைக்காட்சிகளில் வரும் அழுகைக் காட்சிகள் இல்லை. ஒரு குடும்பத்தில் அடுத்தவரைக் கெடுக்கும் உறுப்பினர் இல்லை. அனைவரும் நல்லவர்களாக இருந்தார்கள்.

குடும்பத்தலைவி தனது குடும்ப உறுப்பினர்கள் தவறு செய்யும் பொழுது ஏதோ ஒரு நிகழ்வின் மூலம் புத்திசாலித்தனமாக அவர்களுக்கு புரிய வைத்து தவறை உணரச் செய்து நல்வழிப்படுத்துகிறார். இது நம் தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் இல்லாத ஒன்று.

மாமியார் மருமகள் சண்டை இத்தொடரில் இல்லை. மருமகள் வந்து மாமியாரை படிக்க ஊக்குவித்து பள்ளிக்கு அனுப்பி வைக்கிறாள். பல தடைகளுக்கு இடையில் கல்வி பெற்று வருகிறாள். எழுத படிக்க தெரிகிறது இப்பொழுது. பெண்கல்வியின் அவசியத்தை வழியுறுத்தும் அழகான காட்சிகள் கல்விக்கான அவசியத்தை எடுக்குரைக்கிறது.

நண்பர்களே நான் சொல்ல வருவது இந்த தொலைக்காட்சித் தொடர்களை நீங்களும் அமர்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல. இத்தொடர்களில் வரும் சில காட்சிகள் நமது தமிழ்நாட்டு கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் இருக்கின்றன. ஆனால் அத்தொடர்களில் வரும் நடிகர்கள் ஒவ்வொருவரும் அற்புதமாக தங்கள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது தமிழ்த் தொடர்களில் அவ்வளவாக இல்லை.

எனது வேண்டுகோள்
வடநாட்டுத் தொடர்களை மொழிமாற்றி ஒளிப்பரப்புவதால் தமிழ் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு நமது ஆதரவும் உண்டு. ஆனால் அவர்களிடம் வேண்டிக் கொள்வது நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடராக்குங்கள். அடுத்தவர்களை எப்படி கெடுப்பது என்பது போன்ற ஐடியாக்களைத் தமிழக இல்லத்தரசிகளுக்கு கொடுக்கும்படியான காட்சிகளை அறவே நீக்குங்கள். எதற்கெடுத்தாலும் அழுகைக்காட்சிகள் தேவைதானா என்பதை யோசியுங்கள்.

மக்களுக்கு தன்னம்பிக்கை தரும்படியான கதாபாத்திரங்களை ஏற்று நடியுங்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டும் நல்ல விசயங்களைத் தங்களது படைப்புகளில் தாருங்கள். இதையெல்லாம் வேண்டுகோளாக சின்னத்திரை கலைஞர்களிடம் கேட்பது எதற்கென்றால் மாலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை தமிழகப் பெண்கள் தங்களோடு தான் வாழ்கிறார்கள்.
இரண்டு கல்யாணம், அடிக்கடி அனைவரும் காவல் நிலையம் சென்று வருவது, வெள்ளிக்கிழமைகளில் சாபமிடும் காட்சிகள், கள்ளத்தொடர்பு, கருவிலே குழந்தையைக் களைப்பது, முக்கியமாக பெண்களை வில்லிகளாக வலம் வர வைப்பது போன்ற காட்சிகள் தவிர்க்கப் பாருங்கள்.

காவல் நிலையம் சென்று வருவது என்பது அவ்வளவு எளிதான காரியமா? இது போன்ற காட்சிகள் தவிர்த்து சமுதாயத்தில் படிப்பினையை ஏற்படுத்தும் நல்ல கதையம்சம் கொண்ட தொடர்களில் தொடர்ந்து நடியுங்கள். சின்னத்திரை கலைஞர்களுக்கு வருங்காலங்களில் நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைப்பது தற்போதைய கலைஞர்களின் கையில் தான் இருக்கிறது.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

8 comments:

  1. வடநாட்டு டீவித் தொடர்கள் தூர்தர்ஷன் காலத்திலேயே மொழிமாற்றம் செய்யப்பட்டு கோலொச்சின! சில சிறப்பாகவும் இருக்கின்றன! நமது தொடர் தயாரிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் முதலில் நன்றிகள். வடநாட்டுத் தொடர் தயாரிப்பாளர்களிடமிருந்து நமது கலைஞர்கள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றே எனக்கும் தோன்றுகிறது..

      Delete
  2. வணக்கம்
    மாமனார் வீட்டில் சமத்துப் பிள்ளையாய் தொ.கா பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்..
    இப்படி ராதிகா சித்தியை வம்பிழுக்க கூடாது..\
    தம +

    ReplyDelete
  3. ஐயோ...! இந்த விளையாட்டிற்கு வரலே...!

    ReplyDelete
  4. Mathu S அவர்களின் comment ஐ like செய்வது எப்படி !

    ReplyDelete
  5. தம்பி வாழ்த்துகள் !! கைக்கு அடக்கமான பிள்ளையாய் இருப்பது எப்படி என்று உங்க மாமாவுக்கு கொஞ்சம் சொல்லித்தரக்கூடாதா:))) jokes apart. பாலிமர் தொலைகாட்சிக்கு என் நட்பு வட்டாரத்தில் ஒரு செல்லப் பெயர் உண்டு.அது"காதல் தொலைக்காட்சி" இப்போ மார்டர்ன் மருமகள்கள் பார்க்கும் தொலைகாட்சியாக அது இருக்கிறது. அந்த வீடு செட் அழகு என்றால், காஸ்ட்யும் எல்லாம் செம grand. மற்றபடி கதையில் தமிழ் நாடகங்கள் அளவு வன்முறை இல்லையே ஒழிய காதல், காதல், காதல் தான். என் தம்பி சரத் சொல்கிறான் " முன்னாடி எல்லாம் நம்ம அத்தை சன் டீ.வீ நாடகம் பார்த்து அழுதுகிட்டே இருக்கும்ல, இப்பலாம் பாலிமர் தான். தொலயிது நெஞ்சு வலி இல்லமா இருக்கே:))))))

    ReplyDelete
  6. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  7. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

    ReplyDelete