இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களில் யாரிடம் சென்று நீங்கள் இறந்தவுடன் சொர்க்கத்துக்கு போக வேண்டுமா? நரகத்துக்கு போக வேண்டுமா? எனும் ஒரு வினாவை முன் வைத்தால் ஏறத்தாழ அனைவரும் விரும்புவது சொர்க்கமாக தான் இருக்கும். சொர்க்கத்தை விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது அவர்கள் மிகச்சரியாக தானே தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று உங்கள் மனதில் ஒரு எண்ணம் ஓடுவதை நான் அறிவேன். இதோ ஒரு சிந்தனைக்காக ஒரு கதை. வாருங்கள் கதையோடு பயணிப்போம்.
ஒரு பெரியவர் மரணம் அடைந்தார் (கதை இப்படி தான் ஆரம்பிக்கனுமா!). விழித்துப் பார்த்தால் அவர் ஒரு விண்வெளி தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் சொர்க்கத்திற்கான பயணச்சீட்டு இருந்தது.
ஒரு பெரியவர் மரணம் அடைந்தார் (கதை இப்படி தான் ஆரம்பிக்கனுமா!). விழித்துப் பார்த்தால் அவர் ஒரு விண்வெளி தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் சொர்க்கத்திற்கான பயணச்சீட்டு இருந்தது.
ரயில் முதல் நிறுத்தத்துக்கு வந்தது. நடைமேடையில் போதிய வெளிச்சம் இல்லை. எண்ணெய் விளக்குகள் மங்கலாக எரிந்து கொண்டிருந்தன. துருப்பிடித்த பெயர்பலகையில் ”சொர்க்கம்” என்ற எழுத்துகள் தேய்ந்து போயிருந்தன. ஆங்காங்கே பலர் வறண்ட தரையில் கிழிந்த உடைகளுடன் புரண்டு கிடந்தனர்.
பெரியவர் திடுக்கிட்டார். ”இதுவா சொர்க்கம்”? இறங்கி, தொடர்வண்டி நிலைய அதிகாரியின் அறைக்கு போனார். அங்கே விலா எலும்புகள் தெரிய படுத்திருந்த சாமியார் ஒருவரிடம் விசாரித்தார். ஆம் இது தான் சொர்க்கம் என்றார் அவர். ஏயேசு, புத்தரெல்லாம் இங்கேயா இருக்கிறார்கள்? ஓ! அவர்கள் எல்லாம் அடுத்த நிறுத்தத்தில் இறங்கினார்கள் என்றார் சாமியார். புறப்பட்டுக் கொண்டிருந்த தொடர்வண்டியில் ஓடிப்போய் ஏறினார் பெரியவர்.
பளபளவென நியான் பலகை “நரகம்” என்று வரவேற்றது. பெரியவர் தயக்கத்துடன் இறங்கினார். பளிங்குக் கற்கள் போடப்பட்ட நடைமேடை, அசுர விளக்குகளின் கீழ் பளபளத்தது. எங்கே பார்த்தாலும் கொண்டாட்டமும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அங்கே ஒரு இடத்தில் புத்தர் தியானத்தில் அமர்ந்திருந்தார். ஏயேசு ஒருபுறம் பலரிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தார். இன்னும் பல யோகிகளும் மகான்களும் அங்கே தென்பட்டனர்.
பெரியவர் அதிந்தார். கோபமாக அங்கிருந்த அதிகாரியின் அறைக்குப் போனார். தொடர்வண்டி நிலையங்களில் பெயர்பலகைகள் தவறுதலாக மாற்றி வைத்திருக்கிறது என புகார் கொடுத்தார். அமர்க்களமாக உடுத்தியிருந்த அதிகாரி சிரித்தார். அதெல்லாம் இல்லை. நீங்கள் முதலில் பார்த்தது சொர்க்கம் தான். இது தான் நரகம். முதலில் இங்கேயும் இருளாகத்தான் இருந்தது. புத்தர், ஏயேசு போன்றவர்கள் இங்கே வந்து இறங்கிய சொற்ப நேரங்களில் எல்லாம் தலைகீழாக மாறிப்போய் விட்டது என்றார்.
என்ன நண்பர்களே! நீங்கள் இப்பவும் சொர்க்கத்துக்கு போக வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். இந்த பூமியில் நாம் எங்கிருந்தாலும் அதை அன்பாலும் கருணையாலும் நிரப்பி, இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்ற முடியும் தானே! யாரோ வசதியாக வடிவமைத்து இருப்பதாக சொல்லப்படும் சொர்க்கத்திற்கான வழித்தடத்தில் நம்மின் கால்தடங்கள் பதிப்பதற்காக ஓடோடுவதில் என்ன பலன் இருக்க போய்கிறது?
நாம் இருக்கும் இடமே சொர்க்கமே மாற்ற முடியுமென்றால் வழித்தடங்கள் கரடு முரடாக இருந்தாலும் பரவாயில்லை நம் முதல் கால் தடத்தைப் பதிப்போம். நிச்சயம் நமது பயணம் வெல்லும். அதற்கான பாதையை செதுக்க கூரிய ஆயுதங்கள், கருவிகள் தேவையில்லை. நமக்கு தேவையானது எல்லாம் கொஞ்சம் அன்பு, கொஞ்சம் கருணை, கொஞ்சம் மனிதாபிமானம். நம்மை சுற்றி இருப்பவர்கள் பட்டினி எனும் போதும், துன்பம் எனும் போதும் ஓடோடி உதவும் கரங்கள் இருக்கும் இடத்திற்கு நரகமெனும் பெயர்பலகை இருந்தாலும் அது சொர்க்கமே!
துடிக்க துடிக்க பெண்களை, குழந்தைகளை வன்கொடுமை செய்யும், விலங்குகளை வதை செய்யும், அதை பலியிடும், அடுத்தவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும், உழைப்பாளர்களின் ரத்தம் உறிஞ்சும், இயற்கை மீது இரக்கம் இல்லாத அவலங்கள் அரங்கேறுகிற இடங்கள் தவிர்த்து அனைத்து இடத்திற்கும் சொர்க்கம் என்று தான் பெயர். அங்கே ஆயிரமாயிரம் புத்தர்களும், ஏயேசுகளும், இன்ன பிற மகான்களும் யோகிகளும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தான் பொருள்.
சொர்க்கம், நரகம் என்று பெயர்ப்பலகைகள் வைப்பதால் மட்டும் அந்த இடங்கள் சொர்க்கமாகவோ நரமாகவோ ஆகி விடுவது இல்லை. சொர்க்கமானலும் அங்கே உயிரற்று கிடக்க முடியும். நரகமானாலும் அதை நம் இருப்பால் சொர்க்கமாக்கி விட முடியும். வாருங்கள் நண்பர்களே சொர்க்கத்திற்கான முதல் அடியை எடுத்து வைப்போம்! நன்றி..
அய்யா,
ReplyDeleteநல்ல கதையுடன் கருத்து விளக்கம் சிறப்புற்றிருந்தது. நன்றி!
வணக்கம் ஐயா
Deleteமுதல் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் பின்னூட்டத்திற்கு முன்பு நாங்கெல்லாம் நிற்கவே முடியாது ஐயா அப்படியொரு செறிவான எழுத்துக்கு சொந்தக்காரர் நீங்கள். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.
மறுபடியும் ஒரு இனிமையான பதிவு.. அருமை..
ReplyDeleteஉங்கள் அன்பிற்கும் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் ஐயா.
Deleteசொர்க்கம் நரகம் பற்றி ஒரு கதையை சொல்லி, நாட்டிற்கு தேவையான ஒரு கருத்தை உங்கள் பாணியில் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் சகோவிற்கு வணக்கம்
Deleteவலைச்சர ஆசிரியர் பணியைச் செவ்வனே செய்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. அதற்கிடையிலும் கருத்துரை வழங்கியமைக்கு நன்றிகள்.
சொர்க்கம் உன் கையில் அப்பனே. ஒரு பெரிய தத்துவத்தை அமைதியாக ஒரு கதை மூலம் எளிமையாக கூறி சென்றது என் இதயத்தை தொட்டது. அருமை அருமை மிக்க மகிழ்ச்சி பாண்டியா !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள் ...!
சகோதரிக்கு வணக்கம்
Deleteதங்கள் அனுபவமும் உற்சாகமூட்டும் கருத்தும் என்னை மென்மேலும் மெருகேற்றும். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரி..
வணக்கம்
ReplyDeleteசிந்தனைக்கு அறிவூட்டும் கதை இறுதியில் நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோதரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம +2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் சகோ
Deleteதம்பி உங்கள் கையைக் கொடுங்கள்! குலுக்கி உங்களுக்கு ஒரு ஷொட்டு வைத்து பாராட்டத் தோன்றுகின்றது! மிகவும் அருமையான ஒரு பதிவு! பகிர்வு!
ReplyDeleteவைணவத்தில் ஒரு வாக்கியம் உண்டு! "இருப்பிடம், வேங்கடம், வைகுண்டம்" என்று! அதே போன்று சைவம் சொல்லுவது "அன்பே சிவம்". எல்லா மதங்களும், சமயங்களும் சொல்லுவது அதைத்தான்!
நாம் இருக்கும் இடமே சொர்க்கம்தான்! அன்பு எனும் சக்தியாலும்,நேர்மறை எண்ணங்களாலும் நாம் இருக்கும் இடத்தை மட்டுமல்ல இந்த உலகையே ஒரு சொர்கமாக மாற்றிட முடியும்!
வாழ்த்துக்கள் தம்பி!
வணக்கம் ஐயா
Deleteதங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. இதோ கை கொடுத்து விட்டேன் என்னை விழ விடாமல் வழி நடத்துவீர்கள் எனும் நம்பிக்கையில். வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் ஐயா.
// நமக்கு தேவையானது எல்லாம் கொஞ்சம் அன்பு, கொஞ்சம் கருணை, கொஞ்சம் மனிதாபிமானம்... //
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா...
வலைச்சித்தரின் வருகை கண்டு உள்ளம் உவகை கொள்கிறது. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரர்
Deleteசித்தார்த்தன் புத்தன் ஆனது போல இப்பதிவு பலருடைய உள்ளங்களில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ReplyDeleteமிகப் பெரிய வார்த்தைகள் ஐயா. இப்பதிவு நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு இல்லாமல் போனாலும் சிறிதளவு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அதுவே மகிழ்ச்சி ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஆழமான கருத்து...
ReplyDeleteஅழகான விளக்க கதை
அன்றாடம் செய்தல் - அவசியம்
அன்புடன் பகிர்ந்தீர்...!
நன்றி.
சகோதரிக்கு வணக்கம்
Deleteஅன்றாடம் செய்தல் அவசியம் ஒற்றை வார்த்தையில் பதிவினைத் தூக்கி நிறுத்தியமைக்கும் அன்பான வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரி
மிகச்சிறப்பானபதிவு! சொர்கமும் நரகமும் நம்மிடம்தான் இருக்கிறது என்பதை அழகாக உணர்த்தியது வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர் வருகை தந்து கருத்திட்டு மகிழும் அன்பு சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
Deleteசொர்க்கத்திற்கு சென்று வந்த திருப்தி ..... இதைப்படித்ததும். பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் இடைவிடாத பணியிலும் வருகை தந்து கருத்திட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி..
சொர்க்கம் நம் கையிலே.நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்/
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் நட்பு அலைபேசி பேசும் அளவிற்கு வளர்ந்தது நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி ஐயா. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..
///இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களில் யாரிடம் சென்று நீங்கள் இறந்தவுடன் சொர்க்கத்துக்கு போக வேண்டுமா? நரகத்துக்கு போக வேண்டுமா? எனும் ஒரு வினாவை முன் வைத்தால் ஏறத்தாழ அனைவரும் விரும்புவது சொர்க்கமாக தான் இருக்கும்.///
ReplyDeleteஆனால் கல்யாணம் ஆன ஆண்களிடம் இந்த கேள்வியை கேட்டு இருந்தால் அவர்கள் சொல்லுவது மனைவி இல்லாத இடத்திற்கு போகத்தான் பிடிக்கும் என்று சொல்லுவார்கள் காரணம் அந்த இடம் தான் அவர்களுக்கு சொர்க்கம்...
இதை நான் சொல்லவில்லை ஊரில் உள்ள பெரியவர்கள் சொன்னது அதனால் இதை நான் சொன்னேன் என்று சொல்லி என் வீட்டில் போட்டு கொடுத்துவிடாதீர்கள்
வணக்கம் சகோதரர்
Deleteஅந்த பயம் இருக்கட்டும். என்ன தான் வெளியில புலியாக இருந்தாலும் வீட்ல எலி தானே நாம!!
///துடிக்க துடிக்க பெண்களை, குழந்தைகளை வன்கொடுமை செய்யும், விலங்குகளை வதை செய்யும், அதை பலியிடும், அடுத்தவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கும், உழைப்பாளர்களின் ரத்தம் உறிஞ்சும், இயற்கை மீது இரக்கம் இல்லாத அவலங்கள் அரங்கேறுகிற இடங்கள் தவிர்த்து அனைத்து இடத்திற்கும் சொர்க்கம் என்று தான் ///
ReplyDeleteஅப்ப நாம் வாழும் இந்த உலகம் நரகம்தான். நரகத்தில்தான் நம் மனித இனம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது அதை மாற்ற புத்தராக காந்தியாக யேசுவாக பலர் இங்கே வந்து நல்ல சிந்தனைகளால் மாற்ற முயற்சிக்கிறார்கள் அப்படி பட்ட நல் சிந்தனை கொண்ட ஆசிரியரில் நீங்கள் ஒருவர் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் சகோ.....நல்ல விதைகள் நல்ல மரத்தைதான் தரும் அது போல உங்களின் நற்சிந்தனைகள் எதிர்காலத்தில் பல நல்ல இதயங்களை உருவாக்கும்
தங்களீன் இந்த கருத்துரைக்கு என்னை பொருத்தமானவானாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன் சகோதரர். அதற்கான தூரம் வெகுதூரம் இருந்தாலும் கால்கள் துவண்டு விடாமல் உங்களைப் போன்றவர்களின் கருத்துரைகள் உற்சாகப்படுத்தும் என்பதால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயார். தங்களின் அன்பான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்..
Deleteஅருமையான கருத்துடன் கூடிய அழகிய விழிப்புணர்வுக் கதை
ReplyDeleteஅருமை நண்பரே
சொர்க்கம் நம் கையில்
வணக்கம் ஐயா
Deleteதங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் நினைவில் ஊஞ்சாலாடுகின்றன.மிக்க நன்றீங்க அக்கா..
தம 5
ReplyDeleteநன்றீங்க ஐயா.
Deleteசிலஇடங்களில் கைவண்டித்தொழிலாளி சந்தோசமாய் வாழ்வதும், கோடீஸ்வரன் நிம்மதியின்றி தவிப்பதும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்புதான் சொர்க்கம்-நரகம் எல்லாம் நம்முள்ளேதான் இருக்கிறது நல்ல ''கருவை'' வைத்து அருமையாக கொண்டு சென்றுள்ளீர்கள் நண்பரே வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.killergee.blogspot.com
வணக்கம் ஐயா
Deleteஎனது எண்ணங்களோடு தங்களின் எண்ணங்களும் ஒத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
வணக்கம்
ReplyDeleteஒரு விண்வெளி தொடர்வண்டியில் பயணம் அருமை வாழ்த்துக்கள்
நல்ல கற்பனை! சொர்க்கத்திற்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்!
ReplyDeleteத.ம.7
ReplyDeleteகதை அப்படிப் போகுதா
கதை நகர்வு நன்று!
visit http://ypvn.0hna.com/
அருமை பாண்டியன்
ReplyDeleteதொடர்க ..
வெளிச்சம் பரவட்டும்
http://www.malartharu.org/2014/05/Amazing-spiderman-2-review.html
அருமையான சிந்தனை..! பெயர்ப் பலகையைப் பார்த்தே மயங்குகிறவர்கள் நாம்..!.வலையுலக இளவரசருக்கு வாழ்த்துக்கள்..!
ReplyDeletevisit www.mahaasundar.blogspot.in
நடையில் மெருகு கூடியிருக்கிறது சகோ.
ReplyDeleteபட்டை போல் மென்மையாய் பயணிக்கிறது கதை. ஆனா கொஞ்சமே கொஞ்சம் டி.டி அண்ணா நெடி வருகிறது. அன்பு இருக்கும் இடம் சுவர்க்கம் எனும் கருத்தை ஆணித்தரமாய் அடித்திருகிறீர்கள் சகோ. என் தம்பிக்கு சுந்தர் அண்ணா கொடுத்த பட்டம் சூப்பர்!! வாழ்த்துகள் சகோ! கண்ணெதிரே கதிர்கள் வளர்வது போல் தம்பி மேலும் வளர்வதை பார்ப்பதே அக்கா விற்கு பெருமகிழ்ச்சி!
மகரிஷிக்கு வணக்கம். பொதுவாக இதுமாதிரி கதைகளை நம்ம மகரிஷிப் பெருமக்கள்தான் அள்ளிவிடுவார்கள். என்றாலும் “க(வி)தை மிகநல்லவேனும் நன்மை கூறும் கட்டுக் கதைகள் அவைதாம்” என்னும் பாரதிவழிதான் நம் வழி. அத்தோடு, சொர்க்கம் நரகம் எனும் கதைகளை அச்சுறுத்தி வழிநடத்தவே நம் பெரியோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அச்சமற்ற நல்ல அறிவுதான் நம் தேவை. நீங்கள் பொன்னியின் செல்வனில் இதே கேள்விக்குக் கல்கி சொல்லும் விளக்கத்தை மறக்கமுடியாது குந்தவை, நந்தினி இருவரும் பேரழகியர். ஆனால் அவர்களின் அழகு இருபெரும் தனித்துவமானது. நரகத்திற்குப் போகும் ஒருவனை அழைத்து, அறிவுரை கூறி திருத்தி அவனை சொர்க்கத்திற்குப் போகச் செய்வாராம் குந்தவை நாச்சியார். நந்தினியோ, நரகத்திற்குப் போகும் ஒருவனை அழைத்து, நயம்பட உரைத்து, நரகத்தையே சொர்க்கமாக நினைத்து மகிழச்சியோடு போகச் செய்துவிடுவாராம் நந்தினி! இது எப்படி இருக்கு... மனம் தொடர்பான விளக்கங்கள் எல்லாம் சூழ்நிலையை மறந்து தரும் விளக்கங்களில்தான் போய் முடியும். மனம் என்பதே அவரவர் சூழலை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதுான். இந்த விளக்கங்களின் நீட்சிதான் ஆன்மா, கடவுள், மதம், எனும் மாபெரும் தத்துவ விவாதங்கள்... இன்றைய மகரிஷிகள் மனத்தைச் சரிசெய்தால் வாழ்வைச் சரிசெய்யலாம் எனும் கதைவிளக்கங்கள்... இது சரியல்ல என்பதோடு, சாக்கடை எனும் சூழலை மாற்றாமல், சிந்தனை எனும் கொசுவை வெறும் விளக்கம் எனும் மருந்தடித்து ஒழிக்க முடியாது என்பதே என் கருத்து..
ReplyDeleteமிக அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !
ReplyDelete//இந்த பூமியில் நாம் எங்கிருந்தாலும் அதை அன்பாலும் கருணையாலும் நிரப்பி, இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்ற முடியும் தானே!//
ReplyDeleteஅற்புதமான உண்மை!!
வணக்கம் தோழரே தங்களின் கதை அருமை.. குழந்தைகளுக்கு சொல்லியது போல் இருக்கிறது.. நானும் ஒரு குழந்தையாகி வாசித்தேன். இதை என் குழந்தைகளுக்கும் (பள்ளியில் உள்ள குழந்தைகள்) அவசியம் சொல்லுவேன். நன்றி..தொடர்க..தொடர்வேன்
ReplyDeleteஅருமையான கதை தோழரே..
ReplyDelete