அரும்புகள் மலரட்டும்: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்

Monday, 10 March 2014

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்- அறிவோம்

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அது வருடந்தோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களிக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அந்த தீர்மானம். பின்னர் அவ்வாண்டு டிசம்பர் 17 ஆம் ஐ.நா.பொதுக்குழு மேற்கண்ட நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அறிவித்தது.


அந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும். 1960 காலகட்டம் அது. டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ (Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் எண்ணிலடங்கா சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி வரை தொடரும்.

பெண்களுக்கெதிரான வன்முறை அவர்களின் உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல் ஆகும் இதில் பல வன்முறைகள் பெண் என்ற காரணத்தால் சமூகம் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துவவைகளே அதிகமானவை. குறிப்பாக வீட்டு வன்முறைகள், பாலியல்பலத்காரம், பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகம் என்பன சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்டவையாகவே இன்னமும் நமது சமூகத்தில் காணப்படுகின்றது. திராவகம் வீசுதல், சீதனக்கொடுமைகள், வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்,கர்ப்பிணிகளை கொலை செய்தல்,பெண் கடத்தல் சம்பவங்கள், கௌரவ கொலைகள், வேலைத்தளங்களில் வன்முறைகள், பெண் சிசு கொலை இப்படியாக இன்னும் பல. இதன் காரணமாக இன்றைய பெண்கள் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. இதைத் தான் “பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும் பொழுது உலகில் நாகரீகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை” என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவேண்டுமாயின் பெண்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள படிமம் மாற்றியமைக்கப்படவேண்டும். அம்மாற்றம் ஒவ்வொரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பாங்கில் உள்ளாந்த மனமாற்றம் வரவேண்டும். அப்போது தான் நிலையான அபிவிருத்திக்கு சாத்தியாமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும். எனவே பெண்கள் அமைப்புக்கள் சமூக மட்டத்தில் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் வன்முறையாளர்களைச் சமூகம் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் தண்டனை வழங்க சுதந்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.

இன்று பெண்களுக்கெதிராக வன்முறைகளை எதிர்ப்போராக ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். அவர்களிடம் உங்களுக்காக போராடும் உரிமையை விட்டு விட்டால் அவர்கள் களப்போராளிகளாக இல்லாமல் பெண்ணியவாதிகள் என்ற போர்வையிலேயே தன் சுய பிம்பத்தை மறைத்து கொள்வார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

முதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள்? பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த, தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே!


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

31 comments:

  1. நல்ல ஆழமான கட்டுரை சகோ..
    அசத்தல் தரவுகள்
    நல்ல தொகுப்பு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோவின் அதிவேக கருத்துரை எனக்கு உற்சாகம் தரவல்லது என்பதால் தங்களுக்கு நன்றிகள். படித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல..

      Delete
  2. மிக அருமையான பதிவு! பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவேண்டுமாயின் பெண்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள படிமம் மாற்றியமைக்கப்படவேண்டும்.அம்மாற்றம் ஒவ்வொரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பாங்கில் உள்ளாந்த மனமாற்றம் வரவேண்டும்.அப்போது தான் நிலையான அபிவிருத்திக்கு சாத்தியாமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும் // நல்ல கருத்து!


    இறுதி பாரா பஞ்ச்!

    இந்த தினத்தைப் பற்றி எங்கள் வலப் பூவிலும் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்துள்ளோம்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா வணக்கம்
      தங்கள் கருத்துரை வழக்கம் போல் என்னை ஊக்குவிக்கிறது. படித்து ரசித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.. தொடர்ந்து இணைந்திருப்போம் ஐயா..

      Delete
  3. இது எனக்கு ஒரு புதிய செய்தி.
    இப்படி ஒரு தினம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால், நான் இந்த பதிவை "பெண்ணியத்தைக் காத்து - உண்மையான சுதந்திரக்காற்றை சுவாசிப்போம் " அன்றைய தினத்துலேயே எழுதியிருப்பேனே.

    இப்படி ஒரு தினம் இருக்கிறது என்று தெரியப்படுத்தியமைக்கு நன்றி சகோதரா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்.
      நானும் இன்று தான் படித்து அறிந்து கொண்டேன். இச்செய்தி அனைவரிடத்தும் செல்ல வேண்டும் என்பதால் பதிவாக இட்டேன். தங்களுக்கு புதிய செய்தியை அறிவித்ததில் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி..

      Delete
  4. பல வன்முறைகள் பெண் என்ற காரணத்தால் சமூகம் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துவவைகளே அதிகமானவை.
    >>
    நிஜம்தான் சகோ!

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      பெண்கள் சார்ந்த பதிவுக்கு பாங்கோடு வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள்..

      Delete

  5. தங்கள் சிறந்த எண்ணங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என் எண்ணங்கள் பற்றிய தங்கள் எண்ணங்களுக்கு நன்றிகள். வருகைக்கும் நன்றிகள் ஐயா..

      Delete
  6. சமூக அக்கறையுள்ள பதிவு. அதன் பின்னணி சம்பவக் கதையை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்.
      தங்களது வலைத்தளம் படித்தேன். கருத்தாடல் கண்டு பிரமித்தேன். நீங்கள் நீலவண்ணன் என்று அறியாமல் கருத்திட்டும் வந்து விட்டேன். எனது தளத்திற்கு தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நன்றி சகோதரர்..

      Delete
  7. உங்களை போன்றோரின் குரல் நல்ல சமூக மாற்றத்திற்கு அடித்தளம்... பெண் வன்முறை பற்றி சில பேரிடம் கருத்துரை கேட்டு இம்மாத தங்க மங்கையில் வெளி வர செய்திருக்கிறேன்.. சக வலைபதிவாளரான பெண்ணாகிய ஜோஸப்பின்( http://josephinetalks.blogspot.com) அவர்களின் கட்டுரை மிகவும் ஆழம். நல்ல சிந்தனையாளரான அவரின் கட்டுரையை தங்க மங்கை மாத இதழின் pdf புத்தகத்திலும் படிக்கலாம். thangamangai.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      தங்கள் கருத்துக்கும் தகவலுக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள். பாரதி கண்ட புதுமை பெண்ணாய் புறப்பட்டு தனது எழுத்துகளாலும் எண்ணங்களாலும் புது வரலாறு படைத்து வரும் சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  8. இப்படி ஒரு நாளிருப்பதையும் அதன் பின்னணியையும் அறிந்துகொண்டேன், நன்றி சகோ.
    அருமையான பதிவு,,ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் பெண்கள் போராட முன்வரவேண்டும்..ஏதாவது ஓரிடத்தில் பயம் தடுத்துவிடுகிறது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்றுதான்..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      சமூகம் மாறும் போது பெண்களுக்கான அச்சம் தகர்த்தெரியப்படும். அப்படியான இரு சமூக மாற்றம் தான் நமக்கு வேண்டும். எப்பொழுது என்பது கேள்விக்குறியே!!.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..

      Delete
  9. அருமையான தகவல் சகோதரரே... நன்றி... மௌனத்தையும், பயத்தையும் இனிமேல் உடைத்து முன்னேறப் பாதையும் இனியாவது செல்ல வேண்டும்... ஆழ்ந்த நல்ல கல்வியால் அனைத்தும் சாத்தியம்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      நல்ல கல்வியும் வழிகாட்டுதலும் நாளைய இளைய சமுதாயத்தைச் செம்மை படுத்தும் என்பது உண்மை தான். தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரரே..

      Delete
  10. நன்றி தோழர் பாண்டியன் , நல்ல தொகுப்பு. புதிய புரட்சியைத் தூண்டும் சக்தி மிக்க தகவல்களை பகிர்ந்தமைக்கு என் வந்தனம் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பா!
      உன் வருகையும் கருத்தும் ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறது. நம் நட்போடு சிந்தனைகளையும் பகிர்ந்து என்றும் தொடர்வோம். நன்றி நண்பா..

      Delete
  11. மிர்பல் சகோதரிகள் குறித்து அறிந்துகொண்டேன்! விரிவான விளக்கமான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரருக்கு வணக்கம்
      தங்களின் கருத்தும் வருகையும் என்னை உற்சாகப்படுத்துகிறது. தொடர்வோம். நன்றி சகோதரர்..

      Delete
  12. சரியாய் சொன்னீர்கள் சகோ!
    மேடை கிடைத்தோர் எல்லாம் முழங்கி கொண்டிருக்க உண்மையான களப்போராளியை பெண்கள் கண்டுகொள்ளவேண்டும். தனக்காக தானே குரல்கொடுக்காவிட்டால் எப்படி ?
    இந்த கட்டுரைக்கான முனைப்பும், கருத்தாக்கமும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது !!
    நாளைய நம்பிக்கை ! வாழ்த்துக்கள் சகோ!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      என் மீதான உங்கள் நம்பிக்கைக்கு எனது நன்றிகள் சகோதரி. வழக்கம் போல் தங்கள் கருத்து எனக்கு தன்னம்பிக்கை நவிழ்கிறது. நன்றி சகோதரி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  13. இப்படிப்பட்ட தினங்கள் கொண்டாடப் படுவதில்லை ,காதலர் தினம் ,அட்சய திருதியை போன்றவை கொண்டாடப் படுவது சாபக் கேடுதான் !
    த ம 6

    ReplyDelete
  14. நல்ல கட்டுரை...
    இது போன்ற தினங்களைக் கொண்டாட நமக்கு எங்கே நேரமிருக்கிறது.

    ReplyDelete
  15. அருமையான தகவல்கள் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  16. என்ன தவம் செய்தாரோ அம்மா இப்படி ஒரு பிள்ளை ம்....ம் எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. பெண்களுக்காக தங்கள் வேதனைக் குரல் கேட்டு பெருமையே.
    பெண்கள் பல வழிகளில் வன்முறைக்குட்படுத்தப் படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மை. ஆனால் சமூகம் திருந்தாமல் அவர்கள் வாய் திறப்பது எப்படி. அப்படியே சொல்ல முன்வந்தாலும் விழுந்தவனை மாடேறி உளக்கியது போல் ஆகுமே ஒழிய தீர்வு கிடைக்கும் என்பது சந்தேகம் தான். திரைப்படங்களை பார்த்து பார்த்து எனக்கு அப்படித்தான் தோன்றுகிறதோ தெரியவில்லை. சகோதரா அரசியல் வாதிகளும் போலிசும் உடந்தையாய் இருப்பதாலுமே என்றே நினைக்கிறன்....... நல்ல பதிவு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட கொடுமைகளுக்குபலகாரணங்கள் இருக்கலாம் ஆனால்சில பெண்களும், இதற்க்கு காரணமாக இருக்கிறார்கள் அவர்களும், மாறவேண்டும் பாதிக்கப்படும் பெண்கள்வாய்திறந்து பேசவேண்டும், இவைமாறினால் மனிதனின் நடத்தை மாறும். மனபாங்குமாறும்.!!! நன்றி சகோ, அருமையானபகிர்வு.

      Delete
  17. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...

    ReplyDelete
  18. நல்ல பதிவு
    வகுப்பறைக்கு பயன்படும் விதத்தில் இருக்கிறது...
    பயன்படுத்திவிட்டு சொல்கிறேன்.

    ReplyDelete