Friday, 26 June 2015

லலித் மோடி விவகாரம் - நாங்க நம்பிட்டோம்


சுஷ்மா ஸ்வராஜ்-வசுந்தரா ராஜே-லலித் மோடி விவகாரம் இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் லலித் மோடி, லண்டனில் பிரியங்கா காந்தியையும், ராபர்ட் வதேராவையும் தனித்தனியாக சந்தித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து பாஜக-வும் காங்கிரஸும் மீண்டும் வார்த்தைப் போரில் இறங்கியுள்ளன. இந்த ட்விட்டர் பதிவுகளை அடுத்து இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்த எதிர்க்கட்சியோ, “பொய்களின் மூலம் சிறிய மோடி பெரிய மோடிக்கு உதவும் விவகாரம் இது” என்று சாடியுள்ளது.

"தேடப்படும் குற்றவாளியான லலித் மோடி-பிரதமர் மோடி-பா.ஜனதா தலைவர் அமித் ஷா-சுஷ்மா சுவராஜ்-வசுந்தரா ராஜே ஆகியோருக்கு இடையே ஆழமான தொடர்பு உள்ளது. அந்தத் தொடர்பை இப்போதும் தொடர்வதுதான் பெரும் ஆபத்து என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்-வசுந்தரா ராஜே-லலித் மோடி விவகாரம் கசிந்து பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் பாஜகவைக் காப்பாற்று முயற்சியில் லலித் இறங்கியிருக்காரா எனும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் குடியரசு தலைவரின் செயலருக்கும் நேபாள ஹாவாலா மன்னனுக்கு தொடர்பு என்று ஒரு குண்டைப் போட்டு விட்டார். இப்போது காந்தி குடும்பத்தைச் சந்தித்ததில் மகிழ்ச்சி எனும் ட்விட்டைத் தட்டி விட்டிருக்கிறார்.

சாமனியனின் கேள்வி
#  இவ்வளவு நடந்தும் வெட்கமே இல்லாம இன்னும் லலித் மோடியை இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என்று ஏன் அழைக்க வேண்டும்? இந்தியாவிற்கு நன்கறிந்த அரசியல்வாதிகளின் பங்காளி என்று இன்று முதல் பெருமையுடன் அழைத்துக் கொள்ளலாமே!

# இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிக்கு இந்திய வெளியுறவு துறை அமைச்சரே உதவியிருக்கிறார் என்றால் தேர்ந்தெடுத்த மக்களை எல்லாம் துட்சமாக எண்ணியிருக்கிறார் என்று தானே அர்த்தம். மனிதாபிமானம் என்று எடுத்துக் கொண்டாலும் தனது மனிதாபிமானத்தை தனது குடும்பத்தைக் காக்க வெளிநாடுகளில் வேலை செய்யும் ஏழை தொழிலாளிகளின் மீது காட்டலாமே!

# வேலைக்காக சென்று அங்கே இறக்க நேரிட்ட தொழிலாளிகளின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர கதறும் ஏழை முகங்கள் அரசியல்வாதிகளின் கண்களில் படாமல் இருப்பது விந்தையான ஒன்று தான். அவர்களைக் கொண்டு வர நிறைய நடைமுறைகள் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இவர்களால் எப்படி எளிதாக பணமுதலைகளுக்கு உதவிட முடிகிறது எனும் கேள்வியும் எழ தான் செய்கிறது.

# பிக்பாக்கெட் திருடனுக்கு கிடைக்கின்ற  தண்டனை கூட கோடி கோடியாக கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு கிடைக்காத நிலை இனியும் தொடர்வது இந்தியாவின் சாபக்கேடு. இவர்களுக்கு பின்புலமாக அரசியல் தலைகள் காலங்காலமாக இருப்பது இந்தியாவிற்கான வெட்கக்கேடு.

# சட்டங்கள் எல்லாம் பணம் படைத்தவர்களுக்கு நாணலாக வளைவதும், ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து அவர்களிடம் சகாயம் பெறுவதும் தொடருமானால் இந்தியா விரைவில் வல்லரசாகி விடும் எனும் கனவு பகல் கனவாகவே தொடரும்..


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

8 comments:

 1. ம்..ம்..
  பகிர்வுக்கு நன்றி..

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றிங்க சகோ

   Delete
 2. நானும் நம்பிவிட்டேன் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வாக்குக்கும் நன்றிங்க அய்யா

   Delete
 3. அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் சகஜமான ஒன்று! நாம்தான் அடித்துக் கொள்வோம்! பொங்கி எழுவோம்! அவர்கள் அணைத்துக் கொள்வார்கள்!

  ReplyDelete
  Replies
  1. எல்லாமே இப்படியாக ஆன பிறகு நாம் கத்தி கூப்பாட்டு போட்டால் நம்மை இந்த சமூகம் மனநிலை பாதிக்கப்பட்டவனாக எண்ணி விடுமோ என்ற ஐயம் கூட துளிர்க்கிறது அவ்வப்போது.

   Delete
 4. நல்ல நறுக்கு நறுக்குன்னு தான் கேட்டுருகீங்க சகோ! ஆனா அவங்க "அரசியல இதெல்லாம் சாதரணமப்பா"னு சொல்றாங்களாம்:(((

  ReplyDelete
  Replies
  1. அப்படி தான் எல்லோரும் சொல்லிகிறாங்க அக்கா. நம்ம மனசு தான் அரசியல் தந்திரங்களைப் புரிஞ்சுக்க அல்லது ஏத்துக்க மறுகிறதோ. கருத்துக்கும் அன்பான நன்றிகள் அக்கா.

   Delete