Friday, 10 April 2015

புதிய விடியல்


கருங்கூந்தல் விரித்து உலகை மறைத்த
இரவுப்பெண் அள்ளி முடிந்து கொண்டாள்
சமுத்திரத்தில் குளித்து மஞ்சலாடை  உடுத்தி 
மாப்பிள்ளை போல் மெல்லிய புன்னகையோடு
புறப்பட்டு விட்டான் கதிரவன்..

பூவோடு காதல் கொண்ட காற்றுக்கு 
செடி தலையசைத்து ஏதோ சொல்ல
மனிதனின் நாசி தொட்டு நலம் விசாரித்து
நுரையீரல் தீண்டி உதிரத்தை உசுப்பி
விடுகிறது தென்றல் காற்று..

பசுமை படர்ந்த புல்வெளி மீது
பனித்துளி காதல் கொண்டு ஒட்டிக் கொள்ள
கதிரவன் முகம்பார்த்து பட்டாம்பூச்சி சிறகடிக்க
குயில்கள் எல்லாம்  மன்மத இசையெழுப்ப
மயங்கிய மரங்கள்  நடமாடுகிறது..

கூட்டு கதகதப்பை விட்டு வெளியேறிய
பறவைக்கூட்டம் அனைத்தும் வலசை போக 
சேவல் விடியலை முந்தி சொல்ல
மங்கையர் கூட்டமெல்லாம் கோலம் போட
தெருக்கள் ஒப்பனை  செய்து கொண்டது...

பஞ்சணையில் படுத்துறங்கும் நண்பா! ஊரே
விழித்த பின்பும் உறக்கம் உனக்கெதுக்கு?
கடமையைப் பகுத்துணர்ந்து படக்கென்று துயிலெழு
வெள்ளைக் காகிதமாய் புலர்ந்திருக்கு பொழுது
விரைந்து புறப்பட்டு உனது பெயரெழுதிடு...கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

17 comments:

 1. வணக்கம்
  சகோ..

  ஒவ்வொரு வரிகளும் மிக அற்புதமாக உள்ளது பகிர்வுக்கு நன்றி.த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. இயற்கை வருணனை அருமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அன்புள்ள அய்யா,

  புதிய விடியல் பூவோடு காதல்
  ஊரே விளித்த பின்பும் உறக்கம் உனக்கெதுக்கு?
  துயிலெழு உனது பெயரெழுதிடு...

  சரித்திரத்தின் பக்கங்கள் காலியாகவே கிடக்கின்றன...!

  அருமையான கவிதை!

  நன்றி.
  த.ம. 2.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா வருகைக்கும் வாக்குக்கும்

   Delete
 4. விரைந்து புறப்படுவோம்
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அய்யா வருகைக்கும் வாக்குக்கும்

   Delete
 5. மிகவும் ரசித்தேன்... வாழ்த்தக்கள் சகோதரா...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோதரர்

   Delete
 6. நம்பிக்கையூட்டும் வரிகள்...வாழ்க்கை ரசிப்பவர்களுக்குரியது....

  ReplyDelete
 7. வரலாறு படைக்க ஊக்கம் தரும் நேர்மறைக் கவிதையை ரசித்தேன்.

  ReplyDelete
 8. அருமையான கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
 9. அன்பு நண்பரே!
  வணக்கம்!
  மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக!

  நித்திரையில் கண்ட கனவு
  சித்திரையில் பலிக்க வேண்டும்!
  முத்திரைபெறும் முழு ஆற்றல்
  முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


  மன்மத ஆண்டு மனதில்
  மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
  மங்கலத் திருநாள் வாழ்வில்!
  மாண்பினை சூட வேண்டும்!

  தொல்லை தரும் இன்னல்கள்
  தொலைதூரம் செல்ல வேண்டும்
  நிலையான செல்வம் யாவும்
  கலையாக செழித்தல் வேண்டும்!

  பொங்குக தமிழ் ஓசை
  தங்குக தரணி எங்கும்!
  சீர்மிகு சித்திரைத் திருநாளே!
  சிறப்புடன் வருக! வருகவே!

  புதுவை வேலு

  ReplyDelete
 10. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 11. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (15/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு: http://gopu1949.blogspot.in/


  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete