அரும்புகள் மலரட்டும்: மரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்!

Wednesday 7 January 2015

மரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்!

வலை உறவுகளுக்கு வணக்கம்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
மழைத்துளி உயிர்த்துளி
கண்ணை இமை காக்கும் மண்ணை மழை காக்கும்
து போன்ற வாசகங்களை ஆண்டாண்டு காலமாக கண்டிருக்கிறோம் ஆனாலும் மரம் வளர்ந்த பாடில்லை மழை வந்த பாடில்லை காரணம் யாருக்கோ சொல்வதாக மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மரம் வளர்ப்பின் பயன்களை முழுமையாக உணரத் தவறியதன் விளைவு உலக வெப்பமயமாதல். உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானதாக உலக வெப்பமாதல் இருக்கிறது

மரம் உயிர் கொடுக்கும், கனி கொடுக்கும், நிழல் கொடுக்கும் என்பதால் என்னவோ இவர்கள் வளர்க்க யோசிக்கிறார்கள் போலும். ஒருவேளை வைபையை இலவசமாக கொடுக்குமென்றால் ஒவ்வொருவரும் வரிந்து கொண்டு மரம் நட்டிருப்பார்கள். கூடவே இருந்து உரமிட்டு வளர்த்திருப்பார்கள்.

இன்றைக்கு ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மரத்திற்கு சொந்தக்காரர்களாக இருந்திருப்பார்கள். இரண்டு போன் வைத்திருப்பவர்கள் இரண்டு மரம் என நீண்டு கொண்டிருக்கும். என்ன செய்வது?  மரம் வெறும் பிராண வாயுவைத் தானே தருகிறது.

இவ்வாறாக மரம் வளர்ப்பதில் காட்டும் அலட்சியம் பெரும் பாதிப்பை நமக்கும் நமக்கடுத்த தலைமுறைகளுக்கும் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. நம்மால் முடிந்த வரை மரம் வளர்ப்போம், மரம் வளர்ப்பதன் அவசியத்தை அனைவருக்கும் விழிப்புணர்வாக எடுத்துரைப்போம்.

நான் எழுதிய மரம் வளர்ப்பு பற்றிய சிறு வரிகள்

வெயிலுக்கு நிழல் தந்தேன் - உலகம்
தழைக்க மழை தந்தேன்
குழந்தைக்கு தொட்டில் தந்தேன்
முதுமைக்கு கட்டில் தந்தேன்

நான் காயப்பட்டும் வருந்தாது
மருந்து பொருட்கள் பல ஈந்தேன்
உதிரும் சருகில் கூட உரம் தந்தேன்
வகைவகையாய் கனி தந்தேன்

என்னை அங்கமங்காய் பிளக்கும்
கோடரிக்கே பிடி தந்தேன்
ஆனாலும்  உங்களுக்கு  தான் 
பிடிபடவில்லை எனது பயன்!

அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்
உருமாறி  வருமானம் நானீந்தேன்
நீ குடியிருக்க  எனதுடலை
தானமாய் நான் தந்தேன்

என்னை வேரறுத்தால் வருங்கால
சந்தததியின் எதிர்காலம் என்னவாகும்?
ஆதலால் இன்றே கன்றொன்று
நட்டுவிடு  நலமாகும் வருங்காலம்..

குறிப்பு:
தலைப்பைப் பார்த்து வருகை ஏமாற்றம் ஏற்பட்டிருந்தால் அதற்கு நானே பொறுப்பு. நண்பர்கள் மன்னிக்கவும். அண்மையில் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் அனுப்பிய புகைப்படத்தில் அமைந்த தகவலைத் தான் எழுத்தாக வடித்துள்ளேன். இது என்னுடைய சொந்த கற்பனை அல்ல. அனைவருக்கும் நன்றி.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

15 comments:

  1. எப்படியிருந்தாலும் நல்ல விஷயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழ்க இயற்கை ஆர்வலர்!.. வளர்க இயற்கைச் சூழல்!..

    ReplyDelete
  2. வணக்கம்
    அருமமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் அத்தோடு எழுதிய கவி நன்று பகிர்வுக்கு நன்றி த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கவிதை ஆழ்ந்த அர்த்தங்களுடன் அழகாய் மிளிகிறது!

    ReplyDelete
  4. வரிகள் அருமை...

    தலைப்பு உண்மையானாலும், ம்ஹீம்...!

    ReplyDelete
  5. இதே போன்ற கருத்தில் நானும் முன்பொரு கவிதை வடித்தேன்! சிறப்பான கவிதை! சிறப்பான பதிவு!

    ReplyDelete
  6. என்னை அங்கமங்காய் பிளக்கும்
    கோடரிக்கே பிடி தந்தேன்
    ஆனாலும் உங்களுக்கு தான்
    பிடிபடவில்லை எனது பயன்!
    ஆஹா அருமை அருமை! எத்தனை உண்மையை எடுத்துரைத்திக்ருகிறீர்கள் இனியாவது விழிப்போம். வாழ்த்துக்கள் பாண்டியா...!

    ReplyDelete


  7. **அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்
    உருமாறி வருமானம் நானீந்தேன்
    நீ குடியிருக்க எனதுடலை
    தானமாய் நான் தந்தேன்**
    என படித்துக்கொண்டே வரும் போது வைரமுத்துவின்

    மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!!
    மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!! வரிகள் நினைவுக்கு வருகின்றன. அருமை சகோ:)

    ReplyDelete
  8. இதுபோன்ற சமூகப்பிரக்ஞையே இக்காலகட்டத்தின் தேவையாகும். தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. நாங்களும் உங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறோம்.

    ReplyDelete
  9. சரிதான்.. இலவசமாக இன்றைய தேவையை கொடுத்து, மறையும், அழிக்கப்படும் இயற்கை காக்க சொல்வது பயன் கொடுக்கும் தான்...

    ReplyDelete
  10. வாழவைக்கும் மரம்/

    ReplyDelete
  11. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்


    தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
    http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
    படித்துப் பாருங்களேன்!

    ReplyDelete
  12. அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்
    உருமாறி வருமானம் நானீந்தேன்
    நீ குடியிருக்க எனதுடலை
    தானமாய் நான் தந்தேன்

    என்னை வேரறுத்தால் வருங்கால
    சந்தததியின் எதிர்காலம் என்னவாகும்?
    ஆதலால் இன்றே கன்றொன்று
    நட்டுவிடு நலமாகும் வருங்காலம்..//

    அருமை அருமை அருமையான வரிகள்! தலைப்புக்கேற்ற வாரு நல்லது நடந்தால் சரி.அப்படியாவது நடக்கட்டுமே வளர்க்கபடட்டுமே....

    ReplyDelete
  13. இது நடக்குமானால் நன்று...

    ReplyDelete