இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி கையினால் விருது
வெண்கலத்தில், அரசமரத்தின் இலை வடிவமும் அதில் ஒரு பக்கம் பிளாட்டினத்தாலான சூரியனும் மறு பக்கம் சிங்கமும் பொறிக்கப்பட்டு, 'பாரத ரத்னா' என்று பழங்கால தேவநகரி மொழியில் எழுதப்பட்டு இருக்கும். வெள்ளை ரிப்பனில் இணைக்கப்பட்ட இந்த விருது, ஜனாதிபதியால் அணிவிக்கப்படும்.
தமிழர்களுக்கு பெருமை
நாடு சுதந்திரமடைந்த பின்பு, 1954ம் ஆண்டில் இந்த விருது ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் முதன்முதலாக இந்த பாரத ரத்னா விருதை ராஜாஜி, டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.வி.ராமன் ஆகியோர் பெற்றனர். இந்த மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விசயம்.
நேதாஜிக்கு பாரத ரத்னா
நேதாஜிக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது திரும்ப பெறப்பட்டது. இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் இந்த விருதைப் பெற மறுத்தார். தானே தேர்வுக் குழுவில் இருப்பதால், விருதை மறுத்துவிட்டார். எனினும் 1992-ம் வருடம், அவரின் மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்பட்டது.
நாடு கடந்த விருது
இந்தியர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று விதிமுறை கிடையாது. எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார் கான், நெல்சன் மண்டேலா ஆகியோர் பாரத ரத்னா விருதுபெற்ற வெளிநாட்டவர்கள்.
பெண்களுக்கு பெருமை
இந்திரா காந்தி, லதா மங்கேஷ்கர் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பெண்களில் இந்த விருதைப் பெற்றவர்கள். வெளிநாட்டில் பிறந்து, இந்தியப் பிரஜையான அன்னை தெரசா இந்த விருதைப் பெற்றார்.
சச்சின் டெண்டுல்கர்
கடந்த ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்கும், சி.என்.ஆர்.ராவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அது பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
இதுவரை 43 பேருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் எம்.ஜி.ஆர். உள்பட 11 பேர் மறைந்த பிறகு அளிக்கப்பட்டது.
இளம் வயதில் விருது
உயிருடன் இருக்கும்போது விருது பெற்றவர்களில் மிக மூத்தவர் டி.கே.கார்வே. தமது 100-வது வயதில் பெற்றார். இளம் வயதில் பெறுபவர், சச்சின் டெண்டுல்கர் (40 வயது). விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கலாம் என இரண்டு வருடங்களுக்கு முன்புதான் விதிமுறை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பாரதரத்னா விருது யாருக்கு வழங்கப்படும் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
5 பதக்கங்கள் தயார்
இந்த வார தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியிடம் பாரத ரத்னா விருதுக்கு 5 பதக்கங்களை தயாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி நாணய தயாரிப்பு பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடல் பிகாரி வாஜ்பாய்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென பாஜ நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. எனவே, இந்த ஆண்டில் வாஜ்பாய்க்கு இந்த விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்ஷிராமுக்கு விருது
அதே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம் என்றும் பரபரப்பான செய்திகள் வெளியாகியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
நேதஜிக்கு பாரதரத்னா
சுதந்திரத்துக்கு முன்பே இந்திய ராணுவத்தை கட்டிய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
ஓவியர் ரவிவர்மா
பிரபல ஓவியர் ரவிவர்மா, இந்து புராணங்களை வெளியிட்ட கீதா பதிப்பகத்தை உருவாக்கிய அனுமன் பிரசாத் போடர் ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. வரும் 15ம் தேதி சுதந்திர தினத்துக்கு முன்பாக பாரத ரத்னா விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு:
நேதாஜிக்கு பாரதரத்னா விருது கொடுப்பது இருக்கட்டும் அவர் என்ன ஆனார் என்பதைத் தெரிவியுங்கள் என்று அவரது குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
நன்றி: ஒன் இந்தியா செய்தித்தளம்
விருதாளர்களைப்போல் முன்னேற நாமும் முயலாமா?
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பின்னர் வலைப்பக்கம் வந்த மணவை அ.பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.2
நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே....
ReplyDeleteபாரத ரத்னா விருது பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநம் நாட்டில் பாரதரத்னா பெரும்பாலும் இறந்தவருக்குத்தான் கொடுப்பது வழக்கம்!!!!?? இருக்கும் போது ஏன் அந்தக் கௌரவம் கொடுக்கப்படுவதில்லை என்பது மர்மமே!
அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு (அதுவும் தற்போது) கொடுப்பதில் அர்த்தம் இல்லை. விருதுகள் எப்படிப்பட்டதாயினும் அவை மதிப்பை இழந்துவருகின்றன என்பதுதான் உண்மை.
பாரத ரத்னா விருதினைப் பற்றிய - பயனுள்ள பதிவு.. வாழ்க நலம்..
ReplyDeleteபாரத ரத்னா விருது ஒரு காலத்தில் மிகவும் கவுரவும் மிக்கதாய் கருதப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவை ஆட்சியாளர்களின் விருபத்துக்கு ஏற்ப வழங்கபடுவதாய் மாறிவிட்டது. முதன் முதலில் அதிமுக-வின் வற்புறுத்தலின் பேரில் எம்.ஜி. ஆருக்கு வழங்கப்பட்டதில் தொடங்கி கடைசியாய் சச்சினுக்கு வழங்கியது வரை ஒரே சர்ச்சை தான். இப்போது பாஜக தன் மனம் விரும்பியோருக்கு அதை வழங்கவுள்ளது என்பது வெளிப்படையான உண்மை. பாரத் ரத்னா விருதை ஏற்க மறுத்த நேதாஜி அவர்களின் குடும்பத்தினருக்கு எனது பாராட்டுக்கள். அண்ணல் நேதாஜி அவர்களின் மாபெரும் தியாகத்தை அரசியல் லாபமாய் மாற்ற எண்ணிய பாஜகவுக்கு நல்ல குட்டு விழுந்திருக்கின்றது. இனி வருங்காலங்களில் பாரத ரத்னாவின் மதிப்பு குறைந்து கொண்டே போகப் போகின்றது என்பது மட்டும் வருத்தமான உண்மை.
ReplyDeleteஅருமையான தகவல்கள் பகிர்ந்தீர்கள் சகோதரரே!
ReplyDeleteஇப்படி உங்கள் மூலமாகவேனும் அறியக் கிடைத்தது மகிழ்வாயுள்ளது!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteசகோதரன்.
அறிய முடியாத தகவலை அறியத்தந்தமைக்கு பாராட்டுக்கள் தங்களின் தேடலுக்கு வாழ்த்துக்கள்
த.ம 4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் சகோ. தாங்களும் தங்கள் மனைவியும் நலம் தானே.
ReplyDeleteபாரத ரத்னா விருதைப் பற்றி இரத்தின சுருக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி.
பாண்டியரே வருக வருக தங்கள் வரவு நல்வரவாகுக ....! வாழ்க வாழ்க எல்லா நலன்களும் பெற்று...! ஆமா நானும் ரூபனும் தங்கள் திருமணத்திற்கு சமூகமளித்திருந்தோமே பார்த்தீர்களா! வலைச்சரத்தில். தங்களை யோட்டியே கதை பின்னப் பட்டிருந்தது.
ReplyDeleteதங்களுக்கு ஏது நேரம் ம்... ம்.. அதை நான் அறிவேன் பாண்டியா. மிக்க நன்றி தங்கள் கருணைக்கு. மீண்டும் வலைச்சரத்தில் சந்திப்பதை இட்டு மகிழ்ச்சியே. விர்துகள் பற்றிய விபரங்கள் அறியத் தந்தமைக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteபாரத ரத்னா பற்றிய பல தகவல்கள், நன்றி.
நீண்ட நாட்களுக்குப் பின் தங்களை வலையில் சந்திக்கும் வாய்ப்பு
ReplyDeleteதம 7
ஹை வாங்க புது மாப்பு ..
ReplyDeleteநல்ல தகவல் தொகுப்பு நன்றி
பயனுள்ள பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
உண்மையா சொல்றேன் தம்பி !! நிறைய விஷயம் இனிக்கு தெரிஞ்சுகிட்டேன்! நீண்ட இடைவெளிக்குப் பின் சூப்பர் பதிவு !! என் நாத்தி நலமா? (முதலில் அவங்கள விசாரித்தா தான் மறுமுறை வீடு வரும் போது காபி கிடைக்கும்:))அம்மா அப்பா தம்பி எல்லோரும் நலமா சகோ?
ReplyDeleteஅருமை நண்பருக்கு, வணக்கம்.
ReplyDelete‘பாரத ரத்னா’ பற்றிய பல அரிய தகவல்களை அறிய முடிந்தது.
நானும் நம் ஊர்தான். தங்களைப் பற்றி அறிய ஆவல்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
நல்லபதிவு வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
பார்வையிட முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/10/blog-post_3.html?showComment=1412301499933#c6597964411133375369
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே
ReplyDeleteஉங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் கோர்த்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்..நன்றி.