ஊதியம் தரும் மகிழ்வை விட
உமக்கு ஊழியம் செய்யும்
உண்மை மகிழ்வே மீண்டும் மீண்டும்
உயிர்பெற வேண்டும் மாணவனே!
நாளைய உலகில் நீ வெற்றி
நடைபோட நாநுமக்கு உதவும்
நம்பிக்கை விதையாய் இருப்பதெண்ணி
நாளும் மகிழும் நான்!
சிக்கெடுக்காத தலைமுடியை நீ
சிலநேரம் சிக்கென்று கோதிவிட்டு
சிரிப்போடு நீ நகரும் அந்த
சின்னஞ்சிறு நிகழ்வில் சிக்கிக்கொண்ட நான்!
கண்டிப்பாய் நான் இருந்தும்
கள்ளங் கபடமற்ற உன்
கன்னக்குழி சிரிப்பில் விழுந்து
கசங்கிப் போன நான்!
தவறாய் நீ சொன்னப் பதிலுக்கு
தலையில் தானா கொட்டுக்கொண்டு
தண்டனைக் கொடுக்கும் நிகழ்வை
தனியழகாய் ரசித்த நான்!
இன்னல் பலதாங்கி இமை மூடாமல்
இறுதித்தேர்வுக்கு படிக்கும்- நம்பள்ளி
இரும்புச் சன்னலுக்குள் உம்மை
இறுகிய முகத்தோடு பார்க்கும் போதும்!
மனம்போன போக்கில் நடைபோடும் உம்மை
மனனம் செய்ய வைக்கும் போதும்!
மத்தியான சோற்றுக்கு முண்டியடித்து
முன்வரிசையில் காணும் போதும்!
சத்துணவு என்று சொல்லி
சமைத்த உணவை நீ உண்டு
சங்கடமாய் நீ நெளியும்
சமயங்களைக் காணும் போதும்!
கல்பட்ட கண்ணாடியாய் என்னுள்ளம்
கதறும் காட்சியைத் தான்
கண் கொண்டு பார்ப்பீரோ!
காட்சியைத் தான் மாற்றுவீரோ!
-----------------
அன்புடன்,
அ.பாண்டியன்
மிக அருமையான கவிதைப் பகிர்வு! நீங்கல் ஒரு நல்ல ஆசிரியர் என்பது கவிதையில் வெளிப்படுகின்றது! மகிழ்சியாக உள்ளது! ஆசிரியன் என்ற முறையில் பெருமையாகவும் உள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநமது கருத்து
நம் கல்வி முறையே மாறவேண்டும்! மனனம் செய்யும் பகுதி ஒரு புறம் இருந்தாலும் சிந்தித்து ஆராய்ந்து படிக்கும், அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் கல்வி முறையே மிகச் சிறந்தது!
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் வரும் முறை வரவேண்டும். அதேசம்யம், அந்தந்த மாநிலத்தின் மொழியும் ஒரு சப்ஜெக்டாகச் சேர்க்கப்பட வேண்டும்.
அதாவது, தற்போது இருப்பது போல, cbse, மெற்றிகுலஷன், state board, ஆங்கிலோ இந்தியன், ICSE, இன்னும் பல...இப்படி பாடத் திட்டங்கள் இருப்பதை விட ஒரே பாடத் திட்டமாகக் கொண்டுவந்தால் நாடு முழுவதும், கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும், நகரத்து மாணாகரைப் போல வேலை வாய்ப்புகளிலும், மேற் கல்வி படிக்க நடத்தப்படும் தேர்வுகளிலும், ஏன் உலக அளவிலுமே போட்டி போடும் தகுதி வளருமே!
எல்லா பள்ளிகளிலும் நல்ல நூலகங்கள் இருக்க வேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நல்லொழுக்கம் நிறைந்த நல்ல மாணவனாகவும், சிறந்த குடிமகனாகவும் வெளிவருவதற்கேற்ற கல்வி முறை வரவேண்டும்!
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி!
வணக்கம் ஐயா
Deleteமிக சிறப்பான கருத்தைக் கூறியமைக்கு மிக்க நன்றி. தாங்கள் ஒரு அற்புதனான கல்வியாளர் என்பது கண்டு மகிழ்கிறேன். தொடர்வோம். நன்றீங்க ஐயா..
அருமையான கவிதை நண்பரே
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா
Deleteவருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு அன்பான நன்றிகள்.
பல மாற்றங்கள் வர வேண்டும் என உரைக்கும் அருமையான கவிதை... வாழ்த்துக்கள் சகோதரரே...
ReplyDeleteநன்றி சகோதரர். கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும் சகோதரர். விரைவில் மலரும் அந்நாள் என்பது நமது நம்பிக்கை. மாற்றத்தை விதைப்பவர்களாக நாமும் மாறினால் கண்டிப்பாக எல்லாம் சாத்தியம் தான்.
Deleteகல்பட்ட கண்ணாடியாய் என்னுள்ளம்
ReplyDeleteகதறும் காட்சியைத் தான்
கண் கொண்டு பார்ப்பீரோ!
காட்சியைத் தான் மாற்றுவீரோ! அருமை அருமை சகோதரா !
இடும் ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு பண்பு மிளிர்கிறது.
அன்பும் மதிப்பும் கூடிகொண்டே போகிறது சகோதரா. தாரமும் குருவும் தலைவிதிப்படி என்று சொல்வர் தங்கள் மாணவர்கள் கொடுத்து தான் வைத்திருகிறார்கள் தங்களை அடைய. நானும் பெருமைபடுகிறேன் எனக்கு இப்படி ஒரு சகோதரர் கிடைத்ததற்கு.
நன்றி ! வாழ்க வளமுடன்....!
அன்பு சகோதரிக்கு வணக்கம்
Deleteதங்களின் போன்றோரின் நட்பு என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும் என்பதே உண்மை. உங்களின் கருத்துரை இன்னும் இன்னும் என்னை ஊக்கப்படுத்தி படைப்புகளைத்தர அழைக்கிறது சகோதரி. தங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி..
நல்ல கவிதை தோழர்..
ReplyDeleteமாற்றங்கள் உருவாக்கும் இடத்திற்கு நீங்கள் செல்க
துறைத் தேர்வுகளை எழுதுக..
கண்டிப்பாக சகோ. முயன்றால் முடியாததது என்பது உண்டோ! தாங்கள் கூறியதை மனதில் வைத்து முயல்கிறேன். நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteநல்ல ஆசிரியரான உங்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கம்..பாராட்டுகள்!
ReplyDeleteநீங்கள் சொல்வதுபோல நிலைமை மாறத்தான் வேண்டும். பரந்துபட்டு வாசித்தல் அதிகமாக வேண்டும்.
//காட்சியைத்தான் மாற்றுவீரோ// உங்கள் மாணவர்களுக்கு உங்கள் வடிவில் ஒரு புரிந்து கொள்ளும் ஆசிரியர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி, அவர்களுக்கேனும் சில நல்ல மாற்றங்களாவது உங்களால் இயன்றவரையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை..வாழ்த்துகள் சகோதரரே!
தேன் மதுர தமிழால் தம்பிக்கு உத்வேகமளிக்கும் கருத்தைத் தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து நட்பு தொடரட்டும். நன்றி சகோதரி..
Deleteபுதிய மாற்றங்கள் வர வேண்டும் என சங்கநாதமிடும் அழகான கவிதை... அன்பின் இனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் ஐயா அவர்களே வருக.
Deleteவழக்கம்போல் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளால் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள்...
இதை கவிதை என்று நினைத்து நான் படிக்கவில்லை.
ReplyDeleteஒரு நல்லாசிரியரின் உள்ளத்து உணர்வை அப்படியே வெளிக் கொணர்ந்த மாதிரி இருக்கிறது. இது கவிதைக்காக நான் எழுதவில்லை என் உள்ளத்தில் எழும் உண்மையான உணர்வு என்று நீங்கள் சொன்னால் உங்களை எண்ணி மிக மிக பெருமை கொள்கிறேன் சகோதரா.. உங்கள் உள்ளத்தில் எழும் நல் உணர்வுகளுக்கு ஒரு ராயல் சல்யூட்....
வணக்கம் சகோதரர்
Deleteஉணர்வுகள் தான் படைப்புகளாக வர முடியும். வெற்று வார்த்தைகளைக் கவியாய் தரவில்லை. அனைத்தும் என் உள்ளத்து அரும்புகள் தான். மணம் பரப்பி இருந்தால் மகிழ்ச்சி தான். பெரிய வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரர்..
உங்களைப் போல உள்ள நல்லாசிரியர்களால்தான் இன்னும் இந்தியா பெருமையோடு மிளிரிக் கொண்டு இருக்கிறது.பாராட்டுக்கள் tha.ma 4
ReplyDeleteஉங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு எனக்கு இருப்பதை எப்பவும் உணர்ந்து நடப்பேன் சகோதரர். மிக்க நன்றி..
Deleteஎன் தந்தை, என் தோழி போல் ஒரு நல்ல ஆசிரியராக உங்களை பார்க்கும் போது சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு....! ஒரு வகுப்பறையாவது மாறும்போது... சமுதாயத்தின் ஒரு பகுதி நல்லதாகத்தான் உருவாகிகொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையில் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...........!
ReplyDeleteசகோதரியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்து செம்மையான வழியில் பயணிக்க வழிக்காட்டும் என்பதை நம்புவன் நான். அந்த வகையில் கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரி..
Deletetha.ma-5
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி
Deleteஅருமையான கருத்துக்கள் நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் என்பதை பறைசாற்றுக்கின்றது. வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
Deleteவருகை தந்து கருத்துமிட்டு வாழ்த்திய உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள். நல்ல ஆசிரியராக என்னை நிலைநிறுத்திக் கொள்ள எப்பவும் முயற்சிக்கிறேன் சகோதரர். நன்றி..
மாற்றம் ஒன்றுதான் இவ்வுலகில் மாறாதது என்பது உண்மைதான். நம்ம ஊர் கல்வி முறை எப்போது மாறப்போகிறதோ. நல்ல பதிவு ஐயா! வாழ்த்துகள்...
ReplyDeleteகண்டிப்பாக நண்பரே முயன்றால் எல்லாம் முடியும் தூரம் தான். முயற்சிப்போம். ஒவ்வொரு நகர்வோம் நமது வசமாகட்டும். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி..
Deleteசகோ உண்மையாவே ரொம்ப பெருமைய இருக்கு !
ReplyDeleteஎன்ன ஒரு கரிசனம் !
நீங்க ஒரு நல்ல ஆசிரியர் என்பதற்கு எதற்கு மேல் என்ன வேண்டும்!
வாழ்த்துக்கள்! சகோ!
சகோதரிக்கு வணக்கம்
Deleteஉங்களைப்போன்றோரின் உந்துதல் தான் எனக்கு வழிகாட்டியாக உள்ளது. தங்கள் பதிவில் நீங்கள் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறையும் அன்பும் கண்டு பலமுறை அசந்து போய் இருக்கிறேன். தொடர்வோம். நன்றி சகோதரி..
ஆண்டுத் தணிக்கை, அதிகாரி வருகை என்று தெரியும்போது மட்டும் நோட்டுகளுக்கு அட்டை போடச் சொல்லி, கையெழுத்துகளைப் போடடுத் தள்ளும் உலகில், “அய்யா, நீங்க ஒன்னும் செய்யச் சொல்லலியே?“ என்று கேட்கும் மாணவரிடம், “எப்பவும் போல இரு” என்று சொல்வதும், எப்பவும்மாணவர்தான் நமக்கு அதிகாரி என்று சாதாரணமாகச் சொன்னால்கூட ஏளனமாகப் பார்க்கும் சாதாரண ஆசிரியரிடையே, உங்களின் பாரவையே விததியாசமாக உள்ளது, உங்கள்பணிகள் சிறக்கும்... உயரும்... மென்மேலும் வளர வாழ்த்துகள்
ReplyDeleteசிறந்த கருத்துப் பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்