நண்பர்களுக்கு வணக்கம்
பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் வழக்கமான பாணியில் வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி முன்பாகவும் கணினி முன்பாகவும் வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு. உங்களுக்கு?
இரண்டடியில் உலக பொதுமறையைத் தந்த அய்யன் திருவள்ளுவர் தினமான இன்று இரண்டு முக்கிய விருந்தினர்கள் எங்கள் இல்லம் வந்து அலங்கரித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் ஆனால் தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். இருவருமே வலைப்பதிவர்கள்.தம்பதிகள்.
ஆம், அன்பு சகோதரர் மது கஸ்தூரி ரங்கன் அவர்களும் அவரது மனைவி அன்பு சகோதரி மைதிலி அவர்களும் தான் எங்கள் இல்லத்தை அலங்கரித்த விருந்தினர்கள்
சகோதரர் மது கஸ்தூரிரங்கன் அவர்கள் மலர்தரு எனும் வலைப்பக்கத்தில் பல்துறை விடயம் சார்ந்த பதிவுகளை எழுதி வருகிறார். ஆங்கில புலமையும் தமிழ் இலக்கியங்களையும் நல்ல புத்தகங்களையும் வாசிக்கிற நல்ல வாசகரும் கூட. பாடத்திற்கு வெளியிலும் வாசிக்கும் மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியர். ஜே.சி.ஐயின் மண்டலப் பயிற்சியாளர்களில் ஒருவர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களை இலவசமாக வழங்கிவரும் நிகில் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவர்.
அவரது வலைப்பக்கம் மலர்தரு
சகோதரி மைதிலி அவர்கள் மகிழ்நிறை எனும் வலைப்பக்கத்தில் கவிதைகள், கட்டுரைகள், ஆங்கில இலக்கணம் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறார். வயதில் இளையவராக இருந்தாலும் அவரது கவிதைகள் முதிர்வாக இருக்கும். எழுத்து கூர்மையாகவும் கவிதைகள் அழகிய கருவை சுமந்ததாகவும் இருக்கும்.
அவரது வலைப்பக்கம் மகிழ்நிறை
இப்படிப்பட்ட இருவரின் வருகை நான் சற்றும் எதிர்பாராது வீட்டிற்கு அருகில் வந்து எனது அலைபேசி எண்ணை கவிஞர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களிடம் பெற்று என்னை அழைத்தனர். வீரம் படத்திற்கு நண்பர்களோடு சென்று வந்து வீட்டிற்குள் நுழைந்த நான் வாசலுக்கு சென்று வரவேற்றேன். இருவரையும் கண்டதும் எனக்கு இன்ப அதிர்ச்சி. உண்மையில் பேச்சு வராமல் சற்று தடுமாறி தான் போனேன்.
அவர்களோடு எனது நண்பர்கள் வேல்முருகன், குமரேசன், சகோதரி சிந்தியா அவர்களும் இணைய ஒரு மணி நேரம் பேசினோம். சகோதரர் கஸ்தூரி அவர்களின் பல்துறை அறிவு கண்டு நண்பர்கள் உட்பட நானும் வியந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. மகிழ்ச்சியில் அவர்களோடு புகைப்படம் எடுக்க கூட மறந்து விட்டேன். (நண்பர்கள் பேசிய அளவிற்கு நான் உங்களிடம் அதிகம் பேசவில்லை தானே! சகோதரரே நான் எப்பவும் பேச விட்டு வேடிக்கை பார்க்க கூடிய ரகம்).
நான் நின்று கொண்டே பேசியதை கவனித்த சகோதரி மைதிலி அவர்கள் எழுந்து கீழே உட்கார்ந்த எளிமையைக் கண்டு நெகிழ்ந்து போனேன். இருவரும் ஊக்கமூட்டும் சொற்களால் என்னை வழக்கம் போல் ஊக்கப்படுத்தினார்கள். இருவரின் அன்பிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் எங்களிடம் விடை பெற்று சென்ற போது மனதில் ஒரு வித பிரிவின் வலியும், இல்லம் தேடி வந்த அவர்களது அன்பு தந்த மகிழ்ச்சியும் குடியேறி கொள்ள மனம் இல்லாமல் விடை கொடுத்தேன். இனியும் இவர்களை விருந்தினர்கள் என்று சொல்லி விலகி நிற்க மாட்டேன் அவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். இனி வருகையும் அன்பும் அதிகரிக்கும்..
நன்றி..
வணக்கம்
ReplyDeleteசகோதரன்...
உண்மையில் உறவுகளின் வருகை தங்களுக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும் அவர்களின் நட்பு என்றென்றும் தொடர வேண்டும்...சகோதரன் அதைப்போல அவர்களின் நட்பும் என்றென்றும் தொடர எனது வாழ்த்துக்கள். புகைப்படம் போட்டிருந்தால் மிக நன்றாக இருக்கும் இன்னும் எத்தனை அதிர்ச்சிகள் வரப்போகிறது... பாருங்கள்..மிக விரைவில்......
த.ம 1வது வாக்கு..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோவின் முதல் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சியாய் உள்ளது. அவசியம் இந்தியா வரும் போது நமது வீட்டிற்கு வருவேன் என்று சொல்லியிருக்கிறேன். காத்திருக்கிறேன் வருகைக்கு. நன்றி சகோதரர்..
Deleteவணக்கம்
Deleteசகோதரன்
நிச்சயம் மிக விரைவில்.. திருமணத்துக்காக இந்தியா வரவேண்டிய பணி உள்ளது... பார்க்கலாம் எல்லோரையும்
(எனக்கு இல்லை..இல்லை... (Paris, France) இருக்கும் எனது அண்ணவுக்கு)
சகோதரன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிச்சயம் சந்திப்போம் சகோதரர். நன்றி..
Deleteநல்லதொரு சந்திப்பு! இது போன்ற நல்ல நண்பர்களைச் சந்திக்கும் போது சந்தோஷமே!! பகிர்ந்ததற்கு மிக்க நன்றி! அவர்கள் வலைப்பூ பற்றியும்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
நன்றி ஐயா
Deleteஅன்பு எனும் தூண் தான் இவ்வுலகைத் தாங்கி நிற்கிறது என்பதை நம்புவன் நான். அன்பிற்குரிய நல்ல உள்ளங்களின் வருகை என்றும் மகிழ்ச்சி தான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
இனிய சந்திப்புகள் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றீங்க ஐயா. தங்கள் வருகையும் வாழ்த்தும் தொடரட்டும். நல்ல உள்ளங்களின் நட்பு விரிவடையட்டும்.
Deleteஎதிர்பாராத சந்திப்புகள் ஏற்படும் போது மனது மிகவும் மகிழ்ச்சி அடையும். அதற்கு நானும் விதிவிலக்கு இல்லை எனறு எழுதி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .
ReplyDeleteநன்றி சகோதரர். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். நண்பர்களைச் சந்திக்கும் மகிழ்ச்சியே அலாதியானது தானே சகோதரர்..
Deleteதமிழ் புத்தாண்டில் இரு நல்ல தளங்களை எங்களுக்கு பொங்கல் பரிசாக தந்த உங்களுக்கு மிக நன்றி . மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி சகோதரர். தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்வைத் தருகிறது. இருவரின் தளங்களும் நிச்சயம் உங்களைக் கவரும். நன்றி..
Delete
ReplyDeleteஒரு வலைப்பதிவர் இன்னொரு பதிவரை சந்தித்து பேசுவது என்பது மகிழ்வான விஷயம்தான். அந்த நிகழ்வைப் பகிர்ந்து தங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
வணக்கம் ஐயா
Deleteஉங்கள் வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வலைப்பதிவர்கள் ஆங்காங்கே சந்தித்த பதிவைப் படிக்கும் போது அவர்களின் நட்பு உண்மையில் வியக்க வைக்கிறது.
மிக்க மகிழ்ச்சி நண்பரே...!
ReplyDeleteஅல்லாம் சரிபா... வந்துகினவுங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி டீத்தண்ணி இல்ல கஞ்சி கிஞ்சி எதுனா குட்த்துக்கினியாபா...?
கொடுக்காம அனுப்புவோமா நைனா! (நண்பரே). தங்கள் வருகையைக் கண்டு எனக்கும் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம் சகோதரர்.
Deleteவணக்கம் சகோ !
ReplyDeleteவலைப் பதிவர்களின் திடீர் வரவு ஆச்சரியம் ததும்பியதும் இரட்டிப்பு மகிழ்ச்சியாகவும் அமைந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. நினைத்துப் பார்க்கும் போது எனக்கே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. சொல்லவா வேண்டும் உங்கள் நிலை. இன்னும் எத்தனை ஆச்சரியங்கள் காத்திருக்கிறதோ நமக்கு, பார்க்கலாம். தங்கள் கல்யாணத்தில் இன்னும் பலரை எதிர்பார்க்கலாம் என் எண்ணுகிறேன்.
யார் கண்டா நானாகவும் கூட இருக்கலாம்.
இனிய செய்தி தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே.....!
அன்பு சகோதரியின் அன்பும் பாசமும் என்னை எப்பவும் நெகிழ வைக்கும். எனது திருமணத்திற்கு அவசியம் நீங்கள் வர வேண்டும். வந்தால் அதை விட வேறொரு மகிழ்ச்சி இருக்குமா! தங்கள் வருகை கருத்து எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. தொடர்வோம் சகோதரி..
Deleteஅருமையான சந்திப்பு. குடும்ப நண்பர்களின் வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் அம்மா
Deleteஇது போன்ற நட்பால் தான் இன்னும் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது போலும். இனிய சந்திப்பு இனித்தது தங்கள் வருகை மகிழ்ச்சியை ஈந்தது. நன்றி அம்மா..
நட்புக் கவிதை அருமை.
ReplyDeleteபடமும் கவிதையும் கூகுள் உபயம் தான் அம்மா. இருப்பினும் ரசித்தமைக்கு மிக்க நன்றி..
Deleteகண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்பர் கற்றோரே .
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள் சகோ. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி..
Deleteசந்திப்பு தித்திப்பு ........எங்களுக்கும் ..
ReplyDeleteஇரண்டு தளங்கள் பொங்கல் போனசாக கிடைத்தனவே .....
பொங்கல் போனஸ் கண்டிப்பாக மகிழ்ச்சியைத் தான் தரும். கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரி..
Deleteநல்லதொரு நாளில் அருமையான சந்திப்பு நடைபெற்றிருக்கு. தங்களின் அளவிடமுடியா மகிழ்ச்சி எழுத்தில் பிரதிபலிக்கின்றது. இப்படியான ஆரோக்கியமான சந்திப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்.அருமையான வரிகளில் கவிதை.வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு நன்றி. கடல் கடந்தும் உணர்வால் இணைந்த நம் நட்பு என்றும் தொடர வேண்டுமென்பதே எனது வேண்டலும் விருப்பமும். தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள் சகோதரி.
Deleteவிருந்தினர் வருகை எப்போது மகிழ்ச்சி தரும் ஒன்று! இனிமையாக பகிர்ந்துகொண்டமைக்கும் இரு புதிய தளங்களை அறிமுகம் செய்தமைக்கும் நன்றி!
ReplyDeleteவிருந்தினராக வந்து இல்லத்திலும் உள்ளத்திலும் கலந்த உறவுகளாக மாறி விட்ட அன்பு சகோதர, சகோதரியின் வருகைக்கு நன்றிகள் அவர்களுக்கே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்..
Delete#இனியும் இவர்களை விருந்தினர்கள் என்று சொல்லி விலகி நிற்க மாட்டேன் அவர்கள் என் குடும்ப உறுப்பினர்கள். #
ReplyDeleteஉண்மையில் இந்த சொற்கள் தான் மிகுந்த மகிழ்ச்சி சகோ.ஒரே ஊரில் பிறந்தவர்கள் ஒரே பள்ளியில் இருந்தவர்கள் ஆனால் வலைப்பூ தான் இந்த நட்பை சாத்தியப்படுத்தியதில்லையா?வலைபூவிற்கு நன்றி.நண்பர்கள் மார்க்ஸ் முதல் பல விஷயங்கள் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை .அம்மாவும்,அப்பாவும் மிக அன்பாய் நடந்து கொண்டது மனநிறைவாய் இருந்தது சகோ தாங்கள் எப்போ புதுகை வரப்போகிறீர்கள் ?this is your turn.we are waiting eagerly !
சகோதரிக்கு நன்றி. எங்கள் இல்லத்திற்கு வருகை தந்து உள்ளம் கவர்ந்து விட்டீர்களே! அம்மா, அப்பாவிற்கு அவ்ளோ சந்தோசம். எனக்கு சகோதரி இல்லாத ஒரு குறை நீங்கியதாகவே உணர்கிறேன். மணப்பாறை வரும் போதெல்லாம் அவசியம் வீட்டிற்கு வர வேண்டும் இது அன்பு கட்டளை. விரைவில் நானும் நமது வீட்டிற்கு வருகிறேன். தங்கள் அன்புக்கு மிக்க நன்றி..
Deleteநீண்ட நாட்களாக வரவேண்டும் என்று எண்ணி எதிர்பாரா ஒரு சந்தர்பத்தில்
ReplyDeleteஎதிர்பாராவிதத்தில் தங்கள் இல்லம் வந்தது இப்போது பதிவாய்ப் பார்ப்பது ரொம்ப மகிழ்வு...
நண்பர்களைக் கேட்டதாக சொல்லவும்..
ஒருமுறை அனைவருடனும் வீட்டுக்கு வரவும். நன்றி சகோ
தங்கள் அன்பில் நான் தான் சற்று நிலைத்தடுமாறி போனேன் என்று நினைக்கிறேன். நண்பர்கள் இருந்தது கூடுதல் மகிழ்ச்சி சகோ. இனி அடிக்கடி சந்திப்போம். விரைவில் நாங்களும் வருவோம்ல. ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப நன்றி சகோ.
Deleteமகிழ்வான சந்திப்புக்கள் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோதரர். சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சென்னை வந்தால் நாமும் அவசியம் சந்திப்போம். நண்பர்கள் வலைத்தளம் பகுதியில் தங்கள் வலைத்தள முகவரியைப் பார்த்தீர்களா!
Deleteமனதிற்கு இன்பம் தந்த பதிவு..சந்திப்பு அருமையாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை..உங்களுக்கும் மது மற்றும் மைதிலி அவர்களுக்கும் வாழ்த்துகள்! அன்பான தம்பதியினர்..வலைத்தளம் மூலமாகவே நெருக்கமாக உணர வைப்பவர்கள் அவர்கள். :)
ReplyDeleteமிக சரியாக சொல்லியுள்ளீர்கள் சகோதரி. பழகுவதற்கு ரொம்ப அன்பானவர்கள். அவர்களின் வருகை மகிழ்ச்சியாய் தானே இருக்கும். தங்களின் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி சகோதரி..
Deleteமலர் தரு ,மகிழ்நிறை பதிவர்களின் வரவால் உங்கள் மனதில் மகிழ்ச்சி மலர்ந்து இருப்பது அறிய எனக்கும் மகிழ்ச்சி !
ReplyDelete+1
உங்கள் வருகையும் மகிழ்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியே சகோதரர். தங்கள் சுறுசுறுப்பு கண்டு வியப்பாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரி.
Deleteபொங்கல் மகிழ்வோடு
ReplyDeleteமற்றுமொரு மகிழ்வான நிகழ்வு
நடந்தது குறித்து அறிய மிக்க மகிழ்ச்சி
பகிர்ந்த விதமும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா
Deleteநிச்சயம் மறக்க முடியாத மகிழ்வான தருணங்கள் அவை. தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றீங்க.
நன்றீங்க ஐயா
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி... அதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
ReplyDeleteசகோதரருக்கு வாழ்த்துக்கள்...
அன்பு சகோதரரின் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. நீங்கள் எப்பொழுது வீட்டிற்கு வருகிறீர்கள் சகோதரர்? அவசியம் வரவும். காத்திருக்கிறோம். நன்றி..
Deleteமிக்க மகிழ்ச்சி. இதுப்போன்ற அன்பினால்தான் மனசு மகிழ்ச்சியா உள்ளது
ReplyDeleteஎனக்கும் ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. மிக்க நன்றி.
Deleteநல்லதொரு சந்திப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது சகோதரர். தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றீங்க.
Delete“நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நலமிக்க
ReplyDeleteநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே“னு சும்மாவா சொல்லி வச்சாங்க? அன்பும் பாசமும் ததும்பும் இரண்டு-மூன்று படைப்பாளிகள் சந்தித்துக் கொண்டால் அதையே பதிவு செய்து அனைவரிடமும் சொல்லலாம். உண்மையில் இதுபோலும் பகிர்வுகளில்தான் நம் உலகம் நகர்வதாக நான் நினைக்கிறேன் “...உண்டால் அம்ம இவ்வுலகம்” நன்றி பாண்டியன்
வணக்கம் ஐயா
Deleteதங்களைப் போன்றோரின் அன்பு தான் என்னை இயக்குகிறது என்று சொல்வேன். திறமையை இனம் கண்டு தூக்கி விடும் தங்கள் ஒப்பற்ற பணிக்கு எப்பவும் வணக்கங்கள். வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றீங்க ஐயா..
வணக்கம்
ReplyDeleteநவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு .
குறளின் விளக்கமாக உங்கள் சந்திப்பும் கலந்துரையாடலும் அமைந்துள்ளது .அந்தநேரத்தில் நீங்கள் அடைந்த மகிழ்வை அப்படியே உணர வைத்திவிட்டீர்கள் .நன்றி
அழகிய சந்திப்பு.. இப்படியான சந்திப்புக்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்..
ReplyDeleteசரி எனக்கொரு டவுட்:).. எதுக்கு நீங்க, இருக்காமல் நிண்டனீங்க?:)))
சகோ புது வீட்டிற்கு குடிவந்திருக்கிறார்,பணிகள் இன்னும் முடியவில்லை ,எனவே நிறைய நாற்காலிகளை அவரின்னும் புதியவீட்டிற்கு கொண்டுவந்திருக்கவில்லை என்பது என் யுகம் சகோ வீடு ரொம்ப அழகா இருந்தது .
Deleteமிகவும் மகிழ்வான சந்திப்பு ,நட்புகளை பார்க்கையில் எதையும் எதிர் பார்க்காத உண்மை அன்பு நெகிழ்வையே தரும் வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteஇனிய சந்திப்பு மனதிற்கு இதமாக இருந்தது. இனிய வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இல்லத்தை அலங்கரித்த விருந்தினர்களுக்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களது இந்தப் பதிவு மூலம், இன்னும் இரண்டு அருமையான பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் வாசித்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி!
ReplyDelete