தவறு செய்யாத மனிதர்களே இன்றைய உலகில் இல்லை என்கிற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்றால், யார் நம்மை வழிநடத்த இருக்கிறார்கள்? தவறு செய்திருந்தாலும் திருந்தி வாழ்பவர்களை இந்த உலகம் மதிக்கிறது.
இன்றைய சூழலில் பெரும்பாலான நாச வேலைகளைச் செய்வது யாரென்று பார்த்தால் அது படித்தவர்கள் தான் என்னும் புள்ளிவிவரம் நம்மை அச்சுறுத்துகிறது. காரணம் இன்றைய கல்வி முறையும் சூழ்நிலையும் தான் அவனை இப்படி மாற்றுகிறது. பொதுவாக ஒரு சமூதாயம் வளர்ச்சியுற்றதாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு விடயங்கள் தான் காரணமாக அமைகின்றன 1.சமுதாயத்தை ஆளும் தலைவன்
2. இளைய சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்கள்.
ஆளும் தலைவன் பற்றி இன்றைய சூழலில் நாம் எதையும் சொல்ல முடியாத அளவிற்கு அரசியல் நம்மை விட்டு விலகி விட்டது என்பதை பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். இருப்பினும் நல்லவர்கள் நாமெல்லாம் சாக்கடையாக எண்ணக்கூடிய அரசியலில் நமக்காக, நமது உரிமைகளுக்காக எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
ஆனால் ஆசிரியர் சமூதாயம் மீதான எதிர்பார்ப்பை நாம் எப்படி வேண்டுமானலும் தெரிவிக்கலாம் எனும் சூழல் உள்ளதை பரவலாக காண முடிகிறது. காரணம் இளைய சமுதாயம் இவர்கள் கையில் உருவாகிக் கொண்டிருக்கிறது எனும் நம்பிக்கை தான். இருப்பினும் நன்கு கற்றவர்களே குற்ற செயல்களிலும், வன்முறைகளிலும், குறுக்கு வழிகளில் ஆதாயம் தேட முயற்சிப்பதையும் பார்க்கும் போது படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்கள் என்ற எண்ணம் உதயமாவதை தவிர்க்க முடியவில்லை.
நாளைய மன்னர்களாகக் கருதப்படும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் மாணவர்கள் எதற்குப் படிக்கிறோம் என்கிற நோக்கமற்று படிக்கிறார்கள். ஒருவேளை இப்படி நோக்கமற்ற படிப்பாக இருந்தாலும், நல்ல ஒழுக்கமுள்ள எந்தச் சூழலிலும் நேர்மையாக, நியாயமாக, மனிதநேயமாக நடப்பவர்களாக வளர்க்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அடிப்படையில் குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். சூழ்நிலையும் வளர்ப்புமே அவர்களை உருவாக்குகிறது. நல்ல சூழலும் வளர்ப்பும் ஒரு பண்புள்ள மனிதனை உருவாக்குகிறது. இல்லையேல், இதற்கு நேர்மாறான விளைவை உண்டாக்குகிறது.
உலகோர் உயிர்வாழ உணவுப் பயிர்செய்யும் உழவர், நல்ல குடிமக்களை உருவாக்கும் நல்லாசிரியர், நேர்மையும் திறமையும் நிறைந்த ஆட்சியர், கடமையுணர்வோடு மக்களைக் காக்கும் காவலர், நீதிக்கும் நேர்மைக்கும் துணைபுரியும் வழக்கறிஞர்-நீதிபதி, மக்கள் நலனில் அக்கறையுள்ள மனிதநேயமுள்ள மருத்துவர், திறமையோடு தீமையற்ற தொழில்புரியும் முதலாளி, கடின உழைப்புடன் நேர்மையாய் பணிபுரியும் தொழிலாளி, மக்களின் குறை தீர்க்கும் பிரதிநிதியாய் நல்லாட்சி செய்யும் அரசியல்வாதி, எந்தத் தொழில் செய்திடினும் உண்மை, நேர்மை, வாய்மை கடைப்பிடித்தும் எந்த வாய்ப்பு அமையாவிடினும் யாருக்கும் நன்மை தராவிடினும் பரவாயில்லை - குறைந்தபட்சம் தீமை தராமல் வாழ்வோம்.
மேற்கண்ட சிந்தனையை இந்தக் கால குழந்தைகளிடம் சொல்லி வளர்த்தாலே போதும். எதிர்காலம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
பொதுவாக படிக்காதவர்கள் மீது ஏமாற்றத்தெரியாதவர்கள் என்னும் நமக்கு உண்டு. காரணம்அவர்கள் யாரையும் ஏமாற்றுவது இல்லை. நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். முறைப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைவருக்கும் மதிப்பு தர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், படித்தவர்கள் மத்தியில் இந்தப் பழக்கமெல்லாம் அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேர்மையும், உண்மையும், மரியாதை தரும் பழக்கமும் கேள்விக்கு உரியதாகிவிட்டது.
படித்தவர்கள் எந்தெந்தக் குறுக்கு வழியில் சென்றால் என்னென்ன நன்மைகள் அடையலாம் என்றும் அதற்கு என்னென்ன தவறுகள் செய்வது, அதிலிருந்து எப்படி தப்பிப்பது போன்ற அனைத்தும் தெரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். எனும் படித்தவர்கள் மீதுள்ள இந்தக் களங்கத்தைப் போக்க படித்தவர்கள்தான் தங்களுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். படித்தவர்களும் நீதியை, நேர்மையை, நியாயத்தை விரும்புகிறவர்கள் என்கிற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இது படித்தவர்களுடைய தலையாய கடமை.
மிகவும் அழகான அருமையான சிந்தனைகள்.
ReplyDelete//படித்தவர்கள் மத்தியில் இந்தப் பழக்கமெல்லாம் அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேர்மையும், உண்மையும், மரியாதை தரும் பழக்கமும் கேள்விக்கு உரியதாகிவிட்டது.//
ஆம். உண்மை தான். இதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் எல்லோருக்கும் நல்லது.
சிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.
முதல் வருகைக்கும் அழகான கருத்த்க்கும் அன்பான நன்றிகள் ஐயா. தொடர்வோம்.
Delete///படிக்காதவர்கள் மீது ஏமாற்றத்தெரியாதவர்கள் என்னும் நமக்கு உண்டு. காரணம்அவர்கள் யாரையும் ஏமாற்றுவது இல்லை///
ReplyDeleteஇப்படி நினைப்பவர்கள் கிராமத்தில் உள்ளவர்களாகத்தான் இருக்க வேண்டும்
விரைவாக வருகை தந்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி சகோதரரே. ஒவ்வொரு நகரவாசியிடம் ஒரு கிராமவாசி ஒளிந்திருக்கிறான். எனவே இது பற்றிய எண்ணம் நகரம், கிராமம் என இரண்டிலுமே பரவலாக காண முடிகிறது என்பது எனது கருத்து..
Deleteஇனிய வணக்கம் சகோதரரே,உங்கள் கூற்று ஆச்சர்யப்பட வைக்கும் ஆனால்
ReplyDeleteநிதர்சனமான கூற்று.
சமுதாய தலைவர்கள் பற்றி இன்று எதுவும்
பேசமுடியாத சூழ்நிலைதான்.
'''''''ஐயா தமிழருவி மணியன் அவர்கள் தலைவர்கள் பற்றி
பேசுகையில், அன்று எங்களுக்கெல்லாம் இதுதான் பாதை
இதுதான் வழி இவைதான் உத்தமம் என்று வழிநடத்த
தலைமைப் பண்புகள் நிறைந்த தலைவர்கள் இருந்தார்கள்
இன்றோ அப்போர்வையில் வாழும் நயவஞ்சக நரிகளே
உள்ளனர் என்றார்..'''''' எவ்வளவு உத்தமமான சொல்..
நினைத்துப் பார்த்தால் அத்தனையும் உண்மையான உண்மை
என்றே புரிகிறது.
நன்கு கற்றறிந்து நற்பதவியில் இருப்போர் மிகுதியானோர்
தவறு என்று அறிந்தும் தவறிழைக்கிறார்கள்...
இப்படிப்பட்ட சமுதாயத்தில் வாழும் வாழக் கற்கும் மாணவனும்
சொற்பமாய் இதையே வழிமொழிகிறார்கள்...
நற்குணம் கொண்ட பண்புகள் பலகொண்டோரை
தலைமையாகக் கொண்டு சிறந்த பணிகளை
சிரமேற்கொண்டு செய்திடுவோம்...
நன்மை செய்ய இயலவில்லை என்றாலும்
தீமை செய்வதை தவிர்த்திடுவோம் என்று விளம்பி வரும்
அருமையான பதிவு சகோதரரே.
சகோதரருக்கு நன்றி. மிகச் சரியான மேற்கோளுடன் கருத்துக்கு வலு சேர்த்த விதம் கண்டு வியந்தேன். தங்கள் திறமை கண்டு மகிழ்ச்சியும் அடைகிறேன். இணைந்திருப்போம் சகோதரரே..
Deleteநண்பரே,இன்று படிப்பு என்பதே சம்பாதிப்பதற்குத்தான் என்றாகிவிட்டது. மதிப்பெண் பெறவும், வேலை பெறவும் படிக்கின்றார்களே தவிர, தெரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படிப்பதில்லை. இன்று அரசும் தேர்ச்சி சதவீதத்தைத்தான், எதிர்பார்க்கின்றது. இந்நிலை தொடரும் வரை, இன்றைய சூழலும் நீடிக்கும் என்றே எண்ணுகின்றேன். படிப்பு என்பதே சுயநலத்திற்காக என்றாகிவிட்டது.
ReplyDeleteதமிழகத்தில் விவாகரத்து கேட்டு, நீதிமன்றத்தில் தேங்கியிருக்கும் வழங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அனைத்தும் மெத்தப் படித்தவர்கள்தான். படிக்காத ஆசாமி விவாகரத்து கோரியதாக எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிடையவே கிடையாது.
பொதுவாகவே படித்தவர்களைக் காட்டிலும் படிக்காதவன் அப்பாவியாகவே செயல்படுகிறான் என்பது உண்மை தான் சகோதரரே. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..
Delete
ReplyDeleteபடித்தவர்கள் எந்தெந்தக் குறுக்கு வழியில் சென்றால் என்னென்ன நன்மைகள் அடையலாம் என்றும் அதற்கு என்னென்ன தவறுகள் செய்வது, அதிலிருந்து எப்படி தப்பிப்பது போன்ற அனைத்தும் தெரிந்துகொண்டு செயல்படுகிறார்கள்//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
சமூகச் சீர்கேட்டின் அஸ்திவாரத்தை
அடையாளம் காட்டும் ஆழமான பதிவு
மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தங்களது கருத்து எனது கருத்துக்கு ஒத்திருப்பது கண்டு மகிழ்கிறேன். அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றீங்க ஐயா..
Deletetha.ma 3
ReplyDeleteநன்றீங்க ஐயா..
Deleteஇன்று படித்தவர்களைவிட படிக்காதவர்களிடம் அதிக விழிப்புணர்ச்சி இருந்து வருகிறது.படித்தவர்கள் தான் செய்வது சரியென்றும் படிக்காதவர்கள் விதி என்றும் வாதிடுகிறார்கள்.நல்லப் பதிவு பாராட்டுக்கள்
ReplyDeleteபடித்தவர்கள் தான் செய்வது சரியானது என்று வாதிடுவதும், அதிலிருந்து உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் வேடிக்கையாக தான் உள்ளது. கருத்துக்கும் நன்றீங்க சகோதரரே..
Deleteஅன்புச் சகோதரா
ReplyDeleteஎவ்வளவு துன்பகரமான செய்தி இது. கல்வியை கற்பதால் நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்டு, நாகரீகமாகவும் நடந்து கொண்டு, மற்றவர்களுக்கு முனோடியாகவும் வாழ்ந்து, மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் வாழ்வார்கள் என்றால் தவறுகளுக்கு கல்வியறிவை பயன்படுத்துவது( துஷ்பிரயோகம்) மிகவும் வருத்தப் பட வைக்கிறது.
கற்றவர்களால் தான் தீர்க்கப் படவேண்டும் என்பதால் இந்தக் கருத்தை எடுத்து வந்த நீங்களே பொருத்தமானவர் ஆசிரியர் ஆகிய நீங்களே ஆரம்பித்தும் வைக்கலாம்.
சமூகத்தை சீர் செய்யும் எண்ணம் கொண்டது அருமை. பெருமையே.
மிக்க மகிழ்ச்சி
பகிர்வுக்கு நன்றி ...தொடர வாழ்த்துக்கள் ...!
வாழ்க வளமுடன்....!
கண்டிப்பாக சகோதரி. நம்மால் முடிந்த சமூக மாற்றங்களைக்கான விதைகளை விதைக்க தயங்க வேண்டும். அது பின்னர் விருட்சமாக வளரும் என்ற நம்பிக்கையோடு தொடர்வோம். எனது அன்பு சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..
Deleteமனம் வளர்ப்பதற்கு மாறாய் பணம் வளர்க்கக்கற்றுக்கொடுக்கிறது இன்ரைய படிப்பு.இதில் ஆசிரியர்களின் பங்கு கம்மிதான்.அவர்கள் ரிசல்ட் காண்பிக்க மாணவ,மாணவிகளை நெறுக்கிறார்கள்.மற்ற எதையும் பற்ரி கவலை கொள்ளாமல் படிப்பு படிப்பு படிப்பு படித்து முடித்ததும் வேலை,சம்பாதியம்,வெளிநாடு என உருவாக்கப்படுகிற படிப்பு மனம் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன்/
ReplyDeleteதங்களது கருத்தே எனது கருத்தும். மிக சரியாக சொல்லியுள்ளீர்கள். இன்றைய சமூகம் பணத்தின் மீது கொண்ட மோகம் தான் காரணம். கருத்துக்கு மிக்க நன்றீங்க சகோதரரே..
Deleteஇன்றல்ல .அன்றே பாரதியார் பாடிட்டாரே ...படிச்சவன் சூது பண்ணினா போவான் போவான் ஐயோன்னு !
ReplyDeleteத.ம 5
பாரதியின் வரிகளை மேற்கோளிட்டு கருத்துக்கு வலிமை சேர்த்தமைக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள் சகோதரரே..
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்.
சரியான சாட்டையடி... ...மிக அருமையாக கருத்தை பதிந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
சகோதரன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரரின் வருகைக்கு மிக்க நன்றி. நம்மால் முடிந்த சமூக த்தின் மீதான எண்ணங்களைப் பதிவாக தருகிறோம். இச்சிந்தனை சமூகத்தின் மீதான ஆரோக்கியமான பார்வைக்கு உதவினால் அதுவே மாற்றத்திற்கான முதல்படி.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்
த.ம8 வது வாக்கு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிகுந்த நன்றி சகோதரர்.
Deleteஅருமையான சிந்தனைகள் தோழரே...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வலைச்சித்தரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். தொடர்வோம் சகோதரர். நன்றி.
Deleteஉண்மையே. படித்தவன் மூளை வழி நடக்கிறான்.
ReplyDeleteபடிக்காதவன் இதயம் வழி நடக்கிறான்.
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரி. மூளை வழி பல நேரம் குறுக்கு வழியாக போவது தான் வேதனையான விடயமாகிறது.
Deleteபடிப்புக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்பார்கள். எவ்வளவு படித்திருந்தாலும் பண்பும் ஒழுக்கமும் இல்லையெனில் படித்துப் பயன் என்ன? நம் கல்விமுறையில் படிப்புக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஒழுக்கத்துக்குத் தரப்படுவதில்லை. அதுவே பல ஒழுங்கீனர்களை உருவாக்கிவிடுகிறது. சிறப்பான சிந்தனைப்பகிர்வுக்கு நன்றி பாண்டியன்.
ReplyDeleteஒழுக்கம் இல்லாத சமூகம் புயலில் போக்கைப் போன்றது. அது எங்கு சென்று முடியும் என்பதை கணிப்பது அரிது. சகோதரியின் வருகை மகிழ்வளிக்கிறது. தொடர்க. நன்றீங்க சகோதரி.
Deleteஅருமை சகோதரா...
ReplyDeleteபடிக்காதவர்கள் வெள்ளந்தி மனிதர்கள்தான்.... அவர்களுக்கு இந்த சூது, சூட்சமம் எதுவும் தெரிவதில்லை.... படித்தவந்தான் எப்பவுமே பிரச்சினைகளை முன்னுக்கு கொண்டு வருவார்கள்...
அருமையான பகிர்வு.
பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வருவது சமூக பொறுப்பு தானே சகோதரரே. பிரச்சனையே அவர்களாக மாறுவது தான் கவனிக்கத்தக்கது. ஒவ்வொருவரும் மாற வேண்டும் அது நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர். தொடர்வோம்.
Deleteதவறுகளுக்கு காரணம் ஆசையும் இருக்க கூடும்... படித்தவர்களுக்கும் அறிவுடையவருக்கும் அது அதிகமாய் கூடும்போது அதை அடையும் வழியில் தம் பண்புகளை தொலைத்து விடுகிறார்கள்... தவறு என்று தெரிந்தாலும்...! பண்புள்ள மனிதராய் வாழ்ந்து நம் பிள்ளைகளையும் அவ்வாறு வளர்க்கும் போதுதான் இந்த அவலங்கள் மாறும்...! இந்த மாற்றம் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்! என் தோழி பெரிய அபார்ட்மெண்ட்டில் இருக்கிறார்...படித்தவர், அரசு வேலையில் இருப்பவர்.... மிகவும் எளிமையானவர்... தம் பிள்ளைகளோடு அபார்ட்மெண்ட் குழந்தைகளையும் சேர்த்து நல்ல நல்ல சிந்தனைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதைக்கிறார்....! அந்த அபார்ட்மெண்ட்டில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நாளைய நல்ல சமுதாயங்களாகத்தான் தெரிகிறார்கள்...! உங்கள் சிந்தனைகளும் அப்படித்தான் தோன்றுகிறது. சகோதரா சிறப்பான நடை போடுங்கள்.... நல்ல சமுதாயம் நம் வசம்!
ReplyDeleteசகோதரிக்கு நன்றிகள். தங்கள் ஊக்கம் தான் நான் என்னை மெருகேற்றிக் கொள்ள உதவுகிறது. தங்கள் தோழியின் செயல் கண்டு மெய்சிலிர்க்கிறேன். நாங்களேல்லாம் அடியொற்றி நடை போட உங்களைப் போன்ற படைப்பாளிகள் இருப்பது தான் எனக்கு தன்னம்பிக்கை. திறமை எவரிடமிருந்தாலும் அவர்களை முதல் ஆளாக சென்று தங்கள் குணம் கண்டு வியக்கிறேன். தொடர்க சகோதரி. மிக்க நன்றி..
Deleteசிந்தனையைத் தூண்டும் சிறப்பான ஆய்வு!
ReplyDeleteநன்றி ஐயா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும். தங்கள் கருத்து கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
Deleteநல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்..
Deleteபடித்தவர்கள் தவறு செய்யும் போதெல்லாம்
ReplyDeleteகுற்றவாளி கூண்டில் நிறுத்தபடுகிறது
நம் கல்வி முறை !
ஆனாலும் பயன் என்ன
மார்க்கு மாயையிலிருந்து
நாம் மீளத்த வரை !!
கல்வி சாலைகள்
இன்று கைவிலங்கு
பூத்த சிறை !!
பாடுவோர் பலரும்
பாடிவிட்டனர் -இனியாவது
நாம் (ஆசிரியர் )சிந்திப்பதே முறை!!
கண்டிப்பாக சகோதரி. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடக்க போவதில் நமது பங்கு என்ன என்பதை அனைவரும் சிந்திப்பதே சரியானது எனும் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள்.
Deleteபடித்தவர்கள் சாமார்த்தியமாக தவறு செய்கிறார்கள். எனபதும் உண்மைதான்
ReplyDeleteநல்ல விஷயங்கள்
வருகை தந்து எனது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கருத்தும் தந்தமைக்கு நன்றிகள் சகோதரர்.
Deleteமிக அருமையாக கருத்தை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி!..
ReplyDeleteஇருப்பினும் - படித்தவரோ படிக்காதவரோ - அவரவர்க்கு சூழ்நிலை இடம் கொடுக்கும் போது மனம் துணிந்து தவறு செய்கின்றனர்.
இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கின்றது.
நல்லொழுக்கம் என்ற உணர்வு இரத்தத்தில் ஊறியிருந்தால் தான் - அவலங்கள் தீரும்.
ஐயாவின் கருத்து மிகுந்த பின்னூட்டத்திற்கும் அன்பான வருகைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
Delete“பொதுவாக படிக்காதவர்கள் மீது ஏமாற்றத்தெரியாதவர்கள் என்னும் நமக்கு உண்டு. காரணம்அவர்கள் யாரையும் ஏமாற்றுவது இல்லை. நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். முறைப்படி எல்லாம் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அனைவருக்கும் மதிப்பு தர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், படித்தவர்கள் மத்தியில் இந்தப் பழக்கமெல்லாம் அறவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நேர்மையும், உண்மையும், மரியாதை தரும் பழக்கமும் கேள்விக்கு உரியதாகிவிட்டது” நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் பாண்டியன், இப்போதும் படித்த ஒருவர் செய்யும் தவறைப் பார்த்த படிக்காத கிழவி, “நீயெல்லாம் படிச்சவனா?” என்று ஒரு கேள்வியை வீசும் பாருங்கள்... அது நம்மையெல்லாம் உறுத்துகிறதிலலையா? இந்தக் கல்வி முறையை மாற்றவேண்டும் என்று பாரதிதொடங்கிய மாற்றுக் குரலை பாண்டியனும் தொடருங்கள்... பாராட்டுகள்...
ReplyDeleteவணக்கம் ஐயா தங்களைப் போன்றோரைப் பின் தொடர்வதன் விளைவாக எனது சிந்தனைகள் மேம்படுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஒரு பக்கம், அச்சிந்தனையை நீங்கள் ஏற்றும் சிறப்பான கருத்துக்கும் தந்து ஊக்கப்படுத்தும் போது தங்களது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் அச்சமும் மறுபக்கம். இருப்பினும் இனிமையான இலக்கியங்களைக் கண்டும் படைக்கவும் எனது முயற்சியைத் தொடர்கிறேன். எல்லா விதத்திலும் என்னைப் போன்றோரை ஊக்கப்படுத்தும் தங்களுக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்ந்து பயணிப்போம்.
Deleteநல்ல கருத்து சகோ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
மிகுந்த நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteநல்லதொரு பதிவு! பார்க்கப் போனால் படித்தவர்கள்தான் அதிகம் தவறு செய்கிறார்கள். அதாவது படிக்காதவர்கள் தவறு செய்தாலும், தவறு செய்யும் படித்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், அது அதிகமாகத்தான் தெரியும் ஏனென்றால் படித்தவர்கள் சிந்த்தித்துப் பார்க்கலாமே! சிந்திக்கும் திறன் இல்லாத படிப்பு படிப்பே அல்ல. அறிவுத் திறனை வளர்க்காத படிப்பும் படிப்பே அல்ல. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போலத்தான்! படித்தவர்கள் தங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற மனப்பாங்கினால் தான் தவறுகள் அதிகம் நடக்கின்றன!!...
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்
Deleteதங்கள் வருகைக்கும் தித்திக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி..