அரும்புகள் மலரட்டும்

Thursday, 29 January 2015

மாணவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களும் ஆபாச படங்களும்


வளர்ந்து வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கே கையாளத் தெரியாத அலைபேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும்.

Monday, 26 January 2015

உலக வரலாற்றில் ஒரு மொழிப் போர்- தி இந்து-கட்டுரை

சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி...

Sunday, 25 January 2015

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா?

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

Friday, 23 January 2015

மாதொருபாகனும் மகாபாரதமும் ( திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவு)

படைப்புச் சுதந்திரம் எதுவரை நீளலாம் என்னும் வினாவிற்கு உடனடி விடை ஏதுமில்லை என்றாலும், அடுத்தவர் சுதந்திரத்தைப் பாதிக்காத வரை அல்லது பொது ஒழுங்கைக் கெடுக்காத வரை என்ற விடையே பெரிதும் கூறப்படுகின்ற ஒன்றாகும்! எனினும்,அடுத்தவர் சுதந்திரம் என்பது எதுவரை அல்லது பொது ஒழுங்கு என்றால் என்ன, அதனை யார் தீர்மானிப்பது என்னும் வினாக்கள் எழும்போது, மீண்டும் முதல் வினா விடையற்றே நிற்கிறது. எவ்வாறாயினும், படைப்புச் சுதந்திரத்திற்கு எந்த எல்லையும் கிடையாது என்னும் கூற்றில் நம்மால் உடன்பட முடியவில்லை. அது பற்றிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்றே தோன்றுகிறது.

Tuesday, 20 January 2015

38 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி- படப்பதிவு

கல்வியின் மெக்கா என்றழைக்கப்படும் பின்லாந்து கல்விமுறை - ஒரு பார்வை


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
பின்லாந்து என்ற நாடு நோக்கியா அலைபேசிகளின் மூலம் நமக்கு அறிமுகம்.
நோக்கியா நிறுவனத்தின் தாய்நாடு பின்லாந்து. உலக அளவில் 'கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவதும் அதே பின்லாந்துதான்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட
நிலையில் இருந்தாலும் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில்
பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

Sunday, 18 January 2015

அரசின் உதவியோடு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் கொள்ளைகள்

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!