ஆஹா! மனம் ஆனந்தத்தில் கூத்தாடுகிறது, புதுக்கோட்டை நகரம் மட்டுமல்ல இணைய நண்பர்களின் இல்லங்கள் தோறும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. இணையத்தில் சந்தித்து இதயத்தில் இடம் பிடித்த அத்தனை உறவுகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கிறோம் என்றால் இல்லங்கள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களும் எண்ணங்களும் புதுகையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நானறிவேன். இனி என்ன இதோ அழைப்பிதழ் வந்தாச்சு. இணைய வாயிலாகவும், அஞ்சல் வாயிலாகவும் அழைப்பிதழ் உங்களின் இல்லத்து வாசலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல் எல்லாம் உங்களது மைக்ரோ சாப்ட் (விண்டோஸ்) சன்னலில் வழியே எகிறி குதித்து உங்களை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே! ஈரோடு, மதுரையை அடுத்து புதுக்கோட்டையில் புது விதமா சந்திக்க இருக்கிறோம். கவிதை ஓவியக் கண்காட்சி, தமிழிசைப்பாடல்கள், பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை, போட்டிக்கான ரொக்க பரிசு மற்றும் கேடயம், பதிவர்கள் கையேடு என நமது சந்திப்பு புதுமையாகவும் அருமையாகவும், பிரமாண்டமாகவும் நடக்க இருக்கிறது. புது பட ரீலீஸை விட ஆர்வத்தை அதிகமாகியிருக்கிறது நமது சந்திப்பு.
இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும், விழாவிற்கு தமிழாய்ந்த சான்றோர்களும், கல்வி அலுவலர்களும், கருத்தியல் சிந்தனையாளர்களும் வர இருக்கிறார்கள். அப்ப நீங்க? அட போப்பா! நாங்க எல்லாம் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்து பல காலம் ஆகிடுச்சு. எப்ப 11.10.2015வ் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று தானே சொல்கிறீர்கள். வாருங்கள் நண்பர்களே எங்களின் இதயக்கதவுகள் மட்டுமல்ல எங்களின் இல்லக் கதவுகளும் உங்களுக்காக காத்திருக்கிறது. வருக வருக என அன்போடு அழைக்கிறது விழாக்குழு. அவசியம் வரவும். எங்களின் விழிப்பார்வைகள் உங்களின் வருகையை நோக்கி. நன்றி..
அருமை,,,,,விழா சிறக்க வாழ்த்துக்கள்/
ReplyDeleteவிழாவில் சந்திப்போம் அய்யா. மிக்க மகிழ்ச்சி
Deleteஇது நம் வீட்டு விஷேசம்
ReplyDeleteஅதனால் முதல் நாளே வந்திடுவோம்
விழாவில் சந்திப்போம் அய்யா. மிக்க மகிழ்ச்சி
Deleteநமக்காக நாம் அழைக்கும் அழைப்பிதழ் கண்டேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.
ReplyDeleteவிழாவில் சந்திப்போம் அய்யா. மிக்க மகிழ்ச்சி
Deleteஆசிரியர் தம்பி பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.
ReplyDeleteவிழாவில் சந்திப்போம் அய்யா. மிக்க மகிழ்ச்சி
Deleteஅருமை நண்பரே
ReplyDeleteபுதுகையில் சந்திப்போம்
தம +1
விழாவில் சந்திப்போம் அய்யா. மிக்க மகிழ்ச்சி
Deleteசூப்பர்பா
ReplyDeleteநன்றிங்க சகோதரி. பம்பரமா சுழன்றுக் கொண்டிருக்கிறீர்கள் பாராட்டுகள் சகோதரி..
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிழாவில் சந்திப்போம் சகோதரர். மிக்க மகிழ்ச்சி
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteத ம+1
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம்அறம்
நன்றி