`அப்பப்பா என்னா என்னா வெயிலு வீட்டை விட்டு நாலு எட்டு வைத்தாலே வாட்டி வதைக்குதடா மனிசனே! மண்டையெல்லாம் கிறுகிறுனு சுத்துதடா எப்பதான் இந்த வெயிலு குறையப் போகுது` என்று புலம்பித் தீர்ப்பவர்களிடம் அடே ஞானசூனியங்களா மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு இப்படி புலம்புறதுல என்னடா நியாயம் இருக்குனு அவங்க நடு மண்டைல நச்சுனு உரைக்கிற மாதிரி நீங்க சொல்லனும்னு ஆசைப் படுகிறீர்களா!
அப்படினா நீங்க தான் எங்களுக்கு தேவை. ஏ4 பேப்பர் எடுங்க நான்கு பக்கங்களுக்கு
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டி
சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் ஆகியவற்றை எழுதி அதற்கு பொருத்தமான தலைப்பு ஒன்னு தாங்க. அப்படியே உங்களோட வலைப்பக்கத்துல வெளியிட்டு விழாக்குழு மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்க. கட்டுரை எழுதுறேன் இப்ப வலைப்பக்கத்துல வெளியிட மின்னஞ்சல் அனுப்பிட்டு இறுதி நாளில் வெளீயிடுறேனு நீங்க சொன்னாலும் சரி தான்.
-------------------------------
`ஏ இந்த அப்பு வெளியில போன தான் வெயிலு கொளுத்துனு எங்களுக்கு தெரியும்ல அதான் நாங்க வீட்டுக்குலயே கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துட்டோம்ல. பொருள் வாங்கக் கூட வெளியில போறதுல எல்லான் ஆன்லைன்ல வாங்கிக்கிறோம்னு சொல்றீங்களா` அட அப்படினா நீங்களும் தான் எங்களுக்கு தேவை கையில ஏ4 பேப்பர் எடுங்க சுற்றுச்சூழல் கட்டுரை எழுதனவங்களுக்கு நாங்க ஒன்னும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபியுங்க!
நீங்க என்ன பண்ணனும்னா
கணினியில் தமிழ்வளர்ச்சி பற்றிய கட்டுரைப்போட்டி
கணினியில் தமிழ் வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வமான யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும். (கணினி பற்றியவை மட்டுமல்ல நவீனகாலத்தில் தமிழ் வளர்ந்துள்ள அனைத்துப் புதிய துறையும் அடக்கம்) போட்டியில கலந்துக்கங்க.
-------------------------------
வலை நண்பர்கள்னு சொல்றது நம்ம பெண்பதிவர்களையும் சேர்த்துத் தான். வலைப்பக்கத்துல எழுதினோம் நம்ம நண்பர்கள் வந்தாங்க நல்லவிதமா நாலு கருத்து போட்டாங்க அது போதும் நமக்குனு நினைக்காமே நீங்களும் பேனா பேப்பரைக் கையில எடுங்க. அட உங்களை மட்டும் எடுக்கச் சொல்லலங்க (நாங்களும்) ஆண்களும் தான் உங்களுக்காக எடுக்கிறோம். போதும் நிறுத்துப்பா தலைப்பு என்ன சொல்லுப்பானு நீங்க கேட்கிறது எனக்கு கேட்டாச்சு. இதோ தலைப்பு எழுதி சும்மா அசத்துங்க.
பெண்கள் முன்னேற்றம் பற்றிய கட்டுரைப்போட்டி
பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4 பக்கம் - தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்
--------------------------------------
பாட்டும் நானே பாவமும் நானேனு என்று புலம்புகிட்டு பாட்டு எழுதிகிட்டு இருக்கிற நண்பர்களே கொஞ்சம் நிமிர்ந்து உட்காருங்கப்பா. உண்மையில நீங்க பாவம் இல்லப்பா. உங்களை நிருபிக்க இதோ ஒரு போட்டி காத்திருக்கு நீங்களும் எழுதி பரிசு பெற வாங்கப்பா. அட உண்மையிலேயே உங்களுக்கு இரண்டு வாய்ப்பு. அது என்னன்னா?
புதுக்கவிதைப் போட்டி
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு...
மரபுக்கவிதைப் போட்டி
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் - அழகியல் ஒளிரும் தலைப்போடு....
மேற்கண்ட தலைப்புல எழுதுங்க சும்மா பட்டைய கிளப்புங்க நண்பர்களே!போட்டியின் முடிவுகள் சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் காத்துக்கிட்டு இருக்கு என்பதை மறவாதீர்கள் நண்பர்களே!
--------------------------------------
அதெல்லாம் சரிப்பா. இந்த போட்டியை யாரு நடத்துறது போட்டினு பரிசுனு சொல்லிட்டு அப்பறம் கொடுக்காம எல்லாம் போக மாட்டாங்களே! போட்டி நடத்துறவங்க நம்பிக்கையானவங்க தானா! பரிசுகள் எல்லாம் எந்த இடத்துல வச்சு கொடுக்க போறாங்கனு ரொம்ப குழம்பிக்காதீங்க அதையும் நானே சொல்லிடுறேன்.
-----------------------------------------
நம்ம தமிழக அரசு தாங்க எல்லாம் பரிசு தரப்போகுது. கொஞ்சம் விவரமா சொல்லட்டமா? “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகமும் வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டையும் சேர்ந்து நடத்தி
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
11.10.2015 அன்று புதுக்கோட்டையில வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவில் வைத்து உங்களுக்கு எல்லாம் பரிசும் கேடயமும் தர இருக்காங்க! அப்பறம் என்ன இனியும் தயக்கம் படைப்புகளை எழுதுங்கப்பா பரிசுகளை வாங்குங்க. உலகளவில் பேரும் புகழும் பெறுங்கள்.
போட்டி குறித்த மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கி தெரிஞ்சுங்க
செய்வீர்கள் எனும் நம்பிக்கையோடு அ.பாண்டியன்
---------------------------------------
நண்பர்களே!
தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம் வெறுமனே இப்போட்டியை வைக்கவில்லை. வலைப்பக்கங்களின் வீச்சு என்ன? வலைப்பக்கத்தில் எழுதுபவர்களின் திறன் என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக தான். ஆகவே நாம் அதிகமான செறிவான படைப்புகளைத் தந்து தமிழக அரசையே நாம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும். இணையத்தில் இவர்கள் பொழுதுபோக்குவர்கள் அல்ல. கணினித் தமிழால் நாளைய உலகைப் புரட்டிப் போடுபவர்கள் எனும் எண்ணத்தை நாம் போட்டி அமைப்பாளர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்.செய்வீர்கள் எனும் நம்பிக்கையோடு அ.பாண்டியன்
அஹஹஹஹஹா!!! செம!! செம!! வாங்க தம்பி வாங்க!! இப்போதான் full form ளா பழையபடி வந்துருக்கீங்க!! கலக்குங்க!!
ReplyDeleteவந்துட்டோம்ல அக்கா. இனி கலக்கல் தான். கருத்துக்கு நன்றிங்க அக்கா.
Deleteநிச்சயம் விதைப்போம் நண்பரே
ReplyDeleteநன்றிங்க அய்யா. சந்திப்போம்.
Deleteதம =1
ReplyDeleteநன்றிங்க அய்யா.
Deleteபோட்டிகள் குறித்த அறிவிப்பை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். நீங்களும் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற இனிய வாழ்த்துகள்.
ReplyDeleteகருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரி.
Deleteஇணையத்தில் இவர்கள் பொழுதுபோக்குவர்கள் எல்லாம் கணினித் 'தமிழால் நாளைய உலகைப் புரட்டிப் போடுபவர்கள் எனும் எண்ணத்தை நாம் போட்டி அமைப்பாளர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்' விழாவின் மைய நோக்கத்தைச் சரியாக எளிமையாக கதைப்போக்கில் சொல்லிவிட்டீர்கள் கவிஞரே! அருமை அருமை!
ReplyDeleteசீரிய தலைமையின் கீழ் பணியாற்றுகிறோம் எனும் உத்வேகம் தான் இது எல்லாம். இதற்கெல்லாம் முதன்மையான காரணம் நீங்கள் தான் என்பதை நண்பர்களுக்கு பெருமையோடு தெரிவிப்பேன். கருத்துக்கு நன்றிங்க அய்யா. கவிஞர்னு சொல்லியிருக்கீங்களே அய்யா ம்ம்ம் புரியுது போட்டிக்கு எதாவது உருப்படியா நல்ல கவிதைகளை எழுதுடானு தானே சொல்கிறேன். அவசியம் எனது படைப்புகளும் இடம் பெறும் அய்யா. சந்திப்போம்.
Deleteநல்ல ஊக்கத்தினைத் தரும் பதிவு. அனைவரையும் ஈர்க்கும் முறை அருமை.
ReplyDeleteவலைப்பதிவர்களை எல்லாம் புதுகைநண்பர்களின் செயல்பாடு இழுக்கிறது அய்யா. விழாவில் சந்திப்போம் நன்றிங்க அய்யா.
Deleteபோட்டிக் குறித்த பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்களுக்கு நன்றிகள். விழாவில் சந்திப்போம் சகோதரர்.
Deleteஅண்ணா மீண்டும் தங்களுக்கு எனது தலைவணக்கங்கள்> புதுகையில் சந்திப்போம்.
ReplyDeleteவிழா சிறக்க எனது வாழ்த்துகளும்.....
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சகோதரர்.
Delete