அரும்புகள் மலரட்டும்: தமிழால் இணைந்திடுவோம்! புதுக்கோட்டை வாரீர்!

Tuesday, 22 September 2015

தமிழால் இணைந்திடுவோம்! புதுக்கோட்டை வாரீர்!


பாண்டியரும் களப்பிரரும்
களம் கண்ட கோட்டை
பல்லவர்களோடு முத்திரையர்கள்
வெற்றி முகம் பதித்த கோட்டை


முத்திரையரின் தலைமையிடம்
நார்த்தாமலை அமைந்த கோட்டை
உலகப்புகழ் ஓவியமாம் சித்தன்னவாசல்
ஓவியங்கள் அமைந்திருக்கும் கோட்டை

சேதுபதி விஜயரகுநாத தேவரால்
கட்டியெழுப்பிய எழிலுறும் கோட்டையாம்
திருமயம் கோட்டையைத் தாங்கிய கோட்டை
எழுத்தாளர்கள் பலர் வா(ழும்)ழ்ந்த கோட்டை

நரிகளைப் பரிகளாக்கிய மாணிக்கவாசகர்
எழுப்பிய ஆவுடையார் கோவிலைத் தந்த கோட்டை
சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற கொடும்பாளூர்
மூவர் கோவில் கொண்ட கோட்டை

பாறையில் குடைந்தெடுத்த திருக்கோர்கர்ணம்
பிரகந்தம்மாள் குடியிருக்கும் கோட்டை
திசைகள் நான்கிலும் சமணச் சின்னங்கள்
கண்ணுக்கு காட்சி தரும் கோட்டை

கர்நாடக சங்கீத ஸ்வரம் குறித்த கல்வெட்டு
அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்களும்
அறிந்து கொள்ள குடுமியான்மலை கொண்ட கோட்டை
மயில்கள் சரணாலயம் விராலிமலையிருக்கும் கோட்டை

இணையவலை பின்னிடவே படைப்பாளிகளை
இழுக்குது எம் புதுக்கோட்டை
வலைப்பூக்களெல்லாம் ஓரிடத்தில் மணம்வீச
அழைக்குது எம் புதுக்கோட்டை
----------------------------------------------------------------------------------------------

வலைப்பதிவர் சந்திப்பு 2015


புதுக்கோட்டையில் 11.10.2015 அன்று வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா நடைபெறவிருக்கும் செய்தியினை அன்பிற்குரிய வலை நண்பர்கள் அனைவரும் அறிந்ததே! இதுவரை நடந்து முடிந்த சந்திப்புகளில் கிடைத்த அனுபவங்கள், விழா ஒருங்கிணைப்பாளர் திரு.முத்துநிலவன் அய்யா அவர்களின் சிந்தையில் உதிக்கும் நேர்த்தியான திட்டமிடல் ஆகியவைத் தான் உலகமெங்கும் தமிழ் பேசும் அனைவரும் நமது விழாவை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்களெல்லாம் நன்கறிவீர்.

பதிவர் சந்திப்பில் முதன்முறையாக

தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“ இணைந்து நடத்தும் போட்டி நடத்தப்பட இருக்கிறது.

மின் தமிழ் இலக்கியப் போட்டி குறித்த செய்திக்கு இங்கே சொடுக்குங்கள்

இதற்காக அனைவரும் தங்கள் மூளையைக் கசக்கி படைப்புகளை எழுதி வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். அத்தோடு நிறுத்தி விடாது நம் நண்பர்களுக்கும் போட்டி குறித்த செய்தியினைச் சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளவும்.
---------------------------------------------------------------

வலைப்பதிவர் கையேடு


வலைப்பதிவர்களை ஒருங்கிணைத்து இணையத்தமிழை வளர்த்திடும் முயற்சியாக வலைப்பதிவர்கள் பட்டியல் கொண்ட கையேடு தயார் செய்யப்பட இருப்பதும் நாம் அறிந்ததே. அதற்கான விவரங்களை நாம் அனுப்பியதோடு அமர்ந்து விட்டால் எப்படி? நமக்கு தெரிந்த இலக்கிய நண்பர்களை எல்லாம் அழைத்து போட்டி குறித்த செய்தியைப் பகிர்ந்த கையோடு வலைப்பக்கம் ஒன்றை அவர்களுக்கு தொடங்கி அந்த முகவரியையும் அவர்களது புகைப்படத்தினையும் விழாக்குழுவிற்கு அனுப்பி வைப்பதும் நமது தலையாய கடமை நண்பர்களே!
---------------------------------------------------------------

நிதியும் அவசியம்!


அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு 
என்பதும் வள்ளுவர் வாக்கு

தற்போது விழாக் குழுவிற்கு அருளைப் பற்றி நமக்கு கவலையில்லை ஆனால் பொருளைப் பற்றிய கவலை பெரும்கவலை தான். நண்பர்கள் நீங்களெல்லாம் இருக்கும் தைரியத்தில் தான் ஆழமான திட்டமிடலோடு விழாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மறந்தும் இருந்து விடாதீர்கள் நண்பர்களே!

நம்மாலான ஒரு சிறு தொகையை நிதியாக தர வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அப்பொழுது தான் விழா சிறப்பாக நடைபெறுவதைக் காணும் போது மகிழ்ச்சியும் நமது சிறு தொகையும் இவ்விழா சிறப்பாக நடைபெற உதவியிருக்கிறது எனும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும் நண்பர்களே! வேலையோடு வேலையாக செலவோடு செலவாக இதையும் செய்து விடுங்களேன்.

---------------------------------------------

நிதியளிக்க வேண்டிய வங்கி எண் மற்றும் வங்கி

விபரம்

NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645

BANK NAME - STATE BANK OF INDIA, 
PUDUKKOTTAI TOWN BRANCH 
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

22 comments:

  1. வணக்கம்
    சகோ..

    புதுக் கோட்டையின் சிறப்பை கவிதையின் வாயில் அறியத்தந்தமைக்கு நன்றி... நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள் நான் வரா விட்டாலும் எனது சார்பா வருவார்கள்.. நிச்சயம்... த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தந்து வாக்கும் அளித்தமைக்கு எனது நன்றிகள் சகோ. தங்கள் ஒத்துழைப்பு எப்பவும் இருக்கும் என்பதில் என்றும் எங்களுக்கு ஐயம் வந்ததில்லை. வாழ்த்துகள் சகோ.

      Delete
  2. கவிதைஅருமை நண்பரே
    புதுகையில் சந்திப்போம்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா. சந்திக்க காத்திருக்கிறேன்

      Delete
  3. வணக்கம் பாண்டியன் அருமை
    நார்த்தமலை குறித்து இன்னொரு கோணத்தையும் அறிந்தேன்..
    நன்றிகள்
    தம +

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ
      கருத்துக்கு நன்றி. வந்து கொண்டிருக்கிறேன் இன்னும் ஒரு மணி நேரத்தில் சந்திப்போம்.

      Delete
  4. புதுக்கோட்டைச் சிறப்புச் சொல்லி
    புதுக்கோட்டை வாரீர்! என்று
    பதிவர் சந்திப்புப் பற்றி
    அழகான பாவரிகளில்
    அறியத் தந்தீர்!

    முன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு!
    http://www.ypvnpubs.com/2015/09/blog-post_18.html

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றிங்க அய்யா. தங்களைப் போன்றோரின் ஊக்கத்தினால் விழா சிறக்கயிருக்கிறது. தங்களின் வலைப்பக்கம் வருவேன். நன்றிங்க அய்யா.

      Delete
  5. அருமை நண்பரே நிச்சயம் இனைவோம்.

    ReplyDelete
    Replies
    1. புதுகையில் சந்திப்போம் நண்பரே. கருத்துக்கு நன்றி.

      Delete
  6. கவிதையாகவே சொல்லிச்சென்ற விதம் சிறப்புங்க சகோ. விழாவில் தங்கள் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. வாழ்த்துகளுடன் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
      நலமாக உள்ளீர்களா? எனது பங்களிப்பு என்பது கடுகளவு தான் சகோதரி. நேர்த்தியான தலைமையின் கீழ் செயல்படுகிறோம் அவரிடமிருந்து கற்றுக் கொள்கிறோம் என்பது மகிழ்ச்சியான விசயம். கருத்துக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள் சகோதரி.

      Delete
  7. கவிபாடி வரவேற்றமைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு பாராட்டியமைக்கு நன்றி சகோதரர். முக்கியமாக நிதியுதவி அளித்தமைக்கு அன்பு நன்றிகள்.

      Delete
  8. Replies
    1. இணைவோம் இளைஞர்கள் அனைவரும் இணைந்தே செயல்படுவோம். கருத்துக்கு நன்றி நண்பரே.

      Delete
  9. விழா சிறக்க எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. கடல் கடந்தும் விழா பற்றிய சிந்தனையோடு தாங்கள் இருப்பது எங்களுக்கெல்லாம் மகிழ்வான விசயம். தாயகம் வரும் தெரியப்படுத்துங்கள் சந்திப்போம். கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரர்.

      Delete
  10. புதுக்கோட்டையின் வரலாறையே ஒரு பாட்டுக்குள் கொண்டுவந்துவிடீர்களே!!! சூப்பர் தம்பி!!

    ReplyDelete
    Replies
    1. அக்கா உங்க அளவிற்கு இல்லாவிட்டாலும் ஏதோ என்னால் முடிந்தவற்றை எழுதியிருக்கிறேன். வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு அன்பு நன்றிகள்.

      Delete
  11. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாயிற்று...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/2015.html

    புதுக்கோட்டை விழாக்குழு சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அளப்பறிய பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சகோதரர்.

      Delete