Sunday, 12 July 2015

பிளாஸ்டிக் அரிசி வாங்கலையோ... பிளாஸ்டிக் அரிசி...

அரிசிகளில் கலக்கப்படும் சீன பிளாஸ்டிக் அரிசியானது சீனிக்கிழங்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் என்ற பிரச்சினை பூதாகரமாக உருவாகியுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரசாயனம் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு தரப்படும் சத்துப் பானங்கள் உட்பட வேறு சில உணவுப் பொருட்களிலும் பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.

அரிசியிலும் கலப்படம்...
இந்நிலையில், இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு...
இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் சுக்ரீவ துபே என்ற வக்கீல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘உலகமயமாக்கல் காரணமாக சீனாவில் இருந்து அரிசி அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும், ஆனால், தரபரிசோதனை செய்யப்படாத அந்த அரிசியைச் சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணை...
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20-ந் தேதி இந்த வழக்கை தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது. மக்கள் குழப்பம்... இந்த வழக்கு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதைத் தான் நல்ல பொருள் என நம்பி சாப்பிடுவது என்ற குழப்பத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

நிஜ அரிசி போலவே...
இந்த பிளாஸ்டிக் அரிசிகள் பார்ப்பதற்கு நிஜ அரிசி போலவே காணப்படும். இவை சீனிக் கிழங்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப் படுகின்றன. அவற்றை வெறும் கண்களால் தரம் பிரிக்க இயலாது.

வீடியோ...
பிறகு சாதாரண அரிசியில் இருந்து பிளாஸ்டிக் அரிசிகளை எவ்வாறு தரம் பிரிப்பது என குழப்பமாக இருக்கிறதா? அதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

சமைத்தால் மட்டுமே...
அதன்படி, சமைத்தால் மட்டுமே பிளாஸ்டிக் அரிசியை தரம் பிரிக்க இயலும். சாதாரண அரிசியைப் போல் வேக வைத்ததும் இந்த பிளாஸ்டிக் அரிசி கைகளில் ஒட்டாது. காயவைத்த பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டில் சீனிக்கிழங்கு வாசனை வரும்.

பிளாஸ்டிக் படலம்...
இந்த பிளாஸ்டிக் அரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் சூப்களில் மேலே பிளாஸ்டிக் போன்ற மெல்லிய படலம் படியுமாம். மேலும், அது தீப்பிடிக்கக் கூடியது என்கிறார்கள்.

இரைப்பை நோய்...
இவ்வளவு அபாயகரமான பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டால், இரைப்பை நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகமாம். மூன்று கப் பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால், ஒரு முழு பிளாஸ்டிக் பையையே சாப்பிட்டதற்கு சமம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மிரட்டும் கலப்படங்கள்...
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த கலப்பட அரிசியை தெரிந்தோ, தெரியாமலோ வியாபாரிகள் விற்று வருகிறார்களாம். பாக்கெட் பொருட்களில் கலப்படம் என்பதால், இயற்கைப் பொருட்களைச் சாப்பிடலாம் என்றால் இதிலும் வேறு வகையான கலப்படங்கள் மிரட்டுகின்றன.

தன் கையே தனக்குதவி...
பேசாமல் நமது மூதாதையர்கள் மாதிரி நாமும் எங்காவது கொஞ்சம் நிலத்தை வாங்கிக் கொண்டு, நாமே உழுது, நாமே பயிர் செய்து பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத, கலப்படம் இல்லாத உணவுகளை உருவாக்கி சாப்பிட வேண்டியது தான்.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

10 comments:

 1. நாட்டின் மிகப்பெரிய கேந்திரமான தொழிலான விவசாயத்தைப்பற்றி நாம் கவலை கொள்ளாத வரை இதெல்லாம் நடக்கும்தான்/

  ReplyDelete
 2. விவசாயிகள் தற்கொலை தடுப்பு,
  விவசாயிகள் பயிர் பாதுகாப்பு இவற்றில் மக்களின் கவனமின்மை.

  ReplyDelete
 3. இருக்க விவசாய நிலத்தை பிடுங்கிக்கொண்டு
  பிளாஸ்டிக் அரிசியை உண்ணக் கொடுக்கும் தலைவர்கள் வாழ்க

  ReplyDelete
 4. வணக்கம்
  சகோ
  ஒவ்வொன்றையும் பற்றி சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. மிகவும் அதிர்ச்சிதரும் செய்தியாக இருக்கிறதே...விவசாயம் அவ்வளவு கேவலமாகிவிட்டதா என்ன நம் நாட்டில்...

  ReplyDelete
 6. அதிர்ச்சித் தகவல் நண்பரே
  கலப்படம் கலப்படம் கலப்படம்
  கலப்படமில்லா பொருள் ஏதுமிருக்கிறதா என்ன
  நன்றி நண்பரே
  தம +1

  ReplyDelete
 7. உலகமயமாக்கள் எவ்வளவு கொட்டுமையை செய்கிறது பாருங்கள் உண்மையில் உணவில் கலப்டம் என்பதுபோய் இப்போது உணவே கலப்ப்படமகிவிட்டது மக்கள் விழித்தால் மட்டுமே வாழ்வு ... சிந்திப்போம் ...

  ReplyDelete
 8. வேதனையான செய்தி. தங்கள் பதிவு மூலமாகத் தான் முதன்முதலில் அறிந்தேன்.

  ReplyDelete
 9. அதிர்ச்சியான செய்தி...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete