அரும்புகள் மலரட்டும்: பேயினாலும் பயம் - பி இ னாலும் பயம் (சம்பவங்களும் சங்கடங்களும்)

Wednesday, 24 June 2015

பேயினாலும் பயம் - பி இ னாலும் பயம் (சம்பவங்களும் சங்கடங்களும்)


ஸ்டெபி கிராபை நினைவிருக்கிறதா..
ஒரு காலத்தில் டென்னிஸ் உலகில் நம்பர் ஒன் வீராங்கனையாக வலம் வந்தவர். என்பது தொன்னூறுகளில் டென்னிஸ் உலகில் பரபரப்பாகிய விளையாடிய ஸ்டெபி 107 பதக்கங்களை வென்றவர். அதில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் அடக்கம். இப்ப அவங்க கேரளாவையும் கலக்க இருக்காங்க. எதாவது கேரளாவுல டென்னிஸ் போட்டி நடத்த போறாங்களுனு தானே கேக்க வரீங்க அது இல்லங்கோ விசயம் கேரள அரசு ஸ்டெபி கிராபியை கேரள ஆயுர்வேத மருத்துவத்தின் விளம்பரத் தூதுவராக நியமித்து இருக்கிறார்கள் என்பது தான் செய்திங்கோ ( இனிமே ஸ்டெபி டிவியில அடிக்கடி பார்க்கலாம்)...

இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா போகனும்..?
இந்திய கிரிக்கெட் அணியை டோணி அணி, விராட் கோஃலி அணினு வீரர்கள் அவர்களுக்கு வசதிக்கேற்ப பிரிச்சிட்டாங்கங்ற செய்தி நாம எல்லோரும் அறிந்தது தான். இதுல நம்ம அண்ணன் விராட் கேப்டன் பதவியை எப்படியாவது பிடிச்சுடுனும்னு தீவிரமா இருக்கிறார்னு செய்தி கூட நம்ம காதுக்கு வந்தது. ஆனா அந்த விராட் இப்ப நடந்துட்டு இருக்கிற வங்கதேச ஒரு நாள் தொடர்ல அடிச்ச ரன் எத்தனை தெரியுமா நண்பர்களே! முதல் போட்டியில் 4 ரன்கள், இரண்டாம் போட்டியில் 27, மூன்றாவது போட்டியில் 25. ( கோழி நல்ல விலைக்கு போகனும்னா நல்ல வளர்ந்த கோழியா இருக்க வேண்டியது அவசியம் தானே)...

பேய் என்றாலும் பயம். பி.இ என்றாலும் பயம்
என்னடா பேய்க்கும் பி.இ க்கும் முடிச்சு போட்டிடனு நீங்க கலவரமா என்ன பார்க்கிறது தெரியுது விசயத்துக்கு வந்திடுறேன். நம்ம அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்தின் மேலுள்ள பயத்தினைப் போக்க அவர்களுக்கு 15 நாட்கள் பள்ளி மற்றும் கல்லூரி இணைப்பு பயிற்சி என்ற சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது ( நல்ல விசயம் தான். அப்படியே மந்திரிச்ச தாயத்து கட்டி விட்டா மாணவர்களுக்கு பயம் போயிடும்னு கூட்டத்துல யாருப்பா சவுண்ட் கொடுக்கிறது)

ஜனாதிபதி செயலருக்கும் நேபாள ஹவாலா மன்னனுக்கும் தொடர்பாமே!
ஜனாதிபதி செயலருக்கும் நேபாள ஹவாலா மன்னனுக்கும் தொடர்பு என்று லலித் மோடி புது குண்டு ஒன்றைப் போட்டு விட்டுருக்காரு இந்த சப்தம் நம்ம காங்கிரஸ் காதுகளைத் துளைக்க சரவெடியா பிரச்சனையைக் கையில் எடுத்துப்பாங்கனு தானே யோசிக்கிறீங்க ! அப்படி எப்படிங்க நடக்கும் ஜனாதிபதியை நியமித்தவர்கள் காங்கிரஸ் காரங்க இல்லையா! அவருக்கெதிராக இந்த பிரச்சனையைக் கிளப்பி விடுவாங்களா அல்லது கீழே போட்டு அமுக்கிடுவாங்களுனு வர வாரத்துல தெரிஞ்சுடும். ( இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி லலித் அவர்களே நீங்க கொளுத்தி போட்டிருக்கிற புது குண்டுக்கு தலைப்பு ஒரு மார்க்கமே இருக்குதே கவனிச்சிங்களா!)

கோபத்தில திட்டு மெயில் அனுப்பிட்டீங்களா ? கவலை வேண்டாம் இனி ஈஸியா அழிச்சிடலாம்
யாரேனும் திட்டியோ, தவறாகவோ மெயிலை உணர்ச்சி வசப்பட்டு அனுப்பி விட்டீர்களா! இனி அதை நினைத்து கவலை வேண்டாம். அனுப்பிய குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப பெறும் வசதியை ஜிமெயில் அறிமுகம் செய்துள்ளது. இனி மெயில் அனுப்பும் போது கூடவே அன்சென்ட் எனும் பெட்டியும் கூடவே எட்டிப் பார்க்கும். ( நம்ம சோக்காளிகளுக்கு ஒரு நல்ல விசயம் யார் மீதாவது கோபம் வந்தால் மனதிற்கு வைத்து ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டாம் என்ன திட்டனமோ திட்டி அவருக்கே மெயில் அனுப்பி கோபத்தைக் குறைங்க வம்பு வேண்டாம்னு அடி மனசுல லைட்டா ஒரு அலாரம் அடிச்சா அசால்டா அந்த மெயில் அவருக்கு போகுமுன்னே திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்...)

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

5 comments:

  1. மின்னஞ்சலில் அனுப்பும் செய்தியை திரும்பப்பெறும் வசதி இருப்பதை தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  2. (கலாய்ப்பு நல்லா இருக்குங்க)

    ReplyDelete
  3. அனுப்பிய மடலை திரும்பப் பெறும் வசதி - நல்ல வசதியாகத் தான் தெரிகிறது.

    ReplyDelete
  4. சுவையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  5. செய்தியை விட அதுக்கு தகுந்தாற்போல தம்பி அடித்திருக்கும் கௌண்டார் ஒவ்வொன்னும் சுப்பர் ப்பா!!

    ReplyDelete