Wednesday, 11 February 2015

க00 - 100 - C - நூறின் வரலாறு

100 என்பது மூன்றிலக்க எண்களின் முதல் எண். எந்த எண்ணுக்கும் இல்லாத சிறப்பு இந்த நூறு எனும் எண்ணிற்கு உண்டு. எப்பவும் ஆண்டின் முதல் நாளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் போல மூன்றிலக்க எண்ணின் முதல் எழுத்தான நூறுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். பல துறைகளிலும் நூறு என்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அவை ஒவ்வொன்றாக காண்போம் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை வரிசை படுத்துகிறேன் கூடுதல் தகவல்களை நண்பர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.

தமிழில் சதகம்
தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம். சதம் என்பது நூறு எனப் பொருள்படும் வடமொழிச் சொல். ஆகவே நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.

வாழ்நாளில் நூறு
மனிதன் ஒருவன் 99 அகவை வரை வாழ்ந்தால் உலகத்தாரின் கவனத்திற்கு செல்கிறதா என்பது தெரியவில்லை 100 அகவைத் தாண்டி வாழ்கிறார் அல்லது நூறு அகவை வரை வாழ்ந்தார் என்று சொல்லும் போது மற்றவர்களின் கவனம் அவர்களின் மீது ஈர்க்கிறது. அதனாலோ என்னவோ 80 வயது ஆனால் கூட என் தாத்தா/பாட்டிக்கு நூறு வயது ஆகி விட்டது மிகையான பொய் கணக்கும் உலாவுகிறது.

மதிப்பெண்ணில் நூறு
மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பதை தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட கண்ணீர் துளிகளாய் கண்களைக் குளமாக்கிக் கொள்வது நகைப்புக்குரிய விசயம் தான் என்பதை நாம் சிந்தித்திருக்கிறோமா!

விழுக்காடு நூறு
விழுக்காடு கணிப்பதற்கு நூறு எண்ணே அடிப்படையாக பயன்படுத்தப்படுகிறது. நூறு விழுக்காடு என்பதே நமது இலக்கு என்பதை பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு கரும்பலகையை அலங்கரிக்கும் தொடராக அமைந்துள்ளதைத் தேர்வு நெருங்கும் வேளைகளில் காணலாம்.

பணத்தில் நூறு
பெரும்பாலான நாடுகளில் 100-என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு நாணயம் மற்றும் பண மதிப்பீடு செய்யப்படுகிறது.
எ.கா. 100 பைசா = 1 ரூபாய்

அரசியலில் நூறு
ஐக்கிய அமெரிக்காவின் மேலவையில் மிகச்சரியாக நூறு உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்பதினை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

அறிவியலில் நூறு
100 என்பது பெர்மியத்தின் அணுவெண் ஆகும்.
செல்சியஸ் அளவுகோளில் 100 என்பது, நீரின் கொதிநிலையைக் குறிக்கும்.

பொழுதுபோக்கில் நூறு
ஒரு திரைப்படம் அல்லது மேடை நாடகம் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக நடந்தால், அத்திரைப்படம் அல்லது மேடை நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

விளையாட்டில் நூறு
பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 என்ற எண் முக்கிய பங்கு வகிக்கின்றது.
100 மீற்றர் ஓட்டப் பந்தயம் என்பதில் துவங்கி பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகளில் 100 அல்லது அதனுடைய அடுக்கை அடிப்படையாகக் கொண்டு போட்டியாளர்களின் இலக்கின் தூரம் நிர்ணயிக்கப்படுகின்றன.

துடுப்பாட்டத்தில் ஒருவர் 100 - ஓட்டம் எடுக்கும் பொழுது மைதானத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று அவரைப் பாராட்டுகின்றனர். 99 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினால் மைதானமே மயான அமைதி கொள்வது வேடிக்கை இல்லையா?

வரலாற்றில் நூறு
வரலாற்றில் ஆண்டுகள் 100 அடிப்படையில் நூற்றாண்டுகளாகக் கணக்கிடப்படுகின்றன. நூற்றாண்டில் உள்ள ஆண்டுகளின் எண்ணிக்கை 100

காவல் நிலைய அழைப்புக்கு நூறு
தமிழகத்தின் காவல் மற்றும் தீயணைப்பு அலுவலங்களுக்கு 100 என்பதே அலைபேசி எண்ணாக இருக்கிறது என்பதை பலர் கூறி நான் கேட்டிருக்கிறேன்.

வலைப்பதிவில் நூறு
நம்ம வலை நண்பர்களின் நூறாவது பதிவு என்றால் சம்மந்தப்பட்ட பதிவர்களுக்கு நமக்கும் ஒரு மகிழ்ச்சி பிறக்கிறது தானே. இதுவே 200, 300, 400 என்று நீளும் போது மகிழ்ச்சியின் எல்லை விரிந்து பரப்பளவைக் கூட்டிக் கொள்வது ஆரோக்கியமான நிகழ்வு.

குறிப்பு
இதையெல்லாம் வைத்துக் கொண்டு இப்பதிவு எனது நூறாவது பதிவு என்று எண்ணி விட வேண்டாம். இப்பதிவு எனக்கு 119 ஆவது பதிவு,. நண்பர்களின் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் தான் சாத்தியம். இன்னும் போக வேண்டிய தூரமும் எட்ட வேண்டிய இலக்கும் நிரம்ப உள்ளன. தொடர்ந்து உங்களின் ஆதரவால் அனைத்தும் சாத்தியமாகும் எனும் நம்பிக்கையுடன்
அ.பாண்டியன்


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

12 comments:

 1. நூறாவது பதிவோ என்று நானும் முதலில் நினைத்தேன் பாண்டியன்.
  கடைசியில் விளக்கிவிட்டீரே்கள்.. நுறு நூறு பதிவுகள் போட்டு நூறாயிரம் பக்கப்பார்வையைவிரைவில் எட்டி, நூறு நூறாயிரம் வாசகர்களை எட்ட நூறுநூறுநூறாயிரம் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. விரைவில் வரட்டும் இன்னொரு நூறு.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. ஒரு வித்தியாசமான சிந்தனை என்ற நிலையில், பதிவுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்.

  ReplyDelete
 4. நல்லதொரு தொகுப்பு சகோதரா...

  ReplyDelete
 5. நல்லதொரு பதிவு நண்பரே
  தம +1

  ReplyDelete
 6. நூறின் சிறப்புக்களை சொல்லும் தொகுப்பு சிறப்பு! பலநூறுகள் சேர்க்க வாழ்த்துக்கள்! பதிவுகள்,பணம் இரண்டும்தான் சந்தேகமே வேண்டாம்!

  ReplyDelete
 7. வணக்கம்
  சகோதரன்
  பதிவை வித்தியாசமாகசொல்லி அசத்தி விட்டீர்கள்... பகிர்வுக்கு நன்றி த.ம5

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. நல்ல தொகுப்பு சகோதரா...

  ReplyDelete
 9. அன்புள்ள அய்யா,

  நூறின் வரலாறு விரிவாக சொல்லியிருந்தீர்கள்...!
  எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது... ஆனால் இதுமட்டும் பிடிக்கவில்லை!
  நூறு விழுக்காடு என்பதே நமது இலக்கு என்பதை பள்ளிக்கூடங்களில் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு கரும்பலகையை அலங்கரிக்கும் தொடராக அமைந்துள்ளதைத் தேர்வு நெருங்கும் வேளைகளில் காணலாம்.
  முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை அனைவரையும் தேர்ச்சியடையச் செய்துவிட்டு... பத்தாம் வகுப்பில் நூற்றுக்கு நூறு வேண்டுமென்றால் எப்படி என்பதுதான் புரியவில்லை!

  100 நன்றாக இருக்கிறது.
  நன்றி.

  ReplyDelete
 10. இன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்.
  http://blogintamil.blogspot.in/2015/02/blog-post_14.html
  நன்றி

  ReplyDelete
 11. நூறின் சிறப்பு.... நல்ல பகிர்வு நண்பரே.

  ReplyDelete
 12. அருமை.
  வாழ்த்துகள்.

  ReplyDelete