Friday, 16 May 2014

இது தான் உலகம் இவ்வளவு தான் வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே! தேர்தல்களத்தில் ஓட்டு எண்ணிக்கை சூடி பிடித்து இருக்கிறது. எல்லாம் தேர்தல் முடிவுகள் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது வாருங்கள் நாம் வேறு சில விசயங்களை ரீலாக்ஸா அதே சமயம் தீவிரமா யோசிப்போம்!!

1.என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான்ஆகணும்- இதுதான் வாழ்க்கை.

2..பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? நல்லா யோசிங்க!குவாட்டர் கூட வராது !

3.டிசம்பர் 31 க்கும் , ஜனவரி 1க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம் .ஆனால் ,ஜனவரி 1க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம் .இதுதான் உலகம்

4.இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனால் பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

5.ஆட்டோக்கு ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும் ,ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது !

6.பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம். ஆனால் கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

7.பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,கழித்தல் கணக்கு போடும்போது,கடன்வாங்கித்தான் ஆகனும்

8.கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?

9.பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்

10.என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.

11.உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும் ,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

12.ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங்'குஆனா.தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.

13.நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம். ஆனால் ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.

14.சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா ,ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

15.என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,Rewindலாம் பண்ண முடியாது

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

17 comments:

 1. // கடன்வாங்கித்தான்.... ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட்....//

  கலக்கலோ கலக்கல் போங்க...

  ReplyDelete
  Replies
  1. பதிவிட்ட சில நொடிகளில் படித்து கருத்திட்ட சகோதரருக்கு நன்றி. நாளை நாம் சந்தித்துக் கொள்ள இருக்கிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது சகோ.

   Delete
 2. என்ன தத்துவங்கள்!!
  அடடா!!
  இரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வருக நண்பரே
   தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. நான் இதுவரை இது போன்ற பதிவுகளைப் பதிவிட்டதில்லை. வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பதிவிட்டுள்ளேன்.

   Delete
 3. கலக்கல் தத்துவங்கள்! கலக்கிட்டீங்க போங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஆகா என்ன தத்துவத்தில் இறங்கி வீட்டீர் நண்பரே

  ReplyDelete
 5. வணக்கம் சகோ! விடுமுறை நாட்களில்தான் விடாது பணிசெய்யும் நிலையாகிறது நான் எங்களுக்குச்சொன்னேன்,(பெண்களுக்கு மட்டும்) யோசிக்காதீர்கள் ரிலாக்ஸ்ப்ளீஸ் டைமிங்ள சூப்பர்சகோ.

  ReplyDelete
 6. ம்ம் ஜாலியா இருக்கீங்க போல...

  ReplyDelete
 7. //1.என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான்ஆகணும்- இதுதான் வாழ்க்கை.

  .என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் சந்தோஷமா சிரிச்சு மகிழனும் என்றால் அவர்கள்...உண்மைகள் வலைத்தளத்திற்கு வந்து தமிழன் அடிவாங்குறதை படிச்சுதானே ஆகனும்

  ReplyDelete
 8. //கொலுசு போட்டா சத்தம் வரும். ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?//
  எங்க வீட்டுல சத்தம் போட்டா பூரிக்கட்டை பறந்து வரும்

  ReplyDelete
 9. //9.பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது .இதுதான் உலகம்//

  ஆனா ரிவர்ஸ்ல போகும் போது முடியுமே

  ReplyDelete
 10. //என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.//
  வெயிலுக்கு பதிலா மனைவி என்று வந்து இருக்க வேண்டுமோ ஒரு அப்பாவி கணவனின் சந்தேகம்

  ReplyDelete
 11. //நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம். ஆனால் ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.//
  அட பஸ்ஸுல போன அனுபவம் உங்களுக்கு இல்லை போல இருக்கு ஒடுறல பஸ்டிரைவர் பக்கதில் நிற்பவர்கள் ப்ஸ் முன்னாலதானே நிக்கிறாங்க

  ReplyDelete
 12. 15.என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும் மெஸேஜ் Forward தான் பண்ண முடியும் ,Rewindலாம் பண்ண முடியாது///

  புது பொண்டாடிகிட்ட அவள் மேல் உள்ள காதலை அவளுக்கு பார்வேர்டு பண்ணாலம் ஆனா அவ கிட்ட பழய காதல் பற்றி ரீவைண்ட் பண்ணி சொல்ல முடியாதுல

  ReplyDelete
 13. //.பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .ஆனா,ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா? நல்லா யோசிங்க!குவாட்டர் கூட வராது//

  .பஸ் ஸ்டாப்ல தனியா வெய்ட் பண்ணா பிகர் நம்மை தேடி வரும் .ஆனா,பஸ் ஸ்டாப்ல மனைவியோடு வெய்ட் பண்ணா பிகரு நம்மை தேடி வருமா?

  ReplyDelete
 14. என்ன பாண்டியா விடுதலையை நன்றாக என்ஜாய் பண்ணுகிறீர்கள் போல் தெரிகிறது. புதுசு புதுசாக அப்படி அசத்துகிறீர்களே. really சூப்பர்....
  நன்றாக ரசித்தேன் ....! கைவசம் நிறைய ideas இருக்கிறது போல் தெரிகிறது. சகலகலாவல்லவனாய் ஆக என் வாழ்த்துக்கள் ...! சகோ.

  ReplyDelete