வணக்கம் நண்பர்களே!
பெரியவர் முதல் சிறியவர் வரை யார் தன்னை நாடி வந்தாலும் அவர்களின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்து இன்முகத்தோடு வழி அனுப்பும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி நான் கூறிவதை விட விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போமா!
தமிழக வரலாற்றில் முதன்முறையாக..
தமிழக வரலாற்றில் முதன்முறையாக பள்ளிக்கல்வித் துறையின் 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு' ஐ.எஸ்.ஒ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாய் இருப்பவர் அங்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராய் பணியாற்றும் முனைவர் நா.அருள்முருகன்.
வளரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்து பள்ளிகளையும் இருந்த இடத்தில் இருந்தே நேர்மையாக சோதனை நடத்துவது.. தலைமையாசிரியர் வந்தாலும் சரி, கடைக்கோடியில் இருக்கும் இளைய ஆசிரியர் வந்தாலும் சரி, அவர்களை சந்திக்க பொதுத்தன்மை உருவாக்கியது.. பணிச்சூழலில் ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இல்லாமல், மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க கணினியைப் பயன்படுத்துவது.. அலுவலக ஆவணங்களைக் கணினி மயமாக்கியது.. என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இது ஒருபுறமிருக்க.. இன்னொருபுறம் தமிழ்த்தடயங்களைத் தேடியலைந்து தமிழ் தொன்மையை இவர் மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார். இவரின் நன்முயற்சியால் தமிழகத்தில் முதன்முதலாக பள்ளிக்கல்வித் துறையின் 'புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு' ஐ.எஸ்.ஒ.தரச் சான்று கிடைத்துள்ளது...
------------------
குறிப்பு
எங்கள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் இத்தனை பணியோடு வலைப்பூவிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இல்லையில்லை இதற்காகவே நேரம் ஒதுக்கித் தன்னுடைய செறிவு மிக்க எழுத்தினைப் பதிந்து வருகிறார். இதுவே அவர்களின் வலைப்பக்கம் :
நடை நமது
பெரியோரை வியத்தலும் நலமே! - அவர்வழி
ReplyDeleteசரியாக நடத்தலும் பலமே!
அருமை பாண்டியன், த.ம.1
வணக்கம் ஐயா
Deleteநலமாக உள்ளீர்களா! ரொம்பவே சரியாகவே சொல்லியுள்ளீர்கள். ஐயா அவர்களோடு பழகும் வாய்ப்பை எனக்கு நீங்கள் தான் உருவாக்கித் தந்தீர்கள். என்றும் நன்றி சொல்வேன் தங்களுக்கு.
முதன்மைக் கல்வி அலுவலர் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteபோற்றுவோம் பாராட்டுவோம்
நன்றி நண்பரே
தம 2
கண்டிப்பாக ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்
Deleteஅருமையான பகிர்வு பாண்டியன்
ReplyDeleteசகோவிற்கு அன்பான நன்றிகள். ஐயா அவர்களைப் பற்றி தங்களுக்கு தெரியாத செய்தியா?
Deleteத ம +
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteமிகவும் பெருமையாக உள்ளது அவருக்கு கீழ் வேலைப்பார்ப்பது
ReplyDeleteஅன்பின் சகோதரிக்கு மிக்க நன்றி. நமது மாவட்டத்திற்கு ஐயா செய்யும் சிறப்புக்கு நாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்வோம்
DeleteISO Consultant என்கிற முறையில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்...
ReplyDeleteஐயாவிற்கு வாழ்த்துக்கள் பல...
வணக்கம் சகோதரர்
Deleteபயிற்சிக்கு நீங்கள் வரும் போதே இதற்கான அச்சாரமிட்டதை நான் அறிவேன். தங்களுக்கும் நன்றிகள்.
பெரும் பொறுப்பில் இருந்துகொண்டு இவ்வாறு சாதனை படைத்தவருக்குத் தாங்கள் அளிக்கும் பாராட்டுடன் எங்களது பாராட்டுகளும் இணையட்டும். இவரது வரலாற்றுத் தேடலை அறிந்து நான் வியந்துள்ளேன். அலுவல் நிலையில் இருந்துகொண்டு கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஓய்வு நேரத்திலும், விடுமுறையிலும் நான் ஆய்வு செய்யும்போது பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளேன், எதிர்கொண்டுவருகிறேன். இவரால் இவ்வாறு முடிகிறது என்பதை நினைக்கும்போது வியப்பாக உள்ளது.
ReplyDeleteபலருக்கும் வியப்பு தான் ஐயா. ஒரு அதிகாரிக்கு இருக்கும் பணிகளில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது. எல்லாம் ஐயா அவர்களின் கடின உழைப்பும் திட்டமிடுதலும் தான் காரணம். வருகை தந்து அழகான கருத்துரை தந்தமைக்கும் அன்பான நன்றீகள் ஐயா...
Deleteவணக்கம்
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்... த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் சகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிகுந்த நன்றிகள்
Deleteஇப்படியான அதிகாரிகள் பற்றி அறிவது மிக்க மகிழ்ச்சி...
ReplyDeleteஎனது பாராட்டுகளும்....
ReplyDeleteத.ம. +1