அரும்புகள் மலரட்டும்: என்னை அறிந்தால்- விமர்சனம்

Thursday 5 February 2015

என்னை அறிந்தால்- விமர்சனம்


கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ் ஹீரோவை அணிய வைத்துள்ளார். மேலும் வழக்கமான காதல், ஆக்ஷன் என இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் கௌதம் என்ளே சொல்லலாம்.

கதைபோலிஸ் படம் என்றாலே பழிவாங்குதல் இல்லை என்றால் எப்படி, அதே கதை களத்தை தான் கௌதம் கையில் எடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே அனுஷ்காவை விமானத்தில் வைத்து பார்க்கும் அஜித், அதன் பின் காபி ஷாப்பில் மீட் செய்ய, அங்கு அருண் விஜய் கும்பல் அவரை கொலை செய்ய வருகிறது.அங்கு கத்தி குத்துடன் தப்பிக்கும் அஜித், மருத்துவமனையில் தன் பிளாஸ் பேக் காட்சிகளை நினைத்து பார்க்கிறார் .

துடிப்பான போலிஸ் அதிகாரி, நேர்மையாக வாழ்கிறார். அப்படி இருந்தாலே பிரச்சனை வரும் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதி. இதற்கிடையில் அஜித் ஒரு கேங்ஸ்டர் கும்பலை பிடிக்க அருண் விஜய்யுடன் நட்பாகி அவர்களை கொல்கிறார்.

அந்த நேரம் அருண் விஜய் பார்வை அஜித் பக்கம் திரும்புகிறது. பின் த்ரிஷாவை ஒரு கட்டத்தில் பார்க்க அவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையுடன் இருக்கிறார். ஆனால், விவாகரத்து ஆனவர். வழக்கம் போல் அவருடன் காதல், திருமணமாக அரங்கேறும் நேரத்தில் த்ரிஷா கொலை செய்யப்படுகிறார்.இதை தொடர்ந்து அந்த கொலை யார் செய்தார்கள் என்று அஜித் தேடி போக நினைத்தாலும் த்ரிஷா மகள் நலனுக்காக இந்த வேலையை விட்டு ஒதுங்குகிறார்.

ஆனால் மீண்டும் ஒரு கட்டத்தில் நண்பருக்காக காக்கிசட்டையை போட, மீண்டும் அருண் விஜய் இந்த முறை அனுஷ்கவிற்காக வருகிறார். அவரை ஏன் அருண் விஜய் பின் தொடர வேண்டும், அஜித் இதை முறியடித்தாரா என்பதே மீதிக்கதை.

அஜித் வழக்கம் போல் ஒன் மேன் ஷோ தான், ஒவ்வொரு காட்சியிலும் பின்னுகிறார். த்ரிஷாவுடன் காதல் கொள்ளும் போதும் சரி, ஒரு தந்தையாக குழந்தையிடம் பாசத்தை காட்டும் போதும் சரி தல எப்போதும் டாப் கியர் தான்.படத்தில் மிகப்பெரிய பலம் அருண் விஜய். இத்தனை நாள் இந்த நடிப்பா எங்க பாஸ் வச்சிருந்திருந்திங்க. செம்ம கெத்து காட்டுகிறார். த்ரிஷா, அனுஷ்கா, அந்த குழந்தை வரை அனைவரும் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் கலக்கியுள்ளார். டான் ஹாலிவுட் கேமராமேன் என்றாலும் நம்ம ஊரு சந்துகளில் புகுந்து விளையாடியுள்ளார்.

க்ளாப்ஸ்

அஜித்தின் அர்ப்பணிப்பு, நிண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு புல் மீல்ஸ் தந்துள்ளார். இரண்டாம் பாதியில் அருண் விஜய்யுடன் சேசிங் காட்சி படத்தின் ஹைலைட். அனைவரும் அழகான அளவான நடிப்பை தந்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை கேமரா என அனைத்தும் சூப்பர்.

பல்ப்ஸ்

முதல் பாதி என்ன தான் காதல் காட்சியில் கௌதம் பேவரட் என்றாலும் கொஞ்சம் டல் அடிக்கிறது. தல ரசிகன் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போல் ஒரே பாணி திரைக்கதை தான்.மொத்தத்தில் கௌதம் காக்கிசட்டையை அஜித் அணிந்து கொண்டு எதிரிகளை மட்டும் இல்லை, பாக்ஸ் ஆபீஸையும் அடித்து நொறுக்க போகிறார்.

நன்றி : சினிஉலகம்.காம்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

5 comments:

  1. அருமையான விமர்சனம்
    நன்றி நண்பரே
    தம 2

    ReplyDelete
  2. அட! விமர்சன ஏரியாவிலும் பின்னுறீங்களே ப்ரதர்!!! அப்புறம் ஒரு கேள்வி. இதிலும் க்கூளிங் க்ளாஸ் இருக்கா:))))) அப்போ படத்தில் ரெண்டு ஹீரோயினா?? எண்டு பன்ச் சூப்பர் சகோ:)

    ReplyDelete
  3. எப்போது ஆரம்பித்தீர்கள் Copy & Paste பதிவுகள்...?

    ReplyDelete
  4. காக்கி ஸ்பெஷலிஸ்ட் கௌதம் மேனன் கதையில் தல ..(நா பாக்கல)
    அது என்ன க்ளாப்ஸ்...பல்ப்ஸ்.. நீங்க பொழச்சிக்குவீங்கங்கறது மட்டுமில்ல சினிமாவுக்கே வசனம் எழுதலாம் போலயே?

    ReplyDelete
  5. அன்புள்ள அய்யா,

    என்னை அறிந்தால்- விமர்சனம் நன்றாக ... படம் பார்ப்பது போல! அருமை!!
    நன்றி.

    ReplyDelete