நண்பர்களுக்கு வணக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்களை வழக்கம் போல் சந்திக்கையில் எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பங்குபெறும் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடத்த உள்ளோம் அதில் நீங்கள் நடுவராக வர வேண்டுமென்று கூறினார் அதைக் கேட்டதும் அதிர்ச்சியோடு முதலில் மறுத்தேன். பின்னர் அவரது அன்பும், அவரது மனைவி திருமதி. ஜான்சிகிளாரா (எங்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்) அவர்களின் அன்பும் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்தது.
பட்டிமன்றத்தின் தலைப்பு
”குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவதில் தாய்களா! தந்தையா!”10.01.2014 அன்று காலை 10 மணிக்கு புனித சவேரியார் ஆலய வளாகத்தில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி. இரா. பொட்டுமணி அவர்கள் முன்னிலையில் பங்குத்தந்தை திரு. பால்ராஜ் அவர்கள் தலைமை தாங்க ஆசிரியர்களோடு ஒரு மாணவியும் பங்கு பெற்ற பட்டிமன்றம் துவங்கியது.
தாய்களே எனும் அணியில் தந்தைகளே எனும் அணியில்
1. திருமதி ப. மாரிக்கண்ணு 1.திருமதி. பே.இரா. மேரிபியூலா
2. திரு. அருள்ஜோசப்ராஜ் 2.திரு.இரா.சுரேஷ்
3.திரு.அ.அருள்தாஸ் 3.திரு.அ.குணசேகரபாண்டியன்
4. செல்வி.செ.ஜெனிபர் 4.செல்வி. சாந்தி (மாணவி)
ஆகியோர்கள் தங்களது சிறப்பான வாதத்தை எடுத்து வைத்தார்கள். இரு புறமும் சொற்போர் கருத்தாழம் மிகுந்து நடைபெற்றது. திரைப்பட பாடல்களையும் தமிழ், ஆங்கில இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டியும் பேசி அசத்தினர். இடையிடைய என்னிடமும் கேள்விக் கணைகளைத் தொடுத்து திக்குமுக்காட செய்தார்கள். குறிப்பாக மாணவி சாந்தி ஆசிரியர்களுக்கு இணை கொடுத்து இயல்பாக பேசியது வியக்க வைத்தது.
பட்டிமன்றத்தின் முடிவு இரு அணியின் இரண்டரை மணிநேர வாதங்களைக் கேட்டு இறுதியாக குழந்தைகளின் வளர்ப்பை இன்றைய சூழ்நிலையில் பெண்களிடம் விட்டுவிட்ட ஆண்களைக் கோடிட்டுக் காட்டியும், இயற்கையாகவே ஒரு குழந்தை தடுக்கி விழும் போதும், தும்மும் போதும் அம்மா என்றே பெரும்பான்மையாக கூறுவது அவர்கள் மீது மிகுந்த அக்கறையைத் தாய்கள் காட்டுவதால் தான் போன்ற நிகழ்வுகளைக் கூறி
குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவது தாய்களே! எனும் தீர்ப்பை வழங்கினேன்.பட்டிமன்றம் இனிதே நடக்க இட உதவியும் ஒலிப்பெருக்கி சாதனங்களையும் அளித்த மலம்பட்டி புனித சவேரியார் ஆலயத்தின் பங்குத்தந்தை திரு. பால்ராஜ் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த பள்ளியின் ஓவிய ஆசிரியர் திரு. ராஜா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் திரு. சுப்பிரமணியன், துணைத்தலைவர் திரு. சவரிமுத்து, கிராமக்கல்வி குழு தலைவர் திரு. சேகர், அரசு உயர்நிலைப்பள்ளியாக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டக் கல்விக்குழுத் தலைவர் திரு. சவரிநாதன், மாணவர்கள் உள்ளிட்ட எங்களுக்கும் மிக சுவையான பொங்கல் வழங்கிய சத்துணவு அமைப்பாளர் செபாஸ்டின், சத்துணவு ஊழியர்கள், எங்களது உரையை அமைதியாக கேட்டு ரசித்த இடங்களில் கைதட்டி ஆரவாரம் செய்த நிகழ்வின் உண்மை நடுவர்களாகிய மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகள்.
பட்டிமன்றத்தின் நடைமுறைகளையும், ஆலோசனையும் வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர் திரு.முத்துநிலவன் ஐயா உள்ளிட்ட எனது நண்பர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட அன்பார்ந்த நன்றிகள்.
மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்த இப்பட்டிமன்றம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்தது.
நண்பர்களுக்கு அனைவருக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரும் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். நன்றி..
மிக்க மகிழ்ச்சி... சரியான தீர்ப்பிற்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteதித்திக்கும் இனிய தைப் பொங்கல் + உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
நன்றி சகோதரர். பட்டிமன்ற நடுவராக எனது முதல் அனுபவம். இருப்பினும் பதற்றம் இல்லாமல் இயல்பாக முடிந்ததும் அனைவரும் ரசிக்க வண்ணம் அமைந்ததில் ,மட்டற்ற மகிழ்ச்சி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
Deletevalthukal sako
ReplyDeleteமிகுந்த நன்றிகள் சகோதரி. தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
Deleteபட்டிமன்ற நடுவருக்கு வணக்கம். பட்டிமன்றம் மட்டுமல்ல, வேறு எந்த மேடையாயினும், அது நம் கருத்தைச் சொல்லும் வாய்ப்பாகக் கருதிக்கொண்டால் நல்லது. இல்லையெனில், கைத்தட்டலிலும் கவர்களிலும் மயங்கி நம் தமிழை விற்பதாக ஆகிவிடும். இதில் மட்டும் எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் மற்றவர்க்கு முன்னுதாரணமாக வளரலாம். தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் மேலான கருத்தும் ஆலோசனையும் என்னை வழி நடத்தும் என்பதை முழுமையாக நம்புபவன் நான். அந்த வகையில் பின்னூட்டத்தைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி. தங்களுக்கே நன்றிகள். அன்பின் காரணமாக கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் இது ஐயா. என்னை மேலும் செதுக்கிக் கொள்ள கற்க வேண்டியது நிரம்ப இருக்கிறது என்பதை நன்கு அறிவேன். அறிவை வளர்ப்போம் அனைவருக்கும் பகிர்வோம்.
----------
தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் ஐயா.
பட்டிமன்ற ராசாவாக வாழ்த்துகள்.எங்கள் கவரப்பட்டி அ.மே.நி.பள்ளியிலும் ஒரு பட்டிமன்றம் ஆசிரியர் தினவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் நேரமின்மை காரணமாக நடத்தமுடியாமல் போய்விட்டது.அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோதரர். பட்டிமன்ற ராசா எல்லாம் இல்லை பாண்டியனாக வலம் வருவோம். தங்கள் பள்ளியிலும் பல முயற்சிகள் எடுப்பதற்கு அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுகள். வருகை தந்து கருத்திட்டு வாழ்த்திய அன்பு சகோதரருக்கு நன்றி
Delete--------
தங்களுக்கும் நமது இல்லத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்வு கரும்பென இனிக்கட்டும். நன்றி.
சகோ நடுவர் போஸ்டிங் ஆஹா கேட்கவே சந்தோசமா இருக்கே .I am very happy. I am very happy.இருவருமே என வளவள கொலகொலா தீர்ப்பு வழங்காமல் .நச்சுனு சொல்லிருகிங்க .நாட்டாமை தீர்ப்பு சூப்பர்!பொங்கல் வாழ்த்துக்கள் சகோ !
ReplyDeleteசகோதரியின் வருகையும் வாழ்த்தும் மகிழ்விக்கிறது. முதல் பட்டிமன்ற அனுபவம் திருப்தியாகவே முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி தான் சகோதரி.
Delete-----
தங்களுக்கும் எனது சகோதரர் மற்றும் குட்டீஸ்கள் உள்ளிட்ட இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள் சகோதரி. நன்றி..
வணக்கம்
ReplyDeleteசகோதரன்.
பதிவின் தலைப்பு பார்த்தவுடன் என்மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்கியது... இப்படிப்பட்ட தமிழ் பணிகள் மீண்டும் மீண்டும் தொடர எனது வாழ்த்துக்கள் சகோதரன்...அத்தோடு பல வகையில் வழிகாட்டியாக இருந்த முத்த நிலவன் ஐயாவுக்கு பாராட்டுக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரர்
Deleteவருகை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களது வாழ்த்து உற்சாகமூட்டுகிறது. கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் கூறிய குறிப்புகள் உண்மையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
------
தங்களுக்கும், நமது இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
//குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவது தாய்களே! எனும் தீர்ப்பை வழங்கினேன். ///
ReplyDeleteபாண்டியானே உன் தீர்ப்பில் குற்றமுள்ளது கால் சிலம்பை எடுத்து உடைக்க காலில் நான் சிலம்பு அணிவதில்லையே. அய்யகோ
தீர்ப்பு தவறு குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவது பெற்றோர்களே என்று சொல்லி இருக்க வேண்டும்
இப்படிக்கு குழந்தையின் நலனில் அக்கறை செலுத்தும் ஒரு தந்தை
வணக்கம் சகோதரர்
Deleteகுழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்தவதில் தாய் தந்தை இருவரின் பங்கும் மறுப்பதற்கில்லை. மிகுந்த அக்கறை என்பதில் தான் விடயம் இருக்கிறது. தாய்களே! னு சொல்லி தப்பிச்சுக்கவோம் சகோ. எதுக்கு வம்பு! உங்க இந்த பின்னூட்டத்தை உஷா அன்பரசு சகோதரி, ராஜீ சகோதரி பார்த்த குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடுவாங்க பாஸ். கவனமா இருங்க சும்மா..
வலையுலகில் திரு உலா வரும் பாண்டிய மன்னனே
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.
DeleteI am very happy ,happy pongal for All
ReplyDeleteநன்றி சகோதரர்.. தங்களின் முழுமையான ஒத்துழைப்பால் தான் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றதாக திரு.சுரேஷ் ஆசிரியர் அவர்கள் சொன்னார். அரசு பள்ளியில் இது போன்ற நிகழ்வுகள் நம்மை நிச்சயம் பெருமையடைய செய்யும் விடயமாகவே கருதுகிறேன். என்னை அன்பு மழையில் நனைய வைத்த தங்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகள் சொல்ல கடமை பட்டுள்ளேன் சகோதரர். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி..
Deleteஇன்னும் பல பட்டிமன்றங்கள் நடத்திட வாழ்துகிறேன்.தங்களின் குடும்பத்தாருக்கு மனமார்ந்த பொங்கள் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோதரர். உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகமும் ஊக்கமும் தருகிறது.
Delete------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
குழந்தைகள் மேம்பட இவ்வாறான பட்டிமன்றங்கள் நன்கு உதவும்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.
வணக்கம் ஐயா
Deleteதங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சியாய் உள்ளது. இனி தொடர்வோம் நட்பை. நன்றி..
--------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
நிறைவான தீர்ப்பு. மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்து இப்படியான நிகழ்ச்சிகளில் பங்குபற்றி உங்கள் திறமைகள் வெளிப்பட வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஉங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி. தங்களைப் போன்றோரின் பாராட்டும் வாழ்த்தும் நிச்சயம் என்னை சாதிக்கத் தூண்டுகிறது. கற்க வேண்டியதும் நிறைய உள்ளது. வாழ்த்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள் சகோதரி..
Delete----------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை செலுத்துவது தாய்களே! எனும் தீர்ப்பை வழங்கினேன். // சரியான தீர்ப்பு!! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதுளசிதரன், கீதா
வணக்கம் சகோதரி வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி.
Deleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும், துளசிதரன் ஐயா உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
மிக்க மகிழ்ச்சி....
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரர். வருகையும் வாழ்த்தையும் கண்டு எனக்கு மகிழ்ச்சி.
Delete--------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
சிறப்பான பட்டிமன்ற நிகழ்வுக்குப் பாராட்டுக்களும் மனம்
ReplyDeleteநிறைந்த தைப் பொங்கல் +புத்தாண்டு வாழ்த்துக்களும்
சகோதரா .
நன்றி சகோதரி. தங்கள் வருகையும் வாழ்த்தையும் காணும் மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி
Delete--------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
ReplyDeleteவணக்கம்!
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!
பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
உங்கள் இதயம் ஒளிர்ந்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழைச் சமைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா
Deleteகவிதையால் பொங்கலை வரவேற்று எனது வலைத்தளத்தை அலங்கரித்த தங்களுக்கு எனது அன்பான நன்றிகள்
--------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
மிக்க மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...!
ReplyDeleteநன்றி சகோதரர் வாழ்த்துக்கும் வருகைக்கும்..
Delete-----
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க. தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நடுவரே..
ReplyDeleteநன்றி சகோதரர். தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
Deleteஆஹா அன்பு சகோதரர் பட்டிமன்ற நடுவர் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் இனி நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் என்பது தான் யோசனையாக இருக்கிறது.
ReplyDeleteஅம்மா தான் என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாலும். எப்போதும் சாத்தியமில்லை சகோதரா.
தங்கள் பணியில் மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்.....!
தங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அன்பு சகோதரிக்கு நன்றிகள். எப்போதும் தாய்களிடம் (பெண்களிடம்) இருந்து தப்பிப்பது சாத்தியமில்லை தான். இருந்தாலும் சமாளிப்போம்ல. தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
Deleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசரியான தீர்ப்பு. வாழ்த்துக்கள் சகோதரரே.
தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது சகோதரர்,தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
Deleteமிகச் சரியான தீர்ப்பு. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரர். வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது.
Deleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
நல்ல முயற்சி.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteமிக்க நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும். தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
பட்டி மன்ற நடுவர் ஆனதற்குப் பாராட்டுக்கள் .
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
சகோதரியின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது. தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்றி சகோ..
Deleteநடுவரே பொங்கல் பொங்கியதா?
ReplyDelete------
எனது தளத்தில்
ஊக்கமூட்டும் பின்னூட்டம் நன்றி
நடுவரே, தவறுகளை களைந்திருக்கிறேன்..
பொங்கிருச்சு சகோ. அங்கே! நடுவருனே ஆகீட்டேனா? தங்கள் அன்புக்கு நன்றி சகோதரர்.
Deleteபயணக் களைப்பு, உறவுகளின் பிரிவு... எல்லாம் குறைந்து, இங்கு இப்போதான் வரமுடிந்தது.
ReplyDeleteமுதலில் பட்டிமன்றத் தலைவருக்கு(உங்களுக்குத்தான்) வாழ்த்துக்கள்!!.
கொஞ்சம் கடினமான தலைப்புத்தான், ஆனால் உங்கள் தீர்ப்பு சரியானதே...வேலை நிமித்தம் தந்தை தூரப் போய்விடலாம், ஆனால் தன்னோடே வைத்திருந்து, குழந்தைகளை இறுதிவரை அதிகம் பராமரிப்பவர் தாய்தான்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!.
சகோதரியின் வருகை மிகுந்த மகிழ்வளிக்கிறது. வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Delete------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதரர்.
Deleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து
ReplyDeleteவணக்கம் ஐயா தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது.
Deleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
வாவ் வாழ்த்துக்கள் நடுவரைய்யா...
ReplyDeleteநான்கா இருந்திருந்தாலும் அன்மத தீர்ப்பையே கூறியிருப்பேன்..
விவ்தைல் நிகழ்ந்த சில சுவாரசியமான பாயிண்டுகளையும் குறிப்பிட்டு இருக்கலாம் இல்லையா ?
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பாண்டியன் :-)
வணக்கம் சகோதரர் வருக.
Deleteபதிவில் சுவாரசியமான வாதங்களை இணைக்கலாம் என்று தான் இருந்தேன் பதிவு நீண்டு படிப்பவர்களுக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாமென்று விட்டு விட்டேன்.
-------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
இனிய வணக்கம் சகோ!
ReplyDeleteபொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
அருமையான பதிவிட்டுள்ளீர்கள். நேரம் அரிதானாதால் இப்போது பொங்கல் வாழ்த்துக்கள் கூறுகிறேன். பின்னர்வந்து படித்துக் கருத்திடுவேன்...
வாழ்த்துக்கள் சகோ!
அன்பு சகோதரியின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, மிக்க நன்றி..
Delete------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
தம்மக்கள் நலனில் தாய்மாரின் அக்கறையை குறைத்து மதிப்பிட முடியுமா? நல்ல தீர்ப்பு ஐயா!
ReplyDeleteநன்றி சகோதரர் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
Deleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
இரண்டு அணியிலும் பேசியவர்கள் என்ன சொன்னார்கள் என்று சில நல்ல கருத்துக்களை நீங்கள் எழுதியிருக்கலாம்.
ReplyDeleteவிஜய் டிவியில் 'தாயுமானவன்' சீரியல் பார்க்கிறீர்களா?
கதை என்றாலும் ஒரு தந்தை ஐந்து பெண்களை தானே தாயுமாகி வளர்த்து ஆளாக்க முடியாது என்று சொல்கிறது.
வணக்கம் சகோதரர். பதிவு நீண்டு படிப்பவர்களுக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டிமென்றே விட்டு விட்டேன். உண்மையில் இரண்டரை மணி நேரமும் மிக சிறப்பான வாதங்கள் எதை போடுவது விடுவது என்ற குழப்பத்தையும் தவிர்ப்பதற்காக தவிர்த்து விட்டேன். தங்கள் வருகை கண்டு மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம் சகோதரர். நன்றி.
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் . பட்டிமன்ற நடுவராக மாறி நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். தொடரட்டும்.
ReplyDeleteஐயாவிற்கு வணக்கம் தங்கள் வருகையும் வாழ்த்தும் என்னை இன்னும் உயர்த்தட்டும். தங்களுக்கும் இனிய வாழ்த்துகள். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.
Deleteவணக்கம் சகோதரரே! மனம் மகிழ வாழ்த்துகள் பல!
ReplyDeleteபட்டிமன்றத்தில் நடுவராக ஆனதற்கும் சரியான தீர்ப்பு சொன்னதற்கும் வாழ்த்துகள்! இன்னும் பல மன்றங்கள் பார்க்கவும் வாழ்த்துகள்! :)
பயணக் களைப்பு, உறவுகளின் பிரிவு... எல்லாம் குறைந்து, இங்கு இப்போதான் வரமுடிந்தது.
ReplyDeleteமுதலில் பட்டிமன்றத் தலைவருக்கு(உங்களுக்குத்தான்) வாழ்த்துக்கள்!!.
கொஞ்சம் கடினமான தலைப்புத்தான், ஆனால் உங்கள் தீர்ப்பு சரியானதே...வேலை நிமித்தம் தந்தை தூரப் போய்விடலாம், ஆனால் தன்னோடே வைத்திருந்து, குழந்தைகளை இறுதிவரை அதிகம் பராமரிப்பவர் தாய்தான்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!.
பயணக் களைப்பு, உறவுகளின் பிரிவு... எல்லாம் குறைந்து, இங்கு இப்போதான் வரமுடிந்தது.
ReplyDeleteமுதலில் பட்டிமன்றத் தலைவருக்கு(உங்களுக்குத்தான்) வாழ்த்துக்கள்!!.
கொஞ்சம் கடினமான தலைப்புத்தான், ஆனால் உங்கள் தீர்ப்பு சரியானதே...வேலை நிமித்தம் தந்தை தூரப் போய்விடலாம், ஆனால் தன்னோடே வைத்திருந்து, குழந்தைகளை இறுதிவரை அதிகம் பராமரிப்பவர் தாய்தான்.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!.