அரும்புகள் மலரட்டும்: கனிந்திடும் காதல்!

Thursday 21 November 2013

கனிந்திடும் காதல்!


நம் விழிப்பார்வை
கொதிக்கும் எண்ணையில் விழுந்த
நீர்த்துளி போல் அல்லாமல்
நதியில் விழுந்தமழைத்துளியாய்
மவுனமாய் கலந்தது

என்று பிறந்தது
என்றுஅறியா
நம் காதல்
இரு மனங்களில்
மெல்லமலர்ந்து
மணம்வீசி மகிழ்ந்தது


என்னிரவு தூக்கத்தை
இரவல் வாங்கிக் கொண்டது
உன்நினைவுகள்
என் ஆகாரத்தை
விழுங்கிக் கொண்டது
உன் பார்வை

நம் காதல் வாழ்வில்
பலநேரம்
தென்றல் தீண்ட மறுக்கவில்லை -
சிலநேரம் கோடை தவிப்பும்
மறுப்பதற் கில்லை

நமது கண்களை
அதிகம் சந்திக்க விட்டதில்லை
காதலின் அலங்காரச்சொல்
பகிர்ந்ததில்லை
இருப்பினும்
பிரிக்கமுடியா
அகம் கலந்தோம்

கொண்ட கொள்கையில்
கொஞ்சமும் கோண விடாமல்
வாழ்க்கைத் தடத்தில்
உன்அன்பால் பயணித்தேன்
இன்று
என் கால்தடம்
வெற்றிப்பாதையில்

லட்சியம் வென்று
மணம் முடிக்கும் வேளை
அருகாமையில்
அமர்ந்திருக்கும் போது
வெற்று வேதனைகள்
வேண்டாம் கண்ணே!

முறையோடு முறையிட்டு
மாலைமாற்றிக் கொள்வோம்
அன்பே-
மனதில் இருக்கும் பாரங்களை
இறக்கிவிடு
வெற்றி என்பது வெகுஅருகில்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

47 comments:

  1. காதல் கனிந்து வந்துள்ள கவிதை அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    படத்தேர்வு பிரமாதம் ;)

    வெற்றி என்பது வெகுஅருகில் தான், பதிவுலகில் உங்களுக்கும்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா. தங்கள் தொடர் வருகை, ரசிப்பு, ஊக்குவிக்கும் கருத்துக்கள் கவர்கிறது. தொடர்க..

      Delete
  2. என்று பிறந்தது என்று
    அறியா நம் காதல்
    இரு மனங்களில் மெல்ல
    மலர்ந்து மணம்வீசி மகிழ்ந்தது!..

    பன்னீர்ச் சாரலாக மணம் கமழ்கின்றது!..

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகைக்கும் தங்கள் அன்புக்கும் மிக்க நன்றி அய்யா..

      Delete
  3. நம்விழிப்பார்வை கொதிக்கும் எண்ணையில்
    விழுந்த நீர்த்துளி போல்
    அல்லாமல் நதியில் விழுந்த
    மழைத்துளியாய் மவுனமாய் கலந்தது அருமை...!

    நன்று நன்று....! இரு மனம் சேரும் இனிய நாள் விரைவிலேயே ம்..ம்..ம்
    என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என்றும் உண்டு. வாழ்க வாழ்க ...!

    ReplyDelete
    Replies
    1. அடடா என்று அசந்து போகும் கருத்துக்களை அன்பின் காரணமாக வழங்கி ஊக்குவிக்கும் உடன்பிறவா சகோதரிக்கு எனது அன்பு நன்றிகள். வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  4. விரைவில் நல்ல செய்தி வர காத்திருக்கிறேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நான் பெரிதும் மதிக்கும் சகோதரரர், வலைச்சித்தர் வழங்கிய வாழ்த்துக்கு எனது அன்பு நன்றிகள்.

      Delete
  5. காதல் கனிந்தால் அடுத்தது கல்யாணம் தானே ?
    இனிமை !

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் என்ன சகோதரி! அடுத்து கெட்டிமேளம் தான். அன்பான வருகை & கருத்துக்கு நன்றி.

      Delete
  6. காதல் ரசம் கொட்டுகிறது ஒவ்வொரு வரியிலும். வெற்றிபெற வாழ்த்துகள், I mean காதலில்!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் சகோதரரே. தங்கள் நேசம் என்றும் வேண்டும்..

      Delete
  7. கல்யாணத்துக்கு சொல்லி அனுப்புங்க...சகோ!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி இல்லாத என் திருமணமா! அவசியம் அழைப்பேன். அது எப்பனு தான் தெரியல. என்னுள் புதைந்த ரசனையை உணர்த்தி கவிபாட தூண்டியவர் என் சகோதரி தானே! அனைத்துக்கும் நன்றி சகோதரி.

      Delete
  8. அகம் கலந்த காதலுக்கு வாழ்த்துக்கள். சகோ திருமணத்திற்கு எங்களை எல்லாம் மறக்காம அழையுங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அழைக்காமல் இருப்போமா! அவசியம் குடும்பத்துடன் வருகை தர வேண்டும். அந்நாளை நானும் எதிர்நோக்கி பயணிக்கிறேன். எல்லாம் நல்லதாக அமையட்டும்.

      Delete
  9. அறியாமல் வந்தகாதல் ஆயினும் நன்றே!
    சரியாகும் செய்திடச் சீர்!

    யாவும் சுபமாக நடந்திட இனிய நல் வாழ்த்துக்கள் சகோ!

    த ம.4

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு நன்றி. தங்கள் வருகை உற்சாகமும் உத்வேகமும் அளிக்கும் எப்பொழுதும். தொடர்ந்திடுக. வாழ்த்துக்கும் எனது அன்பு நன்றிகள்..

      Delete
  10. வணக்கம்
    சகோதரன்...

    அருமையான காதல் கவிதை... மனதை நெருடியது வாழ்த்துக்கள்..நல்ல செய்திக்கா காத்திருக்கேன்.....சகோதரன்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. விரைவில் நல்ல செய்தி சகோதரருக்கு சொல்வேன். எங்கள் இல்லத்தில் ஒருவர் அன்பு செலுத்தும் தங்களுக்கு சொல்லமலா! வாழ்த்துக்கு நன்றி சகோதரரே...

      Delete
  11. நலம் வாழ வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ..எல்லாம் பில்டப் தான். மணநாள் எப்பனு எவனுக்கு தெரியும்.

      Delete
  12. அருமையோ அருமை!! காதல் உருவானதும் (அது எப்படி? "எண்ணையில்
    விழுந்த நீர்த்துளி போல் " .. அடடா..ரசித்தேன்) அது வளர்ந்ததும் மனமேடை காண்பதும்..அழகு கவிதை சகோ! மனதைத் தொட்டது...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி. தங்கள் அன்புக்கும் ரசிப்புக்கும் நான் ரசிகன். ரசித்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி..

      Delete
  13. Replies
    1. நன்றி சகோதரர். தொடர்ந்திடுவோம் கொண்ட நட்பை.

      Delete
  14. உங்களில் விழுந்த மழைத்துளியாய் காதல் அருமை !
    த.ம 5

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். ரசித்து கருத்து தந்தமைக்கு நன்றி..

      Delete
  15. நன்றி நண்பரே. தொடர் வருகை புரிக..

    ReplyDelete
  16. அருமை.
    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு நன்றி. வாழ்த்துக்களால் நடப்பது நல்லதாகட்டும்.

      Delete
  17. காதல் உணர்வுகளை அருமையாக சொன்னீர்கள் பாண்டியன் . வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரர். வாழ்த்துக்கள் யாவும் மகிழ்வளிக்கிறது. விரைவில் நல்ல செய்தி வரும்.

      Delete
  18. வணக்கம் இதுதான் புனிதமான காதல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே. வாழ்த்துக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்..

      Delete
  19. Replies
    1. நன்றி அய்யா. தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம்..

      Delete
  20. கவிதையும்,பொருளும் அருமை.வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரி..

      Delete
  21. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  22. ஜோக்காளியின் நன்றி உங்களுக்கு,காண்க >>>http://jokkaali.blogspot.com/2013/11/blog-post_3165.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி சகோதரரே. அவசியம் பார்க்கிறேன்..

      Delete
  23. ம்ம் வாழ்த்துக்கள் சகோ...!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி..

      Delete