அரும்புகள் மலரட்டும்: விவேகானந்தரின் பொன்மொழிகள்

Wednesday 17 February 2016

விவேகானந்தரின் பொன்மொழிகள்

நண்பர்களுக்கு வணக்கம். அனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாள்களுக்கு எனது வருகை உங்களுக்கெல்லாம் உவகையளித்தால் அதுவே அடியேனின் பெரும்பேறு. ஒரு சிறிய புத்தகம் இன்று என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த புத்தகம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள். அதிலிருந்து சில சிந்தனைகள் இங்கே நண்பர்களின் சிந்தையை மகிழ்வூட்டும் எனும் நம்பிக்கையில்….



+ நீ இன்னும் படிக்காத புத்தகத்தைப் படிக்காத புத்தகம் என்று சொல்லாதே! படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்.
+ பிரச்சனை ஒரு நாய், நாம் ஓடினால் அது துரத்தும்- எதிர்த்து நின்றால் அது ஓடும்.
+ பலவீனத்திற்கானப் பரிகாரம் ஓயாமல் பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

+ இனி வருவது மீதிக் காலம் அல்ல, எதிர்காலம் எனக் கொள்க 
+ திட்டம் தீட்டியது எல்லாம் நடக்காது தான், அதற்காக திட்டம் தீட்டவில்லையென்றால் – அதுவுமே நடக்காது
    + கைரேகை தேய உழைப்பவன்,                      கைரேகை பார்க்க வேண்டிய                        அவசியமில்லை
+ தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாததாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருத்தல் வேண்டும்.   
 + கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அறியாமை தான் தீவினையின் மூலவேர்
+  எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும், எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.
    + பத்தாவது முறையாக கீழே                        விழுந்தவனைப் பார்த்து பூமி                         சொன்னது நீ  ஒன்பது முறை                       எழுந்தவன் என்று.
+ எட்டிப் பிடிக்கும் தூரத்தில் வெற்றி இல்லை அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை
   + பிறரது பாராட்டுக்கும், பழிக்கும்                    செவி சாய்த்தால் மகத்தான காரியம்        செய்ய முடியாது.


          ---சிந்தனைகள் தொடரும்---
                                                                                                              நன்றி.



கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

6 comments:

  1. //எனது வருகை உங்களுக்கெல்லாம் உவகையளித்தால் // சந்தேகமின்றி!!
    பொன்மொழிகளைப் பகிர்ந்ததற்கு நன்றி சகோ. ஆச்சரியம் என்னவென்றால் இன்று தான் என் தோழியும் நானும் விவேகானந்தரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சகோதரி முதலாய் வந்து வாழ்த்தியமைக்கும் கருத்துக்கும். அக்காவின் சிந்தனையே தம்பிக்கும் இருப்பது வியப்பில்லை என்றாலும் மகிழ்ச்சி மனம் முழுவதும்!

      Delete
  2. அட அட அட பாண்டியன்! வாங்கய்யா வாங்க... விவேகானந்தரின் பொன்மொழிப்படி “எழுந்துவிட்டீர்கள்” தொடர்ந்து எழுதுங்களய்யா..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா
      தங்களின் நட்பும் வழிகாட்டுதலும் இருக்கும்போது எழுந்த நான் விரைவாக நடக்கவும் தயாராகவே இருக்குகிறேன். தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் அய்யா. நன்றி..

      Delete
  3. சிறப்பான சிந்தனைகள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களைச் சந்தித்த மணித்துளிகள் இன்னும் மனதில். சரியாக பேச நேரமில்லை என்றாலும் சந்திப்பே இதயத்தை நிரப்பி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து இணையத்தில் இணைந்திருப்போம் அடுத்த சந்திப்பு வரை. நன்றி சகோதரர்.

      Delete