அரும்புகள் மலரட்டும்: நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!

Sunday 27 September 2015

நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!

உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி பொலிட்டிக்கல் சயின்சில் முதுகலை பட்டம் பெற்றவர். அதோடு அமெரிக்காவில் 'இமேஜ் மேனேஜ்மென்ட் மற்றும் பப்ளிக் ரிலேஷன்ஷிப்பில் சிறப்பு பட்டம் பெற்றவர் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அவருக்கு ஒரு விஷயத்தை பற்றி மக்களிடம் எப்படி செய்தி சேர வேண்டும் என்பதில் தெளிந்த அறிவு உண்டு. அதனால்தான் வாய் சொல்லிலேயே காலத்தை ஓட்டி விடுகிறாரோ? என்று எண்ணி விடாதீர்கள்.

இளம் வயது முதலே ஊர் ஊராக பயணம் மேற்கொள்வதில் மோடிக்கு மிகுந்த ஆர்வம். எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே மோடியின் பயணம் அமைந்திருக்குமாம். அப்படி ராஜ்கோட் முதல் இமயமலை வரை மோடியின் இளம் வயது பயணம் அமைந்திருக்கிறது.

சில காலம் இமயமலையில் சந்நியாசி வாழ்க்கை கூட மோடி வாழ்ந்திருக்கிறார். மோடி வெளிநாடுகளுக்கு ஏன் அடிக்கடி பறக்கிறார் என்பதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறதா?

பிரதமர் மோடி ஒரு மிகச்சிறந்த புகைப்பட கலைஞர். அவர் எடுத்த புகைப்படங்களை கொண்டு கண்காட்சியும் நடத்தியிருக்கிறார். அவரது தாய்மொழியான குஜராத்தியில் கவிதையும் புனைந்துள்ளார். சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிறகு ட்விட்டரில் அதிக ஃபாலோயர்கள் உள்ள தலைவர் மோடிதான். இவரை ட்விட்டரில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் தொடர்கின்றனர். உலகளவில் மோடிக்கு இதில் 2வது இடம்.

1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரின் போது மோடியும் நாட்டுக்காக தன்னால் முடிந்த பங்களிப்பை செய்திருக்கிறார். அதாவது ரயிலில் செல்லும் ராணுவ வீரர்களுக்கு உதவி செய்யும் சிறுவனாக பயணித்திருக்கிறார்.

குஜராத் முதலமைச்சராக மோடி 13 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இதில் ஒருநாள் கூட அவர் விடுமுறை என்று எடுத்ததில்லையாம். இரவு லேட்டாக உறங்க சென்றாலும் மோடியின் விடியல் காலை 5.30 மணிக்கு தொடங்கி விடும்.

பள்ளி, கல்லூரி காலத்தில் நாடகங்களில் நடிப்பதில் ஆர்வம் உண்டு. பல வேடங்களில் கலக்கியிருக்கிறார். அதனால்தான் இப்போதும் வேஷம் போடுகிறாரா? என்று கேட்காதீர்கள்.

மோடியின் சொந்த ஊரான வத்நகரில் உள்ள ஏரி முதலைகளுக்கும் வசிப்பிடமாக இருக்கிறது. இளவயது மோடி அந்த ஏரிக்கரையில் விளையாடுவது வழக்கம். கரையில் கிடந்த முதலையிடம் வம்பிழுத்திருக்கிறார். முதலை வாலால் தாக்கி விட சிறிய காயத்துடன் தப்பிய வரலாறும் மோடிக்கு உண்டு.

மோடி குஜராத் முதல்வராக இருந்த போது கடந்த 2010ஆம் ஆண்டு உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 3வது நகரமாக அகமதாபாத்தை ஃபேர்ப்ஸ் இதழ் தேர்வு செய்தது. முதல் இரு இடங்களை சீனாவின் ஜோக்ஜிங், செங்குடு நகரங்கள் பெற்றன.

ஒரு மாநாட்டில் மோடி பங்கேற்கிறார் என்றால் அங்கு பேச வேண்டிய விஷயங்களை ஹோம் வொர்க் செய்து பார்த்து விட்டுதான் மோடி மேடையே ஏறுவார்.

நன்றி -விகடன்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

10 comments:

  1. https://youtu.be/lTTqEfuD3B8

    ReplyDelete
  2. https://youtu.be/yaDp8UPjeVU

    ReplyDelete
  3. https://youtu.be/ZrrZ6XHTrfI

    ReplyDelete
  4. http://www.latimes.com/world/asia/la-fg-narendra-modi-silicon-valley-20150901-story.html
    http://www.ibtimes.co.uk/us-academics-warn-silicon-valley-narendra-modis-digital-india-programme-1517567

    ReplyDelete
  5. Then Why he was instrumental in Killing Thousands of Minorities in Gujarat?
    Why he adopted the Dangerous RSS ideology?
    He should not Institutionalize the Religion.



    ReplyDelete
  6. தெரியாத தகவல்கள்.நன்றி.

    ReplyDelete
  7. அவரது கல்வி தகுதி கேள்விக்குரியது. ஏன் என்றால் எம்.பி தேர்தலுக்கு அவர் கொடுத்த கல்வி தகுதி முதுகலை பொலிடிகல் சயின்ஸ் . அதற்கு முன்பு குஜராத் தேர்தலில் கொடுத்த கல்வி தகுதி முதுகலை பொது நிர்வாகம் (public administration ) அவரது பெயரில் உள்ள இணைய தளத்தில் கூட அவரது கல்வி தகுதி பற்றிய குறிப்பு இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஒருவர் பிரதமரின் கல்வி தகுதி குறித்து கேட்டதற்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அவர்க்கு வந்த பதில் "எங்களுக்கே தெரியாது சாமி, ஆளை விடு" என்பது தான். இவர் அமெரிக்காவில் படித்தாரா? பொய்களை சொல்லியே ஆட்சியை பிடித்தார். அதை இன்றும் தொடர்கிறார். அவர் உலகை கவர பெரிய காரணம் ஒன்றும் இல்லை. நான்றாக பேசுகிறார். ஆனால் அத்தனையும் வெளிநாட்டில் பேசுகிறார். அதை நன்றாக விளம்பரபடுத்தி கொள்கிறார். இங்கே படித்துவிட்டு வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் உயர் வர்க்கத்திடம் மட்டுமே பேசுகிறார். எனவே அது நன்றாக ரீச் ஆகிறது. அவரை எல்லாரும் திரும்பி பார்க்கிறார்கள். தேர்தலுக்கு முன்னால் இந்தியாவில் ஒவ்வோர் பகுதிக்கும் சென்றார். ஆனால் இப்போது "இந்திய பிரதமர்களில் முதல் முறையாக' என்ற அடைமொழியுடன் உலகை வலம் வருகிறார். உள்ளூரை சுற்றுபவரை விட உலகை சுற்றுபவரை அதிகமானோர் கவனிப்பது இயற்கை தானே

    ReplyDelete
  8. கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மோடி அவர்களைப் பற்றிய செய்தியை எத்தனை பேர் படிக்கிறார்கள், மோடியின் மீதான அபிமானம் நம் நண்பர்களுக்கு எப்படி இருக்கிறது? என்பதை அறியவும் பகிர்ந்து கொண்டேன். கருத்துகளையும் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  9. விகடன் பத்திரிக்கைகளை abroadல் இந்தியா, ஸ்ரீலங்கா விற்பனை நிலையங்களில் கண்டதுண்டு. வாங்கி படித்ததே இல்லை. இந்திய பிரதமரை பற்றிய தகவல் தந்ததிற்கு மீண்டும் நன்றி

    ReplyDelete