அரும்புகள் மலரட்டும்: வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை- அனைவரும் வருக!

Monday 17 August 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை- அனைவரும் வருக!


புதுக்கோட்டை வரலாறு:
புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது.

சுதந்திரத்திற்கு முன்பு தொண்டைமான்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. சமஸ்தான இணைப்பில் கடைசியாக இணைந்த சமஸ்தானம் இப்புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகும். 1974 ஜனவரி 1ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

புதுகை மண்ணில் புதையுண்ட வரலாற்றுச் சின்னங்கள் ஏராளம். வெளி வந்த வரலாறுகளும் தாராளம். இங்கு தான் இந்த வருடம் வலைப்பதிவர்கள் மாநாடு வருகிற 11.10.2015 அன்று நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வலைகளில் சந்தித்த முகங்களை நேரில் காண புதுக்கோட்டை வலைப்பதிவர் நண்பர்கள் வாஞ்சையோடு அழைக்கிறார்கள்.

நண்பர்களாக, சகோதர, சகோதரிகளாக வலைப்பக்கத்தில் அறிமுகமான நமது நட்பின் ஆழத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல இந்த சந்திப்பு கண்டிப்பாக உதவும் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்கள் அனைவரின் வருகையால் எங்களின் இதயங்கள் இன்பக் கூத்தாட இதோ இன்றே ஒத்திகை பார்க்கிறது.

கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் தலைமையில் புதுக்கோட்டை வலைப்பதிவர் நண்பர்கள் விழா திட்ட வரைவைச் செயல்படுத்த முனைப்பாக களம் இறங்கியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் மகிழும் தருணம் உங்கள் அனைவரின் வருகையன்று தான் இருக்கிறது. அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய நண்பர்களின் நட்பினையும் அவர்களின் அனுபவப் பகிர்வையும் சுமந்து செல்ல புறப்பட்டு விட்டூர்கள் எனும் நம்பிக்கை எனக்கு உண்டு. விழாவிற்கான நிதியுதவி அளித்து உதவிடும்படி உங்கள் அனைவரிடம் அன்பு வேண்டுதலாக முன் வைக்கிறேன்.

விழா பற்றிய முழு தகவல்களுக்கு பின்வரும் பதிவுகளைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
1. திரு.திண்டுக்கல் தனபால் அவர்களின் வலைத்தளம்
2.திரு.கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் வலைப்பதிவு

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

23 comments:

  1. சிறப்பாக நடத்தி விடுவோம் சகோதரரே...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை சகோதரர்? சிறப்பாக விழா அமையும். நன்றி.

      Delete
  2. விழா சிறக்க எமது வாழ்த்துகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. தாயகத்தில் இருந்தால் அவசியம் கலந்து கொள்ளவும் நண்பரே

      Delete
  3. http://newsletters.getresponse.com/archive/truereview/The-50K-Mission-Review-The-50K-Mission-Software-SCAM-OR-LEGIT-165500901.html

    https://www.linkedin.com/pulse/50k-mission-review-does-works-scam-navin-kumar

    https://www.linkedin.com/pulse/50k-mission-review-work-you-navin-kumar

    https://www.linkedin.com/pulse/official-0-6-pack-abs-review-free-ebook-download-shyam-s

    ReplyDelete
  4. அருமையான வரவேற்பு நன்று சகோ

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உழைப்பும் பங்களிப்பும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை. தங்களின் பங்களிப்புக்கு அன்பு நன்றிகளும் பாராட்டுகளும் சகோதரி

      Delete
  5. அருமையாக அழைத்திருக்கிறீர்கள் பாண்டியன் . பாராட்டும் நன்றியும்.
    நம் குழுவினரின் ஈடுபாடான பணிகள் அனைத்தையும் குறிப்பிட்டு அடுத்த பதிவை வெளியிடுங்கள். த ம 1

    ReplyDelete
    Replies
    1. அவசியம் தொடர்ந்து எழுதுகிறேன் அய்யா. நேரமின்மையால் நிறைய பகிர்ந்து கொள்ளவில்லை. கருத்துக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றிங்க அய்யா.

      Delete
  6. எங்கே தமிழ்மண வாக்குப்பெட்டி? g+இலும், எனது முக நூலிலும் இந்தப்பதிவைப் பகிர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மண வாக்குப்பெட்டி தற்போது வருகிறதே அய்யா. ஜி.பிளஸ் முகநூலில் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றியும் தங்களோடு இணைந்து செயல்பட ஆர்வத்தோடு காத்திருப்பதையும் பகிர்ந்து கொள்கிறேன் நன்றிங்க அய்யா.

      Delete
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள்/

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பற்றியும் விழா குழு சந்திப்பில் பேசினோம். தங்களைப் போன்றோரின் பங்களிப்பும் விழாவிற்கு அவசியமாகிறது. கருத்துக்கு நன்றி சகோதரரே

      Delete
  8. இப்படி ஆளாளுக்கு வளச்சு வளச்சு எழுதுறீங்களே!! நான் இப்போ எப்படி எழுதபோறேன்:(( பதிவர் சந்திப்புக்கு நான் எப்படி அழைப்பு விடுக்கவேண்டும் என நினைத்தேனோ அதைவிட அசத்தல அழைத்துவிட்டீர் சகோ:)

    ReplyDelete
    Replies
    1. அக்கா உங்களை விடவா நான் எழுதி விடுவேன். நேரம் கிடைக்கும் போது நீங்களும் எழுதி நண்பர்களை அழையுங்கள். கருத்துக்கு நன்றிங்க அக்கா.

      Delete
  9. Replies
    1. சங்கமித்து அன்பையும் அறிவையும் பகிர்ந்து கொள்வோம். கருத்துக்கு நன்றி அய்யா.

      Delete
  10. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விழா குழுவிடம் அண்மையில் உங்கள் வலைச்சர ஆசிரியர் பணியைச் சிறப்பாக செய்த செய்தியைப் பகிர்ந்து கொண்டேன். சகோதரரும் கலந்து கொள்ளலாமே!

      Delete
  11. காத்திருக்கின்றேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒருமுறை சந்தித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அய்யா. நானும் காத்திருக்கிறேன்.

      Delete
  12. விழா சிறப்புற எனது வாழ்த்துகளும்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோதரர். தாயகத்தில் இருந்தால் நீங்கள் கலந்து கொள்ளலாம் என்பது அவா.

      Delete