அரும்புகள் மலரட்டும்: கட்செவி (வாட்ஸ்அப்) கலாட்டா

Sunday 21 June 2015

கட்செவி (வாட்ஸ்அப்) கலாட்டா

நாங்கள் திமுகவிலிருந்து வெளியேற்றப்படவும் இல்லை; வெளியேறவும் இல்லை. -திருமா..
# ஈயம் பூசுனமாதிரியும் இருக்கணும்! பூசாத மாதிரியும் இருக்கணும்!


தமிழக அரசு என் பார்வையில் சரியாக இருக்கிறது.-சரத்குமார்..
# எதுக்கும் பார்வைய வாசன் ஐகேர்ல செக் பண்ணி பாருங்கண்ணே!


வங்கதேசத்திற்கு 12,600 கோடி கடன்.-மோடி
# யோவ் டூரிஸ்ட்டு! கருப்புப்பணத்தை மீட்கலான்னாலும் பரவால்ல! இருக்கிற பணத்தையாவது விட்டுவையா!!


இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே சுற்றுப்பயணம் செல்கிறேன் -மோடி
# கண்ணாடிய திருப்புனா எப்டி பாஸ் ஆட்டோ ஓடும்?


கருணாநிதி இல்லத் திருமணத்தில் திருட்டு.
# பழக்கத்தோஷத்துல தலீவரு வேலைய காட்டிருப்பாரோ?


காங்கிரஸ்,பாஜக,அதிமுக,திமுக ஆகியவையில்லாத அணியில் இடம்பெறுவோம்-தமிழருவி
 # எதுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்களேன்


ஏழைகளுக்காக எனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணிக்கத் தயார். -ராகுல் காந்தி
# தம்பி! அங்குட்டு ஓரமா போய் விளையாடுப்பா!!


மீனவர்வீட்டில் மீன்குழம்பை ரசித்து சாப்பிட்டார் ராகுல்- காங்கிரசார்
# மீன் குழம்புனா ரசிச்சுதான் சாப்பிடுவாங்க, இதெல்லாம் ஒரு பெருமையா பாஸ்?


மோடியின் ஓராண்டு ஆட்சியில் ஊழலே இல்லை -அருண் ஜெட்லி
# நான் ஊரி்லே இல்லைன்னு படிச்சிட்டேன்!!


இலங்கையில் ஆட்சி மாறியும்கூட காட்சி மாறவில்லை. -கருணாநிதி
# தலீவரு எலக்ஷன் டைமு! பீல் ஆயிட்டாப்புள்ள! எலக்ஷன் முடிஞ்சா கூல் ஆயிடுவாப்புள்ள!!


மாற்றுத்துணி எடுக்கத்தான் இந்தியாவுக்கு வருகிறார் மோடி -துரைமுருகன்
# கரடியே காரித்துப்பிடுச்சு!!

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

12 comments:

  1. Replies
    1. நம்ம ஆளுங்க எப்படி? கருத்துக்கு நன்றி சகோதரர்

      Delete
  2. Replies
    1. கருத்துக்கு நன்றி சகோதரர்

      Delete
  3. Replies
    1. கருத்துக்கு நன்றி சகோதரர்

      Delete
    2. கருத்துக்கு நன்றி சகோதரர்

      Delete
  4. அருமை வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரர்

      Delete
    2. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரர்

      Delete
  5. மறுமொழிகள் மிகவும் பொருத்தமாக இருந்தன.

    ReplyDelete
  6. //இலங்கையில் ஆட்சி மாறியும்கூட காட்சி மாறவில்லை. -கருணாநிதி//

    மூன்றே நாட்களில் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுதந்த தலைவன் அல்லவா ?

    ReplyDelete