Monday, 5 January 2015

சேரனின் சினிமா டு கோம்- திருட்டு விசிடிகளை ஒழித்து விடுமா/


புதுபடங்களை டி.வி.டி மூலம் வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் புதுதிட்டத்தை துவங்கியுள்ளார். இதற்கு ‘சினிமா டூ ஹோம்’ என்று பெயர் வைத்துள்ளார். வீடுகளுக்கு புதுபடங்களை நேரடியாக 50 ரூபாயில் கொண்டு செல்லும் வகையில் இத்திட்டம் தயாராகியுள்ளது.

தான் இயக்கிய ’ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படம் தணிக்கை சான்றிதழ் பெற்று 8 மாதங்களாகியும் ரிலீஸ் செய்ய முடியவில்லை. எனவே தான் இதை துவங்கியுள்ளேன். நடப்பாண்டில் 298 படங்கள் தணிக்கை செய்யப்பட்டு 159 படங்கள் தான் ரிலீசாகியுள்ளது. மீதி படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் முடங்கியுள்ளன. சேரனின் புதுதிட்டம் மூலம், இப்படங்களுக்கு விடிவுகாலம் ஏற்பட்டு உள்ளது.

புது டி.வி.டி.க்களை டி.டி.எச்., இன்டர்நெட், கேபிள் டி.வி., மொபைல், டி.வி.டி. உள்ளிட்ட பல வழிகளில் வீடுகளுக்கு சப்ளை செய்யும் போது தியேட்டர்களிலும், திரையிடப்படும். தமிழகம் முழுவதும் இதற்காக 7 ஆயிரம் முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு முகவரின் கீழே 5 ஆயிரம் குடும்பங்கள் இருக்கும்.

முதல் கட்டமாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும் மேகா, அப்பாவின் மீசை, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள் ‘சினிமா டூ ஹோம்’ முறை மூலம் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று டைரக்டர் சேரன் கூறியுள்ளார்.

இத்திட்டத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் இருக்கிறார்கள். ஒரு படத்திற்கு 200 ரூபாய் 300 ரூபாய் என டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொண்டு இருந்தவர்களுக்கு 50 ரூபாயில் படம் ரீலீஸ் ஆன அன்றேக்கே வீட்டிற்கே வந்து குறுந்தகடு கொடுக்கும் திட்டம் அதிர்ச்சியாக தான் அவர்களுக்கு இருக்கும்.

திருட்டு விசிடியை 30 ரூபாய் கொடுத்து படம் மற்றும் ஒலித் தெளிவின்றி பார்த்த நம்மவர்களுக்கு 50 ரூபாய் தெளிவான படம் கிடைக்கப் போகிறது என்றால் நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்றே நம்புகிறேன். திட்டத்தை மிக தெளிவான திட்டமிட்டு சேரன் செய்திருக்கிறார். வீட்டிற்கு வந்து குறுந்தகடு விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதிகளுக்கென தனி சீருடை, அடையாள அட்டை, பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பேக் என வடிவமைத்துள்ளார்.

திருட்டுத்தனமாக குறுந்தகடு விற்றவர்கள் இத்திட்டத்தில் இணைந்தால் வீட்டின் அறைக்கே சென்று வணக்கம் வைத்து தலை நிமிர்ந்து வியாபாரம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. த்யாரிப்பாளர்கள் நட்டம் அடையும் சூழலும் தவிர்க்கப்படும்.
தற்போது உள்ள திருட்டு விசிடிகள் இத்திட்டத்தின் மூலம் ஒழிக்கப்படும் என்றே எனக்கு தோன்றுகிறது,. நண்பர்களே உங்களுக்கு?

அண்மையில் சென்னையில் காமராஜர் அரங்கில் நடந்த இத்திட்டத்தின் அறிமுக விழாவில் மறைந்த பாலசந்தர், பாரதிராஜா, கே.ஆர்., சீமான், ராம் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசியிருக்கிறார்கள். கமலஹாசனும் இந்த புது முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். நாமும் இணைந்து வாழ்த்துவோம். நன்றி..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

15 comments:

 1. முயற்சி வெற்றி பெறும் நண்பரே
  வாழ்த்துவோம்
  தம 2

  ReplyDelete
 2. கண்டிப்பாக வாழ்த்துவோம் ஐயா. விரைவான கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 3. இவங்க முதல் வீட்டில் விற்று விட்டு மூன்றாவது வீட்டிற்கு போவதற்குள் நம்ம ஆளுங்க அதை காப்பி பண்ணி அந்த தெரு முழுவதும் சப்பளை பண்ணிவிடுவாங்க

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ....அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும்

  ReplyDelete
 5. இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும்... வாழ்த்துவோம்....

  ReplyDelete
 6. நல்ல முயற்சிதான் நண்பரே . நல்ல விதமாக வந்தால் சரி வாழ்த்துவோம். என்றாலும் மதுரைத் தமிழன் சொல்வதும் சரியெ!

  ReplyDelete
 7. தியேட்டர் உரிமையாளர்கள் சீறுவது பக்கா சுயநலம். பாவம் சேரன் என்று அவர்படத்தை வாங்கப்போகிரார்களா என்ன?? பல படங்கள் பெட்டியில் தான் தூங்குகின்றன:(( இவர்களை வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விடமாட்டார்கள்:(( சேரனின் இந்த முயற்சி வெற்றி பெறட்டும். நம்ம தமிழன் சொன்ன மாதிரி நிறைய நடக்க வாய்ப்பிருக்கு என்பதையும் சேரன் எப்படி சமாளிக்கப் போகிறாரோ?

  ReplyDelete
 8. நல்லதொரு முயற்சி தான்... ஆனால் அவர்கள் உண்மைகள் சொன்னது போல் நடக்க அதிக வாய்ப்புள்ளது...

  ReplyDelete
 9. வணக்கம்

  இவையெல்லாம் கைவந்த கலை.. திருந்த வாய்ப்பில்லை...இலாபம் எங்கு அதிகம் அங்குதான் மக்கள் கூட்டம... அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. 'திருட்டு விசிடியை 30 ரூபாய் கொடுத்து படம் மற்றும் ஒலித் தெளிவின்றி பார்த்த நம்மவர்களுக்கு 50 ரூபாய் தெளிவான படம் கிடைக்கப் போகிறது என்றால் நிச்சயம் வரவேற்பு இருக்கும்' இருக்க வேண்டும். திங்கிறவன் தி்ன்னுட்டுப் போக திருவாலியாத்தான் தெண்டம் கட்டுன கதை இனி நடக்காமலிருக்க இது சிறந்தவழிதான். நல்ல பதிவு பாண்டியன் த.ம.5

  ReplyDelete
 11. இது ஒரு வித்தியாசமான முயற்சியே. பொறுத்திருந்து பார்ப்போம்.

  ReplyDelete
 12. ஒரு மாற்று முயற்சி தேவைப் படுகிறது. ஒருவேளை இது வெற்றியடையலாம். பார்ப்போம்

  ReplyDelete