அரும்புகள் மலரட்டும்: மாணவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களும் ஆபாச படங்களும்

Thursday 29 January 2015

மாணவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களும் ஆபாச படங்களும்


வளர்ந்து வரும் நவீன உலகத்தில் வளர்ந்து வரும் இன்றைய குழந்தைகள் பெற்றோர்களை விட நுண்ணறிவிலும் அதி நவீன பொருட்களைக் கையாளுவதிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். பெரியவர்களுக்கே கையாளத் தெரியாத அலைபேசிகள் குழந்தைகள் கைகளில் என்ன பாடு படுகிறது தெரியுமா! அதை அப்படியே பிரித்து மேய்ந்து விடுகிறார்கள் இன்றைய சுட்டிக் குழந்தைகள். இவர்களின் வயதில் நாம் இருக்கும் போதெல்லாம் நல்லது எது கெட்டது என்பதைக் கூட நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தால் தான் புரியும்.

இன்று அப்படியல்ல குழந்தைகள் இன்றைய பெற்றோர்களிடம் கேட்கும் கேள்வி லூசா அப்பா/அம்மா நீ? ஐயோ இது கூட உனக்கு தெரியவில்லை எனும் போது பெற்றோர்கள் உண்மையில் அசடு வழிய தான் வேண்டி இருக்கிறது. குறிப்பாக அலைபேசி, மடிகணினி போன்ற சாதனங்களில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் அவர்களின் விரல் நுனியில் அனாசியமாக பயன்பட்டு வருகிறது.

மாணவ பருவத்தினர் தங்களின் புத்தகப் படிப்போடு நிறுத்தி விடாது ஊடகங்கள் வழியே கல்வி கற்க வேண்டும் எனும் ஆரோக்கியமான விவாதங்களை கல்வியாளர்கள் முன்னெடுத்து சென்று கொண்டிருக்கும் வேளையில் மாணவர்கள் இணையங்களைப் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான விசயம். ஆனால் அவர்களின் கைகளில் தவழும் இணைய தளங்களிலேயே விளம்பரங்கள் என்ற பெயரில் பல ஆபாச படங்களும் கூடவே கண்களுக்கு காட்சியளிப்பது சத்தமில்லாமல் நடந்தேறுகிறது.

அரசாங்கம் மாணவர்களுக்கு மடிகணினி கொடுத்த பின்னர் அதன் பயன்பாடு இன்னும் வேகம் எடுத்திருக்கிறது. ஆம் இணைய தளங்கள் வழியாக பதிவிறக்கம் செய்த புது படங்கள், பாட்டுகள், டபுள்யு.டபுள்யு சண்டைக் காட்சிகள், நன்றாக கவனியுங்கள் கூடவே ஆபாச படங்கள் பார்க்கும் பயன்பாடு பலமடங்கு அதிகரித்திருக்கிறது. மாணவர்கள் ஆபாச படங்கள் பார்க்கிறார்கள் என்று நான் கூறியவுடன் அதிர்ச்சியும் சில சமயம் என் மீது கோபமும் உங்களுக்கு வரலாம். இருப்பினும் நான் கூறுவதில் உண்மையும் இருக்க தான் செய்கிறது என்பதை செய்தித்தாள்களும் குற்றப் பின்னணியில் இயங்கிய மாணவர்களின் வாக்குமூலமும் உறுதிப்படுத்துகின்றன.

வருங்கால சிந்தனையாளனின், அறிவியல் அறிஞனின் மனநிலையில் மடைமாற்றத்தை புற்றீசல் போல் இணையத்தில் வளர்ந்திருக்கிற ஆபாச தளங்கள் ஏற்படுத்துகின்றன. ஒரு மாணவன் தனது பள்ளியில் நடைபெறும் கட்டுரைப் போட்டிக்காக தரவுகளைத் தேடி இணையத்திற்கு வந்து தேடு பொறியில் தமிழ் என்று தட்டச்சு செய்தால் தமிழ் காமக்கதைகள், படங்கள் எனும் சுட்டிகள் தானே சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.


இவ்வாறு புற்றீசலாக பரவியிருக்கும் அருவருக்கத் தக்க ஆபாசங்கள் நிரம்பிய இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவது யாருடைய கடமை? அரசாங்கத்தின் கடமை எனும் தங்களின் மனக்குரல் எனக்கு கேட்கிறது. ஆனால் மத்திய அரசாங்கம் உச்ச நீதி மன்றத்தில் ஆபாச தளங்களை எங்களால் ஒழிக்க முடியவில்லை. ஒரு தளத்தை முடக்கினால் 10 தளங்கள் புதிதாக வந்து விடுகின்றன எனவே எங்களால் முடியாது என்று கை விரித்து விட்டது.

அதிலும் நடைமுறை சிக்கல்கள் இருக்க தான் செய்கின்றன என்பதை நாம் ஒத்துக் கொண்டாலும் அரசு கூடுதல் முயற்சி எடுத்து தணிக்கை குழு மூலமும் தனியார் மென் சாதன நிறுவனங்களின் உதவியின் மூலமும் இது போன்ற தளங்களுக்கெதிரான அடக்கு முறையில் இறங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன். அரசு இந்த விசயத்தில் கவனம் செலுத்தினாலும் நலமாக இருக்கும். அரசின் காதுகளில் பெரியவர்கள் பெரிய சங்கு கொண்டு ஊதினால் நன்றாக இருக்கும்..

இன்றைய குழந்தைகள் இணையத்தில் ஆபாச குப்பைகளைத் தவிர்த்து நல்லதை பருகும் மன பக்குவத்தை ஏற்படுத்துவது அவசியமாகிறது. மாணவ பருவத்திலேயே ஊடகக் கல்வியைப் போதிக்கும் போது அவற்றால் ஏற்படும் இது போன்ற கசப்பான அனுபவங்களைக் கிள்ளி எறிய தேவையான வழிகாட்டல்களும் அறிவுரைகளும் பாடத்திட்டத்தினூடே போதித்து அவர்களின் மனதில் தவறான விசயங்களைக் களைய தயார் செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து.

ஒரு நல்ல தளம் அறிமுகம்:

47566 புத்தகங்களைத் தாங்கிய ஒரு தமிழ்த்தளம் என்னை வெகுவாக கவர்ந்தது. தமிழ் கற்றுக் கொள்வதற்கான மூலம், அகராதி, தமிழ் எண்கள், தமிழ் வளர்த்த சான்றோர்கள் என இப்படி பல தகவல்களைத் தாங்கிய தளம் தான்  தமிழம்.வலை.

உங்களுக்குத் தெரிந்த எண்ணிலிருந்து தமிழ் எண்களை ஆக்கலாம்.
தமிழ் எண்கள் தான் தேய்ந்து தேய்ந்து உங்களுக்குத் தெரிந்த எண்ணாக மாறி இருக்கிறது என்பதற்கான ஒரு சுட்டி
http://www.thamizham.net/kal/number/number.htm


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

15 comments:

  1. Brother , in Arab countries most of the adult content web sites are blocked. Big team working daily behind it govt dept to do the job.

    In India you cannot image, due to our law makers poor care on public issue.

    SESHAN dubai

    ReplyDelete
  2. ஆபாச தளங்களை ஒழிக்க முடியாதுதான் நண்பரே
    ஆனால் பார்ப்பதை தடை செய்ய முடியுமே,
    ஆபாசத் தளங்களை இணையத்தில் பார்ப்பதை தடைசெய்யும், சாப்ட்வேர்கள் இருக்கின்றன,
    குறைந்த பட்சம் அரசு இலவசமாக வழங்கும் மடிகணினிகளில், ஆபாசத் தளங்களைப் பார்ப்பதை தடைசெய்யும் சாப்ட்வேர்களையும், இணைத்து வழங்கினால் நலம் பயக்கும் என எண்ணுகின்றேன்
    தம 2

    ReplyDelete
  3. விருப்பமான தளங்களை விரும்பியவர்கள் படிக்கிறார்கள் .வேதனையும் உண்டு சாதனையும் உண்டு .இதுதான் உலகம் அதுதான் இணையம்

    ReplyDelete
  4. தவறு முதலில் பெற்றோர்கள் மீதே...

    ReplyDelete
  5. நல்லவை தவிர அல்லவைதானே எளிதில் மனதில் பதிந்துவிடுகின்றன. அதிலும் இளைஞர்கள் மிக எளிதில் இத்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான தளங்களுக்குத் தடைவிதிப்பது அல்லது பார்க்கமுடியாமல் செய்யும் அளவில் செய்வது என்பதான முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  6. நல்ல தளங்கள் கூடவே களைகளைப் போல ஆபாசத் தளங்களும் வந்து விடுகின்றன. அரசாங்கம், பெற்றோர், மாணவர்கள் என அனைவருமே கவனமாக இருக்க வேண்டிய விஷயம் இது.

    ReplyDelete
  7. நல்ல பதிவு! ஏழு வருடங்களுக்கு முன்னே ப‌த்தாம் வகுப்பு படித்த ஒரு மாணவி என்னிடம் தன் சக மாணவன் கணினியில் படிக்கவென்று தன் வீட்டுக்கு தினமும் வந்ததாயும் அவன் மோசமான படங்கள் பார்த்து வந்ததை அவளின் அம்மா கண்டு பிடித்து விட்டதாயும் அனாயசமாக சொன்னாள். அப்போதே அதைக் கேட்டு ' இன்றைய மாணவர் சமுதாயம்' எங்கே போகிறது என்று பயந்து போனேன்!

    நல்ல குழந்தைகளை உருவாக்குவது பெற்றோரின் கையில் தான் இருக்கிறது என்றாலும் அவர்களை மேலும் மேலும் நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் கையிலும் இருக்கிறது!

    கீழ்க்கண்ட பதிவினைப் ப‌டித்துப்பாருங்கள்!!

    http://tparameshwari.blogspot.in/2013/06/blog-post_9462.html

    ReplyDelete
  8. ஆபாசத் தளங்களைப் பார்க்காது தடுக்க எத்தனையோ வழி முறைகள் இருக்கு...

    ஆனால் தன் பிள்ளை தவழும் முன்னே கையில் செல்போனையும் டாப்பையும் கொடுக்கும் பெற்றோரே குழந்தைகளைக் கெடுக்கும் கிருமிகள்....
    அவர்கள் திருந்தினால் போதும்

    ReplyDelete
  9. We have given already two side edge knife to children. you cannot control. how parents and teachers are responsible. it is a big series social issue but we are ignoring so many years. now the plant become huge tree. we have to cultivate the outcome.

    ReplyDelete
  10. சரியாகச் சொன்னீர்கள் பாண்டியன்! நடுவணரசின் அந்தப் பொறுப்பற்ற பதிலைக் கேட்ட நாளிலிருந்து நானும் இது பற்றியொரு பதிவு எழுத வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், வெறுமே எழுதுவதை விடத் தடுப்பதற்கு நம்மாலான ஆலோசனைகளோடு பதிவிடலாமே என்பதால் அது பற்றிய தகவல்கள் திரட்டச் சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு, தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறேன்.

    இது விதயத்தில் அரசு கூறுவது அவர்களின் அக்கறையின்மையைத்தான் காட்டுகிறதே தவிர, கண்டிப்பாக இது முடியாத செயல் இல்லை. சரி, முடியாத செயல் என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம்; ஆபாச தளங்களில் ஒன்றை முடக்கினால் பத்துத் தளங்கள் புதிதாகக் கிளம்புவதாகவே இருக்கட்டும்; அப்படிப் பார்த்தால் நாட்டில் வேறு எந்தக் குற்றம்தான் அப்படி நடக்காமல் இருக்கிறது? நாடு என்கிற ஓர் அமைப்பு உருவான காலந்தொட்டு திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் தண்டித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அந்தக் குற்றங்கள் குறைந்து விட்டனவா? இல்லைதானே? அப்படியானால் அந்தக் குற்றங்களுக்கு எதிராக மட்டும் எதற்காகச் சட்டம்? ஏன் நடவடிக்கை? எவன் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம், எங்கு வேண்டுமானாலும் புகுந்து கொள்ளையடிக்கலாம், எதை வேண்டுமானாலும் கடத்தலாம், யாரை வேண்டுமானாலும் வன்புணரலாம் என விட்டுவிட வேண்டியதுதானே?

    ReplyDelete
  11. பெற்றோர்களே காரணம்!

    ReplyDelete
  12. I hope you would have watched the tv show in sun tv conducted by nelson. Arathu rightly pointed about the governments policy on banning these illegal sites.

    ReplyDelete
  13. எல்லோரும் சிந்திக்க வேண்டும் சகோ!இணையம் நீக்கமற நிறைந்த நிலையில் பூனைக்கு யார் மணிகட்டுவது.

    ReplyDelete
  14. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது சகோ. தம7

    ReplyDelete
  15. இப்போது WWF மோகம் குறைந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆபாச தளங்களை தடை செய்வது என்பது இயலாத ஒன்று. அரசாங்கம் ஓரளவுக்கு கட்டுப் படுத்த முடியும். என்றாலும் பெற்றோர் நினைத்தால் முடியும்

    ReplyDelete